Monday, January 31, 2011

நாகப்பட்டிணம் நாம் தமிழரின் வீர வணக்க பொதுக்கூட்டம்-முதல் தகவல் அறிக்கை

இடம்:நாகப்பட்டிணம் நாள்: 30.01.2011
மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர்களுக்கு சொல்வது எனன?
1. தலைவன் வருவான்,தகர்த்து எறிவான்
2. சூனியக்காரி சோனியாவின் குடும்ப குழுமம் காங்கிரசை வேரறுப்போம்
3. பேரறிவாளன் உள்ளிட்டோரை சிறையிலிருந்து மீட்போம்
4. தமிழனுக்கு என்று ஒரு நாடு மீட்டு எடுப்போம்


தாமரையின் கடிதத்தை படித்த பிறகு நானும் ஒரு தமிழனாய் மனதில் குழப்பங்களோடு பேரணி தொடங்குவதாக அறிவித்த பிற்பகல் 3.00 மணிக்கே மாநாட்டு திடலுக்கு சென்றடைந்தேன்.மாநாட்டு திடலில் இளைஞர் பாசறையை சேர்ந்த தோழர்கள் விழா ஏற்பாட்டை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்..இருக்கை வசதிகளை ஒழுங்கு படுத்தி கொண்டு இருந்தார்கள். செல்லப்பா பாட ஆரம்பித்தார். தலைவர் நலமாக உள்ளார்;வருவார் ; 1200 கரும்புலிகளோடு இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற நம்பிக்கையூட்டும் பாடல் பாடினார்.பேரணி 4.30 க்கு புறப்பட்டு மாநாட்டு திடலை 6 மணிக்கு வந்தடைந்தது

இளைஞர்கள் ஆதிக்கம்
20,000 இருக்கைக்கு மேல் போட்டு இருந்தார்கள். மூன்று மணிக்கு இருந்த நிலையை பார்த்த பொழுது அத்துணை பேர் வருவர்களா என்று எண்ணினேன்; ஆனால் பேரணி திடலை வந்து அடைந்ததும் அங்கு நிற்பதற்கு கூட இடம் இல்லாது போனது.இதே திடலில் தான் சென்ற மாதம் திமுக மாநாடு நடந்தது. அன்று காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்.இன்று ஒரு நல்ல cause க்காக திரண்டு வந்த கூட்டம். மிக மகிழ்ச்சி தரக்கூடியதாக நான் கண்டது..வந்திருந்த பார்வையாளர்களில் 90 % பேர் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

மேடையை அலங்கரித்தவர்கள்
முத்க்குமாரின் தந்தை, தமக்கை, பேரறிவாளன் தாயார், "தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியாத உனக்கு எதற்கு வேட்டி சட்டை" என்று சிதம்பரத்திற்கு பூவும் போட்டும் வளையலும் வழங்கிய வழக்குரைஞர் கயல்விழி,மனித உரிமை ஆர்வலர் பால் க்யுமன் . பேராசிரியர் தீரன்,சாகுல் ஹமீது வந்து இருந்தனர்.

புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமாரை சிங்கள நாய்கள் கொன்ற நிகழ்வை நாடகமாக நடித்துக் காட்டினர். தோழர் திலீபன் சூடாக கேட்டார் "மீனவர்கள் இறந்தால் நிதி குடுப்பதை நிறுத்து..உயிரைக் காப்பாற்று. இதே கடலில் ராகுல் காந்தியை கட்டு மரத்தில் அனுப்பு.அவன் இறந்தால் சோனியாவிற்கு ஒரு லட்சம் நிதியும்,சத்துணவில் ஆயா வேலையும் போட்டு குடுப்பியா நீ?' என்று கேட்ட போது திடலே அதிர்ந்தது.

இந்தியா ஏன் இலங்கையை ஆதரிக்கிறது?
தனி மனித உரிமைகளுக்காக போராடுவது தீவிரவாதம் அல்ல..அப்படி பார்த்தால் அமேரிக்கர்கள் கூட தீவிரவாதிகள் தான் என்ற பால் க்யுமன் இந்திய ஏன் இலங்கையை ஆதரிக்கிறது என்ற கருத்தையும் சொன்னார். "இலங்கை தமிழர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து தனிநாடு தந்து விட்டால், இந்தியாவில் இப்பொழுது தனி நாடு கோரி போராட்டம் நடைபெறுகின்ற நாகலாந்து,மணிப்பூர்,அஸ்ஸாம்,காஷ்மீர் இங்கெல்லாம் போராட்டம் இன்னும் வலுப்பெற்று விடும் என்ற அச்ச உணர்வு காரணமாகவே தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது" என்றார்

செந்தமிழன் சீமான் உரை
அண்ணன் செந்தமிழன் சீமான் உரை இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்தது. இது முத்துக்குமாரின் வீர வணக்க பொதுக்கூட்டமாகவும் அதிமுகவிற்கு ஆதரவா என்று கேட்டவர்களுக்கு கொள்கை விளக்க கூட்டமாகவும் அமைந்தது. "என் மக்களை மண்ணுக்குள் புதைத்த காங்கிரசை வேரறுப்போம்,அதற்காக ரெட்டை இல்லை எனன ஒரு மொட்டை இலையை கூட ஆதரிப்போம்" என்றார்.

