Monday, December 8, 2014

எமது தேசம் தமிழ்த் தேசம்.

எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது தேசிய இலக்கு இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு...!!!

தமிழீழமும் தமிழ்த் தேசமும் உதயமாகும் நாள் வெகு தூரம் இல்லை என்கிற இலட்சியத்தை முன்னெடுத்து பயணிப்போம்....

ஆங்கிலேயனிடமும் ஆரியனிடமும் அடிமைப்பட்டு கிடந்தது போதும். சுரண்டப்படும் ஒவ்வொரு தேசிய இனமும் எழுச்சி கொள்ளும்போது மூத்த குடி தமிழ்க் குடி வாளாதிருக்குமா?

வீறுகொண்டு எழுவோம்; தளைகளை கலைவோம்; சுயாதீன அரசை படைப்போம்!!!!

Sunday, November 30, 2014

பழைய எண்:தமாக- புதிய எண்:தமாக(மூ)
தேசியக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகள் சரியத் தொடங்கினால் உடனே ஒரு குட்டி போட்டு அதற்கு மறைமுகமாக தாங்களே தலைவர்களை நியமித்து, அது ஏதோ முற்றிலும் தனக்கு விரோதமான கட்சி போன்ற மாயையை மக்களிடம் தோற்றுவித்து தங்களுக்கு இருக்கும் மிச்ச சொச்சம் வாக்களர்களை தக்க வைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் தான் இந்த தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்) உதயம். 

இது கொக்கோ கோலாவும் ஸ்பிரைட்டும் வேறு வேறு என்று காட்டிய விளம்பர உத்தி. 

1996இல் தோன்றி 2002 இல் சில அமைச்சர் பதவிக்கு பேரம் பேசி அதற்கு விலையாக அவர்களே அதை மண்ணுக்குள் போட்டு கல்லறைக்குள் புதைத்ததை புதிய வர்ணம் பூசி இத்துப்போன மிதிவண்டியில் ஏற்றி மறதி மிக்க தமிழர் சந்தையில் விற்பனை செய்ய முனைந்து இருக்கிறார்கள் இந்த நவயுக அரசியல் வியாபாரிகள். 2009இல் தாங்கள் சார்ந்த காங்கிரசு கட்சி தமிழர்களை முள்ளிவாய்க்காளில் இனப்படுகொலை செய்து புதைத்த போது வராத வீரியம், 650 தமிழ் மீனவர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற போது வராத கோவம், ஐ.நா வில் ஆதரவாக இந்தியா வாக்கு அளித்த போது வராத ஆத்திரம், திடீரென்று வந்துள்ளது என்றால், காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? 

வலிமையான பாரதமாம்..!!! தமிழன் குருதியை உரிந்து குடித்து அது நன்றாக கொழுத்துப் போய் தான் உள்ளது. தமிழன் தான் சப்பாணியாக இருக்கிறான். இந்த அடிப்படையை கூட உணராத இவர்கள் தமிழர்களுக்காக போராட போகிறார்களாம். ஆட்சி அவர்கள் கையில் இருந்த போது தமிழனை நட்டு நிமிர்த்து விட்டார்கள்..இப்போது தூக்கி நிமிர்த்தப் போகிறார்களாம்!!! 

2016இல் ஒரு சில தொகுதிகளை வென்றெடுத்த பிறகு தாய்க்கட்சியோடு இணைந்து விடும் இந்த பன்றிகள் கூட்டம். ஒன்று மட்டும் சொல்லிகொல்கிறோம்...

