சனி, 2 செப்டம்பர், 2017

போராடி காலனை வென்ற வீரமங்கை அனிதா


நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று இனி இந்த கேடுகெட்ட நாட்டில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த பிறகே தன் இன்னுயிரை நீத்து விண்ணகரம் சென்றிருக்கிறாள் அப்பாவி தங்கை அனிதா, கடவுளிடம் வேண்டுமானால் முறையிடு என்ற நளினி சிதம்பரத்தின் நக்கல் பேச்சை உண்மை என நம்பி..

அவள் ஒன்றும் கோழை இல்லை. போராடி நம்பிக்கை இழந்து - வாழத் தகுதி அற்ற நாடு இது என செருப்பால் அடித்துச் சென்றுள்ளாள்.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையில் மாநில அரசும் சட்டம் இயற்ற இயலும். அப்படி இருந்தும் 2017 பிப்ரவரி மாதமே நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததை கிடப்பில் போட்டது மட்டும் அல்லாமல் இறுதி கட்டம் வரை நீட்டிலிருந்து ஒராண்டாவது நடுவண் அரசு விலக்கு அளிக்கும் என்று நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ப வைத்து தாலி அறுத்தார். இல்லையென்றால் கூட 199.75 பொறியியலுக்கான தகுதி மதிப்பெண் பெற்ற அனிதா அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட நுழைந்திருக்கலாம்.

மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய அவளுக்கு நடுவண் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள். அது மட்டும் அல்ல.ஒரே நாடு ஒரே தேசத்தில் ...இதே குஜராத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான கேள்விகள். தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கடினமான கேள்விகள். நாடா இது...த்தூ...

ஆண்டிற்கு 150000 கோடியை தன் மக்களிடம் வழிப்பறி செய்தும் கொள்ளை அடித்தும் இந்திய நாட்டிற்கு கப்பம் கட்டும் ஒரு வளமான தமிழ் நாட்டால், 26 மருத்துவக் கல்லூரிகளும் 3377 மருத்துவ இடங்களும் உள்ள ஒரு நாட்டால் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு பெண்ணிற்கு அவள் விரும்பிய கல்வி கிட்டவில்லை என்றால்...விடுதலை கொண்டாட்டம் ஒரு கேடா என காறி உமிழ்ந்துவிட்டு சென்றிருக்கிறாள் அந்த இளம் தளிர். 

மாணவியின் மரணத்தை அரசியலாக்குகிறார்கள் என தமிலிசை சொல்கிறாள். அவளைக் கொன்றது அரசியல் இல்லாமல் வேறு என்ன? கிருத்துவசாமி சொல்கிறான்..வேறு படிப்பே இல்லையா என்று. மருத்துவம் படித்துவிட்டு அதை விட வருமானம் அதிகம் என்று உன்னைப் போல தன்மானத்தை விட்டு பிழைக்கத் தெரியாதவள்டா என் தங்கை. என்ன செய்வது...மானம் கெட்டு வாழத் தெரியாதவளாக அவளை வளர்த்துவிட்டோம்


முறையான மருத்துவம்  இல்லாமல் தன் தாயை இழந்த தங்கை அந்த மருத்துவத்தை கைக்கொள்ள வேண்டும்  என்று வீட்டு வேலையும் பார்த்துக் கொண்டு இராப்பகலாக படித்து, பின் தன் அத்துணை உழைப்பும் வீணாகிப்போனதை தாளமுடியாமல் தவறான நாட்டில் முறையான நீதி  கிடைக்காது எனத் தெரிந்ததும் தன்னையே மாய்த்துக் கொண்டாள்.

தமிழ்நாட்டிற்கு வெளியில் சென்று படித்தால்   முத்துக்கிருட்டிணன்களையும், சரவணன்களையும் பிணமாக்கும் வர்ணாசிரம நாடு தன் வலைக்குள்ளேயே இளந்தளிரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டது.