'அதிமுகவிற்கு ஆதரவா என்று பதை பதைக்கிறீர்களே. நான் சொன்னேனா?.சன் டிவிகாரன் சொன்னான். எண்ட கேளுங்க நேருக்கு நேராய். என்ன இத்தனை கேள்வி கேக்குறீங்களே..இதே கேள்விய விஜயகாந்துகிட்ட ஏன் கேக்குறது இல்ல? ஏன்ன அவர் கேக்குறது இல்லை" என்று கேள்வியிலேயே பதிலை தந்தார்

பனிக்கட்டி அல்ல புலிக்குட்டி
"அங்கு போகாதீங்க, கரைஞ்சுடுவீங்க, காணாம போய்டுவீங்க என்று சொல்கிறார்கள்.. கரைஞ்சு போக நாங்க ஒன்றும் பனிக்கட்டி அல்ல..புலிக்குட்டிகள்" என்றார்

"சீமானை நம்புங்கள்..அவன் ஒரு போது ஏமாற்ற மாட்டான்:இலக்கை அடையும் வரை ஓயமாட்டான்; லட்சிய பாதையில் இருந்து விலக மாட்டான், காங்கிரசை வேரறுக்க யாரை வேண்டும் ஆனாலும் ஆதரிப்பேன். இது இந்திய அமைதிப்படையை விரட்ட தலைவர் பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்தது போல. எங்கள் இலக்கு 2016 தேர்தல் தான். இலக்கை அடைய செல்லும் பாதையில் உள்ள நீரோடையில் கை கால் கழுவி ஆசுவாசப் படுத்திக்கொள்வோமே அதுபோல தான் இந்த தேர்தல். முதல் எதிரி காங்கிரஸ்.அதை தமிழகத்தில் போட்டி இடும் அத்தனை தொகுதியிலும் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோற்கடிப்போம்..அதற்காக தான் இந்த இந்த வியூகம்'என்று தெளிவு படுத்தினார்.

புலிகள் 2000 கோடி கொடுத்தார்களாமே?
"சீமானுக்கு புலிகள் 300 கோடி கொடுத்தார்கள்,2000 கோடி கொடுத்தார்கள் என்கிறார்கள்..அட முட்டாப் பசங்களா..என்ட்ட கொடுத்த பணத்தை ராஜபக்ஷேவிடம் கொடுத்திருந்தால் இந்தாங்கடா உங்க நாடுன்னு நாட்டை கொடுத்துட்டு ஓடிருப்பானே.. நாங்களே பணம் இல்லாம தான் சென்ற வருடம் நடந்த மதுரை மாநாடு குறுந்தகடு, மாநாட்டு மலர் வெளியிட பணம் இல்லாமல் இப்பொழுது தான் வெளியிடுகிறோம்.அதை விற்று தான் இந்த கூட்டத்துக்கு நடந்த செலவை சரி செய்யணும்" என்றார். நானும் ஒரு குந்தகடும்,விழா மலரும் ரூ.250 க்கு வாங்கினேன்.

தனி நாடு வெல்வோம்
ஒன்றரை கோடி சிங்கள நாய்களுக்கு தனி நாடு இருக்கும் போது, 12 கோடி தமிழர்களுக்கு என்று ஏன் ஒரு நாடு இல்லை? நம்மை அடிமைப் படுத்த நினைக்கும் களவாணிகளை அடையாளம் காண்போம்..விழித்தெழுவோம்...

3000 ஆயிரம் ஆண்டுகளாக போராடிய யூதர்களுக்கே இப்பொழுது தான் தனி நாடு கிடைத்துள்ளது. நமது போராட்டத்திற்கு 60 வயது தான் ஆகிறது. உறுதியாக நமக்கு என்று ஒரு நாடு வெல்வோம்..அதில் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்கும்..அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வீடு வந்து சேர்ந்தேன்..

Saturday, January 29, 2011

மலேசிய அரசே..அப்துல்லா ஹுசைனின் "INTERLOK" புதினத்தை தடை செய்..


மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ள தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் ஹுசைன் அப்துல்லா எழுதிய இண்டர்லோக் நூலை தடை செய்...


BBC-தமிழோசை 

மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியப் பள்ளி ஒன்றில் மாணவர்கள்
மலேஷியாவில் ஒரு பாடப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய வம்சாவழி மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அந்நாட்டில் ‘ஓ’ லெவல் படிக்கும் மாணவர்களுக்கு மலாய் இலக்கியப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், மலேஷியாவில் குடியேறியுள்ள இந்திய வம்சாவழி மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கீழ் சாதி மக்கள் என்று பொருட்படும் வகையில் வாசகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக் கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
“ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறும் போது அது மலேஷியாவில் வசிக்கும் மலாய், சீன மற்றும் இந்தியர்கள் என்கிற மூவின மக்களின் ஒற்றுமையை பாதிக்கின்றது” என்று கோலாலம்பூரிலுள்ள வழக்கறிஞரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பசுபதி சிதம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் சர்ச்சைகுரிய “இண்டர்லாக்” எனும் அந்தப் புதினத்தை எழுதியுள்ள 85 வயதான ஹுசைன் அப்துல்லா, சரித்திர சான்றுகளின் அடிப்படையில் தனது புத்தம் எழுதப்பட்டது எனவும் அதன் காரணமாக சர்ச்சைகுரிய பகுதிகள் நீக்கப்படாது எனவும் தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதாகக் கூற்படும் நிலையில், சரித்திர ரீதியிலான இலக்கியம் என்பதால் அதிலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது என மலாய் எழுத்தாளர்கள் வாதிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மலேஷிய அரசு சர்ச்சைகுரிய பகுதிகளை நீக்குவதாகவும் ஆனால் புத்தகத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் பசுபதி சிதம்பரம் கூறுகிறார்.
மலேஷிய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் மூவின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், இப்புத்தகம் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டார்.
கல்வி, சமூக, கலாச்சாராம் மற்றும் பொருளாதார ரீதியாக மலேஷியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மாணவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்கிற ரீதியிலேயே இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
நன்றி:BBCTamil.com
LINK:http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110128_malaysia_bookissue.shtmlFriday, January 28, 2011

இலங்கை இலக்கிய விழா-புறக்கணித்தார் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்


காலி இலக்கிய விழா
தென்னாபிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்
தென்னாபிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்
இலங்கையின் காலி நகரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு புத்தக பிரியர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். ஆனால், அந்த விழாவை புறக்கணிப்பதாக அங்கு வந்திருந்த தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்க்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான ரிப்போர்ட்டர் சான் பிரண்டையர்ஸ் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையின் செய்தியாளர்கள் அமைப்பு ஒன்று ஆகியன வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தாமுன் ஹல்கட் கவனத்தில் எடுத்திருக்கிறார். இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து சில பிரபல எழுத்தாளர்களும் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.

விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.

இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர்.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார்.