இனி காங்கிரசு தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகள் போட்டாலும்...அதற்கு தமிழன் பரிசாக தருவது கள்ளிப்பால் மட்டுமே...!!!

tamil manila congress(moopanar) TMK GK VASAN G,K.Vasan new party 

குஷ்புவிற்கு பதிலடிகட்டியவன் முன்னே கண்டவனையும் கட்டி அணைக்கும் நடிப்பை தொழிலாக கொண்ட உனக்கு, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தன் மகன்களை, குடும்பத்தை வளமான வாழ்வை தியாகம் செய்த தேசியத் தலைவரை இறைவனாக கொண்டு நடக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள்  பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தொழில் செய்து சம்பாதித்ததை காப்பற்ற, மாறி மாறி அரசியல் களம் புகும் உனக்கு , 
  • "இலட்சியத்தை விட்டுவிட்டால் இயக்கத்தை தடை செய்யவில்லை என்றபோது, இலட்சியம் இல்லை என்றால் இயக்கம் எதற்கு?" என்று தமிழின விடுதலை என்கிற ஒரே  கொள்கைக்காக இறுதிவரை உறுதியாக இருந்த 
  • முதலமைச்சர் பதவி தேடி வந்த போதும் கூட, தமிழின விடுதலை என்கிற ஒற்றை தாரக மந்திரத்தை விட்டு நழுவாத தலைவனின்

 விடுதலைப் போராட்ட வீரர்களை பற்றி பேச சிறு தகுதி கூட இல்லை.  எது பேசினாலும் தமிழன் கண்டுகொள்ள மாட்டான் என்று நினைத்தனையோ? அந்த காலம் மலை ஏறி விட்டது. பேசிய வார்த்தைகளுக்கு உன்னை மன்னிப்பு கேட்க வைக்கும் காலம் வரும்.


திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று சொன்ன நீ, கட்டிய கணவன் அனுமதியோடு செய்தால் விபச்சாரமும் வியாபாரம் தான் என்றும் சொல்வாய்.

இந்த பிடாரிக்கு கோயில் கட்டி காட்டேரியை கருவறைக்குள் வைத்த அந்த முட்டாள் தமிழர்களுக்கு இதுவும் தேவை தான்...!!!

Sunday, October 26, 2014

வரமா? சாபமா?


முதுகு தேய்க்க இன்னொரு கை
வைத்திருந்தால் என்னவென்று
கடவுளை வைதேன்...

ஒன்றென்ன,,இரண்டாக வைத்துக் கொள் என

மனைவியை
அனுப்பி வைத்தார்...!!!

Sunday, September 28, 2014

ஜெயாவின் தீர்ப்பு: அதிமுகவிற்கு தூக்கு

ஜெயலலிதா தான் அதிமுக; அதிமுக தான் ஜெயா. தீர்ப்பு 4 ஆண்டுகளுக்கு மேல் என்பதால் 10 ஆண்டுகளுக்கு இனி அரியணை ஏற இயலாது அம்மையாரால்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முரியீடு செய்யலாம். ஆனால் தீர்ப்பின் விளைவை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை; நால்வர் விடுதலை; ஈழம் ஒன்றே தீர்வு என்று அதிரடியான தீர்மானங்களை சட்டமன்றத்தில் தானே கொண்டுவந்து தீர்மானத்தை எடுத்ததால் தமிழர் மனதில் ஒரு ஏற்பு உண்டானது என்னவோ உண்மை தான். ஆனால் அதில் ஒன்றும் நனவாகவில்லை என்பது கசப்பான உண்மை. 

கடந்த மாதம் தன் தந்தைக்கு உடல் நலமில்லை என்பதற்காக பிணையில் விடுவிக்க நளினி முறையீடு செய்த போது உயிருக்கு அச்சுதல் என்று கூறி கடுமையாக எதிர்த்து தமிழக அரசு. தமிழக அரசு நினைத்து இருந்தால் 23 ஆண்டுகள் சிறையில் நான்கு சுவர்களை மட்டுமே பார்த்து காலம் தள்ளிய நளினி சிறிது நாட்களாவது விடுதலை காற்றை சுவாசித்து இருக்கமுடியும்.

இதை எல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின எழுச்சி அலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும், தமிழீன கருணாநிதி மீது உள்ள எதிர்ப்பு அலையை பயன்படுத்திக் கொள்ளவும் போட்ட திட்டமோ என்ற நெருடல் உண்டாகிறது.

