செவ்வாய், 27 நவம்பர், 2012

ஏ.ஆர்.முருகதாஸ்-பாட்டு பாடி பிச்சை கேட்டது அம்பலம்

ஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றுக்கும் உதவாத இந்திய இராணுவத்தை தனது துப்பாக்கி படத்தில் தூக்கிப் பிடித்ததன் மூலம் "இன்னும் என்ன தோழா" எனப் பாடி தமிழ் மக்களிடம் பிச்சை கேட்டது அம்பலம் ஆகிவிட்டது.

சென்ற தீபாவளி அன்று  ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கிய "ஏழாம் அறிவில்" 
"இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே...
கழுத்தோடும் "ஒரு" ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்..." 


என்ற பாடலை புகுத்தி ஏதோ தமிழன் உணர்வு பொங்குவதாக சித்தரித்து ஈழ மக்கள் படும் அவலத்தை பார்த்து தாங்கள் கண்ணீர் சிந்துவதாக நடித்து நம்மிடம் இரக்கத்தை உண்டாக்கி பிச்சை கேட்டது ஓராண்டு காலத்திற்குள்ளேயே அம்பலம் ஆகிவிட்டது,தனது அடுத்த படமான "துப்பாக்கியில்" இந்திய இராணுவத்தை போற்றி துதி பாடி இருப்பதன் மூலம். 

உண்மையிலேயே இவர் ஈழ மக்கள் மேல் கரிசனம் கொண்டவராக இருந்திருந்தால் 6000க்கும் மேற்பட்ட எம் மக்களை அமைதிப்படை என்ற பெயரில் கொன்றொழித்த, வன்புணர்ச்சி செய்த மிருகங்களை தன்னகத்தே கொண்ட இந்திய ராணுவத்தை பற்றி,தமிழ் மக்களை எப்போது காழ்ப்புணர்வுடன் நடத்தும் இந்தியத்தை பற்றி  போற்றி படம் எடுக்க மனம் விழையுமா?

இன்றைய நாட்களில் அரசியல்வாதிகள் எல்லாம் நடிகர்களாக இருக்கிறார்கள்; நடிகர்கள் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். நமது இரக்க உணர்வை பயன்படுத்தி நம்மிடம் கொள்ளை அடிக்கும் இவர்களை போன்றவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதும் ஒதுக்கி வைப்பதும்  இன்றைய கால கட்டத்தில் அவசியம்.

நாங்கள் உங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கள் மீது இரக்கம் காண்பிப்பது போல அனுசரணையாக இருப்பது போல பாவிக்கவேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!


நீங்கள் உயிரை மாய்ப்பதாக இருந்தால் ஒரு தனுவாக மாறுங்கள். கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.
ராஜபக்சே வருகையை எதிர்த்து சேலத்தில் தீக்குளித்து உயிர்நீத்த ஆட்டோ டிரைவர் விஜய்ராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,
எங்கள் பேச்சை கேட்டு தான் தம்பி விஜயராஜ் உணர்வு பெற்றதாக சொல்கிறார்கள். நம்முடைய பேசும் எழுத்தும் எதிரிகளை வீழ்த்தவில்லையே ஆற்றாமையில் தன்னை மாய்த்து கொள்கிற தோழர்களை வீழ்துகிறதே என்ற வேதனை என்னை வாட்டுகிறது.
நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். வலிமை உள்ளவனை எதிர்க்கும் போது அவன் எந்த தளத்தில் வலிமையாக உள்ளான் என ஆராய வேண்டும். எங்காவது பார்ப்பனர்கள் தீக்குளித்து பார்த்துள்ளீரா?! அவர்கள் யாரும் தீ குளிப்பதில்லை நாம் தான் செய்கிறோம்.

எண்ணிக்கை என்பது ஆள் வலிமை அல்ல ஒற்றுமையே வலிமை நாம் தனி தனி குழுக்களாக சிதறி உள்ளோம். இனி விஜயராஜ் போன்றவர்கள் தீக்குளித்தால் இனி வரமாட்டான் திருமாவளவன் என சொல்லலாமா என தோன்றுகிறது. இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம்.
ஆனாலும் இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள்.
நம்மை அழித்துக்கொள்வது மேலும் நம் எண்ணிக்கையை குறைக்கும். ஆதரவு சக்திகள் கை கோர்க்க வேண்டும். ஆறரை கோடி தமிழர்களில் ஆறு லட்சம் தமிழர்கள் கூட ஒன்று சேர முடியவில்லையே...வேதனை.
இந்தியாவில் காங்கிரஸ் வேறு, பாஜக வேறல்ல காங்கிரஸ் -கதர் போட்ட காவியினர். காவி போட்ட கதர் பாஜக...இவர்கள் இருவருமே ஈழ விசயத்தில் எதிரானவர்கள்..
நாம் வெல்ல இரெண்டே வழி தான். ஒன்று எதிர்த்து நின்று மோதி எதிரியை வீழ்த்துவது. மற்றொன்று அவனுடன் தோழமை பாராட்டி நட்பு பாராட்டி புரிய வைத்து நம் எண்ணத்திற்கு உடன்பட வைப்பது அந்த வகையில் நாம் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஈழத்தை சாத்தியபடுத்த இயலாது.
எனவே தோழர்களே இனி நாம் உணர்ச்சி சார்ந்து மட்டும் இயங்காமல் அறிவு சார்ந்து இயங்கி ஒன்றுபடும் விசயத்தில் நாம் ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துவோம். இனி யாரும் தங்களை மாய்த்துகொள்ள வேண்டாம் என்று கூறினார் திருமாவளவன்.

நன்றி:TT http://tamil.oneindia.in

வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழனுக்கு முள்வேலி; சிங்களவனுக்கு சிவப்பு கம்பளமா?

ஏ இந்தியமே...
சிங்களவனை நோக்கி நீ போகும் ஒவ்வோர் அடியும்
எங்கள் மனதிலுருந்து வெளியேறும் ஒரு மைல்கல்.
எங்களைக் கொன்றவன் உனக்கு பங்காளி என்றால்..
துணைபோன நீ எங்களுக்கு தூர தேசமே...

நீ வழக்கம்போல அலட்சியம் செய்ய 
இது எங்கள் கோரிக்கை அல்ல
அறுதியான இறுதி எச்சரிக்கை...


தோழர்களே...

இனப்படுகொலைகாரன் ராஜபக்சேவை பார"தீய" அரசு அழைப்பு விடுக்கிறது. அவனுக்கு  வங்காளி பிரணாப் தேநீர் விருந்து அளிக்கிறான். இத்தாலிய சூனியகாரியின் கைப்பாவை மக்கள் விரோத அரசை தலைமை ஏற்று நடத்தும் மன்மோகன் இரவு விருந்து வைக்கிறான். இது தான் தனது நாட்டு மக்களுக்கு ஜனநாயக நாடு என தன்னை பறைசாற்றிக் கொள்ளும் ஒரு நாடு செய்யும் துரோகம்.

நமது எதிர்ப்பை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துவோம். மேற்கண்ட படத்தை அல்லது துண்டு சீட்டையாவது கையால் எழுதி எதிர்வரும் 21.09.2012 அன்று நம் நெஞ்சினில் தாங்கி இனப்படுகொலைகாரனுக்கும் அவனை ஆதரிக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுப்போம்.

நமது கோரிக்கையை ஏற்று இனப்படுகொலைகாரனை வெளியேற்றாத இந்திய ஏகாதிபத்திய அரசை நமது நெஞ்சிலிருந்து வெளியேற்றுவோம்

வாழ்க தமிழ் தேசியம்!!!

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அணு உலை அரக்கனின் முதல் பலி

உலகில் பாதுகாப்பான அணு உலை என்பதே இல்லை!!!


ஆரம்பிக்கும் முன்னே முதல் அப்பாவியை காவு கொடுத்து தன் நரபலியை

தொடங்குகிறது மக்கள் விரோத அரசு 


சனி, 1 செப்டம்பர், 2012

புதிய தலைமுறையின் வணிகமய நடுநிலை

கொள்ளை அடித்தவன் எங்கிருப்பான்? கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி!!!


புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

புதிய-தலைமுறை
Nightingale Matriculation Higher Secondary School,
Valliammai Polytechnic Institute,
SRM Engineering College,
SRM College of Nursing and SRM College of Pharmacy,
SRM School of Nursing and SRM College of Physiotherapy,
SRM Institute of Hotel Management,
SRM Arts & Science,
SRM Polytechnic Institute,
Easwari Engineering College,
SRM College of Occupational Therapy,
SRM Institute of Management & Technology,
Valliammai Engineering College,
SRM Institute of Science and Technology,
SRM Dental College,
SRM Medical College Hospital and Research Centre,
SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
Chennai Medical College, Trichy
Inter Disciplinary School of Indian System of Medicine,
TRP Engineering College, Trichy,
Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

இந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய-தலைமுறை-2

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது. மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

புதிய-தலைமுறை

பல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!
நன்றி:கடலூர் இனியவன்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கவிதை: கண்ணீர்


உனது கண்ணீரில் 
கண்டுகொண்டேன்
என் மீது நீ கொண்ட அன்பை.
அதனால் தான் 
உன்னை 
அழவைத்தே
இரசித்திருக்கின்றேனோ!!!
உன் கண்ணீர் வற்றியது-
அதோடு
நம் காதலும்!!!