வேறு இரண்டு முக்கிய எழுத்தாளர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள்

நன்றி

South African novelist and playwright Damon Galgut,winner of the Commonwealth Writers' Prize in 2003, on Thursday withdrew from a literary festival at Galle in Sri Lanka to support a boycott call from two rights groups Paris-based Reporters Without Borders (RSF) and Journalists for Democracy in Sri Lanka last week which requested foreign writers to boycott the Galle Festival, which opened on Wednesday. They accuse Sri Lanka's government of stifling freedom of speech and the right to dissent.

எங்கோ உள்ள தாமுன் ஹல்கட்டுக்கு இருக்கின்ற மனித நேய உணர்வு, பணத்திற்கும் பிரபல்யத்திற்கும் அலையும் இந்திய பிரஜையான தீபிகா ஷெட்டி போன்றவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது..

Thursday, January 27, 2011

சீமானுக்கு கவியரசி தாமரையின் ஆதங்க மடல்-தமிழனுக்காக போராடுபவன் திராவிடக் கட்சிகளுக்கு கால்பந்து ஆகலாமா?

கடந்த ஆண்டு இன அழிப்பு போரின்போது பொதுவுடைமைக் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக வீதிக்கு வந்து குரல் கொடுத்தனர். தமிழர்களுக்கு ஒரு புதிய விடிவு பிறக்கும் என்று நினைத்தோம்.தேசிய கட்சியானதால் அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை. முரசு கொட்டி விஸ்வரூபம் எடுத்தார் 'விருத்தகிரி' விஜயகாந்த். ஆகா..தமிழனை காக்க தலைவன் வந்துவிட்டான் என்று கொடி பிடித்தேன். இலங்கை தமிழர்களுக்காக நீர்த்து போன பேரணியை தவிர வேறு ஒன்றும் புதிதாக செய்யாமல் குடும்ப அரசியலில் மூழ்கி, கையா,இலையா என கணக்கு போட ஆரம்பித்து விட்டார். சரி..திருமாவளவன் எதையாவது சாதிப்பார் என்று இருந்தோம்..இன அழிப்புக்கு வித்திட்ட காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுகவை ஆதரித்து நம் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டார்; போர் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது,திருச்சி மாநாட்டில் சூனியக்காரி சோனியாவுடன் பகிர்ந்து கொண்ட மேடையில் அடக்கி வாசித்து கூட்டணி தர்மத்தை நிலை நாட்டினார். பின்பு பாட்டாளி மக்கள் கட்சி,புதிய தமிழகம் என அனைத்திடமும் வரிசையாக ஏமாந்து நின்றபொழுது விடிவெள்ளியாய் முளைத்தது 'நாம் தமிழர்' எழுச்சி உணர்வு. ஆனால் அதிமுகவிற்கு ஆதரவு என்ற போது நீர்த்து போய்விடுமோ இந்த உணர்வு என மனம் சஞ்சலப் படும்பொழுது,நமது மன உணர்வுகளுக்கு சகோதரி 'கவிதாயினி' தாமரை சொல் வடிவம் தந்தது போல் இருந்தது அவர் அண்ணனுக்கு எழுதிய இந்த மடல்..இது வரை ஸ்வரங்களுக்கு வரி வடிவம் தந்த கவியரசி இப்பொழுது நாம் தமிழர் மனங்களுக்கு சொல் வடிவம் தந்துள்ளார் என்றே தோன்றுகிறது..30 சனவரி 2011 அன்று நாகப்பட்டினத்தில்  நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன். அண்ணன் சீமான் உரையை கேட்ட பிறகு எனக்கு இருந்த அச்ச உணர்வு முழுவதும் நீங்கி விட்டது.அதனால் இந்த இடுகையை நீக்கி விட்டேன்.

Friday, January 21, 2011

தமிழ் பாமாலை-காணொலிகள்-தமிழ் சுப்ரபாதம்&...

தமிழ் சுப்ரபாதம்


கந்த சஷ்டி கவசம்-சூலமங்கலம் சகோதரிகள்

சொற்பொழிவுகள்


வாரியார் சுவாமிகள் இரு மனைவியர்
* பகுதி 1
* பகுதி 2
அரிச்சந்திரா
* பகுதி 1
* பகுதி 2
நன்றி:http://www.sivasiva.dk

வினாயகர் துதிகள்
*வினாயகர் அகவல்
*வினாயகர் அஸ்டகம்
* வினாயகர் கவசம்
* வினாயகர் ஆரத்தி


விஷேடதின நாட்காட்டிJoomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < மாசி
2011
> »
ஞா தி செ பு வி வெ
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 1 2 3 4 5

அடுத்துவரும் தினங்கள்

ஞாயிறு,20 பிப், 2011
திருவள்ளுவர் குருபூசை
திங்கள்,21 பிப், 2011
சங்கடஹர சதுர்த்தி
திங்கள்,28 பிப், 2011
ஏகாதசி விரதம்
(Tamil suprabatham Tamil Suprapatham video Kandha sasti kavasam Soolamangalam Sisters Devotional Songs TMS Murugan Pillaiyar songs Thirumuruga kirubanantha variyar sorpozhivugal sorpolivu VINAYAGAR AGAVAL, VINAYAGAR ASHTAGAM, VINAYAGAR KAVASAM, VINAYAGAR ARATHTHI, TAMIL CALENDER)

Sunday, January 16, 2011

பழந்தமிழ் இலக்கிய,இலக்கண மின்னணு நூல்கள்-348 TAMIL E-BOOKS


பல அரிய நூல்களை,பழந்தமிழ் இலக்கியங்களை அகரவரிசையில் செந்தமிழ்.ஆர்க்

அளித்து வாழும் தமிழுக்கு உன்னத சேவை ஆற்றி உள்ளனர்.


தழிழ் நூலகம் பொருளடக்கம்


எண்புத்தகம் பெயர்ஆசிரியர்
1அகங்களும் முகங்களும்சு. வில்வரெத்தினம்
2அந்திம காலம் (நாவல்) - பாகம் 2ரெ. கார்த்திகேசு
3அந்திம காலம் (நாவல்) -பாகம் -1http://senthamil.org/ரெ. கார்த்திகேசு
4அபிராமி அந்தாதி - விளக்கவுரையுடன்அபிராமி பட்டர்- கவிஞர் கண்ணதாசன்
5அறியப்படாதவர்கள் நினைவாக...!அ. யேசுராசா
6அலை ஒசை பாகம் 1 - பூகம்பம் - அத்தியாயங்கள் 1-34கல்கி
7அலை ஒசை பாகம் 2 - 'புயல்' -அத்தியாயங்கள் 1-28கல்கி
8அலை ஒசை பாகம் 3 - ' 'எரிமலை' ' -அத்தியாயங்கள் 1-26கல்கி
9அலை ஒசை பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் 1-4'கல்கி
10அழகரந்தாதிதெரியவில்லை
11அழகர் கிள்ளை விடு தூதுபலபட்டை சொக்கநாதப் புலவர்
12அழகின் சிரிப்புபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
13அழியா நிழல்கள்: ஒரு கவிதைத் தொகுப்புஎம்.ஏ.நுஃமான்
14ஆசாரக்கோவைபெருவாயின் முள்ளியார்
15ஆத்திச்சூடிஔவையார் நூல்கள்:
16இசை அமுதுபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
17இனி ஒரு வைகறைகி.பி. அரவிந்தன்
18இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்
19இன்னா நாற்பதுகபிலர்
20இன்னிலைபொய்கையார்
21இன்னிலைபொய்கையார்
22இரங்கேச வெண்பாதெரியவில்லை
23இருண்ட வீடுபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
24இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
25இலக்கணச் சுருக்கம் - 1ஆறுமுகநாவலர்
26இலக்கணச் சுருக்கம் - 2ஆறுமுகநாவலர்
27இளைஞர் இலக்கியம்புரட்சி கவிஞர் பாரதிதாசன்
28உண்மை நெறி விளக்கம்சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்)
29உலக நீதிஉலகநாதர்
30எக்காலக் கண்ணிஆசிரியர் யார்என தெரியவில்லை
31எதிர்பாராத முத்தம்புரட்சி கவிஞர் பாரதிதாசன்
32ஏரெழுபதுகம்பர்
33ஏலாதிகணிமேதையார்
34ஏழாண்டு இலக்கிய வளர்ச்சிமு. தளையசிங்கம்
35ஐங்குறு நூறுகூடலூர் கிழார்
36ஐந்திணை எழுபதுமூவாதியார்
37ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார்
38ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கமவீரமாமுனிவர்
39ஒப்பியல் இலக்கியம்க. கைலாசபதி
40ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்'தொகுப்பு - இரா.முருகன்
41கந்த புராணம் - பகுதி 1 பாயிரம் & உற்பத்திக் காண்டம்- பகுதி 1கச்சியப்ப சிவாச்சாரியார்
42கந்த புராணம் - பகுதி 2 உற்பத்திக் காண்டம்-பகுதி 2கச்சியப்ப சிவாச்சாரியார்
43கந்த புராணம் - பகுதி 3 -உற்பத்திக் காண்டம் (1329- 1783)கச்சியப்ப சிவாச்சாரியார
44கந்த புராணம், பகுதி 4: 2. அசுர காண்டம் (1 - 925 )கச்சியப்ப சிவாச்சாரியார
45கந்தர் அனுபூதிஅருணகிரி நாதர்
46கந்தர் அலங்காரம்அருணகிரி நாதர்
47கந்தர் வேல் - மயில் - சேவல் விருத்தம்அருணகிரி நாதர்
48கனவின் மீதி. . . (ஒரு கவிதைத்தொகுப்பு)கி. பி. அரவிந்தன்
49கபிலரகவல்கபிலதேவர்
50கலிங்கத்துப் பரணிசயங்கொண்டார்
51கலித்தொகைதெரியவில்லை
52கலேவலா -உரைநடையில்தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
53கலேவலா -உரைநடையில் (அத்தியாயம் 1-32)தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
54கலேவலா -உரைநடையில் (அத்தியாயம் 33-50)தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
55கலேவலா -சொற்றொகுதிதமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
56கலேவலா -நூல் அமைப்பு, அறிமுகம்,பாடல் 1 & 2தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
57கலேவலா -பாடல்கள் 11-18தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
58கலேவலா -பாடல்கள் 19-24தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
59கலேவலா -பாடல்கள் 25-35தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
60கலேவலா -பாடல்கள் 3-10தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
61கலேவலா -பாடல்கள் 35-46தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)
62கலைசைக்கோவை.ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர
63கல்லாடம்.கல்லாடர்
64களவழி நாற்பதுபொய்கையார்
65கவிச்சக்ரவர்த்தி கம்பர்ரா. இராகவையங்கார்
66கவிதைகள் - இரண்டாம் தொகுதி (66 கவிதைகள் )புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
67கவிதைகள் - முதற் தொகுதி (75 கவிதைகள் )புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
68கவிதைகள் - மூன்றாம் தொகுதிபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
69காகம் கலைத்த கனவுசோலைக்கிளி
70காசிக் கலம்பகம்ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
71காதல் நினைவுகள்புரட்சி கவிஞர் பாரதிதாசன்
72காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
73கார் நாற்பதுமதுரைக் கண்ணங்கூத்தனார்
74காற்றுவழிக்கிராமம் (ஒரு கவிதைத்தொகுப்பு)சு. வில்வரெத்தினம்
75குடும்ப விளக்குபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
76குறிஞ்சிப்பாட்டுகபிலர்
77குறுந்தொகைபல ஆசிரியர்கள்
78கைந்நிலைபுல்லங்காடனார்
79கொன்றைவேந்தன்ஔவையார் நூல்கள்:
80கோதை நாச்சியார் தாலாட்டுஆசிரியர் யார் என தெரியவில்லை
81சகலகலாவல்லிமாலைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
82சடகோபர் அந்தாதிகம்பர்
83சண்முக கவசம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
84சதுரகிரி அறப்பளீசுர சதகம்அம்பலவாணக் கவிராயர்
85சந்திரிகையின் கதைசி. சுப்ரமணிய பாரதியார்
86சரஸ்வதி அந்தாதிகம்பர்
87சிதம்பர மும்மணிக்கோவைகுமரகுருபரர்
88சிதம்பரச் செய்யுட்கோவைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
89சித்தர் பாடல்கள் -மெய்ஞ்ஞானப் புலம்பல்பத்திரகிரியார்