எது எப்படியோ..பெயரளவிற்காவது ஒரு தமிழன் ஆட்சி கட்டிலில் ஏற ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது.

இனி முதல்வர் கலந்து கொள்கிறார் என்று ஊருக்கு நடுவே கொட்டாய் போட்டு ஊரில் வசிப்பவர்களை ஓரிரவிற்கு சுடுகாட்டில் படுத்துக் கொள் என நிர்பந்திக்க மாட்டார்கள்.

1996இல் 53 கோடியில் திரட்டிய சொத்தின் இன்றைய மதிப்பு 1000கோடிக்கு மேலாம். 100 கோடி தண்டத் தொகை கட்டியது போக 900 கோடி லாபம் தானே.

இந்திய நாட்டின் நீதி என்னவென்றால் ஒருவர் எவ்வளவு வேண்டும் ஆனாலும் கொள்ளை அடிக்கலாம்; சொத்து சேர்க்கலாம்..கருணாநிதி போல. ஆனால் அவற்றை எல்லாம் தன் பெயரிலேயே இருக்கவேண்டும் என்று பேராசை கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என்பதே.

வாழ்க இந்திய சனநாயகம்!!!


Sunday, August 31, 2014

மோடியின் உளறலும் வங்கியாளர்களின் புலம்பல்களும்

 ராஜா தூங்கி எழுந்து உளறினால் அது மறுநாள் பத்திரிக்கையில் தலைப்பு செய்தி ஆகிவிடுகிறது. இந்திய பிரதமர் மக்கள் நிதிக் கணக்கு என்பதும் அது போலதான்.
(திட்டத்தின் பெயரும் இந்தியில் தான்)

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது வரவேற்புக்கு உரியது தான். ஆனால் அதை மறுநாளே அடைந்து காட்ட வேண்டும் என்கிற நெருக்குதலும் அழுத்தமும் அந்த திட்டத்தை முற்றிலும் வெறும் புள்ளி விவர சாதனை திட்டமாகத் தான் மாற்றி உள்ளது.

எத்தனை கோடி மக்கள்.அவர்கள் புகைப்படம், இருப்பிடம். முகவரி இதை எல்லாம் சரி பார்த்து அனைவருக்கும் கணக்கு திறப்பது என்பது ஓர் இரவிற்குள் நடத்தி முடிக்கும் காரியம் இல்லை. இது போன்ற அழுத்தத்தால் நடந்தது என்ன தெரியுமா? பெரும்பாலான வங்கிகள் குடும்ப அட்டையில் உள்ள பெயர்களை மட்டும் வைத்துக்கொண்டு "டம்மி" கணக்குகள் திறந்து...தங்கள் இலக்கை எட்டிவிட்டதாக அறிவித்து விட்டனர்.

இன்னும் சில வங்கியில் சாதாரண வங்கி ஊழியன் தரக்கூடிய கணக்கு புத்தகத்தை மேடை போட்டு தர எங்கோ மூலையில் இருக்கும் வங்கி போது மேலாளர் வருகிறார் (அதன் மூலம் வங்கி செலவில் சுற்றிப்பார்க்க)..எவன் அப்பன் வீட்டு காசு?

ஒருவருக்கும் உபயோகம் இல்லாமல் எத்தனை கோடி வீணாகிறது தெரியுமா?

அது...சரி. இந்த கணக்கை ஆரம்பித்து வைத்து அவர் என்ன சாதனை செய்ய போகிறார். அதற்கு எப்படி நிதி அளிக்க போகிறார். விபத்துக் காப்பீடு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது...இது எதற்கும் பதில் இல்லை.