புதன், 11 ஜூலை, 2012

இந்தியாவை சிதற வைக்கும்...தண்ணீர் போர்

தண்ணீர் தர முடியாது என ஒரு மாநிலம் மறுக்கிறது உச்ச நீதிமன்றம்,நடுவர் மன்றம் போட்ட ஆணைகளை சல்லிக் காசுக்கு கூட மதிக்காமல். அதை நடுவண் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது,வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு.
இந்தியா,இறையாண்மை,சட்டம்,அமலாக்கம் எல்லாம்....வெறும் ஏடுகளில் படிக்கும் வாசகங்கள் ஆகிவிட்டது. தனக்கு மிஞ்சி போனால்,தனது பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் வந்தால் கழிவு நீரைப் போல திறந்துவிடுகிறான் கன்னடக்காரன். இதோ காவிரி நீரை கொண்டு வந்துவிட்டோம் என தண்டோரா போடுகிறான் திராவிடக்காரன். கேவலமாக இல்லை...?!

"மக்கள் 15 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க விரும்பும்போது, ஒரு கிலோ அரிசி அல்லது ஒரு கிலோ கோதுமையை ஏன் ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க விரும்புவதில்லை" நடுவண் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்


காலணியால் அறை வாங்கியும் காலம் கற்பித்த பாடத்தை மறந்துவிட்டான்.

தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்க கூடிய இழிநிலைக்குகொண்டு வந்தது உங்களுடைய சாதனை என மார்தட்டி கொள்கிறாயா?இப்பொழுது எல்லாம் நகராட்சி தண்ணீர் பாத்திரம் விளக்கவும் குளிக்கவும் மட்டுமே பயன்படுகிறது. குடித்தால் காலரா போன்ற தோற்று வியாதிகள் வந்துவிடுமோ என்று பயந்து அடித்தட்டு மக்கள் கூட பயன்படுத்துவது இல்லை. அரசு இயந்திரம் இவ்வளவு நம்பிக்கையற்று போனதற்காக எந்த அரசியல்வாதியும் வருந்தியது இல்லை.

ஒரு கிலோ அரிசி எவ்வளவு என கேளுங்கள்..ஒரு ருபாய் என சொல்லுவார்கள் இவர்கள். யார் இப்போது எல்லாம் நியாய விலைக்கடையில் கொடுக்கும் அரிசியை வாங்குகிறார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

  •  மாடு வைத்திருப்பவர்கள் வாங்குவர்...காரணம்-மாட்டுத்  தீவன விலை ஏற்றம்.(இல்லை என்றால் அவர் கூட அதை வாங்க மாட்டார்). 
  • இன்னொருவர் அரசியல்வாதிகளோட பினாமிகள். அந்த ஒரு ருபாய் அரிசியை வாங்கி தீட்டி மெருகேற்றி நமக்கு 16,20 ரூபாய்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்ப்பார்கள். 
நடுத்தர வர்க்கம் மட்டும் இல்லை,இவர்கள் வரையறுத்த 28 ருபாய் தினக்  கூலி பெரும் பணக்கார பிச்சைக்காரன் கூட வெளிச்  சந்தையில் 35 ரூபாய்க்கு விற்கும் அரிசியை தான் வாங்கி உண்கிறான். காரணம் நியாய விலைக்கடை அரசி, மாடுகள் கூட தீவன விலையேற்றத்தின் காரணமாக தங்கள் முதலாளிகளால் இயலாமை காரணமாக தங்கள் மீது திணிக்கப்பட்ட புழுத்துப் போன அரிசி . 

கூட்டணி அமைத்து உர விலையை பன்னாட்டு குழுமங்கள் ஏற்றிய பொது கண்டுக்காத அரசு ஒரு ருபாய் அரிசி விலையை ஏற்றி அதை விவசாயிக்கு நெற்றிப் பொட்டில் வைக்கப் போகிறார்களாம் . நல்லா இருக்குடா உங்க கரிசனம். கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு அவல நிலைக்கே இந்திய தேசியம் பேசும் ஒவ்வொரு காங்கிரசுகாரனும் நாண்டுகிட்டு சாக வேண்டும்,மானமுள்ளவனாக இருந்தால் தன்னால் தானே இந்த நிலைமை என்று குற்ற உணர்வால். 

தண்ணீர் தராத மாநிலங்களில் இருந்து உற்பத்தி ஆகும் அரிசியை வாங்காமல் நாம் ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டு அரிசியை மட்டுமே வாங்குவோம். புரட்சி ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கட்டும். இனி இந்திய தேசியம் பேசும் ஒருவனும் தமிழ்நாட்டில் இருந்து சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர் ஆகாது பார்த்துக் கொள்வோம்..

வாழ்க தமிழ் தேசியம்...





திங்கள், 25 ஜூன், 2012

கவிதை: விண்மீன்கள்


உன்னை எண்ணி
நான்
தொலைத்த
இரவுகளின் எண்ணிக்கை..!!!

சனி, 23 ஜூன், 2012

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்...

"தட்சிணாமூர்த்தியின் தமிழின துரோக பட்டியல்"
-ஐயா பழ.நெடுமாறன் உரை 


சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கு
ம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும்
காரணம் என்று முதல்வர்
கருணாநிதி கடந்த சில அறிக்கையில்
தொடர்ந்து கூறி வருகிறார்.
இத்தனை நாளும் இதற்கு பதில்
தராமலிருந்த, ஈழத் தமிழ்
ஆதரவாளர்கள், இப்போது ஈழப்
போராளிகள் விஷயத்தில்
கருணாநிதி எப்படி நடந்துகொண்டார்
என்பதை மேடைகளில்
வெளியிட்டு வருகிறார்கள்.
ஈழப்
போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம்
காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான்
என்றும், தன்னை விட
பிரபாகரனையே ஈழத் தமிழர்கள்
மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும்
செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ
நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம்
சாட்டியுள்ளார்.சமீபத்தில்
சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த
கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள்
வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன்
இப்படிப் பேசினார்:
“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச்
செய்த துரோகங்கள்
குறித்து இதுவரை நான் பேசாத பல
விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.1985-
ம் ஆண்டு கருணாநிதியின்
பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச
ரூபாய்
பணத்தை போராளி இயக்கங்களுக்குப்
பங்கு போட்டுக் கொடுப்பதாக
கருணாநிதி அறிவித்தார். இந்தப்
பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம்
தேடிக் கொள்வார் என்பதால் புலிகள்
பணம் வாங்கச் செல்லவில்லை.
உடனே எரிச்சலடைந்த கருணாநிதி,
“என் பணத்தை அவர்கள் வாங்க
மாட்டார்கள். நான் பார்த்துக்
கொள்கிறேன்” எனக் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில்தான் எந்த
விளம்பரமும் இல்லாமல்
கோடிக்கணக்கான
ரூபாய்களை எம்.ஜி.ஆர்
புலிகளுக்கு வாரிக் கொடுத்துக்
கொண்டிருந்தார். தன் சொந்தப்
பணத்தையே அள்ளிக் கொடுத்தார்
அவர்.இருந்தாலும் புலிகளில் சில
தம்பிகளுக்கு கருணாநிதி மேல்
நம்பிக்கை இருந்ததால் அவரைச்
சந்தித்து பணம் கேட்கலாம்
என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர்.
சரி, அவரைப்
பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய்
கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன
ஏற்பாட்டின்படி, 26.1.85
அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவரிடம் டஎங்களுக்குப்
பத்து கோடி ரூபாய் வேண்டும்’
என்று கேட்டுள்ளனர்.
அவர்களை அனுப்பிவிட்டு என்னைத்
தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன
இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’
என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர்
புலிகள் அமைப்பினரைச்
சந்திக்கும்போது
‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித்
தெரியவேண்டும் என்பதற்காகத்தான்
அவரிடம் அனுப்பினேன்’
என்று கூறினேன்.
5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம்
சென்னை கடற்கரையில் நடந்தது.
கடற்கரை மணலில்
யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள்.
அந்தப் பழியை தி.மு.க
தலைமை புலிகள் மீது போட்டது. நான்
பாலசிங்கத்தையும்,பேபியையும்
அனுப்பி உண்மையைச் சொல்ல
வைத்தேன்.
பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’
அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் கருணாநிதியை நாங்கள்
சந்தித்தபோது, ‘பிரபாகரன்
என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா?
மக்களா? என்றால் இரண்டும்
ஒன்றுதான். அந்த மக்கள்
பிரபாகரனைத்தான் தலைவனாக
நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான்
எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.
இந்தியா,-இலங்கை ஒப்பந்தம்
கையெழுத்தான சமயத்தில் தமிழர்
விடுதலை முன்னணியின்
அமிர்தலிங்கம்
உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார்.
நான் இதுகுறித்து அவரிடம்
கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின்
நெருக்குதலில்தான் நான் இந்த
அறிக்கையைக் கொடுத்தேன்.
அப்போது ‘என் அறிக்கையைக்
கண்டித்து கருணாநிதி பதில்
அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’
என்று உளவுத் துறையினரிடம்
கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம்
அறிக்கை கொடுக்க மாட்டார்’
என்று உளவுப்பிரிவினர் என்னிடம்
சொன்னார்கள். அவர்கள்
சொன்னபடியேதான் கருணாநிதியும்
நடந்து கொண்டார்’ என்று என்னிடம்
குறிப்பிட்டார்.
அதற்கு பின்
கருணாநிதியை அமிர்தலிங்கம்
சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல்
(பிரபாகரன்) அவன். இரண்டே நாளில்
இந்திய ராணுவம்
அவனது கொட்டத்தை அடக்கும்’
என்று சொல்லியிருக்கிறார்.
இது உண்மையா? இல்லையா?
இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம்
போடப்பட்ட ராஜீவ்-
ஜெயவர்த்தனா ஒப்பந்தம்
பற்றி ஒரு வார்த்தை கூட
இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை.
உடன்பாட்டைத்
தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர்
உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக்
கண்டித்து அனைத்துக்
கட்சித்தலைவர்களும்
அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆனால் நியூயார்க்
மருத்துவமனையில், உடல் நலம்
குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர்.
அறிக்கை வெளியிட்டார். நாங்கள்
நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர்
பொன்னையனையே அனுப்பி வைத்தார்.
ஆனால்
கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம்,
கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது,
அதாவது 1973-ம் வருடம்
தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின்
குச்சிகளை எடுத்துச்
செல்லும்போது குட்டிமணியை போலீஸார்
பிடித்தார்கள். அவரை சிங்களப்
படையிடம் கருணாநிதிதான்
ஒப்படைத்தார்.
குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
என்று உணர்ந்து 1983-ம்
ஆண்டு சட்டசபையில் தீர்மானம்
கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க்
கட்சித் தலைவராக இருந்த
கருணாநிதி ஒப்புக்கொண்டார்.
அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர்.
மகிழ்ச்சியடைந்த நாங்கள்
இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச்
சந்தித்தபோது அவர்,
‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித்
தெரியாது. அவர் இந்த விவகாரம்
பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக்
கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த
ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.
அந்தத் தாள்களில்
குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய
இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ்,
டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில்,
‘ஒப்படைக்கிறேன்’ என
கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த
கடிதம் என அனைத்து ஆதாரங்களும்
இருந்தன. சொன்னபடியே சட்டசபையில்
எம்.ஜி.ஆர்.அந்த
ஆதாரங்களை முழுமையாக வாசித்தார்.
இது சட்டமன்றக் கோப்புகளிலும்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய
கண்களை பார்வையில்லாத
ஒரு தமிழனுக்குக் கொடுங்கள்.
மலரப்போகும் தமிழீழத்தை அந்தக்
கண்களின் வழியாக நான் பார்க்க
விரும்புகிறேன்’,
இலங்கை வெளிக்கடைச் சிறையில்
கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன்
குட்டிமணி மரணத்தின் வாயிலில்
நின்று உகுத்த வார்த்தைகள் இவை.
இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள
ராணுவம் குட்டிமணியின் கண்களைத்
தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய
வரலாறை உலகமெங்கும்
வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள்
மறந்து விடவில்லை. ராஜீவ்
காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த
தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில்
இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான்
பெயர்களை நீக்குவதாக
அறிவித்துள்ளது. ஆனால்
அவர்களது மரணச் சான்றிதழ்கள்
இன்னமும் இலங்கை அரசால்
வழங்கப்படவில்லை.
இதற்காக பலமுறை இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரிகள்
இலங்கைக்குப் படையெடுத்தும்
பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள
இந்திய துணைத் தூதர் மற்றும்
இலங்கை அரசு கொடுத்துள்ள
தகவல்களின் அடிப்படையில் இவர்கள்
பெயர்களை வழக்கில் இருந்து நீக்க
வேண்டும்’ என்ற சி.பி.ஐ.
தலைமை விசாரணை அதிகாரியின்
அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டுஅம்மான் பெயர்கள்
நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.
வைகோ பேசுகையில்,
“என்னை வெளிநாடுகளில் பேச
அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள்.
ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த
வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…”
என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின்
துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும்
வரை மறைவாக இரு’ என
காசி ஆனந்தனின் வரிகள்,
பிரபாகரனுக்கும் பொருந்தும்!”
என்று அவர் தனது பேச்சை முடித்த
போது கூட்டம் மிகுந்த
உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