90சித்தர் பாடல்கள் தொகுப்பு - 1 - ஆனந்தக் களிப்புகடுவெளிச் சித்தர்
91சித்தர் பாடல்கள் தொகுப்பு - 1 - சட்டைமுனி ஞானம், திருமூல நாயனார் ஞானம் , திருவள்ளுவர் ஞானம்குதம்பைச் சித்தர்
92சித்தர் பாடல்கள் தொகுப்பு - 1 - பூஜாவிதிஇராமதேவர்
93சித்தர் பாடல்கள் தொகுப்பு - 1 -அழுகணிச் சித்தர் பாடல்கள்)அழுகணிச் சித்தர்
94சித்தர் பாடல்கள் தொகுப்பு - 4கொங்கணச் சித்தர்
95சித்தர் பாடல்கள் தொகுப்பு – 2 - பட்டினத்தார்பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)
96சித்தர் பாடல்கள் தொகுப்பு – 4அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,
97சிந்து இலக்கியம் :-பழனியாண்டவன் காவடிச் சிந்து, கந்தன் மணம்புரி சிந்து, சுப்பிரமணியர் பேரில் சிந்து, சித்தராரூட நொண்டிச் சிந்து & எண்ணெய்ச் சிந்துதெரியவில்லை
98சிந்துப்பாவியல்இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்)
99சிறு பஞ்ச மூலம்காரியாசான்
100சிறுகதை தொகுப்பு-2ரெ. கார்த்திகேசு
101சிறுகதைகள் -I (ஒரு சுமாரான கணவன், பாக்கியம் பிறந்திருக்கிறாள், திரும்புதல் & வந்திட்டியா ராசு! )ரெ. கார்த்திகேசு
102சிறுபாணாற்றுப்படைஇடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
103சிலப்பதிகாரம் -1 - புகார்க் காண்டம்இளங்கோ அடிகள்
104சிலப்பதிகாரம் -2 - மதுரைக் காண்டம்இளங்கோ அடிகள்
105சிவகாமியின் சபதம் -பாகம் -1 பூகம்பம் (அத்தியாயங்கள் 1-47)கல்கி
106சிவகாமியின் சபதம் -பாகம் -2 காஞ்சி முற்றுகை (அத்தியாயங்கள் 1-55)கல்கி
107சிவகாமியின் சபதம் -பாகம் -3 பிக்ஷுவின் காதல்கல்கி
108சிவகாமியின் சபதம் -பாகம் -4 சிதைந்த கனவு -அத்தியாயங்கள் 1-50கல்கி
109சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)அருணந்தி சிவாச்சாரியார
110சிவஞானபோதம்திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்
111சிவவாக்கியம்சிவவாக்கியர
112சீறாப்புராணம் -காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) -படலங்கள் 1-9 - பாடல்கள் (1- 596)உமறுப் புலவர்
113சீறாப்புராணம் -காண்டம் 1 (விலாதத்துக் காண்டம்) -படலங்கள் 10- 24 - பாடல்கள் (597-1240 )உமறுப் புலவர்
114சீறாப்புராணம் -காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) -படலங்கள் 1- 8 - பாடல்கள் (1-698 )உமறுப் புலவர்
115சீறாப்புராணம் -காண்டம் 2 (நுபுவ்வத்துக் காண்டம்) -படலங்கள் 9 -21 - பாடல்கள் (699 - 1104)உமறுப் புலவர்
116சீறாப்புராணம் -காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) -படலங்கள் 1- 11 - பாடல்கள் (1- 607)உமறுப் புலவர்
117சீறாப்புராணம் -காண்டம் 3 (ஹிஜூறத்துக் காண்டம்) -படலங்கள் 12-25 - பாடல்கள் (608-1403)உமறுப் புலவர்
118சூடாமணி நிகண்டு -மூலம் :மண்டல புருடர்
119சூளாமணி -அணிந்துரை (பொ.வே.சோமசுந்தரனார்)தோலாமொழித் தேவர்
120சூளாமணி -முதல் பாகம்தோலாமொழித் தேவர்
121சைவ சித்தாந்த நூல்கள் - I : இருபா இருபதுஅருணந்தி சிவாசாரியார்
122சைவ சித்தாந்த நூல்கள் - I : உண்மை விளக்கம்திருவதிகை மனவாசகங் கடந்தார்
123சைவ சித்தாந்த நூல்கள் – VI - திருவுந்தியார்உய்யவந்ததேவ நாயனார்
124சைவ சித்தாந்த நூல்கள் – VI -திருக்களிற்றுப்படியார்உய்யவந்ததேவ நாயனார்
125சைவ சித்தாந்த நூல்கள் – VII -சங்கற்ப நிராகரணம்உமாபதி சிவாசாரியார்
126சோமேசர் முதுமொழி வெண்பாசிவஞான முனிவர்
127சோலைமலை இளவரசிகல்கி கிருஷ்ணமூர்த்தி
128ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 1ஜெயகாந்தன்
129ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 2ஜெயகாந்தன்
130ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு - 3ஜெயகாந்தன்
131தண்டியலங்காரம்தண்டியாசிரியர்
132தண்ணீர் தேசம் -Iகவிஞர் வைரமுத்து
133தண்ணீர் தேசம் -IIகவிஞர் வைரமுத்து
134தமிழச்சியின் கத்திபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
135தமிழியக்கம்பாவேந்தர் பாரதிதாசன்
136திணை மொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்
137திணைமாலை நூற்றைம்பதுகணிமேதாவியார்
138திரருக்குற்றால மாலைதிரிகூடராசப்பக் கவிராயர்
139திரிகடுகம்நல்லாதனார்
140திருக்கடவூர் பிரபந்தங்கள்அபிராமிபட்டர்
141திருக்குறள்திருவள்ளுவர்
142திருக்குறள் - ஆங்கில மொழியாக்கம்tirukkuRaL - English Translation -சுத்தானந்த பாரதியார்
143திருக்குறும்பலாப்பதிகம்திருஞானசம்பந்த சுவாமிகள்
144திருக்குற்றால ஊடல்திரிகூடராசப்பக் கவிராயர்
145திருக்குற்றாலக் குறவஞ்சிதிரிகூடராசப்பக் கவிராயர்
146திருக்குற்றாலப்பதிகம்திருஞானசம்பந்த சுவாமிகள்
147திருக்கை வழக்கம்கம்பர்
148திருக்கோவையார் (திருச்சிற்றம்பலக் கோவையார்)மாணிக்க வாசகர்
149திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாகுமரகுருபரர்
150திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
151திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
152திருப்பல்லாண்டுதெரியவில்லை
153திருப்புகழ் - பாகம்-1, பாடல்கள் ( 1 - 330 )அருணகிரிநாதர்
154திருப்புகழ் - பாகம்-2, பாடல்கள் (331-670)அருணகிரிநாதர்
155திருப்புகழ் - பாகம்-3, பாடல்கள் (671- 1000)அருணகிரிநாதர்
156திருப்புகழ் - பாகம்-4, பாடல்கள் ( 1001- 1326 )அருணகிரிநாதர்
157திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூதுகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர்
158திருமந்திரம - தந்திரம்-3 (549- 883)திருமூலர்
159திருமந்திரம் - தந்திரங்கள் 1,2 ( 1-548)திருமூலர் அருளியது
160திருமந்திரம் - தந்திரம்-4 (884- 1154)திருமூலர்
161திருமந்திரம் - தந்திரம்-7 (1704- 2121)திருமூலர்
162திருமந்திரம் - தந்திரம்-7 (2122-2648)திருமூலர்