அனைவருக்கும் ஏ.டி.எம். அட்டையாம். 5000,10000போட்டவனுக்கு ஆறாவது முறை மற்ற வங்கி இயந்திரத்தில் போய் பணம் எடுத்தல் ரூ.22.47 அபேஸ் செய்கிறாய். இவர்கள் முதியோர் ஓய்வூதியம் முழுதாக வாங்குவது உனக்கு பொறுக்கவில்லை. அதையும் பிடுங்கி உனது கார்பொரேட் முதலாளிக்கு சாசனம் எழுத சொல்ல நடத்துகிறாய் இந்த நாடகம்.

நீ உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் விஜய் மல்லையா, டெக்கான் குரோனிக்கிள் போன்ற ஏமாற்று பேர்வழிகள் வங்கிகளிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த வை...உனக்கு திறனிருந்தால்.

நீ வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை என்றால் 75%க்கு மேல் மதிப்பெண் இருந்தால் தான் வங்கியில் கல்விக் கடன் என்று அறிவி..பார்க்கலாம். முடியாது. ஏன் என்றால் கல்வி வியாபாரம் செய்பவன் உன் காலை நக்கி பிழைக்கும் நாய்களும் உனக்கு "ஸ்கெட்ச்" போட்டுக் கொடுக்கும் அரசியல் ஞானிகளும். வங்கிகளை கொள்ளை அடித்து அவர்கள் பையை நிரப்பும் வழிப்பறி அரசியல் நடக்கிறது என்பது இந்த மக்களுக்கு தெரியாத வரை உன் மோடி வித்தைகளை நாளும் நீ அரங்கேற்றலாம்.
  
வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு அரியணை ஏறிய மன்னவன் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. அதற்குள் அடுத்த திட்டம் என்று ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டு சப்பானுக்கு சென்றுவிட்டான் கல்யாணராமன்
Read more : http://www.ehow.com/how_5946594_make-text-invisible-html-code.html(prime minister savings bank account scheme, pressure on bankers, modi's stunt)

Wednesday, July 9, 2014

முகம்மதிய தோழர்களிடம் மிகுந்து இருப்பது மத பற்றா?சமூக உணர்வா?


  • காயல்பட்டிணத்தில் இருக்கும் ரகீம் பாய் எங்கோ காசாவில் முகம்மதிய தோழர் கொல்லப்படுவதற்காக கொதித்து எழுகிறார்...இங்கு அவர் சார்ந்த சமூகம் கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக பட்டினி போராட்டம் முதல் அனைத்தும் கண்டு தோல்வியுற்ற நிலையில்...
  • செஞ்சோலையில் சிறார்கள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்பட்ட போது கொதித்து எழாத;இரசாயன குண்டு வீசி உடல் எரிந்து கொத்து கொத்தாக நமது தமிழ் சொந்தங்கள் மடிந்த போது கண்டும் கானது இருந்த சாயபுகள் இலங்கையில் குரான் எரிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் இலங்கைத் தூதரகத்தை ஆவேசமாக முற்றுகை இட்ட அவர்களின் ஆக்ரோசம்...
  • தமிழ்நாட்டில் தமிழ்மாறன்,ஆந்திராவில் ஆஞ்சநேயலு..கன்னடத்தில் பெத்தநல்லி, கேரளாவில் நம்பூதிரி....ஆனால் தமிழ்நாட்டில் ரஹூப்,காஷ்மீரிலும் ரஹூப்,ஈரானிலும் ரஹூப்...தான் சார்ந்த சமூகத்தின் மொழி அவர்களுக்கு வேற்று மொழி...அவர்கள் தாய்மொழி உருது என்பதில் இருக்கும் உறுதி..
  • அப்துல் கசாப்பிற்கு தூக்கா,, அப்பாவி அப்சல் குருவிற்கு சொல்லாமல் மரண தண்டனையா..இதற்காக மொத்த தமிழரும் ஒன்றாக எதிர்த்தே குரல் எழுப்பி இருக்கிறார்கள்...ஆனால்..ஊழல்வாதி ராஜீவின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி அப்பாவி தமிழர் எழுவர் தூக்கு மேடை கொட்டடியில் தவிக்கும் போது முகம்மதிய தோழர்கள் ஒன்றாக எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லையே என்கிற ஆதங்கம்..
 பாப்புலர் பிரான்ட் நடத்தும் எழுச்சிப் பேரணிகளுக்கு பெண்டு பிள்ளைகளுடன் ஒன்றாக அணிவகுக்கும் இவர்கள் ஒற்றுமை,விளைநிலங்களை மீத்தேன் எடுக்கிறோம் என்று பாழ் படுத்துகிற அரசை எதிர்த்தோ, கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து உழவர் நடத்தும் போராட்டங்களுக்கோ காணப்படுவது இல்லையே?!

தான் சார்ந்த சமூகத்தில் இருந்து தள்ளியே நிற்கும் இவர்கள், அவர்களுக்கு சிறு பிரச்சனை என்றதும் அந்த சமூகம் தட்டிக்கேட்க வில்லை என்றால் கோவமுறுவது எங்கணம் நியாயம்?

தோழர்களே..ஒன்று படுவோம்..வீறு எழுவோம் அனைவரின் சமூக பாதுகாப்பிற்காகவும்.

Saturday, May 17, 2014

அறிமுகமில்லாத அன்பர்களுக்கு ஓர் அக்கறை மடல்-த.தே.பொ.கட்சிஅன்புடையீர்,
வணக்கம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையே அறிமுகம் இல்லை; ஆனால் இருவரும் ஒருவர் போலவே சிந்திக்கிறோம்.
தமிழினம் - தமிழ்மொழி, தமிழகம் குறித்து நீங்களும் நாங்களும் ஒரே மாதிரிதான் கவலைபடுகிறோம்.
பத்துகோடிபேர்க்கு மேல் தமிழர்கள் உலகில் வாழ்ந்தாலும், நாதியற்ற இனமாகவே சீரழிகிறோம். 2008 - 2009 இல் பத்துமாதங்கள் தொடர்ந்து வான் வழியாகவும், தரைவழியாகவும், கடல் வழியாகவும் இலங்கை அரசு இந்தியாவின் பங்களிப்போடு, சீனா, ரசியா போன்ற நாடுகளின் துணையோடு ஈழத்தில் குண்டு மழை பொழிந்து இலட்சக் கணக்கணக்கில் தமிழர்களை அழித்தது.
இந்த மனித அழிவை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது; தடுக்கவில்லை. தடைசெய்யப் பட்ட ஆயுதங்களை சிங்கள அரசு பயன்படுத்தியது. ஐ.நா.மன்றம் தடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாக, ஒதுங்கிக் கொண்டது.
இப்போது இனப்படுகொலைக் குற்றவாளிக ளாக இராசபட்சே கும்பலை விசாரிக்க வேண்டும் என்பதற்கும் உலகம் முன் வரவில்லை. ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரி மையைப் பாதுகாக்க அவர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உலகம் முன் வரவில்லை. கண்துடைப் பாக சில நடவடிக்கைகள் ஜெனிவாவில் முன் மொழி யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இனப்படுகொலை நடைபெற வில்லையே தவிர மற்ற எல்லாம் நடக்கின்றன. சுரண்ட வந்த வெள்ளையன் பாதுகாத்துத் தந்த காவேரி ஆற்று நீர் உரிமை சுதந்திர இந்தியாவில் பறிக்கப்பட்டு விட்டது. வெள்ளையன் கட்டிக் கொடுத்த மேட்டூர் அணை நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. வெள்ளையன் கட்டிக் கொடுத்த முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உயரத்துக்குத் தண்ணீர் தேக்க முடிய வில்லை. பாலாற்றை அடைத்துக் கொண்டது ஆந்திரப் பிரதேசம்.
சற்றொப்ப முப்பது இலட்சம் ஏக்கர் நிலம், பாசனமின்றி பாலை நிலமாய் மாறி வருகிறது. தமிழகத்தின் முக்கால் பாகத்திற்குக் குடிநீர் வழங்கும் ஆறுகள் மலடாக்கப் பட்டுவிட்டன.
குடிநீருக்காகத் தமிழர்களுக்குள்ளேயே குத்து வெட்டு நடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஏழுகோடித் தமிழக மக்கள் இடப்பெயர்வுக்குத் தள்ளப்படுவர். எங்கே போவர்?
தமிழக மீனவர்கள் தங்கள் கடலில் மீன் பிடிக்க முடியவில்லை. இதுவரை அறு நூறு பேர்க்கு மேல் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது சிங்கள அரசு.
இந்திய அரசு, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் எதுவுமே தமிழ் மக்களின் மரபுரிமையை, வாழ்வுரி மையைக் காப்பாற்றவில்லை. நாதியற்றவர்களாகத் தமிழர்கள் தத்தளிக்கிறார்கள்.
இந்த அவலம் உங்களையும் எங்களையும் ஒரே அளவில் வாட்டி வதைக்கின்றன. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை; இது பற்றி உரையாடிக் கொள்ளவில்லை!
மார்வாரி, குசராத்தி சேட்டுகளும், மலையாளி களும் தமிழகத் தொழில், வணிகங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செய்கிறார்கள். தடுக்க முடியவில்லை. தடுக்க வேண்டும் என்று பேசினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்காதே, உள்ளே தள்ளி விடுவோம் என்று உருட்டுகிறார்கள்; மிரட்டு கிறார்கள்.
