அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மார்ச், 2025

தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக்கொள்கை நோக்கி - லெ ஜவஹர் நேசன்


புதிய கல்விக் கொள்கை (New Education Policy) என்பதை  இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கையாக (National Education Policy) திட்டமிட்டு சங்பரிவார் வழிகாட்டலுடன் அமல்படுத்த ஒன்றிய  அரசால் முடியும்போது ஏன் தமிழ்நாடு  தனக்கென தனித் தன்மை உள்ள கல்விக் கொள்கையை உருவாக்க முடியாது என்கின்ற ஒற்றைக்  கேள்வியுடன் தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே குழு விவாதம் நடத்தி  அதன் மூலமாக அரசுக்கு ஓர் அழுத்தம் கொடுத்து இந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்  கல்வியாளர் பேராசிரியர்  திரு லெ ஜவஹர்நேசன் அவர்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் கழகம், அறிவொளி இயக்கம், த. மு. எ. க. ச  கூட்டு சேர்ந்து நாகப்பட்டினத்தில்  22. 3.2025 நடத்திய  கருத்தரங்கில் பங்கேற்று அவர் கூறிய கருத்துக்கள்  என்பது அனைத்து  கல்வியாளர்களும் பொதுமக்களும் மாணவர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் பாடத்திட்ட வகுப்பாளர்களும் கேட்டு விழிப்பு பெற வேண்டிய, இந்த சமூகத்தின் பேசு பொருளாக மாற வேண்டிய கருத்தியல். 




நீட் மனிதகுல  பகைவன்: நீட்டை  விலக்குவோம; நீட் மருத்துவ கல்விக்கும், சேவைக்கும் எதிராக உள்ளது   என்பதற்காக அமைக்கப்பட்ட ஏ கே ராஜன்  குழுவில்  பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை புள்ளிவிவரங்களோடு அவர் சமர்ப்பித்த அறிக்கை,   12 மாநிலங்களுக்கு மொழி பெயர்த்து அனுப்பப்பட்டு மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதோடு, மருத்துவ மேற்படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான  50 % இடத்தினை உறுதி செய்ய அந்த அறிக்கை எவ்விதம் காரணியாக இருந்தது என்பதை விளக்கினார். அந்த அறிக்கையை  30 நாளில் தயாரிக்க தன்னை எவ்வளவு வருத்திக் கொண்டார் என்பதையும், கல்விக் கொள்கை உருவாக்கிட இனி கிராமம் தோறும் செல்வேன் என்று அவர் சொல்வதை  கேட்கும்போது, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் வருந்தி அழைத்தும் அந்த வேலைகளை உதறித்தள்ளி தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற அவரது உயரிய கொள்கை ஒரு மு. வ.. திருவிக, வ. ஊ. சி.,  பாரதிதாசன் எல்லாம் ஏன்  இப்போது பிறப்பது இல்லை என்கிற எனது ஆதங்கம் தவறு..இதோ ஜவஹர்நேசன், மன்னர்மன்னன் போன்றவர்கள் உருவில்  இன்றும்  இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மறைக்கப்படுகிறார்கள், அவர்கள் வாழும்போது மக்கள் அவர்களை புரிந்துகொண்டு கொண்டாடுவது இல்லை, மாறாக பாலகிருஷ்ணன், லியோனி, நாகசாமி போன்றவர்களை உயர் பதவியில் வைத்து மொழியை சிதைத்து தமிழினத்தை அழித்து அடிமை இனமாகவே வைதிருப்போம் என்கிற மிகப்பெரிய சதிதிட்டத்தில் திராவிட அரசாங்கங்கள் இருக்கின்றன என்பது விளங்கியது.

 அவருடைய சொற்பொழிவின் மைய புள்ளி என்பது இந்த நடுவண் அரசு  புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில்  சனாதனம், பஞ்சகோஷம் என்கிற வேத விசங்களை உள்ளடக்கி ஒரு தத்துவத்தை எடுத்து வருகின்றார்கள்; அது யாருடைய பிறந்தநாளை நாம் ஆசிரியர் நாளாக கொண்டாடுகிறோமோ அந்த ராதாகிருஷணன் போட்ட விடத்தின் நீட்சி  என்று கூறியது யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீடு கட்டமைக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை தகர்த்து எறியும்  அவரது துணிவு பாராட்டுக்குரியது.   