163திருமந்திரம் - தந்திரம்-9 (2649-3047)திருமூலர்
164திருமலையாண்டவர் குறவஞ்சிதெரியவில்லை
165திருமுருகாற்றுப்படைமதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் )
166திருமுறை 11 - பாகம் 1 - பாசுரங்கள் 1-825திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார்,ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள்)
167திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது நெஞ்சு விடுதூதுதெரியவில்லை
168திருவருட்பயன்உமாபதி சிவாசாரியார்
169திருவருட்பா - திருமுறை 1 (1-537)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
170திருவருட்பா - திருமுறை 2 (571 - 1006)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
171திருவருட்பா - திருமுறை 2- இரண்டாம் பகுதி -பாடல்கள் (1007 - 1543)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
172திருவருட்பா - திருமுறை 2- மூன்றாம் பகுதி -பாடல்கள் (1544 - 1958)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
173திருவருட்பா - திருமுறை 3இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
174திருவருட்பா - திருமுறை 4இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
175திருவருட்பா - திருமுறை 5 (பாடல்கள் 3029-3266)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
176திருவருட்பா - திருமுறை 6 - இரண்டாம் பகுதி -பாடல்கள் (3872 - 4614)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
177திருவருட்பா - திருமுறை 6- நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
178திருவருட்பா - திருமுறை 6- முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
179திருவருட்பா - திருமுறை 6- மூன்றாம் பகுதி -பாடல்கள் (4615 - 5063)இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
180திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள்இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
181திருவருட்பா அகவல்இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
182திருவாக்கியம்English translation of tiruvAcakam - part IIRev. G.U. Pope
183திருவாக்கியம்tiruvAcakam -part I English Translation, CommentaryRev.G.U. Pope
184திருவாசகம் -I (1-10)மாணிக்க வாசகர்
185திருவாசகம் -II (11-51)மாணிக்க வாசகர்
186திருவாரூர் நான்மணி மாலைகுமரகுருபரர்
187திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
188திருவிசைப்பாதெரியவில்லை
189திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
190திருவிடைமருதூர் உலா.தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
191திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: பேதுரு இரண்டாம் திருமுகம்தெரியவில்லை
192திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: பேதுரு முதல் திருமுகம்தெரியவில்லை
193திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: யாக்கோபு (யாகப்பர்) திருமுகம்தெரியவில்லை
194திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: யூதா திருமுகம் & திருவெளிப்பாடுதெரியவில்லை
195திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: யோவான் இரண்டாம் திருமுகம்தெரியவில்லை
196திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: யோவான் முதல் திருமுகம்தெரியவில்லை
197திருவிவிலியம் - புதிய ஏற்பாடு - VI: யோவான் மூன்றாம் திருமுகம்தெரியவில்லை
198திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -எபிரேயருக்கு எழுதிய திருமுகம்,தெரியவில்லை
199திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -எபேசியருக்கு எழுதிய திருமுகம்,தெரியவில்லை
200திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்,தெரியவில்லை
201திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்தெரியவில்லை
202திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்,தெரியவில்லை
203திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -கொலோசையருக்கு எழுதிய திருமுகம்,தெரியவில்லை
204திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்தெரியவில்லை
205திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்,தெரியவில்லை
206திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -திருத்தூதர் பணி (அப்போஸ்தலர் பணி)தெரியவில்லை
207திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்,தெரியவில்லை
208திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -தேசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்,தெரியவில்லை
209திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -பிலமோனுக்கு எழுதிய திருமுகம்தெரியவில்லை
210திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -மத்தேயு நற்செய்திகள்தெரியவில்லை
211திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -மார்க் நற்செய்திகள்தெரியவில்லை
212திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -யோவான் நற்செய்திகள்தெரியவில்லை
213திருவிவிலியம் - புதிய ஏற்பாடு -லூக்கா நற்செய்திகள்தெரியவில்லை
214திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலைஇராமலிங்க அடிகள் (வள்ளலார்)
215தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
216தேசிக பிரபந்தம்வேதாந்த தேசிகர்
217தேவாரப் பதிகங்கள் - திருமுறை 1 - இரண்டாம் பகுதி -பாடல்கள் (722 - 1469)திருஞானசம்பந்த சுவாமிகள்
218தேவாரப் பதிகங்கள் - திருமுறை 1 - முதல் பகுதி பாடல்கள் (1 - 721)திருஞானசம்பந்த சுவாமிகள்