தமிழகமெங்கும், பட்டணத்திலிருந்து பட்டிக் காடு வரை, கும்மிடிப்பூண்டியிலிருந்து குமரிமுனை வரை, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், எல்லா வகை வேலைகளிலும் நிறைகிறார்கள்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் அயல் இனத்தார் அன்றாடம் இலட்சம் இலட்சமாய் சேர்கி றார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? எதிர் காலத்தில் தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்குமா? கலப்பினங்களின் தாயகமாகத் தமிழகம் மாறி விடுமா?
தமிழ்நாடு முழுக்க தெலுங்கர்கள், கன்னடர் கள், மலையாளிகள், மார்வாடி, குசராத்தி சேட்டுகள் நிலம் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வெளிநாட்டு முதலாளிகள், நூற்றுக் கணக்கான ஏக்கர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலம் வாங்குகிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும்?
கடையெழு வள்ளல்களும், சேர சோழ பாண்டி யரும் ஆண்ட தமிழ் மண், தொல்காப்பியரும், திருவள்ளுவரும், அவ்வையாரும், இளங்கோவடி களும் நாயன்மார்களும், ஆழ்வார்களும், கம்பரும், வள்ளலாரும், பாரதியும், பாரதிதாசனும் வாழ்ந்த தமிழ் மண், எதிர் காலத்தில் யாருக்கு உரிமை யாகும்?
எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. நீங்களும் நாங்களும் ஒருவர் போலவே கலங்குகி றோம்! ஆனால் நாம் சந்தித்துக் கொண்டு கருத்து களைப் பரிமாறிக் கொள்ளவில்லை; கவலை களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் தலைவர்களுக்குப் பஞ்சமில்லை; புரட்சித்தலைவி இருக்கிறார், தமிழினத்தலைவர் இருக்கிறார். தானைத் தளபதிகள் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளிடம் “போர்ப்படைகள்’’ இருக் கின்றன; “புரட்சி வீரர்கள்’’ இருக்கிறார்கள். ஆனாலும் தமிழக உரிமைகளைக் காக்க நாதி யில்லை.
நடுக்காட்டில், தொடர்வண்டி விபத்துக் குள்ளாகி பயணிகள் படுகாய முற்று, உதவி கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் போட்டுட்டுள்ள நகைகளை அவர்கள் வைத்துள்ள பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்போல் தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நடந்துகொள் கின்றன. அவர்களின் வாக்குகளைப் பிடுங்குவதில் மட்டுமே அவை குறியாக இருக்கின்றன.
இவ்வளவு இழப்புகளுக்கு உள்ளாகியுள்ள மக் களிடம் சாதி வெறியைத் தூண்டி மோத விடுவது, மதவெறியைத் தூண்டி மோத விடுவது, தலைவர் களின் தன்னலப் பதவிப் போட்டி அரசியலை இலட்சியப் போட்டி அரசியல் போல் செயற்கை யாய் சித்தரித்து, தமிழ் மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி அவர்களை மோத விடுவது போன்ற குற்றச் செயல்களில் இத்தலைவர்கள் ஈடுபடு கிறார்கள்.
இந்தத் தலைவர்கள் வாழ்நாள் தண்டனைப் பெறத்தக்க அளவில், தமிழ்த் தேசத்தின் கருவூ லத்தை, மக்கள் பணத்தை கையூட்டு, ஊழல் வழி களில் கொள்ளையடித் திருக்கிறார்கள்.
இந்த அறச்சீற்றம் உங்களுக்கும் இருக்கிறது; எங்களுக்கும் இருக்கிறது. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளாமல் தனித் தனியே சிந்தித்துக் கொதிக்கிறோம்; கொந்தளிக் கிறோம்!
ஒத்த கருத்துள்ள நாம் ஒன்று சேர்ந்து நமது நல்ல நோக்கங்களுக்கான வலிமையை உண்டாக்கிக் கொள்ளாமல், நாம் எதைச் சாதிக்க முடியும்? நமது சமூக அக்கறை களும் கவலைகளும் செயலுக்கு வராத ஆசைகளாய், புலம்பல்களாய் போய்விடக் கூடாதல்லவா ! அல்லவா?