அந்த புதிய கல்விக் கொள்கையை  இந்த மக்கள், இந்த தமிழ்நாடு அரசு எப்படி எதிர்க்க வேண்டும் என்றால் அதைவிட சிறந்த கொள்கை நம்மிடம் இருக்கிறது என்று நிரூபித்தால்  மட்டுமே அது சாத்தியப்படும். அப்படிப்பட்ட கொள்கையை நாம் இங்கு முன்வைக்கின்றோமா என்றால் அதற்கு பதில் இல்லை: நாம் நம்மை முன்னேறிய சீனர்களோடு ஒப்பிட்டு முன்னேற வேண்டும்; ஆனால் இந்த தமிழக அரசு பின்தங்கிய பீகாரோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு புளகாங்கிதம் அடைகிறது" என்ற கூற்று நிதர்சன உண்மை. அந்த  புதிய தனித்துவமான கல்விக் கொள்கையை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. இது ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி போல ஸ்டெர்லைட் ஆலை புரட்சி போல மக்கள் கட்சி, சாதி இவைகளை கடந்து  ஒன்று திரண்டு மக்கள் குரலாக எதிரொலிக்க வேண்டும்:அதற்காக தான்  ஊர் ஊராக பயணம் செய்து இது ஏன் தேவை என்பதை பற்றி கூறுவேன் என்று அவர் பேசியது எப்படிப்பட்ட ஒரு மனிதரை இந்த தமிழ்நாடு மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளவில்லையே என்கின்ற ஒரு வேதனை தோன்றியது. 

அவர் உரை முடிந்த பிறகு குழு விவாதம் நடத்தப்பட்டது. மூன்று குழுக்களின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அவருக்கு வாசிக்கப்பட்டது. அதில் "நீட் தேர்வு தேவை; பாடத்திட்டதில் மட்டும் மாற்றம் தேவை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி உதவித் தொகை தேவையா" என்ற வலதுசாரி சிந்தனைக்கு அவர் அளித்த பதிலில்  நீட்  பயிற்சி வகுப்புகளின் கட்டணக் கொள்ளை, மருத்துவ கல்லூரி சேர்ந்தவர்களின் 77 விழுக்காடு பேர் நீட் தேர்வை 2,3 முறை எழுதியவர்கள், Lindon B Johnson அமெரிக்காவில் பின்தங்கிய கருப்பினர்களுக்காக கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பற்றி விளக்கி கூறி கேள்வி கேட்டவரை தவறை உணரவைத்த பாங்கு அவர் வாதத் திறமையை பறை சாற்றியது. 

நிகழ்ச்சி முடிவில் நண்பர் ஒருவர் "இவர் சொல்கிறபடி மக்கள் கிளர்ந்து எழுந்து மாற்றத்தை உருவாக்குவார்களா, சாத்தியப்படுமா" என்று  என்னிடம்  ஒரு கேள்வி கேட்டார். 15 ஆம் தேதி ஆனால் தங்களுக்கு உரிமைத் தொகை போடப்பட்டு விட்டதா என்று வங்கிக்கு முட்டி மோதும் இலவசங்களை நம்பி வாழும் மக்களிடம் மாற்றம் உருவாவது கடினம் தான், ஆனால் புரட்சி என்பது ஒரு விழுக்காட்டு மக்களால் உண்டாவது. நம்பிக்கையோடு பயணிப்போம் என்று பதில் சொன்னேன்