219தேவாரப் பதிகங்கள் - திருமுறை 2 இரண்டாம் பகுதி - பாடல்கள் (655 - 1331 )திருஞானசம்பந்த சுவாமிகள்
220தேவாரப் பதிகங்கள் - திருமுறை 2 முதல் பகுதி -பாடல்கள் (1 - 654 )திருஞானசம்பந்த சுவாமிகள்
221தேவாரப் பதிகங்கள் - திருமுறை 3 இரண்டாம் பகுதி பாடல்கள் ( 714- 1347 ) & பிற்சேர்க்கை பாடல்கள் (1 - 33திருஞானசம்பந்த சுவாமிகள்
222தேவாரப் பதிகங்கள் - திருமுறை 3 முதல் பகுதி -பாடல்கள் (1 - 713 )திருஞானசம்பந்த சுவாமிகள்
223தேவாரப் பதிகங்கள் - திருமுறை 4 இரண்டாம் பகுதி பாடல்கள் (488 - 1070)திருநாவுக்கரசு சுவாமிகள்
224தேவாரப் பதிகங்கள் - திருமுறை 4 முதற் பகுதி -பாடல்கள் ( 1 - 487 )திருநாவுக்கரசு சுவாமிகள்
225தேவாரப் பதிகங்கள் - திருமுறை 5 இரண்டாம் பகுதி -பாடல்கள் ( 510 -1016 )திருநாவுக்கரசு சுவாமிகள்
226தேவாரப் பதிகங்கள் - திருமுறை 5 முதற் பகுதி பாடல்கள் ( 1 - 509 )திருநாவுக்கரசு சுவாமிகள்
227தேவாரப் பதிகங்கள் - திருமுறை 6 இரண்டாம் பகுதி பாடல்கள் (509 - 981)திருநாவுக்கரசு சுவாமிகள்
228தேவாரப் பதிகங்கள் - திருமுறை 6 முதற் பகுதி -பாடல்கள் ( 1 - 508 )திருநாவுக்கரசு சுவாமிகள்
229தேவாரப் பதிகங்கள் - திருமுறை 7 இரண்டாம் பகுதி -பாடல்கள் (518 - 1026)சுந்தரமூர்த்தி சுவாமிகள்
230தேவாரப் பதிகங்கள் - திருமுறை 7 முதற் பகுதி -பாடல்கள் (1-517)சுந்தரமூர்த்தி சுவாமிகள்
231நடராசபத்துதெரியவில்லை
232நந்திக் கலம்பகம்தெரியவில்லை
233நன்னூல்பவணந்தி முனிவர்
234நன்னூல் -யாப்பு, சீருடன்பவணந்தி முனிவர்
235நன்னெறிதுறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்
236நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
237நல்லிசைப் புலமை மெல்லியலர்கள்இராகவ ஐயங்கார்
238நல்வழிஔவையார் நூல்கள்:
239நளவெண்பாபுகழேந்திப் புலவர்
240நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்
241நாமக்கல் கவிஞர் பாடல்கள் - பாகம் 1இராமலிங்கம் பிள்ளை
242நாமக்கல் கவிஞர் பாடல்கள் - பாகம் 2இராமலிங்கம் பிள்ளை
243நாமக்கல் கவிஞர் பாடல்கள் - பாகம் 3 -பாடல்கள் 181- 251இராமலிங்கம் பிள்ளை
244நாலடியார்தெரியவில்லை
245நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 1 (பாடல்கள் 1- 473) -பெரியாழ்வார் திருமொழிபெரியாழ்வார்
246நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 2 (பாடல்கள் 474- 947)தெரியவில்லை
247நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 3 (பாடல்கள் 948-1447)தெரியவில்லை
248நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 5 (பாடல்கள் 2032-2790)தெரியவில்லை
249நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 6 (பாடல்கள் 2791-3342)தெரியவில்லை
250நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - பாகம் 7 (பாடல்கள் 3343-4000)தெரியவில்லை
251நால்வர் நான்மணி மாலைதுறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
252நீதி வெண்பாஆசிரியர் யார்என தெரியவில்லை
253நீதிநெறி விளக்கம்ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
254நெடுநல்வாடைமதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
255நேமிநாதம் (ஒரு தமிழ் இலக்கண நூல்)தெரியவில்லை
256பகவத் கீதை- பாரதியாரின் முன்னுரைசி. சுப்ரமணிய பாரதியார்
257பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங் கண்ணனார்
258பண்டார மும்மணிக்கோவைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
259பதிற்றுப்பத்துதெரியவில்லை
260பரத சனாபதீயம்தெரியவில்லை
261பரிபாடல், பரிபாடல் திரட்டுதெரியவில்லை
262பழமொழி நானூறுமூன்றுறை அரையனார்
263பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்படிக்காசுப் புலவர்
264பாட்டுக்கோட்டை பாடல்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
265பாண்டிய, சோழ விசயநகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்தெரியவில்லை
266பாண்டியன் பரிசுபுரட்சி கவிஞர் பாரதிதாசன்
267பாரதியார் பாடல்கள் - பாகம் 1 - தேசிய கீதங்கள்சி. சுப்ரமணிய பாரதியார்
268பாரதியார் பாடல்கள் - பாகம் 2 -ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதைசி. சுப்ரமணிய பாரதியார்
269பாரதியார் பாடல்கள் - பாகம் 3 -கண்ணன் பாட்டு, குயில் பாட்டுசி.சுப்ரமணிய பாரதியார்
270பாரதியார் பாடல்கள் - பாகம் 4 - பாஞ்சாலி சபதம் (முதற் பாகம் )சி.சுப்ரமணிய பாரதியார்
271பார்த்திபன் கனவு -பாகம் - 3கல்கி கிருஷ்ணமூர்த்தி
272பிரபந்தத்திரட்டு - பகுதி 13 - சீகாழிக் கோவை.தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
273பிரபந்தத்திரட்டு - பகுதி 14 - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி..தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
274பிரபந்தத்திரட்டு - பகுதி 15 - திருத்தில்லையமகவந்தாதி.தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
275பிரபந்தத்திரட்டு - பகுதி 16 - துறைசையமகவந்தாதி.தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
276பிரபந்தத்திரட்டு - பகுதி 17 - திருக்குடந்தைத்திரிபந்தாதி.தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
277பிரபந்தத்திரட்டு - பாகம் 1 (செய்யுள் 1 - 133)திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
278பிரபந்தத்திரட்டு - பாகம் 2 (செய்யுள் 134-256)மீனாட்சிசுந்தரம் பிள்ளை
279பிரபந்தத்திரட்டு - பாகம் 3 (செய்யுள் 722-834)மீனாட்சிசுந்தரம் பிள்ளை
280புறநானூறுதெரியவில்லை
281பெரிய புராணம் - முதற் காண்டம் -சருக்கம் 4 ( மும்மையால் உலகாண்ட சருக்கம் ) & சருக்கம் 5 (திருநின்ற சருக்கம்)சேக்கிழார்