உங்களை அடையாளம் காண நாங்கள் முயற்சி செய்யாமல், எங்களை அடையாளம் காண நீங்கள் செய்யாமல், ஆனால் ஒத்த கருத்தோடு தனித் தனியே இருந்து என்ன பயன்? காலம் விரையமாகும். கனவுகள் மட்டும் மிஞ்சும்; மூப்பை நோக்கி முன்னேறுவோம்; பின்னர் கனவுகளும் கலைந்து போகும்.
நாங்கள் ஏற்கெனவே, ஒத்த கருத்துள்ளவர்களை ஓர் அமைப்பாக்கியுள்ளோம். “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி’’ அதன் பெயர்! மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், கலைஇலக்கிய ஆர்வலர்கள், அறிவாளர்கள் முதலிய, அனைவருக்கும் அவரவருக்குரிய உள் அமைப்புகள் இருக்கின் றன. மாதம் இருமுறை இதழாகத் தமிழர் கண்ணோட்டம் வந்து கொண்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களைத் தவிர எல்லா மாவட்டங்களிலும் த.தே.பொ.க. அமைப்பு செயல்படுகிறது. சென்னை யில் தலைமை அலுவலகம் இரு செயல்படுகிறது !
இது என்ன, இன்னொரு அரசியல் கட்சியா? தேர்தல், பதவி அரசியல் ஆகியவற்றை மூடி மறைத் துக் கொண்டு புதிய ஒப்பனைகளோடு வருகிறதோ, என்று நீங்கள் ஐயப்படலாம்; ஐயப்படுவது தேவை! ஆனால் ஐயப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
பணம் - பதவி - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களைக் கொண்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி நடத்தப்படுகிறது. இக்கட்சி சட்ட மன்ற - நாடாளுமன்ற - உள்ளாட்சித் தேர்தல் எதிலும் போட்டியிடாது. இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற இலட்சியத்தை அடையும் வரை த.தே.பொ.க. எந்தத் தேர்தலிலும் போட்டியிடாது. எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது மில்லை.
த.தே.பொ.க. வளர்ந்தால் தன்னல அமைப்பாக மாறிவிடுமோ என்று ஐயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
தேர்தலில் நிற்காது என்பதால் த.தே.பொ.க. தீவிரவாத இயக்கமல்ல; ஆயுதப் புரட்சி அமைப் பல்ல. மக்கள் எழுச்சி இயக்கம்! இதன் செயற்களம் மக்கள்தான்!
த.தே.பொ.க.வின் இலட்சியம் துல்லியமாக வரையறுக்கப்பட்ட - குழப்பமில்லாத தமிழ்த் தேசியம்! எமது தேசிய இனம் தமிழர் - எமது தேசிய மொழி தமிழ் - எமது தேசம் தமிழ்த் தேசம் - இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு. இதுவே நாங்கள் முன்வைக்கும் இலட்சியம்!
வளர்ந்தால் கெட்டுப்போகுமோ - என்று ஐயப்பட்டு ஒதுங்கி நின்றால், உண்மையான இயக்கம் எதுவுமே வளராமல் தமிழினம் கெட்டுப் போகும்!
“தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை! ஒரு செய்தியை அலசி ஆராயாமல் ஏற்பது தவறு; அலசி ஆராய்ந்து ஏற்றபின் ஐயப்பட்டுக் கொண்டே இருப்பதும் தவறு என்றார்.
”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்றார் அவர். இன்னின்ன காரணங்களால் இச்செயலைச் செய்ய இவன் வல்லவன் என்று முடிவு செய்து அதனைச் செய்யும் பொறுப்பை அவனிடம் விட வேண்டும் என்றார் திருவள்ளுவர்!
தமிழ்நாடு - தமிழ்ச் சமூகம், தமிழ் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் அன்பிற்குரியவர்களே,
இனியாவது நாம் ஒருவரை ஒருவர் அடை யாளம் கண்டு கொள்வோம்; ஒன்று சேர்வோம்!
உங்களால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பங்காற்றினால் போதும்! முதலில் உங்கள் அறிமுகம் தேவை. உங்கள் நட்பு தேவை! அதன் பிறகு கலந்து பேசுவோம்! கடமையாற்றுவோம்!
அன்புடன்
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
=================================
தலைமைச் செயலகம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
=================================