Justice AK Rajan Commitee NEET Report

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

அடிமையாக 75ஆண்டு. வா கொண்டாடலாம் தமிழா



ஒதுக்குப்புறமான பகுதியில் வசிக்கிறோம். ஒரு நாள் மழை பொழிந்தால் பத்து நாள்கள் வீட்டுச் சிறை தான். வடிகால் வசதி இல்லாததால் பகுதி முழுவதும் நீர் சூழ்ந்துவிடும்; சாலை வசதியும் இல்லை. இதற்கு முன்பு பஞ்சாயத்திடம் முறையிட்ட போது தேர்தல் நடக்காததால் தலைவர் இல்லையே என்று காரணம் சொன்னார்கள். தேர்தல் முடிந்து இன்றும் தீர்வு காணப்படவில்லை. இத்தனைக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருநூறு மீட்டர் தொலைவு தான். நிலைமை இப்படி இருக்க, வீட்டுக்கு வீடு மூவர்ணக் கொடியை கொடுத்து விட்டு சென்றுள்ளான். கோவணம் கட்டுவதற்கா என்று தெரியவில்லை 

ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம். அதற்கு பிறகு இந்திக்காரனிடம். ஆண்டைகள் தான் மாறி உள்ளது. இன்னும் நம் கைவிலங்கு அப்படியே தான் உள்ளது. இந்த இலட்சணத்தில் விடுதலை நாள் கொண்டாட்டம் ஒரு கேடு 






வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீட் மசோதா நிராகரித்த ஆளுநர்- தமிழன் ஏமாளியா? மிதவாதியா? #GetOutRavi

 

உங்கள் எல்லோருக்கும் கடந்த ஜனவரி 28 அன்று பீகாரே நிலைகுலைந்து போகும் அளவிற்கு போராட்டடம் நடந்தது நினைவில் இருக்கலாம்; அதில் பல தொடர்வண்டிகள் எரிக்கப்பட்டன; வண்டிகள் மறிக்கப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரசு, ராச்ற்றிய ஜனதா தள, பொதுவுடைமை கட்சி ஆதரவோடு நடைபெற்றது. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா? தொடர்வண்டி துறை வேலைவாய்ப்பில் கூடுதலாக இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வு அறிமுகம் செய்தது வேலை வாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக கருதி போராட்டத்தில் குதித்தார்கள். அந்த மாநிலமே ஸ்தம்பித்தது. 

 





தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்கு படித்த மாணவர்களுக்கு இந்த சர்வாதிகார ஆரியத்துவ  ஒன்றிய அரசு அவர்கள் படித்த பாடத்திட்டத்தில் இல்லாததை நீட் என்கிற நுழைவுத் தேர்வு வைத்து தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைப்பார்கள். தங்களுக்கு மருத்துவர் ஆகக் கூடிய தகுதிகள் இருந்தும் முறைகேடான வகையில் தங்கள் கனவை நனவாகாமல் தடுக்கும் சூழ்ச்சிச்சியை தாங்கிக் கொள்ளாமல், எங்கள் தமிழர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வார்களே அன்றி, ஒரு போதும் நீட் மசோதாவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராகவோ, அதை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவோ, துணை போகும் கங்காணி அரசுக்கு எதிராகவோ எங்கள் மிதவாத தமிழர்கள் போராடவே மாட்டார்கள். 

இதை நீங்கள் ஏமாளித் தமிழர்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். 

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

மக்களாட்சி போர்வையில் மனிதப் படுகொலைகள்

மக்களாட்சி போர்வையை போர்த்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஏவல் துறையை கைக்கொண்டும், சில சமயம் ஏவல் துறை எதேச்"சாதி"காரகமாவும் நடத்திய மனித குல கொடூர படுகொலை தாக்குதல்கள்.  

1965

பக்தவச்சலம்

மொழிப்போர் படுகொலை

1968

அண்ணாத்துரை

வெண்மணிப் படுகொலை

1986

ம கோ இராமச்சந்திரன்

தமிழரசன் பெயரில் 35 அப்பாவி பொதுமக்கள் மருதையாற்று குண்டுவெடிப்பில்  படுகொலை/ பொதுவுடைமை போராளிகள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்

1992

செயலலிதா

வாச்சாத்தி வன்முறை

1995

செயலலிதா

கொடியங்குளம் படுகொலை

1999

கருணாநிதி

மாஞ்சோலை படுகொலை

2017

பன்னீர்செல்வம்

சல்லிக்கட்டு அடக்குமுறை அராஜகம்

2018

பழனிச்சாமி

தூத்துக்குடி படுகொலை

2020

பழனிச்சாமி

சாத்தான்குளம் படுகொலை  




புதன், 13 ஜனவரி, 2021

கொரானா தடுப்பூசி-விலை எங்கள் உயிரா?


கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாமரர்கள் இறக்கும் போது
முக்கியப்புள்ளிகள் உயிரோடு இருப்பது எங்ஙனம்?

உண்மையில் அவர்களுக்கு போடப்பட்டது கொரோனா ஊசி தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இல்லாத நோய் வாராதிருக்க தடுப்பூசியா? 

யாரோ சில மருந்து குழுமங்கள் லாபம் சம்பாதிக்க விலை எங்கள் உயிரா ?


 

புதன், 25 நவம்பர், 2020

கொரானா சதியா இல்லை வியாதியா?


கொரானா காலத்தில் மட்டும் ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள உலக பணக்காரர்கள் சொத்துமதிப்பு 23% உயர்ந்துள்ளது. முதல் 500பேர் 96லட்சம் கோடி சொத்துக்கள் சேகரித்து உள்ளனர். இப்ப சொல்லு...கொரானா ஏழைகளை ஏழையாக்கும் நோயா? லட்சாதிபதிகளை கோடீஸ்வரனாக்கும் சதியா?

வெள்ளி, 13 நவம்பர், 2020

பாடசாலைக்கு போகாதே என்றாள் என் அன்னை ...?!

 பள்ளி திறப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பாம்.

 

இந்த போராளிகள், கொரனா ஒரு அரசியல்/ பொருளாதார சுரண்டல் என்று இத்தனை நாள் வாய்கிழிய கத்தி, போராடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இலகுவாக மக்களைக் கொண்டே முறியடித்த அரசியல்வாதிகளை மெச்சுவதா? இல்லை,இந்த ஆட்டுமந்தை கூட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போவதா? வாயில் துணியை அடைத்தால் கிருமி உள்ளே போகாது என்று நம்பும் இந்த அறிவாளிகளுக்கா நீங்கள் அடிப்படை மாற்றத்தை கட்டியமைக்கப் போகிறீர்கள்?

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

இந்திய ஒன்றியம் கொண்டுவந்துள்ள 3 உழவர் விரோத அவசர சட்டங்களின் பின் விளைவுகள்

 

1. "பஞ்சத்திற்கு காரணம் விளைச்சல் பற்றாக்குறை அல்ல-பதுக்குதலே" - அமர்தியாசென். ஆனால் புதிய சட்டம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் முதலியவற்றை இன்றியமையாத பொருளில் இருந்து நீக்கி பதுக்கலை அங்கீகரிக்கிறது

2. வேளாண் வருமானமும் இனி வருமான வரி வரம்பில் அடக்கம்

3. குறைந்தபட்ச ஆதார விலை இனி இல்லை. இந்திய உணவு கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இழுத்து மூடப்படும். இறுதியாக நியாயவிலைக் கடைகள் காணமல் போகும்.

4. பண்ணை விவசாயம் முறையில் உழவர் மேலும் கடனாளி ஆக்கப்பட்டு நிலத்தை பண்ணை குளுமங்களிடம் இழந்து சொந்த மண்ணை விட்டு அகதிகளாக போகும் அபாயம்

5. குழுமங்கள் சொல்வதை தான் விவசாயி விளைவிக்க வேண்டும். உற்பத்தி பொருளுக்கான விலை முதலிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுவிடும். ஆனால் உற்பத்தி பொருள் தரம் இல்லை என அடிமாட்டு விலைக்கு குறைக்கப்படும். பெரிய கார்பொரேட்டுகளை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்த முடியுமா? நீதி தான் கிடைக்குமா?

6. மரபணு மாற்றப்பட்ட விதைகள் தாரளாமாக புழங்கும். நாட்டு விதைகள் மாயம் ஆகும். நிலம் மலடாகும். மக்கள் நோயாளிகள் ஆவர்.

7. வங்கிகள் விவசாய கடன் அளிப்பதில் இருந்து இன்னும் விலகிப் போகும். அந்த இடங்களை பெருங்குழுமம் ஏற்றுக்கொள்ளும். கந்துவட்டி கட்டி கடனாளி ஆக வேண்டும். கட்ட முடியாதவர்கள் உத்தரத்தில் தூக்கு கயிறை கட்டும் அவலநிலை உண்டாகும்

8.இதுவரை மாநில அதிகாரத்தில் உள்ளவற்றை நடுவண் அரசு எடுத்துக்கொள்ளும். இந்த முறை மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண் துறையை நேரடியாக தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் உழவர்கள் கார்போரேட்டுக்கு அடிமையக்கப்படுகிறார்கள்.

9. பீகார், குஜராத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் இல்லை.அங்கு மண்டி எனும் தனி நபர் வியாபாரிகள் . அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலைக்கே கொள்முதல் செய்கிறார்கள். அந்த நிலை நாடெங்கும் இனி எதிர்காலத்தில் ஏற்படும்

 

-காவிரி உரிமை மீட்புக் குழு 
-தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

திங்கள், 14 செப்டம்பர், 2020

#BanNeet #MuteNeet

 


நீட்டி முழக்க ஏதுமில்லை இனி,
பற்றி எரிகிறது தமிழ்நாடு
எங்கள் தம்பி தங்கைகளின் 
சிதைகளோடு
மலர வேண்டிய மலர்கள் 
போதிலே கருகுகிறது  
வீதிக்கு வீதி பறையோசையை மீறி
கேட்கிறது 
ஆரியர்களின் எக்காலச் சிரிப்பு மயிரு
விதையாக வேண்டியவரை  சிதைத்தது
விதி அல்ல.
ஆரியனின் சதி 
இனியும் ஒடுங்கி கிடந்தால் 
யாருக்கோ என ஒதுங்கி நடந்தால் 
நாளை 
உன் பிள்ளைக்கும் இது தான் கதி 




வியாழன், 3 செப்டம்பர், 2020

கொரானா-வங்கி வாடிக்கையாளர்கள் நிலை என்னவாகும்?

வங்கிகளில் நடப்பு பற்றுக் கணக்கு (OD/CC) வைத்திருப்பவர்களுக்கு செப் ஒன்றாம் தேதி ஆறு மாத வட்டி ஒரே நாளில் பற்று வைக்கப்படும். அப்படி சேர்க்கப்பட்ட வட்டியை 30செப் க்குள் கட்டத் தவறினால் அது வாராக்கடனாக மாறும். அதற்காக மேலாளர்களுக்கு இந்த ஆறு மாத வட்டியை ஆறு தவணைகளாக மாற்றி 31.03.2021க்குள் கட்ட வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்ய சொல்லி உள்ளது. கடந்த ஆண்டு பொரூளாதார மந்தம் காரணமாக தவறிய தவணையை தனிக்கணக்காக மாற்றி தள்ளி வைத்தார்கள். இப்போது வட்டியை தள்ளி வைக்க சொல்கிறது அரசும் சேமநல வங்கியும்.

இதனால் பொருளாதாரமும், வங்கிகளும் வீழ்வதோடு வாடிக்கையாளர்களை திரும்ப திரும்ப கடனில் சிக்கவைக்கப்பட்டு இந்த நாடு நாசமாக போகும் சூழல் மிக அருகில். 2008அமெரிக்க வங்கிகள் வீழ்ந்தது போல இந்திய வங்கிகள் வீழும். முன்பாவது வங்கிகள் சிறு சிறு வங்கிகளாக தனித் தனியாக இருந்தது. ஆனால் வங்கி இணைப்பு என்ற பெயரில் 27 வங்கிகள் 12 வங்கிகளாக மாறியுள்ள நிலையில் அரசுத் துறை வங்கிகள் வீழ்ச்சி கண் இமைக்கும் நொடியில் அமையப் போகிறது

புதன், 17 ஜூன், 2020

இந்தியா சீனா போர்

மகாபலிபுரம் சுவரில் அடிச்ச வண்ண பூச்சு கூட காயலே. ஜின் பிங் வந்தபோது இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை என்ன, துண்டறிக்கை கூட விடவில்லை. ஏன் வந்தார் எதற்கு வந்தார் என்கிற மர்மமே விலகலே. அதுக்குள்ளே போரா? என்னடா உங்களோட அக்கப்போரா இருக்கு.
சங்கி : போர் வந்தா தெரியும். சோத்துக்கு சிங்கி அடிப்பே

 தம்பு: ஆமா..இப்ப மட்டும் நாங்க கோட்டை கட்டி ஆண்டுக்கிட்டு இருக்கோம். போவியா

ஞாயிறு, 17 மே, 2020

#துரோகதிமுக வை மறக்க முடியுமா?