சனி, 9 ஜூன், 2012

இந்தி எதிர்ப்பை நக்கல் செய்யும் இந்தியத்தை எதிர்ப்போம்!!!

ஆளும் வர்க்கம் கோவணம் கட்டினால் அதையே நாகரீக உடை எனக் கூறி அங்ஙனமே திரியக்கூடிய பரந்த பணப்பாங்கு கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அவர்களே காங்கிரசில் இருந்தால்? காங்கிரசுக்காரன் வார்டு உறுப்பினராக பரிந்துரை செய்கிறேன் என சொன்னால் அவன் கால் அழுக்கை கூட நக்கி சுத்தப் படுத்த தயங்காத தியாக உள்ளம கொண்டவர்களாக இருப்பர். அந்த பிறப்பில் வந்த ராஜாஜியின் கலப்பினத்தில் பிறந்த எவனோ ஒருவன் இந்தி எதிர்ப்பை நக்கல் செய்து பாடப்புத்தகத்தில் சித்திரம் தீட்டி உள்ளான். 

இதுவரை இந்திய சுதந்திரம் என்பது இந்திக்கார்களால் போராடி வாங்கப்பட்டதாக குழந்தைகளை மூளைச்சலவை செய்த நாகரீக கோமாளிகள் இப்பொழுது தாய் மொழிக்காக உயிர்நீத்த ஈகிகளை நையாண்டி செய்ய துணிந்து உள்ளனர். 

இந்தி தெரிந்தால் அரசாங்க வேலை கிட்டும் என்ற மாயையை உருவாக்கி அதை குழந்தைகளின் மனதில் நஞ்சாய் கலந்து அப்பாவி மக்கள் மீது தங்கள் மொழியை சிறிது சிறிதாக திணிக்கும் திட்டம் தான் சுதந்திர இந்தியாவின் மொழிக்கொள்கையாக உள்ளது பரந்துபட்ட அனைவருக்கும் தெரியும். 

வசம்பு வைத்து தேய்த்தாலும் தங்கள் நாவில் ஆங்கிலம் தவழாது என்பதை உணர்ந்த முட்டாள் பீகாரிகளாலும், உ.பி.காரன்களாலும் இந்தியை அரசு மொழியாக்கினால் தங்களுக்கு புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளவேண்டிய பிரச்சனை ஒழியும் எனக்கருதி தங்கள் மொழியை  பரந்து விரிந்த இந்தியாவின் பழமையான மொழிகள் பேசும் மக்கள் மீதும் திணிக்க நினைப்பது களவாணித்தனம் அல்லவா?

தனக்கு தேவை என்றால் தமிழன் எந்த மொழியையும் கற்க தயங்க மாட்டான் என்பது உலகில் தமிழன் கால் பாதிக்காத நாடே இல்லை என்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம். அப்படிப் பட்ட தமிழன் தேவரடியாளுக்கு பிறந்த (தனக்கென்று சொந்த வார்த்தைகள் இல்லாது பல மொழி வார்த்தைகளை திருடி கொழுத்ததால் இப்படி இந்தி மொழியை அழைப்பது நியாயம் என மொழி வல்லுனர்கள் ஒத்துக் கொள்வார்கள்)இந்தி படித்தே ஆக வேண்டும் என தன் மொழியை திணிப்பது எந்த வகையில் நியாயம்?

மொழிக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ஈகிகளை ஆங்கிலம் பேச தெரியாத குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இந்திக்கார நாய்கள் கிண்டல் செய்யும்போது நாம் பார்த்துக் கொண்டு இருப்பது நியாயமா?

12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள இந்த கேலிச் சித்திரத்தை உடனே நீக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. திமுக தலைவர் கூட தன்னால் முடிந்த 'வேண்டுகோள்" விடுத்துள்ளார்.

கேலிச்சித்திரத்தை நீக்க கோரி ஜூன் -11 அன்று மதிமுக சார்பில் நடக்கும் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு நம் உணர்வுகளை பதிவு செய்து காங்கிரசின் - இந்திய நடுவத்தின் தொடரும் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேலிச்சித்திரம்-சூன் 11-இல் மதிமுக போராட்டம்.

சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் புத்தகங்களில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரத்தைக் கண்டித்து மதிமுக சார்பில் ஜூன் 11ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ் அறிஞர்களும், இலட்சக்கணக்கான மாணவர்களும் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழக வரலாற்றின் வீரம் செறிந்த அத்தியாயம் ஆகும். ஆனால், மத்திய அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், இந்த வரலாறைத் திரித்துக் கூறி, தமிழர் மனங்களைக் காயப்படுத்தும் விதத்தில் கருத்துப்படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இதில், இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, ஆங்கிலமும் தெரியாது என்றும், ஆனால், ஆங்கிலம் வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்ததாகவும், அன்றைய மாணவர்களை இழிவுபடுத்துகிறது.
1965 இல் இந்தி எதிர்ப்பு மொழிப்புரட்சி எரிமலையாக வெடித்தபோது, அதில் இலட்சக்கணக்கான மாணவர்கள் பங்கு ஏற்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல ஆங்கிலப் புலமையும் உண்டு. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விடுவோம்; எனவே, தமிழ் ஆட்சி மொழியாக ஆக வேண்டும். அதுவரை, ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்தே போராட்டம் நடைபெற்றது.
ராஜாஜி
இந்தக் கருத்துப் படத்தில், அன்றைய தமிழக முதல் அமைச்சர் பக்தவத்சலம் படமும் இடம் பெற்று இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு, கொடிய அடக்குமுறையை அவர் ஏவினார் என்பதுதான் உண்மை ஆகும். 37 இல் இந்தியைத் திணித்த இராஜாஜி, அறுபதுகளில், இந்தியைக் கடுமையாக எதிர்த்தார்.
தீக்குளிப்பு
37 போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நடராஜனும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தாளமுத்துவும், இப்போராட்டக் களத்தில் சிறையிலேயே மாண்டனர். 64 இல் சிங்கத்தமிழன் சின்னச்சாமி, திருச்சி ரயிலடியில் இந்தியை எதிர்த்து முழங்கி, தீக்குளித்து மடிந்தார்.
1964 இல், அறிஞர் அண்ணாவின் ஆணைக்கு ஏற்ப அவரது இயக்கம், அரசியல் சட்டத்துக்குத் தீயிட்டுக் களம் கண்டது. 1965 இல், அறப்போருக்கு அறிஞர் அண்ணா அறைகூவல் விடுத்தார். சிவலிங்கம், அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர், இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்தனர்.
1965 மாணவர் போராட்டத்தை ஒடுக்க, இந்திய இராணுவம் எண்ணற்ற தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. தமிழகம் அதுவரை வரலாறு காணாத போராட்டம், பூகம்பமாய் வெடித்தது. இதன் விளைவாகவே, 1967 இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று, முதல்வராக அறிஞர் அண்ணா, ஒருமனதாக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் தியாக வரலாறை இழிவுபடுத்தும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் கேலிச்சித்திரத்தை பாடபுத்தகத்தில் அச்சிட்டு உள்ளது. மத்திய அரசு பாடத்திட்டத்தை ஏற்றுள்ள பள்ளிகளில் மட்டும் அல்லாது, இந்தியாவில் 13 மாநிலங்களில் இந்த பாடத்திட்டமே ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
எனவே, வரலாற்று உண்மையை மூடி மறைத்து, தமிழர்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களையும் ஏளனமாக இழிவு செய்யும் வகையில் கேலிச்சித்திரத்தை இடம் பெறச் செய்ததைக் கண்டிக்கின்ற வகையிலும், மத்திய அரசும், பயிற்சிக் கழகமும் உடனடியாக அந்தக் கேலிச்சித்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும்,
ஜூன் 11 ஆம் நாள் திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் வடசென்னை துறைமுகத்துக்கு எதிரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் எனது தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.அறப்போர் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.

சனி, 10 மார்ச், 2012

தமிழின விரோதி-ஈ.வெ.ராமசாமி




தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்


- தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் 
மக்கள் சீறியெழுந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டால், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய திசையை சரியாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு!
ஈழத்தமிழர்களை இலட்சக் கணக்கில் கொன்றழித்த இராசபட்சே கும்பலை இனப் படுகொலைக் குற்றவாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்று எழுந்த மக்கள் போராட்டம், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடித்த இந்திய அரச்சைத் தடுத்து நிறுத்தி மூன்று தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்தப் போராட்டம், முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்கக் கிளர்ந்தெழுந்த மக்கள் பேரழுச்சி கேரளத்தில் அப்பாவித் தமிழ் மக்களைத் தாக்கிய மலையாளி களுக்குப் பாடம் புகட்டத் தமிழகத்தில் தந்த பதிலடி போன்றவை அனைத்தும் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட தமிழர்களின் இன உணர்ச்சி அணை உடைத்த வெள்ளம் போல் சீறிப் பாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும்.
எதிரி நம்மை இன அடிப்படையில் தாக்கும் போது நாமும் இன அடிப்படையில்தான் எதிரியோடு போராடவேண்டும். இந்த உண்மையை நம் மக்கள் புரிந்து கொண்டு போராடினார்கள். நாற்காலி நாயகர்கள் நடத்தும் தேர்தல் கட்சிகளால் நம் மக்களைப் பிளவுபடுத்த முடியவில்லை. அவர்களின் அறிக்கைகள் அடை யாளப் போராட்டங்கள், மக்கள் எழுச்சியை மடை மாற்றவோ, நீர்த்துப்போகச் செய்யவோ முடியவில்லை.
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்பது மட்டுமின்றி, மலையாளிகளிடம் நாம் இழந்த தமிழ் மண்ணையும் மீட்க வேண்டும் என்று தமிழ்மக்கள் முழக்கமிட்டனர். முதல் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை மீட்க வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தனர். கூடலூர் லோயர் கேம்ப், கம்பம் மெட்டு ஆகிய இடங்களில் இருபத்தைந்தாயிரம், ஐம்பதாயிரம்,  எண்பதாயிரம் எனக் குவிந்த மக்கள் ‘எங்கள் சொந்த மண்ணான இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்போம்’ என்று எழுப்பிய முழக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அதிரச் செய்தது. அம்மலைத் தொடர்களுக்கு அப்பால்  இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் ‘இடுக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணை’’ என்று எதிரொலித்துப் பேரணிகள் நடத்தினர்.
ஏற்கெனவே தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழின உணர் வாளர்களும், இன உணர்வு ஏடுகளும் தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இப்பொழுது அது மக்கள் முழக்கமாகியுள்ளது. மூணாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, தேக்கடி, கண்ணகி கோயிலின் ஒரு பகுதி, முல்லைப்பெரியாறு அணை முதலிய அனைத்துத் தமிழ்ப் பகுதிகளும் இடுக்கி மாவட்டத்தில்தான் உள்ளன.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, இந்தியா தமிழினத்தை வஞ் சித்து விட்டது. மொழிவழி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க அமைத்த ஆணை யத்தில் மலையாளியான கே.மா தவப் பணிக்கரை(சர்தார் கே.எம். பணிக்கர்) ஓர் உறுப்பினராய் பிரதமர் நேரு அமர்த்தியதே தமிழினத்திற்கெதிரான நோக்கம் கொண்டதாகும்.
மூன்று பேர் கொண்ட அவ்வாணையத்தில் இன்னொரு உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ. அதன் தலைவர் பீகாரியான பசல் அலி.
திருவிதாங்கூர்- கொச்சி சமஸ் தானத்தில் மலையாளிகளின் ஆளுகையின்கீழ் நொய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தோவாளை அகத்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு ஆகிய தமிழ்ப்பகுதிகள் சிக்கியிருந்தன. அவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான இயக்கமும் 1945-இல் திருவி தாங்கூர் சமஸ்தானத் தமிழர் களிடம் வடிவமெடுத்தன.
திருவிதாங்கூர்- கொச்சி மாநில (கேரள)க் காங்கிரசில் பொறுப்பு வகித்த, உறுப்பு வகித்த தமிழர்கள் இன அடிப் படையில் மலையாளிகளின் தலைமையில் இயங்கிய திருவி தாங்கூர்-கொச்சி காங்கிரசி லிருந்து விலகி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நாகர்கோவிலில் திருவி தாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு அமைக்கப்பட்டது.
இதன் இலட்சியம்: திருவி தாங்கூர் சமஸ்தானப் பகுதியில் உள்ள தமிழக நிலப்பரப்பைத் தாய்த்தமிழ்நாட்டுடன் இணைப்பது என்பதாகும்.
இதன் நோக்கங்கள்: 1. தமிழ்மொழி வளர்ச்சி, 2. அனைத்திந்தியக் காங்கிரசின் வேலைத்திட்டங்களை ஒட்டி இந்திய விடுதலைக்குப் பாடு படுவது. 3. திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் சிறு பான்மையாக. உள்ள தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பது. இவ்வமைப்பு தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட் டுடன் இணைக்க வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத் தியது.
மொழிவழி மாநில எல்லைகளைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிட்டது. தமிழ்நாடு பற்றி அதன் பரிந்துரை வருமாறு:
சென்னை மாநிலத்தில் உள்ள  மலபார் மாவட்டத் தைக் கேரளத்தோடும், தென் கன்னட மாவட்டத்தை மைசூரோடும் சேர்த்துவிட வேண்டும்.
திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் வட்டங்களை (தாலுகாக்களை) சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும் சென்னை மாநிலம் என்ற பெயர் நீடிக்க வேண்டும்.
சென்னை நகரம் தமிழ் மாநிலத் திற்கே உரியதாய் அதன் தலை நகரமாய் இருக்க வேண்டும்.
சென்னை மாநில-ஆந்திர மாநில எல்லைச் சிக்கலை அதற்கென அமர்த்தப் பட விருக்கும் எல்லை ஆணையம் கிராம அடிப் படையில் திருத்தி அமைப்பதை (பசல் அலி) ஆணையம் ஏற்றுக் கொள்கிறது.
தேவிகுளம், பீரிமேடு, பாலக் காடு, நெய்யாற்றின்கரை, நெடு மங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட வில்லை.
இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் ஆத்திரப் படவுமில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க் கோலம் பூணவுமில்லை. அமைதி நிலவியது.
செங்கோட்டை வட்டம் முழுவதையும் பசல் அலி ஆணையம் தமிழகத்திற்கு வழங்கியிருந்தது. தமிழகத்தின் அசைவற்ற நிலையைப் பார்த்த மலையாளிகள் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி வளமான காட்டுப்பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை வட்டம் கேரளத்திற்கும் செங்கோட்டை நகர் மட்டும் தமிழகத்திற்கு என்றும் மாற்றிவிட்டனர். அதன்பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை.
பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரி யாரிடம் தினத்தந்திச் செய்தி யாளர் இது குறித்து நேர் காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தி யாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளி யானவுடன் தி.மு.க குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. காமராசரும் காங்கி ரசும் எதிர்ப்புப் காட்டாதது ஒரு செய்தியே அன்று. தெற் கெல்லை மீட்புப் போராட்டம் காமராசரின் விருப்பத்திற் கெதிராகவே கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் நடந்து கொண்டிருந்தது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை காம ராசர் எதிர்த்தே வந்தார்.
