Tuesday, February 23, 2016

உதவ முடிந்தால்...


⁠⁠⁠திரு. குணசேகரன் என்பவரின் மகன் விஜயரங்கன், வயது 25 - திருச்சி விராலிமலை சேர்ந்த இவர், சென்னை தனியார் கம்பெனியில் காண்ட்ரகட் வேலை செய்து உணவு வேலையில் அமர்ந்திருந்த பொழுது  fork lift  என்ற இயந்திர ம் பின்பக்கம்  வந்ததில்    நெருக்கமாக இறுக்கியதால், செல்வன்,விஜயரங்கன் இரு கால்கள் (கீழ்கண்ட படத்தில் இருப்பது ) பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்ட து.    தற்போது ஒப்பந்த  நிறுவனம் 6 லட்சமும், காப்பீட்டு கழகம் ரூ. 2.5 லட்சமும் (தனி யார்)  செலவு செய்தும் இரு கால்களையும் எடுக்க மருத்துவர்கள்  முடிவு செய்தனர்.. பின்னர் தற்பொழுது திருச்சியில் வயலூர் சாலையில் உள்ள ரம்யா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இடது கால் சரிசெய்து விடலாம்,  ஆனால் வலது கால் எடுக்க வேண்டும் அல்லது நரம்பு கூடி விட்டால் சரிசெய்து விடலாம் என்றும் தினமும் 10 ஆயிரம் மருத்துவ செலவாக ஆகிறது.. பாதிப்படைந்த விஜயரங்கனின் தந்தை  திரு.குணசேகரன் என்பவர் தனியார் குழுமத்தில் தற்காலிக வேலையில் இருப்பதால் அவரால் போதிய மருத்துவ செலவு செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உள்ளார். எனவே இத்தகவலை பார்பவர்களுக்கு அவர்களால் இயன்ற அளவு மஉதவி செய்து செயல் இல்லாத கால்  செயல்பட உதவி செய்யவும். 🙏🙏  மற்றவர் களுக்கு முடிந்தவரை பகிரவும்..
தொடர்புக்கு : திரு. S.குணசேகரன் - 9788756906
வங்கி கணக்கு எண்: 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,, விராலிமலை
INDIAN OVERSEAS BANK, 
BRANCH :  VIRALIMALAI 
NAME : GUNASEKARAN
IFSC CODE : IOBA0001019
AC/NO :  101901000031278

Sunday, February 21, 2016

அடிமை இனத்தின் நீர்த்துப் போன போராட்ட வழிமுறைகள்

அரியானா மாவட்டத்தில் 29 விழுக்காடு  உள்ள சமூகத்தில் கல்வியில் கலாச்சாரத்தில் உயர்ந்த ஜாட் சமூகம் 1990 இல் இருந்து 25 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்கச் சொல்லி  போராடி வருகிறது. வழக்கம் போல இதர இன உரிமைகளை அடக்கி ஆளும் "ஆண்ட" பாரத வல்லரசு  கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக நடத்தும் இந்த இனத்தின் போராட்டம் அகில இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 600 தொடர் வண்டிகள் நிறுத்தம்...;காவலர் குடியிருப்புகள் எரிப்பு; சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடக்கம்; தில்லிக்கு தண்ணீர் அளிக்கும் கால்வாய் கைப்பற்றி அதன் காரணமாக தில்லிக்கு பள்ளி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..

உடனடியாக அடிபணிந்த  நடுவண் அரசு கோரிக்கைகளை பரிசீலிக்க ஒரு குழு அமைத்துள்ளது.

ஆனால் 5000 ஆண்டு பழமை வாய்ந்த நொந்து நூடுல்ஸ் ஆன சோர்ந்து போன தமிழினம் இன்னும் தமிழை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக கொண்டுவர இயலவில்லை; அப்பாவி எழுவரை  விடுவிக்க துப்பில்லை ; கெயில் நிறுவனம், மீத்தேன் திட்டம் & கூடங்குளம் தமிழனுக்கு சமாதி கட்டியும் இன்னும் மூச்சு மட்டும் விடும் தமிழினத்தின் திறமையை பாராட்டியே  ஆக வேண்டும். 

தன்னையே வருத்திக் கொண்டு ஈரத்துணியைக் கட்டி போராட்டம், கஞ்சித் தொட்டி திறந்து போராடும் விசைத்தறி தொழிலார்கள் போராட்டம்;  தன்னை எரித்துக் அமைதியாக உயிரை மாய்த்துக் கொள்ளும் ஈழ ஆதரவு ஈகிகள்; கண்ணை கட்டி போராட்டம்..பாடை கட்டி போராட்டம்;,மொட்டை அடித்துப் போராட்டம் என்கிற எங்கள் போராட்டங்களை பாராட்டி நடுவண் அரசு சிறந்த அடிமை இனம் என்கிற விருதை தமிழினத்திற்குத்  தர வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை திராவிட அரசுகள் மூலம் முன் வைக்கிறோம்.

எங்கள் நியாயமான வேண்டுகோளை கனிவுடன் பரிசீலிக்க தமிலீனத் தலைவனை வேண்டிக் கேட்டுக்கொள்ளும்
வீரத்தமிழன்