282பெரிய புராணம் -முதற் காண்டம் -சருக்கம் 1 (திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)சேக்கிழார்
283பெரிய புராணம் -முதற் காண்டம் -சருக்கம் 3 (இலை மலிந்த சருக்கம்)சேக்கிழார்
284பெரிய புராணம் இரண்டாம் காண்டம் சருக்கம் 6சேக்கிழார்
285பெரிய புராணம் இரண்டாம் காண்டம் சருக்கம் 6 ,இரண்டாம் பகுதிசேக்கிழார்
286பெரிய புராணம் இரண்டாம் காண்டம் சருக்கம் 6 ,முதல் பகுதிசேக்கிழார்
287பெரிய புராணம் இரண்டாம் காண்டம் சருக்கம் 6 ,மூன்றாம் பகுதிசேக்கிழார்
288பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
289பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங் கண்ணனார்
290பொன்னியின் செல்வன் நூலடக்கம்அமரர் கல்கி
290பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்அமரர் கல்கி
290பொன்னியின் செல்வன் - சுழற்காற்றுஅமரர் கல்கி
290பொன்னியின் செல்வன் - கொலை வாள்அமரர் கல்கி
290பொன்னியின் செல்வன் - மணிமகுடம்அமரர் கல்கி
290பொன்னியின் செல்வன் - தியாகச் சிகரம்அமரர் கல்கி
291பொன்னியின் செல்வன் முடிவுரைஅமரர் கல்கி
292பொருநர் ஆற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார் (இரண்டாம் பாட்டு)
293போற்றிப் பஃறொடைசீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்)
294மணிமேகலைசீத்தலைச்சாத்தனார்
295மதுராபுரி அம்பிகை மாலைகுலசேகர பாண்டியன்
296மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
297மதுரை மீனாட்சியம்மை குறம்ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
298மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
299மதுரைக் கலம்பகம்குமரகுருபரர்
300மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்
301மதுரைக் கோவைநிம்பைச் சங்கர நாரணர்
302மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூதுதெரியவில்லை
303மனோன்மணீயம்சுந்தரம் பிள்ளை
304மரணத்துள் வாழ்வோம் (82 அரசியல் கவிதைகள்)31 கவிஞர்கள்
305மறைந்து போன தமிழ் நூல்கள் - I -பழைய இராமாயணம்தெரியவில்லை
306மறைந்து போன தமிழ் நூல்கள் - II - வளையாபதிதெரியவில்லை
307மலைபடுகடாம்இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்)
308மஹாபரத சூடாமணி என்னும் பாவ ராக தாள சிங்காராதி அபிநயதர்ப்பண விலாசம்தெரியவில்லை
309மாலை ஐந்து (கயற்கண்ணி மாலை,களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை, திருக்காளத்தி இட்டகாமிய மாலை, பழனி இரட்டைமணி மாலை & மகரநெடுங் குழைக்காதர் பாமாலை)தெரியவில்லை
310முகம் கொள்கி.பி. அரவிந்தன்
311முதுமொழிக் காஞ்சிமதுரைக் கூடலூர் கிழார்
312முத்தொள்ளாயிரம்தெரியவில்லை
313முல்லைப்பாட்டு & ஆராய்ச்சியுரைமறைமலை அடிகள்
314மூதுரைஔவையார் நூல்கள்:
315மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா -இராசேந்திர சோழனுலா)கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
316மோகவாசல்: -சிறுகதைகள்ரஞ்சகுமார்
317யாப்பருங்கலக்காரிகைஅமிதசாகரர்
318வட மலை நிகண்டுதொகுப்பு : ஈஸ்வர பாரதி
319வாட்போக்கிக் கலம்பகம்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
320விநாயகர் அகவல (ஔவையார்), பு.பா.இரசபதி உரையுடன்தெரியவில்லை
321விநாயகர் நான்மணிமாலைமகாகவி பாரதியார்
322விநாயகர் நான்மணிமாலைமகாகவி பாரதியார்
323வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது,சிவப்பிரகாசம் -நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்
324விவிலியம் -பழைய ஏற்பாடு புத்தகம் 1 - தொடக்கநூல்தெரியவில்லை
325விவிலியம் -பழைய ஏற்பாடு புத்தகம் 2. விடுதலைப் பயணம்தெரியவில்லை
326விவிலியம் -பழைய ஏற்பாடு புத்தகம் 3. லேவியர்தெரியவில்லை
327விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூலதெரியவில்லை
328விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல்தெரியவில்லை
329விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்தெரியவில்லை
330விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல்தெரியவில்லை
331விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல்தெரியவில்லை
332விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 15 - எஸ்ராதெரியவில்லை
333விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 16 - நெகேமியாதெரியவில்லை
334விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 17 - எஸ்தர்தெரியவில்லை
335விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 18 - யோபுதெரியவில்லை
336விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 19 - திருப்பாடல்கள்தெரியவில்லை
337விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 20 - நீதிமொழிகள்தெரியவில்லை
338விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 4-எண்ணிக்கைதெரியவில்லை
339விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 5. இணைச் சட்டமதெரியவில்லை
340விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 6. யோசுவாதெரியவில்லை
341விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 7. நீதித்தலைவர்கள்தெரியவில்லை
342விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 8. ரூத்துதெரியவில்லை
343விவிலியம்-பழைய ஏற்பாடு -புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்தெரியவில்லை
344விவேக சிந்தாமணிதெரியவில்லை
345வெற்றிவேற்கைஅதிவீரராம பாண்டியர்)
346வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
347ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
348ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
348ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை