இலங்கையில் சிங்கள இனவெறி அரசு இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆயுத மற்றும் நிதி உதவியுடன் தமிழீழ மக்களைக் குண்டுபோட்டுக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை புரிந்ததை எதிர்த்தும் உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் இன உணர்வுமிக்க இளந்தமிழன் கு. முத்துக்குமார் சென்னை சாஸ்திரி பவன் முன் கடந்த 29.01.2009 அன்று தீக்குளித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
முத்துக்குமாரின் ஈகத்தைப் போற்றும் வகையில் அவருக்குத் தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் கடந்த 2010 மே 16 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறக்க ஏற்பாடு செய்தது. ஆனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முத்துக்குமார் சிலை திறக்கத் தடை விதித்தனர். இத்தடையை எதிர்த்து த.தே.பொ.க. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் அத்தடையை நீக்கி சிலையைத் திறக்க அனுமதி வழங்கி ஆணையிட்டார்.
ஈகி முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 2011 சனவரி 29 ஆம் நாள் சனிக்கிழமை மாலை தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் புலவர் இரத்தினவேலவன் பதிவு செய்து கொடுத்த பட்டா நிலத்தில் முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறக்கப்படும்.
சிலை திறப்பு விழாவினைத் தமிழகம் தழுவிய பெரு நிகழ்வாக முத்துக்குமாரின் சுடரோட்டம், கலை நிகழ்ச்சிகள், தலைவர்களின் உரையரங்கம் என எழுச்சியுடன் நடத்தத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது
தகவல்:நெருடல்.கொம்
vaalha un pani
பதிலளிநீக்கு