"பசல் அலி அறிக்கை தமிழினத்திற்கு அநீதி இழைத்து விட்டது’" என்று உடனடியாக செய்தியாளர்களிடம் கூறினார் ம.பொ.சி. அத்தோடு நில்லாமல் பெரியார், அண்ணா ஆகி யோரையும் மற்ற தலைவர் களையும் தனித்தனியே நேரில் சந்தித்து தேவிகுளம், பீரிமேடு வட்டங்களை மீட்க அனைத் துக் கட்சிப் போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைத்தார்.
மா.பொ.சி.யின் முயற்சியால் 27.1.1956 அன்று சென்னை ஏழு கிணறு ஜி. உமாபதி இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. முதலில் வர ஒப்புக் கொண்ட பெரியார், கூட்டத் திற்கு வரவில்லை. அண்ணா கலந்து கொண்டார்.
ம.பொ.சி. கூட்டிய அனைத் துக் கட்சிக் கூட்டத்திற்கு வரமுடியாததற்கான காரணங்களைத் தெரிவித்து அடுத்தடுத்து மூன்று அறிக்கை கள் வெளியிட்டார் பெரியார். அவை விடுதலை ஏட்டில் 25.1.1956, 26.1.1956, 27.1.1956 ஆகிய நாள்களிட்டு பெரியார் கையொப்பமிட்ட அறிக்கை களாக வந்தன. அவற்றின் சாரம் இதுதான்:
தேவிகுளம்- பீரிமேடு வட்டங் களை இணைக்கும் ஒற்றை கோரிக்கையாக மட்டும் அனைத்துக் கட்சிப் போராட் டம் நடக்கக் கூடாது.
1) எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு ( தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
2) இந்தி மொழியை யூனிய னுக்கு ஆட்சி மொழி யாகவும், இந்தியாவுக்குத் தேசிய மொழி யாகவும் ஆக்கப்படாமல் தடுப் பது.
3) தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் படிச் செய்தல் (தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்குப் பாத கமில்லாமல் இக்கோரிக்கையை வைக்கிறோம்).
4) தமிழ்நாட்டைப் பிரித்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சென்னை, மதராஸ் என்ற பெயர்களை நீக்கல்.
5) தென்மண்டலம்   (தட்சி ணப்பிரதேசம்) அமைக்க உள்ள தை எதிர்த்தல்.
மேற்கண்ட ஐந்து கூறுகளும் ஒருங்கிணைக்கப்படாததால் ம.பொ.சி. கூட்டிய கூட்டத்திற்கு போகவில்லை என்று பெரியார் கூறுனார். இவை பற்றி ம.பொ.சியிடம் ஏற்கெனவே பேசியுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகவே இத்தனை கோரிக்கைகளையும் பெரியார் இணைத்திருப்பார் என்று நாம் கருதப் பல காரணங்கள் உண்டு.
அனைத்துக் கட்சிப் போ ராட்டம் நடத்த வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டது, இரண்டு காரணங்களுக்காக 1) பசல் அலி குழு தமிழகத்திற்கு இழைத்த அநீதியைப் போக்கி, குறைந்தது தேவிகுளம் பீர்மேட்டையாவது தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பதற்காகவே. 2) சென்னை ராஜ்ஜியம் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று பசல் அலி குழு பரிந்துரைத் திருந்தது. அதை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத் தை இராசாசி தவிர மா.பொ.சி. உள்ளிட்ட அனைவரும் எதிர்த் தனர்.
இந்த உடனடிக் கோரிக் கைகளுடன் நீண்டகாலக் கோரிக்கைகளான மாநில சுயாட்சி, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கக் கூடாது என்பவற்றை பெரியார் இணைத்தது சரியா?
எடுத்துக்காட்டாக முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் இப்பொழுது கூட்டுப் போராட் டமாகவும் நடக்கிறது. அந்தந்த அமைப்பின் போராட்ட மாகவும் நடக்கிறது. இதற்கான கூட்டுப் போராட்டத்தில் நெய்யாற்றின் கரை, நெடு மங்காடு, கொச்சின் சித்தூர், பாலக்காடு, தேவிகுளம், பீரிமேடு ஆகிய அனைத்துப் பகுதி களையும்,  தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கையில் சேர்த்துக் கொண்டால்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேரும் என்று நிபந்தனை போடலாமா? கூடாது. கூட்டுப் போராட்டத்திற்கான உத்தி அதுவன்று. மேற்கண்ட தமிழ் நிலப்பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது த.தே. பொ.க. வின் உறுதியான கொள்கை. அதைத் த.தே.பொ.க. வின் தனிப்போராட்டத்தில் வைத்துக் கொள்ளலாம். அந்த நிலமீட்புக் கோரிக்கைக்கும் கூட்டுப் போராட்டம் நடத்தும் காலம் வரும். ஆனால் இப்பொழுது முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில் முதற்பெரும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டுப் போராட்டம் நடத்த ஒத்து ழைப்பு நல்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க 21.12.2011 அன்று ம.திமு.க. முன்னெடுத்தக் கூட்டுப் போராட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.
ம.பொ.சி. தேவிகுளம் பீரி மேட்டை மீட்பதற்கு அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய நிபந்தனை களைப் போட்டார் பெரியார். காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க அவர் இந்த நிபந்தனை களை போட்டாரா? இல்லை..
1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க மேற்கண்ட நிபந்தனைகளைப் போட்டாரா? 1965-இல் மாண வர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தாரே பெரியார் ஏன்? காங்கிரசு ஆதரவு நிலை யிலிருந்து கொண்டு தான் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை எதிர்த்தார்.
மாணவர்கள் உள்ளிட்ட தமிழர்களை முந்நூறுக்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி 1965-இல் சுட்டுக் கொன்றது. அப்போதும் காங்கிரசு ஆட்சியைத்தான் பெரியார் ஆதரித்தார். ஆனந்த விகடன் ஏடு அப்போது பெரியாரிடம் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை நடத்தியோர் சாவி மற்றும், மணியன். அது வருமாறு:
சாவி: அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்ட மெல்லாம் நடத்தினீர்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?
பெரியார்: அப்படியா? மன்னிக் கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்குறேன். சொல்லுங்கோ?
சாவி: இந்தி தான் ஆட்சி மொழியா வந்துட்டுதே..
பெரியார்: எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?                                    
- ஆனந்தவிகடன் 11.4.1965
1965 மொழிப்போர் நடந்து முடியும் தருவாயில் பெரியார் கூறிய கருத்துகள் இவை. அப்போழுது எங்கே போயிற்று அவரது இந்தி ஆதிக்க எதிர்ப்பு? தனித் தமிழ்நாட்டுக் கோரிக் கைக்குப் பாதகமில்லாமல் அவர் ம.பொ.சி.யிடம் கேட்ட மாநில சுயாட்சிக் கோரிக்கை காங்கி ரசை ஆதரித்த போதெல்லாம் எங்கே போயிற்று? இந்தியா ஒன்றாக இருக்க வேண்டு மெனில் இந்தி ஆட்சி மொழி யாக இருப்பதுதான் சனநாயக மென்று 1965-இல் பேசுகிறார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டால் தேவிகுளம், பீரிமேடு மீட்புப் போராட் டத்திற்கு வருகிறேன் என்று கூறிய பெரியார், பசல் அலி ஆணைய அறிக்கை வந்த போது 10.10.1955 அன்று தேவிகுளம், பீரிமேடு வட்டங்கள் கேரளத் துடன் சேர்க்கப் பட்டது ’’சரிதான்’’ என்று ஆதரித்தார் என்பதை முன்னர் பார்த் தோம்(தினத்தந்தி, 11.10.1954).
ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகள் இணைந்திருந்த சென் னை மாகாணத்தை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து, தமிழ் நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் 1948-இல் பெரியார் எதிர்த்தார்.
‘சென்னை மாகாணத்தை நான்கு கூறுகளாக ஆக்க வேண்டு மென்பது கண்டிப்பாக அரசியல் வாழ்வையே தங்கள் ஜீவனமாக, வியாபாரமாக, பதவி- பட்டம்- பணம் சேர்த்தல் முதலிய காரியங்களுக்கு வழி யாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சிலர் தங்கள் நலனுக்காக இதை- இந்தப் பிரிவினையை வேண்டு வார்களானால், வலியுறுத்து வார்களானால் அதற்கு இடம் கொடுப்பது திராவிட கலாச் சாரத்துக்கும் திராவிட சமுதா யத்துக்கும், திராவிடத் தலை மொழியாகிய தமிழுக்கும் தேய்வு- அழிவு ஏற்பட்டு விடு மென்று எச்சரிக்க விரும்பு கிறேன்" -_ பெரியார், விடுதலை 1. 8. 1948.
மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைவதை-, அதற் காகக் கோரிக்கை வைப்பதை இங்கு எதிர்க்கிறார் பெரியார். மொழிவழி மாநிலம் கோரு வோர் காட்டுமிராண்டிகளின் பிரதிநிதிகள் என்று இராசாசி 1956-இல் பேசினார்.
1948இல் மொழிவழி மாநிலப் பிரிவினையை எதிர்த்த பெரி யார் 1955-இல் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என் கிறார். என்னே தன் முரண்பாடு! அத்தோடு அவர் நிற்கவில்லை. 1948-இல் அவர் போற்றிய திராவிடச் சமுதாயத்தின் திராவிடக் கலச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் மலையாளி களை என்ன சாடு சாடுகிறார் பாருங்கள். 1956-இல் அவர் பேசியது:
“ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும் மலையாளக்குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப் பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப் பனனைப் போலவே மலை யாளிகள் மான ஈன மில்லா தவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக் காது. எதற்கெடுத்தாலும் திமி ராகப்பேசவும், பார்ப்பனர் களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும்.’’
_- வேலூரில் பெரியார் உரை 29. 1. 1956 (இதை விடுதலை நாளேடு- 18. 1. 2012இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டுள் ளது)
பெரியார் சொற்களில் சொன்னால் பார்ப்பனர்களைப் போன்ற மலையாளிகளையும் சேர்த்துக்கொண்டது தானே அவர் கூறி வந்த திராவிடம், அவர் உரத்துப்பேசிய திராவிட சமுதாயம் மற்றும் திராவிடக் கலாச்சாரம். சென்னை மாகாணத்திலிருந்து மலபார் மாவட்ட மலையாளிகளை பிரித்து அனுப்பக் கூடாது என்றுதானே மொழிவழித் தமிழக அமைப்பை 1948 -இல் எதிர்த்தார்!
அன்றன்றைக்கு அவர் எடுத்த அரசியல் நிலைபாட்டிற் கேற்ப வெவ்வேறு வரையறுப்புகளைக் கூறிவந்துள்ளார் பெரியார்.
தமிழ்த் தேசிய இனம் குறித்து சமூக அறிவியல் வழிப்பட்ட வரையறுப்பு அவரிடம் இல்லை.
சென்னை மாகாணத்தி லுள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் பிரிந்து போகக் கூடாது என்று 1948-இல் கூறிய பெரியார், இந்த நான்கு மாநிலங்களையும் சேர்த்து நேரு முன்மொழிந்த தட்சிணப் பிரதேசத்தை அவர் ஆதரித் திருக்க வேண்டும்.
சென்னை மாகாணத்தி லிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகளைப் பிரித்துவிடக் கூடாது என்று பேசிய பெரியார் 1956-இல் அந்த இனங்களோடு தமிழர்களும் சேர்ந்து ஒரே மாநிலமாக இருப்பதை ஏன் எதிர்த்தார்?
அப்படி ஒரு மாநிலம்- அதாவது தட்சிணை பிரதேசம் அமைந்து விட்டால் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மட்டும் உள்ள சின்னஞ் சிறு அமைப் பாக சிறுத்துப் போயிருக்கும். திராவிடத்தையும் பெரியாரை யும் ஏற்காத தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகளே தட்சிணப்பிரதேசத்தில் பெரும் பான்மையாக இருந்திருப் பார்கள்.
மொழிவாரி மாநிலத்திற்குக் குரல் கொடுக்காத காமராசர், தெற்கெல்லை வடக்கெல்லை மீட்புப் போராட்டங்களை ஆதரிக்காத காமராசர், தட்சி ணப் பிரதேசம் அமைவதை மட்டும் ஏன் எதிர்த்தார்? தட்சிணப்பிரதேசம் அமைந்து விட்டால் அதில் காமராசர் முதலைமைச்சராகத் தொடர முடியாது. பெரும்பான்மை இனமான தெலுங்கர்களே பெரும்பாலும் முதலமைச்சர் ஆவர். அதுமட்டுமல்ல, தங்க ளுக்குள் முரண்பாடுகள் இருந் தாலும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளி களும் தமிழரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவேதான் காமராசர், தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தார்.
எனவே, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்ததில், பெரி யாருக்கும், காமராசருக்கும் அவரவர் எதிர்காலம் சார்ந்த பார்வை இருந்ததே தவிர, தமிழ்த் தேசிய இனம், தனி இனம் என்ற சரியான பார்வை இல்லை.
தி.மு.க. ஏன் தட்சிணப் பிரதேசத்தை எதிர்த்தது? 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேளையில் தட்சி ணப் பிரதேசம் முன் மொழியப் பட்டது. தி.மு.க. கூறிவந்த "திராவிடப் பொன்னாடு’’ தானே தட்சிணப் பிரதேசம்! அதை ஏன் எதிர்க்க வேண்டும்? முதலில் திராவிட இன ஒற்றுமையை உருவாக்கி, அடுத்து திராவிட நாட்டு விடுதலைக்குப் போராடு வதுதானே தி.மு.க.வின் திட்ட மாக இருந்திருக்க வேண்டும். திராவிடர்கள் ஒன்றிணைக் கப்படுவதைக் கண்டு அண்ணா ஏன் அஞ்சினார்? தட்சிணப் பிரதேசத்தில் தி.மு.க. ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது.
1956-இல் தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் பெற்றிருந்த செல்வாக்கும் அவர் களின் கழகங்கள் பெற்றிருந்த வளர்ச்சியும் திராவிடத் தட் சிணப் பிரதேசம் அமைந்தால் சடசடவெனச் சரிந்து சிறுபான் மை ஆகிவிடும் என்பதை உணர்ந்து அவர்கள் அஞ்சி னார்கள்.
ஏமாளித் தமிழர்களிடம், இவர்கள் திராவிட இன உறவுகளை-, திராவிடக் கலாச் சாரத்தைப் பேசினார்கள். இந்திய அரசே திராவிடர்களை ஒரே மாநிலமாக இணைக்கப் போகிறது என்று வந்தவுடன் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சினார்கள். இதற்குப் பெயர் இனக்கொள்கையா?
இவர்களிடம் தேசிய இனங்கள் குறித்த வரையறுப்பும் தமிழ்த் தேசிய இனம் குறித்த புரிதலும் இல்லை. ஆனால் ‘இன அரசியல்’ நடத்தினார்கள். தமிழர்கள் தங்களின் மரபு இனமாகவும் தேசிய இன மாகவும் விளங்கும் தமிழ் இனத்தை உள்ளது உள்ளபடி உணரவிடாமல் இவர்கள் குழப்பிவிட்டார்கள்! இன்றைக்கும் தி.மு.க.வும் தி.க.வும், மற்ற பெரியாரியல் வாதிகளும் திராவிடத்தைச் சொல்லி தமிழர்களைக் குழப்பு கிறார்கள்.
கலைஞர் கருணாநிதி இன் றும் ‘திராவிடம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறார். "இனத்தால் திராவிடன் மொழியால்தான் தமிழன்" என்று கூறிக்கொள்கிறார். இவ்வாண்டு நடந்த பெருங்கேடாக தி.க. தலைவர் கி.வீர மணி, தமிழர் திருநாள் விழாவை "திராவிடர் திருநாள் விழா" என்று பெயர் மாற்றி மூன்று நாள் கொண்டாடினார். திராவிடச் சீர்குலைவு இன்னும் ஓயவில்லை. தமிழர்கள் இன உணர்ச்சி பெற்று எழும் போதெல்லாம் "திராவிடத் தலைவர்கள்" தங்கள் சீர்குலைவு வேலையைத் தொடங்கி விடு கிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணைப் போராட்டத்தில் மக்களின் எழுச்சியைப் பார்த்த கருணாநிதி, அம் மக்களைத் தமது தேர்தல் அரசியலுக்கு ஈர்த்துக் கொள்வதற்காக தேவிகுளம் பீரி மேட்டைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிறார். மலை யாள அரசு, தமிழர்களின் பொங்கல் விழாவுக்கு விடுமுறை விடாத நிலையில், தமிழ் நாட்டில் ஐந்து மாவட் டங்களில் மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டு தமிழினத் துரோகம் புரிந்தவர் இதே கருணாநிதி தான். ஆந்திரப் பிரதேச முதல மைச்சர் இராசசேகரரெட்டி விமானவிபத்தில் இறந்ததற்கு தமிழ்நாட்டில் விடுமுறைவிட்டு, தி.மு.க. கொடியை மூன்று நாள்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டவர் இதே கருணாநிதிதான். அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். இறந்த போது ஆந்திரம் விடுமுறை விடவில்லை.
1956 பிப்ரவரி 20 -இல் அனைத்துக் கட்சி நடத்திய தமிழகப் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பில் கலந்து கொண்ட தற்கப்பால் தமிழ்நாட்டில் தேவிகுளம் பீரிமேடு மீட்பிற்காக தனியே ஒரு போராட்டத் தைக்கூட தி.மு.க. நடத்த வில்லை. குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் திரு.தமிழ்நாடு காங்கிரசு நடத்திய போராட் டங்கள் சிலவற்றில் அப்போது கலந்துள்ளனர். கருணாநிதி தமது அறிக்கையில் தமிழக முழுஅடைப்பில் தி.மு.க. கலந்து கொண்டதைக் குறிப்பிட் டுள்ளார். மற்றவையெல்லாம் கழகத்தின் தீர்மானங்களும் அறிக்கைகளும் தாம்!
பெரியார் தி.க. என்ன கூறுகிறது? முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் இந்திய அரசை எதிர்த்துப் போராடவேண்டுமே தவிர கேரளத்தையோ மலையாளிகளையோ எதிர்த்துப் போராடக்கூடாது என்கிறது. கேரளம் 'சண்டித்தனம்" செய்கிறதாம்! கேரளத்தில் தமிழர்கள் தாக்கப் பட்ட தெல்லாம் சண்டித்தனம் தானோ?
’’முல்லைப்பெரியாறு அணை மீண்டும் எரியத் தொடங் கியுள்ளது. கேரள அரசின் சண்டித்தனம் தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது.
‘ஒன்றுபட்ட இந்தியா தோல்வி அடைந்து விட்டது. இந்தியாவில் வாழும் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் தீர்வு கிடைக் காது என்ற நிலையில், தமிழர் களின் பிரதான எதிரியாக நிற்பது பார்ப்பன-பன்னாட்டுச் சுரண்டலுக்காக மட்டும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்திய ஆட்சிதான்’’
_-புரட்சிப் பெரியார் முழக்கம் (பெ.தி.க. ஏடு) 15. 12. 2011
தமிழ்நாட்டு விடுதலையைத் தனது முதன்மை இலட்சிய மாகக் கொண்டுள்ள இயக்கம் போல் காட்டிக்  கொண்டு, கேரளத்திற்கும் மலையாளி களுக்கும் பதிலடி கொடுக்கும் தமிழ் மக்களைத் திசை திருப்பி விட இந்திய அரசை எதிர்த்து போராடுங்கள் என்று மடை மாற்றுகிறது பெ.தி.க.
1956  சனவரியில் ம.பொ.சி. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் போக மறுத்த பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு ஊனம் ஏற்ப டாமல் மாநில சுயாட்சிக் கோரிக்கையை இணைத்துக் கொண்டால், இந்தி எதிர்ப்பை இணைத்துக் கொண்டால் தேவிகுளம் பீரிமேடு போராட் டத்திற்கு வருவேன் என்று காரணம் காட்டித் திசை திருப்பினாரல்லவா! அதே உத்தியைத்தான் இப்பொழுது பெ.தி.க.வும் கையாள்கிறது.
அய்யப்ப கோயிலுக்குப் போன தமிழர்களை மலையா ளிகள் அடித்து விரட்டியதை எளிமைப்படுத்தி மலையாளிகள் மீது தமிழர்களுக்குச் சீற்றம் வராமல் அவர்களுக்குத் தற் காப்புப்பணி புரிகிறது பெ.தி.க.
“சூத்திரத்தமிழர்களை அடித்து விரட்டி விட்டதாலேயே ‘சூத்திர’ மலையாளிகள் அய்யப்பனுக்கு முழு உரிமை கோரவும் முடி யாது. அவர்களால் அய்யப் பனை நெருங்கிவிடவும் முடி யாது. அங்கே நம்பூதிரிப் பார்ப்பான் சூத்திர மலையாளிகளை மட்டுமல்ல பெண்களையும் சேர்த்து கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே விரட்டி அடிக்கிறான்.                   - புரட்சிப்பெரியார் முழக்கம் 15.12.2011
வர்ணாசிரம எதிர்ப்பு, பெண் ணுரிமை என்ற முற்போக்குச் சொல்லாடல்கள் மூலம் மலை யாளிகளைப் பாதுகாக்கும் ‘திராவிட உத்தி’ இது.
பத்துநாள்களாகக் கேரளத்தில் கேள்வி கேட் பாரற்று மலையாள இன வெறி யர்கள் அப்பாவித் தமிழர்களை  அடித்தார்கள். தமிழ்ப் பெண் களைச் சிறைப்படுத்தி மான பங்கப் படுத்தினார்கள். அதன் பிறகே தமிழ்நாட்டில் மலை யாளிகளுக்குப் பதிலடி கொடுத் தோம். தமிழ்நாட்டில் நடந்த பதிலடி என்பது மலையாளி களின் நிறுவனங்களை மூடச் செய்ததாகத்தான் அமைந்தது. இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை பெரியார் தி.க.வால்! அவர்களின் திராவிட பாசம் தமிழர் களுக்கு எதிராக உள்ளது.     மலையாள இனவெறியர்களைப் பாதுகாக்க முனைகிறது. இதற்காகத் தமிழர்களிடம் சூத்திர பாசத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறது பெ.தி.க.
அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கவில் லையே என்று கவலைப்படும் பெ.தி.க.வுக்கு, தேனி மாவட்டத் தமிழ்ப் பெண்கள் மலையாளி களால் கடத்தப்பட்டு மான பங்கப் படுத்தப்பட்டது பெரிதாக உறுத்தவில்லை. திராவிட பாசம் மனச்சசான்றை மரத்துப் போகச் செய்கிறது.
அடிக்கும் மலையாளிகளும் ஆடுகளாம் அவர்களால் அடிக்கப்படும் தமிழர்களும் ஆடுகளாம்! இரு ஆடுகளும் மோதிக் கொண்டால் இந்திய அரசு என்ற நரிதான் இரத்தம் குடிக்குமாம்! திசை திருப்பு கிறது பெ.தி.க.
“ஆனாலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய கடமை யைக் கைகழுவிவிட்டு, தமிழர் -கேரள மோதல்களைக் கூர் தீட்டி விட்டு ஆடுகள் மோதலில் ரத்தம் குடிக்கும் நரிகளைப் போல், "ஒருமைப் பாடு', "தேச பக்தி' பேசிக் கோண்டு உரிமை களைத் தடுத்து நிறுத்தும் முதன்மை எதிரி இந்திய அரசு தான்”. - -புரட்சிப் பெரியார் முழக்கம், 22. 12. 2011.
இந்திய அரசு ஓர் ஏகாதி பத்திய அரசு. பல்வேறு இனங் களுக்கிடையே எழும் முரண் பாடுகளைத் தீர்க்காமல் மோத விடுவது அதன் பொதுவான உத்திதான். அந்த இந்திய அரசின் உயர் அதிகார மையங் களில் மலையாளிகள் தாம் முகாமையான பொறுப்புகளில் உள்ளார்கள். ஈழத் தமிழர்களை அழிக்கும் போரை இந்தியா மறைமுகமாக நடத்தியதற்கு முகாமைக் காரணிகளாக இருந்தவர்கள் அந்த மலையாளிகள் தாம் என்பது ஊரறிந்த உண்மை. இதே பெ.தி.க.வும் அக்குற்றச்சாட் டைத் தனது ஏட்டில் எழுதி யுள்ளது. தமிழகத் தமிழர்கள் மலையாளிகளால் தாக்கப்படும் போது மட்டும், மலையாளிகள் அப்பாவி ஆடுகள் என்றும்  அவர்களை ஏவுவது இந்திய அரசுதான் என்று தான் என்றும் கண்டுபிடித்துள்ளது. இக்கண்டுபிடிப்பு எங்கிருந்து வந்தது? திராவிட பாசத்தி லிருந்து வந்தது.
இரண்டு ஆடுகளையும் இந்திய அரசு கூர் தீட்டி விட்டது என்றால், தமிழர்களை மலையாளி களுக்கு எதிராக அது கூர் தீட்டிவிட்டதா?
தமிழர்களைப் பார்த்துக் கேட்கிறோம். தமிழர்களே, மலையாளிகளோடு மோதுங்கள் என்று உங்களை இந்திய அரசு கூர்தீட்டி விட்டதா? மலையாளிகளைத் தாக்கும்படி தமிழர்களை இந்திய அரசு தூண்டி  விட்ட தா? இல்லை. தம்மின அப்பாவி மக்கள் மலையாள இனவெ றியர்களால் அன்றாடம் தாக்கப் படுவதைக் கண்டு நெஞ்சு குமுறிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களின் இன உணர்ச்சி தூண்டியதால் மலையாளி களுக்குப் பதிலடி கொடுத்தார்கள். இந்திய அரசு தமிழர் களைத் தூண்டிவிட்ட தாக ஏன் பெ.தி.க. பிழைபடப் பேச வேண்டும்-? 
தமிழர்கள் தாக்கப்பட் டார்கள். மலையாளிகள் தாக்கி னார்கள். இதை “தமிழர் - கேரள” மோதல் என்று வர்ணிக் கிறது பெ.தி.க. நம்மைச் சொல்லும் போது தமிழர் என்று குறிப்பிடும் அக்கட்சி மலையாளிகளைக் குறிப்பிடும் போது மட்டும் இனப்பெயரைக் குறிப் பிடாமல் ”கேரள” என்று மாநிலப் பெயரைக் குறிப் பிடுகிறது.
“தமிழக-கேரள” மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அதுவும் சரியில்லை. தமிழகம் கேரளத்தோடு மோதியதா? இல்லை, கேரளம் தான் தமிழகத் தோடு மோதியது. மோதிக் கொண்டுள்ளது.
இந்திய அரசை உண்மையில் எதிர்ப்பதாக இருந்தால் தமிழக விடுதலையை தனது முதன்மை இலட்சியமாக அறிக்கை வடிவில் பெ.தி.க. அறிவித்து இயங்க வேண்டும். அதை விடுத்து முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட் டத்தில் மலையாள இனவெறி யர்களுக்கு எதிராக ஏற்பட் டுள்ள தமிழர் இன எழுச்சியை மடை மாற்றுவதற்காக இந்திய அரசு எதிர்ப்பினைப் பயன் படுத்தக் கூடாது.
அடிபட்டு, அடிபட்டு, உரிமை இழந்து இழந்து, மலையாள இனவெறியர்களுக்கு எதிராகச் சீறிச் சினந்து எழுந்துள்ள தமிழ் மக்களையும் தமிழின உணர்வாளர்களையும் திசை திருப்பும் வகையில்,    ஆடுகளின் மோதல், இரத்தம் குடிக்கும் நரிக்கதை, சூத்திரர், பெண்ணுரிமை சொல்லா டல் போன்றவற்றை பெ.தி.க. பயன் படுத்துவது சரியன்று.
திராவிட இயக்கத்தின் திராவிட இனக்கொள்கை அன்றும் தமிழர் உரிமைகளுக்கு எதிராக இருந்தது இன்றும் எதிராக உள்ளது.
இன எழுச்சி பெற்றுள்ள தமிழர்கள் தமிழ்த்தேசியம் என்ற தமிழினத்திற்குரிய தத்து வப் பதாகையை ஏந்தினால் தான் நம் போராட்டங்களும் எழுச்சிகளும் மீண்டும் விரைய மாகாமல் தமிழின உரிமைகளை மீட்கப் பயன்படும்!
முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்கும் போராட் டத்துடன் முதற் கட்டமாக இடுக்கி மாவட்டத்தை இணைக் கவும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒன்று திரள்வோம்! போராடுவோம்! தாக்குபவனைத் திருப்பித் தாக்குவோம்!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தமிழனுக்கு பாசிச இந்தியா விடுக்கும் சவால்-"அடுத்து என்ன?"


கூடங்குள அணு உலையை எதிர்த்து இது வரை அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது களங்கம் கற்பிக்கும் அராஜக அரசியல்வாதிகளை பார்த்து திருப்பி கேள்வி கேட்டால் "பிரதமரையே விமர்சிப்பதா?" என கேட்கிறது அவரின் கைத்தடி ஒன்று. 

அவரை பார்த்து நாம் கேட்பது "இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்று ஒன்று உள்ளதே அது உனக்கு தெரியுமா?அதன் மையக் கருத்து என்ன என்பதாவது உனக்குத் தெரியுமா? அதன் முன் மக்கள் அனைவரும் சமம் என்பது தெரியுமா? மக்களால் மக்களுக்கு சேவை செய்யப்பட்ட பணியாள் தான் உனது முதலாளி என்பது உனக்கு தெரியுமா?

ஏன் இதுவரை உன் எசமானன் பொய்யே சொன்னது இல்லையா? அவர் என்ன அரிச்சந்திரனுக்கு அண்ணாத்தையா? இல்லே,சீசரின் சம்சாரமா?

மக்களின் வரி பணத்தில் ஊதியம் பெரும் காவல் துறையை அடியாளாக அமர்த்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களுக்கு எதிராக வன்முறையை மக்கள் மீது திணிகிறது.இது தான் இன்றைய சனநாயகத்தின் நெறிமுறை.

"கூடங்குளம் அணுஉலையை மூடக்கொரும் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த தமிழ் அடியார் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். கல்பாக்கத்தில் 2 அணுஉலைகளையும் மூட தமிழ் அடியார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு உள்ள நிலையில் மனுவை ஏற்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி இக்பால் , நீதிபதி அருணா ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளனர்"
மக்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் அணு உலையை மூட சொல்லி மனு அளித்தால்,ஏதோ இந்த அணு உலை வந்து தான் இருண்ட தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்த போவது போல,மனுவை விசாரிக்காமலே தள்ளுபடி செய்துள்ளனர் நீதி "அரசர்கள்".

இந்த அணு உலை வந்து முழுமையாக இயங்கினால் கூட 450MW கூட கிடைக்குமா என்பதே சந்தேகம். தமிழகத்தின் இன்றைய மின் பற்றாக்குறை 2500-3000MW.  பாமரனுக்கு தெரிந்த புள்ளி விவரம் கூடவா அவர்களுக்கு தெரியாமல் போனது?

இந்தியனும் சிங்களவனும் இணைந்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர்.இப்போது இந்தியன் ரசியனுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டு தமிழனை உயிரோடு புதைக்க திட்டம் தீட்டுகின்றனர்.




இந்திய ஏகாதிபத்தியம் தமிழனை பார்த்து நக்கலுடன் கேட்கிறது...



செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

உருத்திரக்குமாரனுக்கு முன்னாள் பெண் போராளியின் விண்ணப்பம்

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! - ருத்திரகுமாரனிடம் ஒரு முன்னாள் பெண் போராளி உருக்கமான வேண்டுகோள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மாண்புமிகு வி. ருத்திரகுமாரன் அவர்கட்கு!

தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய தகுதியின் உரிமையோடும், இன்றுவரை தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிக்கும் உறுதியுடனும் ஊனமுற்ற நிலையிலும் உறுதியோடும், தமிழீழம் மலரும் என்ற எதிர்பார்ப்போடும் வாழும் பெண் என்ற வகையில் இதனைத் தங்களுக்கு எனது கண்ணீர் கொண்டு வரைகின்றேன்.

ஐயா!

முள்ளிவாய்க்கால் பேரழிவு விடுதலைப் புலிகளது பக்க வேர்களைச் சாய்த்திருந்தாலும், அதன் ஆணி வேர் இப்போதும் உறுதியாகவே இருக்கின்றது. அதை விழுதுகளாகத் தாங்கி நிற்கும் புலம்பெயர் தமிழர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் உறுதியாகவே உள்ளார்கள்.புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களின் வீச்சினால் மட்டுமே, நாங்கள் இன்னமும் உயிர் வாழும் அனுமதி பெற்றுள்ளோம்; என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. நாங்கள் மட்டுமல்ல, தமிழீழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் உயிர்க் குடையாகப் புலம்பெயர் தமிழர்களே காத்து நிற்கின்றார்கள். இல்லையென்றால், முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் நிகழ்த்திய சிங்கள அரசு முற்றாக எங்கள் முகவரிகளைச் சாய்த்தேவிட்டிருக்கும்.

புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் எழுச்சி கொள்ளும்போதே எங்கள் பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழீழ விடுதலையும் உறுதிபடுகின்றது. அதை முன்கூட்டிய உள்ளுணர்வால் எங்கள் தேசியத் தலைவர் அவர்களும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இறுதிப் போர்க் களத்தில் வீழ்ந்த அத்தனை போராளிகளும், பொதுமக்களும் அந்த எதிர்பார்ப்புடனேயே மண்ணில் சாய்ந்தார்கள். நான்கூட, படுகாயமடைந்த நிலையில், நினைவு தடுமாறிய கணத்திலும் எங்கள் மண்ணினதும், மக்களதும் விடுதலைக்காக நீங்கள் எல்லோரும் போராடுவீர்கள். தமிழீழ விடுதலை என்ற மாவீரர்களது கனவுகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், 'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்' என்ற உச்சரிப்புடன் கண்களை மூடினேன்.

ஆனாலும், எப்படியோ நான் பிழைத்துக்கொண்டேன். அதில் எனக்கு சந்தோசமும் இல்லை, துக்கமும் இல்லை. களத்தில் என்னுடன் இணைந்து போராடிய தோழர்களது கல்லறைகளும் சிதைக்கப்பட்டுள்ள இந்தக் கணம் எனக்கு இயலாமை என்ற பெரும் வேதனையைத் தந்துகொண்டுள்ளது. இருந்தாலும், எனது பணி இன்னமும் இருப்பதனால், நான் உயிரோடு தப்பி இருக்கிறேன் என்ற நம்பிக்கையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாக தமிழீழ விடுதலைவரை நான் வாழவேண்டும் என்ற உறுதியும் என்னை வாழவைத்துக்கொண்டுள்ளது.


எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் தாயகத்தின் விடுதலைக்காகக் கழுத்தில் நஞசு மாலையை அணிந்து கொண்டவர்கள். எங்களது வாழ்வும். சாவும் தமிழீழ விடுதலைக்கானது. தற்போதைய கறுப்பு நாட்கள் அதற்கான சிறிய இடைவேளை மட்டுமே. எங்கள் கரிகாலனது வருகைவரை, எங்கள் காத்திருப்பு தவிர்க்க முடியாதது. அது போலவே, தேசியத் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பணியையும் நீங்கள் தவிர்க்க முடியாது. உலக ஒழுங்கு என்ற வரிசைப்படுத்தலில் எங்கள் மக்களது விடுதலை வேள்வியும் சிக்கிச் சீரழிந்து போனாலும், முள்ளிவாய்க்காலின் பின்னரான இன்றைய காலத்தில் உலக நாடுகள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள முனைகின்றன. ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தின் நியாயங்கள் தங்போது உலக நாடுகளால் உணரப்பட்டு வருகின்றது. இந்த யதார்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களது பணி அதிகம் தேவைப்படுகின்றது.

எதிரியின் அத்தனை காய் நகர்த்தல்களையும் முறியடித்து, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல் புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே முடியக் கூடிய தேசியக் கடமை. அந்தப் போராட்டத்தின் ஒருமுகப்படுத்தலில் வேற்றுமைகளிலும் ஒற்றுமை பேணப்படவேண்டும். 'மக்கள் புரட்சி செடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்' என்ற திலீபன் அண்ணாவின் வார்த்தைகள் புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் திரட்டும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுக்காக நீதி தேவதை தன் கதவுகளைத் திறந்து வரும் வேளையில், புலம்பெயர் தமிழர்களை ஓரணியில் நிறுத்த வேண்டிய நீங்கள் எப்போதுமே தனிப் பயணம் மேற்கொண்டு வருகின்றீர்களே? அது ஏன் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்களில் யாருக்கும் புரியவில்லை. புலம்பெயர் தமிழர்களின் போர்க் களம் உங்களால் பிளவு படுவதை எப்படி அனுமதிக்கின்றீர்கள்? மாவீரர் தினத்துடன் உங்கள் போட்டி அரசியலை நிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதையும் பொய்யாக்கி, ஜெனிவா போராட்டத்தையும் பிளவு படுத்தி எதிரியின் மனதைக் குளிர வைக்க உங்களால் எப்படி முடிகின்றது?

பொங்கிவரும் வேளையிலே, பானையை உடைக்காதீர்கள்! தமிழீழ மக்களுக்கான நீதி திரண்டுவரும் நேரத்தில், புலம்பெயர் மக்களின் எழுச்சியைச் சிதைக்காதீர்கள். மார்ச் ஐந்தாம் நாள் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள நீதி கோரும் எழுச்சி நிகழ்வில் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் பங்காளாகளாகக் கலந்துகொள்ளுங்கள். தமிழீழ விடுதலைப் போர்க்களம் உங்களது அரசியலுக்கான தளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழீழம் மலரும்வரை, அதன் வேருக்கு நீர் பாய்ச்சுங்கள். அதன் பின்னர் உங்கள் அரசியலைத் தொடருங்கள். மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழீழத்தின் முதலாவது பிரதமரும் நீங்களே!

'தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!'

அன்புடனும், தமிழீழ ஆவலுடனும்
க. தமிழ்விழி