Sunday, April 20, 2014

தமிழினத்தை அழித்த சிங்கள பயங்கரவாதிகள் பட்டியல்

சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத அமைப்புக்களாக பட்டியலிட்டுள்ளது.
அதனோடு நின்றுவிடாது சிறிலங்காவின் வர்த்தமானியில் 424 தமிழர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் தமது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்தமண்ணில் வாழும் அல்லது நடமாடும் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உண்மையில் யார் பங்கரவாதிகள் என்பதை பன்னாட்டுச் சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த நூற்றாண்டின் பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும்
தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதம், 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில்
கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6000 காடைச் சிங்களவர்கள் அதன் கூலிப் பட்டாளங்களுக்குள் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களே சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை மிகக்கோடூரமாகப் படுகொலை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சிகளும், ஆலோசனைகளும், திட்டங்களும் வழங்கப்பட்டு சிறிலங்காவின் அனைத்து கூலிப்பட்டாளங்களின் தொகுதிகளிற்குள்ளும் விடப்பட்டனர்.
இறுதிக்கட்டப் போரில் அகப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் எனப்பாராது தமது வக்கிரத்தை தீர்த்து படுகொலை செய்தார்கள்.
இவ்வாறு மிருகத்தனமாக, மனித உயிர்களைப் பலியெடுத்த சிறிலங்காவின் அரச பயங்கரவாதிகள் 6000 பேர்களினதும் முழுவிபரமும் எம்மால் பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்திற்கு விடப்படுகின்றது.
விரைவில் இவர்கள் எப்படி இனப்படுகொலை செய்வதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற வீடியோ ஆதாரமும் எம்மால் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரித்தானியர் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளிகளின் விபரங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyESaLXkrz.html#sthash.SNarUxgy.dpuf