அவர்கள் வாதத்திற்காக திராவிடத்திலிருந்து தான் தமிழினம் வந்தது என்று வைத்துக்கொண்டால் கூட, எந்த ஒரு தாயும் அவள் காட்டேரியாக இருந்தால் கூட, தன் மகவை டம்ளர் என்று அழைப்பதோ, எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அழிக்கவோ நினைக்க துணியாது. 

 அப்படி என்றால் இந்த திராவிடம் எவ்வளவு கொடியது என்பதை உணருங்கள் உபிக்களே. அவர்கள் உணராத பட்சத்தில் அவர்கள் மனைவிமார்களோ, மகள்களோ விழிப்போடு இருங்கள். ஆட்சியை பிடிக்க உங்களை அடகு வைக்க கூடத் தயங்க மாட்டார்கள் படுபாதக துரோகிகள் #துரோகதிமுக

வியாழன், 14 மே, 2020

#கொரோனா சதிச் செயலா ?

இது மருந்து குழுமங்களின் சதி என்கிறார்கள்.. பில் கேட்ஸ், உ.சு.நிறுவனத்துடன் கைகோர்த்து வராத நோய்க்கு தடுப்பூசியை 7பில்லியன் மக்களிடமும் திணிப்பது என்கிறார்கள். 5ஆம் அலைக்கற்றை பரிசோதனை என்கிறார்கள்.


இவைகளை தாண்டி இன்னொரு காரணம், 2016இல் அரங்கேறிய நாடகத்தின் இரண்டாம் பாகம். 10000கோடி கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என 12லட்சம் கோடி 500.1000 ஐ தடை செய்தார்கள் அல்லவா? அப்போது சொன்ன இன்னொரு காரணம் மக்களை பணத்தை நேரிடையாக பயன்படுத்துவை மாற்றி மின்னணு டிஜிட்டல் முறைக்கு மாற்ற. அந்த காரணத்தை தான் இப்போது இரண்டாம் முறையாக வெற்றிகரமாக திணிக்கிறார்கள் . எல்லோரையும் வீட்டிலேயே முடக்கி கைப்பேசி, இணையவழி வங்கி பயன்பாடு, இணையவழி பொருள் வாங்கல்/விற்றல் , ஏடிஎம் பயன்பாடு,சாலையோர வியாபாரிகளை தவிர்த்தல் என்கிற திட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்த்திச் செல்கிறார்கள்

ஞாயிறு, 3 மே, 2020

உலங்கு ஊர்தி மூலம் மலர் தூவல்- தொடரும் நாடகம்

மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீடு கேட்ட மருத்துவர்கள் போராட்டங்களை காவல்துறை கொண்டு அடக்கி, உளவுத்துறை மூலம் பொதுமக்கள் மத்தியில் எள்ளிநகையாட வைத்து, போராட உரிமை இல்லை என்று உரிமை பறிப்பு தீர்ப்புகள் எழுதவைத்து, செவிலியர் போராட்டங்களை கொடூரமாக அடக்கி அதில் ஒரு நிபந்தனையும் ஏற்கப்படாமல் அடக்கிவிட்டு இன்று அவர்கள் சேவையை மெச்சி துருப்பிடித்த உலங்கு ஊர்திகள் மூலம் மலர் தூவுகிறார்களாம். இது என்ன அரசாங்கமா? இல்லை சரஸ்வதி நாடக சபாவா? 

உரிமைகளை பறித்து அடக்கம் செய்து விட்டு மலர்வளையம் சூடுகிறது ஏகாதிபத்தியம். இதையும் நம்பி எம் மக்கள் கை தட்டுவார்கள்; அரசனின் புகழ் பாடுவார்கள் 

காவிரி எங்கள் உரிமை- மே 7,2020- விண்ணதிர முழங்குவோம்

=======================
காவிரி காக்க எழுவோம்!
=======================
இந்திய அரசே,
காவிரி மேலாண்மை ஆணையத்தின்
தன்னதிகாரத்தைப் பறிக்காதே!
உன் அதிகாரத் துறையில் சேர்க்காதே!
தனியே முழுநேரத் தலைவர் அமர்த்து!
===================================
கனிவான வேண்டுகோள்!
===================================
பேரன்புடையீர்,
வரும் 7.5.2020 வியாழன் மாலை 5 மணி
முதல் 5.30 மணி வரை.. அவரவர் வீட்டுவாசலில் குடும்ப உறுப்பினர்கள் இடைவெளிவிட்டு நின்று மேற்படி கோரிக்கைகள் கொண்ட பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் 15 நிமிட நேரம் கையில் ஏந்துங்கள்! வலைத்தளங்களில் நேரலை செய்யுங்கள்!
படமெடுத்துப் பதிவு செய்யுங்கள்!
தொடர்புக்கு - 90804 17120, 85258 00820
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 90251 62216, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கையை தட்டுங்கள்


கையை தட்டுங்கள்...
  • கெயில் குழாயை த.நா. விவசாய நிலத்தில் பதிக்க உத்தரவிட்ட மோடியை பாராட்டி
  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்னோலின் வாயில் சுட்ட வீரத்தை மெச்சி
  • காவிரியில் தண்ணீரை திறந்து விடாத கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பை ஆமோதித்த இந்திய இறையாண்மைக்கு ஆதரவாக
  • ஐட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் விளைநிலத்தை மலடாக்கும் அரசாலும் மன்னர்களின் நாடாளும் திறனை பாராட்டி
  • சோறு, தண்ணீர் இல்லாமல் 1200கி.மீ தூரத்தை கால்நடையாக நடக்க இயலும் இந்த மக்களால் என்பதை உலகுக்கு உணர்த்திய அவரின் சாமர்த்தியத்தை பாராட்டி
  • தமிழை ஒளித்து இந்தியை திணிக்கும் அவரின் முயற்சிகளை அங்கீகரித்து
  • கீழடி உண்மைகளை புதைக்கும் ஆரிய அடிவருடிதனத்தை புகழ்ந்து
  • வர்ணாசிரம தருமத்தை நிலைநாட்டும் அவரின் முன்னெடுப்புகளை மனமுவந்து...
  • முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ...


வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவ கல்லூரிக்காக தேவையா போராட்டம்?

"நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி 12.12-2019 அன்று. போராட்டமாம்"

போராடி?
நம்ம வாழிடங்களை‌ விளைநிலத்தை தாரைவார்த்து, 
நம் வரிப்பணம் இந்திய அரசு கருவூலத்திற்கு சென்றுவிடுவதால். குடிகாரர்கள் தங்கள் குடும்பத்தை அழித்து தரும் பாவக்காசை வைத்து கட்டப்படும் கல்லூரியில் உன்பிள்ளையோ என்‌பிள்ளையோவா படிக்கப்போகுது? 
அதில் 99% - 
பணத்தை வாரி இறைத்து நீட்டுக்கு படித்த மேல்தட்டு மக்களும், தில்லு முல்லு செய்த தேர்வேறிய வடநாட்டானும் படிக்கப் போகிறார்கள். நம்ம பசங்க நீட் தேர்வு எழுதவே இங்கு இடம் இல்லையாம். ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் தூக்கி அடிக்கிறானுங்க. இங்க எழுதுபவர்கள் தாலி சங்கிலி முதற்கொண்டு கழட்டி மன உளைச்சலில் உள்ளாக்கி தேர்வு கூடத்திற்கு அனுப்புகிறார்கள்
இந்த லட்சணத்தில கட்டட நிதி. அங்கு பணியாற்ற வரும் வந்தேறிகளுக்கு சம்பளம். என தேவையற்ற நிதிச்சுமை. அதை சமாளிக்க நம்ம வீட்டுக்குள்ளேயே டாஸ்மாக் திறப்பாங்க,
எச்சரிக்கை மக்கழே