Sunday, December 25, 2016

குஷ்புவிற்கு ஒரு சவால்

ஏன்மா..குஷ்பு...உனக்கு ரஜினிகாந்த் என்ன கெடுதல் செய்தான்? சக தோழன் தானே..அவன் பெண் சௌந்தர்யா,அஸ்வினை கழட்டி விட போகிறாள். ரஜினி கூட சேர்ந்து எத்தனை படம் நடித்திருக்கே..உனக்கும் அவள்  மகள் மாதிரி தானே...நீ ஏன் சௌந்தர்யா, அஸ்வின், ரஜினி மற்றும் லதாவை நிஜங்கள் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு அறிவுரை செய்ய கூடாது? 

அப்படி செய்தால் சன் டிவியின் டி ஆர் பி தரம் எங்கயோ போய் விஜய் தொ.கா எல்லாம் போட்டி போட்டு உனது "ரேட்டையும்" உச்சத்திற்கு கொண்டு போய்விடுவார்களே...

முடிந்தால் அமலா பால் மற்றும் விஜய்யையும் இணைத்து வை..சமூக சேவையை உன் தோழர்களிடம் இருந்து ஆரம்பி.

ஏதும் அற்ற அன்னாடங்காய்ச்சிகள் என்றால் அவர்களை கூப்பிட்டு, சில பாத்திரங்களை பணத்திற்காக பொய்யாக இட்டு கட்டி..மனித உறவுகளை கேவலப்படுத்தி சோறு சமைத்து திண்ணும் நீ,,நடிக்க வராமல் இருந்தால் என்ன செய்து இருப்பியோ..அதை செய்து பிழைப்பு நடத்தலாம்..த்தூ...

Wednesday, December 21, 2016

வங்கிக் கணக்கு கடன் அட்டை மோசடி- கையாலாகாத அரசாங்கம் -எச்சரிக்கை

கள்ளப்பனத்தை ஒழிக்க தான் ருபாய் தாள்கள் திரும்பப் பெறப்படும் திட்டம் என்றார்கள்; பிறகு கருப்பு பணம் ஒழிக்க என்றார்கள்; அதற்குப் பிறகு வெளிநாடுகளில் உள்ளது போல் பணம் அற்ற பரிவர்த்தனைக்கு அச்சாரம் என்கிறார்கள். டிசம்பர் 30 வரை பழைய பணத்தை வங்கியில் செலுத்தலாம் என்ற கால நிர்ணயம் செய்தார்கள். இன்னும் பத்து நாட்கள் இருக்கும் நிலையில் 5000 வரையில் தான் ஒருவர் ஒரு கணக்கிற்கு கட்ட முடியும் என்கிறார்கள்.கூட்டம் குறையட்டும் பிறகு கட்டிக் கொள்ளலாம் என்று இருந்தவர்கள் நிலை என்ன? 5000க்கு மேல் கட்ட வேண்டும் என்றால் வங்கி மேலாளருக்கு விளக்கம் சொல்ல வேண்டுமாம்..என்னவென்று..நான் இத்தனை நாள் கோமாவில் இருந்தேன் என்றா?

எலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம். 

வெளிநாட்டை உதாரணம் காட்டும் நீ அதற்கு அடிப்படையான கட்டுக்கோப்பான அரசு இயந்திரம் உன்னிடம் உள்ளதா என்று திறனாய்வு செய்ய வேண்டாமா?

கோயில் திருவிழாவிற்கு சென்று தாலிச் சங்கிலியை களவு கொடுத்தவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்தால் உங்களை தான் எச்சரிக்கையாக இருக்க சொல்லி துண்டு சீட்டு கொடுத்தோம் அல்லவா..நீங்கள் ஏன் கவனமாக இல்லை என்று திருப்பி அனுப்பும் கள்வர் கூட்டணி உள்ள காவலர் அமைப்பு..அதை கட்டுப் படுத்த முடியாத வக்கற்ற ஓர் அரசு. இந்த இலட்சணத்தில் பணமற்ற பரிவர்த்தனையாம்!!!

ATM ரகசிய எண்களை கேட்டு வரும் தொலை பேசி அழைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கும் அரசு அப்படி அழைத்துப் பேசி மோசடி செய்யும் தனி நபர்களை பிடித்து கடுமையான தண்டனை அளிக்க இயலவில்லையே ஏன்? இந்தியாவில் இருந்து கொண்டு தானே அழைக்கிறார்கள்? இங்கு உள்ள அடையாள அட்டை கொடுத்து தானே அந்த சிம் பெறப்பட்டுள்ளது? அவர்கள் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை ஒரு மணி நேரத்தில்...வேண்டாம் ஒரு நாளைக்குள் உன்னால் கண்டுபிடிக்க முடியாதா?நீ தான் விண்ணிற்கும் மண்ணிற்கும் செயற்கைகோள் அனுப்புகிறேன்..நான் தான் வல்லரசு என்று தொடை தட்டி என்ன பயன், சொந்த மக்களை காக்க வக்கற்று திரியும் நிலையில்....??   

ATM ரகசிய எண்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியவில்லை . மற்றபடி வாடிக்கையாளர் முழு சாதகமும் அவர்கள் கைக்குள். அதை எங்கனம் பெற்றார்கள் என்பதை உன்னால் கண்டறிய முடியவில்லை. கொலையை தடுக்க  திராணியற்று நடந்து முடிந்த  பிறகு சுவற்றிலும் கைப்பிடியிலும் மை போட்டு துப்பு துலக்கும் ஐதர் அலி காலத்து காவல் தொழில் நுட்பம் வைத்துக் கொண்டு எப்படி வெளிநாட்டு கனவை நீ காண்பாய்? அதற்கு எம் அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்.

ஏ டி எம் எண்களை பெற்று அவர்களும் அரசு பரிந்துரைக்கும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் கைப்பேசி செறிவூட்டல் (recharge), பொருட்கள் வாங்குதல் இதைத் தான் செய்கிறார்கள். அப்படி மோசடி செய்து வாங்கப்பட்ட பொருளின் பயனாளியின் முகவரியை கூடவா உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை? த்தூ....

நண்பர்களே..நான் சொல்ல வந்த விசயத்திற்கு வருகிறேன். அரசு நம்மை காப்பாற்றும் என்று நம்புவது எல்லாம் மூடத்தனம். ஒவ்வொர் அரசும் நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டு அரசு அங்கிகாரம் பெற்ற திருடர்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நேற்று எனது தோழர் ஒருவருக்கு 7324806725 ஐடியா (IDEA NETWORK) பீகார் இருந்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பேசி கணவன் மனைவி இருவரின் கணக்கில் இருந்தும் மொத்த பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

இந்த 7324806725 என்ற எண்ணில் இருந்தோ வேறு எண்களில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளையோ நம்பி ஏமாறாதீர்கள்.


Tuesday, December 20, 2016

சைவத் திருமுறைகள் & அனைத்து சங்கத் தமிழ் நூல்கள் கற்றுணர சிறந்த தளங்கள்

பன்னிரு திருமுறை தேவாரம்- பெரியபுராணம்
               

தலைவாயில் வாயில் கோயில்கள் வரலாறு


நன்றி :  http://www.thevaaram.org

வடமராட்சி திருமுறைநாட்டுடைமை நூல்கள் 


நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் 
திரு அருட்பா திருமுறைகள்