- மானம் எனறால் எனன என்று கேட்பவரா நீங்கள்?
- தமிழ்,தமிழன் என்று கேட்டால் நர நர என பல்லை கடிப்பவரா நீங்கள்?
- அடி வருடியா நீங்கள்?
- நன்கு துதி பாட தெரிந்தவரா நீங்கள்?
- உங்கள் அப்பா பேரை கேட்டால் கூட டெல்லியை கேட்டு சொல்கிறேன் என்ற நாவடக்கம் உடையவரா நீங்கள்?
- தன்மானத் தலைவரின் வழித்தோன்றலாக இருக்கலாம்..ஆனால்,தமிழ்-தமிழனுக்காக உயிர் துறக்கும் ஈகிகளை யார் என்று கேட்கும் அளவிற்கு அறிவிலியா நீங்கள்?
- சாகும் வரை அடிமை சாசனம் எழுதி கொடுக்கத் துணிந்தவரா நீங்கள்? (வெள்ளை சொக்காய் கரை வெட்டி அணிய அனுமதி உண்டு Dont Worry Be happy)
வசதிகள்:
- உங்களில் கோடியில் ஒருவர் "கருங்காலி" விநாயகமூர்த்தி முரளிதரன் போன்று அமைச்சராகும் வாய்ப்பு கூட அளிக்க படலாம்...(நீங்கள் 3500 வாக்கு வித்தியாசத்தில் தோற்று இருந்தால் கூட அது சிதம்பர ரகசியமாக பாதுகாக்கப்படும்-நீங்கள் கங்காரு போன்று கட்சி மாறி உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ளாதவரை)
- கட்சி மாறியே பழகியவரா நீங்கள்? கவலை வேண்டாம்..உங்கள் வசதிக்காக குழுமத்தில் நிறைய கோஷ்டிகள் இருக்கிறார்கள்..இஷ்டம் போல தாவிக் கொள்ளும் வசதி வாய்ப்புகள் உள்ளன
- அயல்நாடு செல்லும்போது உங்களுக்கு பாத காணிக்கைகள் தன்மானத் தமிழர்களால் வெகுமதி வழங்கப்படும். விசனம் கொள்ள வேண்டாம்..ஒன்று தானே கொடுத்தார்கள் என்று..உள்நாடு வரும்போது அந்த இன்னொன்றை நாங்கள் தருகிறோம்.
- வைப்புத் தொகையை இழந்தோ, ஊழல் செய்து அதை மக்கள் இனம் கண்டு கொண்டு வக்கற்று நிற்கும் நிலையில் இத்தாலியில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் காவல்காரனாக உயர் பதவி பெரும் வாய்ப்பு
அணுக வேண்டிய முகவரி:
ராகுல்
Managing Partner
தமிழக இளைஞர் காங்கிரஸ் & கோ
சாஸ்திரி பவன்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
ராகுல்
Managing Partner
தமிழக இளைஞர் காங்கிரஸ் & கோ
சாஸ்திரி பவன்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக