ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈனப்பிறவி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதிலடி கொடுப்போம்


தனது குடும்பத்தை வாழ்விக்க,இத்தாலிய வெறிநாயின் காலை நக்கி பிழைக்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தந்தி தொ.கா எடுத்த பேட்டியில் எம் தலைவனை சிறுவர்களை போரில் ஈடுபடுத்தினார் எனக் கூறினான்.

"எந்த தாய் தன் மகனை போருக்கு போய் வா"என அனுப்புவாள் எனக் கேட்டான். ஒரு தமிழனை பெற்ற அன்னை அனுப்புவாளடா. உன்னை மாதிரி தறுதலையை பெற்ற அன்னை தான் நக்கி பிழைத்த குடும்பத்தை கரையேற்று என அனுப்புவாள்

600மீனவர்கள் கொல்லபட்டார்களே,என்ன பதில் எனக்கேட்டால்..இறந்தவர்கள் இறந்தவர்களே..அதை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது?அது தான் நட்ட ஈடு கொடுத்திருப்பார்களே என நக்கலாக சிரிக்கிறான்.

இதே பதில் ராஜீவ் கொலைக்கும் பொருந்துமா எனக் கேட்டால் அவரும் இவர்களும் ஒன்றா என்கிறான். தன்னை வருத்தி உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் மீனவரை விட,ஊரை கொள்ளை அடித்து உலையில் போடும் நீங்கள் எந்த விதத்தில் பெரியவர்கள்?

(e.v.k.s.elangovan)

புதன், 27 மார்ச், 2013

மாணவர்களை தாக்கிய காங்கிரசு போக்கிலிகளை கைது செய்!!!

ஒரு மாத  காலமாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மீது வன்முறையை திணித்துள்ளது களவாணி காங்கிரசு. உருட்டுக்கட்டைகளும் செங்கல்லையும் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இனத்தை அழிக்கும் கோடரிக் காம்பு ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரசு போக்கிலிகள்.  

ஒரு "கட்டிங்" வாங்கிக் கொடுத்தால் கூட்டிகொடுக்க கூட தயங்காத இந்த ஊழல் பேர்வழிகள் இத்தனை காலம் தம் இனமக்கள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டு ஆற்றாது வீறுகொண்டு சீரும்  அரிமாக்கள் மீது,இனம் காக்க எழுந்த புலிக்குட்டிகள் மீது வன்முறையை திணிக்க பார்க்கிறார்கள்.

தஞ்சைக்கு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள் என காணொளியை வைத்து தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை உடனே கைது செய்த சீர்மிகு தமிழக காவல் துறை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு காங்கிரசு கைக்கூலிகளை கூட ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

மாணவர்களை தாக்கிய பொறுக்கிகளை 24மணி நேரத்திற்குள் கைது செய்து  , பொய்யாக புனையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களான வெங்கடேஷ் மற்றும் சதாசிவம் இருவரையும் உடனே விடுதலை செய்யாவிட்டால் காங்கிரசுக் கட்சி அலுவலகம் ஒன்று கூட தமிழகத்தில் இருக்காது என்ற மாணவர்களின் சீற்றம் கை மீறிச் செல்லும். அதற்கு பக்க தூணாக தோழர்கள் அனைவரும் திரள்வோம் என எச்சரிக்கை விடுப்போம்.



காங்கிரசு கைக்கூலிகளை கைது செய்யக் கூறி த.தே.பொ.கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விடுத்த அறிக்கை:



===================================================
திருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது செய்க!
===================================================
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
===================================================

திருச்சியில் காங்கிரசுத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களுக்கு ஈழப்பிரச்சினை தொடர்பாகக் கருப்புக் கொடி காட்டச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களைக் காங்கிரசார் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். முகமது ஜிப்ரி, கஜேந்திரபாபு, சத்தியகுமார் ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது ஜிப்ரிக்குக் கால் எலும்பு முறிந்துள்ளது.

காங்கிரசுக்காரர்கள் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்திய எல்.கே.எஸ்.மகாலில் ஏற்கெனவே தயாராக உருட்டுக் கட்டைகள் வைத்திருந்திருக்கிறார்கள்.

அடிபட்டுக் காயமடைந்த வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் உள்ளிட்டு ஆறு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், தொட்டியம் தொகுதியின் முன்னாள் காங்கிரசு சட்டப் பேரவை உறுப்பினர் இராசசேகரன் தம்பி இராமகிருஷ்ணன் தலைமையில் திரட்டப்பட்டு, தாக்குதலில் உருட்டுக்கட்டைகளுடன் ஈடுபட்ட குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

அக்குண்டர்கள் மாணவர்களை அடித்தது மட்டுமில்லாமல் பேருந்துகளை உருட்டுக்கட்டையால் அடிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. அவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். மதுரையில் காங்கிரசுக்காரர்கள் ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. அதே போன்று ஒரு நிகழ்வைக் காங்கிரசார் திருச்சியில் தொடங்கியுள்ளார்கள்.

மாணவர்களிடமிருந்த கருப்புக் கொடியைப் பிடுங்கி வைத்திருந்த ஒரு காங்கிரஸ் இளைஞரை மாணவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டார்கள். இப்பொழுது அந்நபரை மாணவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்லி காங்கிரசார் வழக்குச் சோடித்துள்ளார்கள். இதற்குத் திருச்சிக் காவல்துறையினர் பலியானது ஏன்?

மேலும் வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் எங்கே வைத்துள்ளார்கள் என்று கேட்கச் சென்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அறவழியில் 15 நாட்களுக்கு மேல் நடந்து வந்த மாணவர் போராட்டத்தில் வன்முறையை ஏவியுள்ளது காங்கிரசுக் கட்சி.

தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறும் வன்முறையில் இறங்கி மாணவர்களைத் தாக்கிய காங்கிரசார் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள் : 27.03.2013

திங்கள், 25 மார்ச், 2013

தறு"தல","தலைவா"க்கள்

அரசியல்வாதிகளுக்கு நிகராக கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் கலை வணிகர்களான திரைத்துறையினர். எங்கோ தில்லியில் வணிக ஊடகங்கள் ஆதரவில் எவனோ  நடத்தும் போராட்டத்திற்கு இங்கிருந்து விமானம் ஏறிச் சென்று போய் ஆதரவு தருவார்கள்..அப்படியாவது அகில இந்தியாவிற்கும் தன் போலி முகம் அறிமுகம் ஆகும் என்கிற நம்பிக்கையில். 

ஆனால் போகிற வழியில்...இங்கு..எவர்களின் அன்றாடச் செலவை அபகரித்து கழிவறை வரை குளிரூட்டப்பட்ட கனவு இல்லத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்களோ அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு நின்று ஆதரவு தெரிவிக்க கூடத் தயங்குவார்கள். காரணம் ஸ்டாலின் வீட்டிற்கு புலனாய்வுத் துறையை அனுப்பியது போல இவர்கள் வீட்டிற்கு வருமானவரித் துறையை அனுப்பிவிடுவார்களோ என்கிற அச்சமோ?

நாங்கள் கலை வணிகர்கள். எங்கள் நோக்கம் கலையை விற்பது,,,காசு பார்ப்பது...என்று கூறி  நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். அப்படி என்றால் திரையில் வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்வதுதானே. எதற்கு பணம் கொடுத்து ரசிகர் மன்றங்களை நீங்களே நிறுவி அதற்கு ஒரு மேலாளர் போட்டு கொள்ளை அடிக்கிறீர்கள்? சரக்கு நன்றாக இருந்தால் வியாபாரம் தானாக நடக்கும் தானே?

உங்களின் விஸ்வரூபமோ,காவலனோ திரை இடுவதில் பிரச்சனையை ஏற்பட்டால் உங்களுக்கு தமிழன் உணர்வு பீறிட்டு எழும். மற்ற நேரங்களில் நாங்கள் வணிகர்கள்..அது அரசியல் என நீங்களாகவே ஒதுக்கி வைத்து விடுவீர்கள். நல்ல நரித் தந்திரம் டா. "ழ" கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத நீங்கள் தமிழ்..தமிழன் எனக்கூறி நடிக்கும்போதே அரசியல் செய்ய பழகிக் கொண்ட நீங்கள் அரசியல் மேடையில் நடித்து அப்பாவி மக்களின் வாக்குகளையும் அபகரித்து கேப்டன் ஆகிவிடுகிறீர்கள்.

திரைத் துறையில் உள்ள அனைவரையும் நாம் இங்கு குறை கூறவில்லை. அண்ணன் சீமான் போன்றவர்களை பிரசவித்த  கலை உலகில் மு.களஞ்சியம், அமீர், தாமரை, கௌதமன், சத்யராசு, பாலு மகேந்திரா,மணிவண்ணன்,புகழேந்தி தங்கராஜ்  போன்ற தீவிர இன உணர்வாளர்களும்  நிறைந்து உள்ளனர்.



தோழர்களே...நமது போராடத்தை நாமே முன்னெடுப்போம். நாம் இன்றி இவர்களால் அணு அளவும் அசைய முடியாது என்கிற நிர்பந்தம் ஏற்படும்போது நமது பின்னால் இவர்கள் அணி வகுப்பார்கள்.


களம் புகுவோம்; நிலம் மீட்போம்!!!


ஞாயிறு, 17 மார்ச், 2013

ஒரு கடிதம் எழுதினேன்-அம்னீசியா நோயாளி கருணாவின் கண்ணீர் கடிதம்

நான்காம் தலைமுறையில் நடமாட இயலாமல் இருக்கின்ற போதும் உயிர் துறக்கும் போதும் மக்களுக்காக அரியணையில் இருந்து சேவை செய்து கொண்டே இறக்கவேண்டும்;தான் மட்டும் அல்ல தனது எள்ளுப் பேரர்கள் வரை இதையே கடைபிடிக்க வேண்டும் என்று கடமை,கண்ணியம் தவறாத,தணியாத ஆர்வம் கொண்ட ஒரே தமிழீன தலைவர் நேற்று தான் அம்னீசியா வியாதியில் இருந்து விடுபட்டார். உடனே அவர் கண்ணில் பட்டது தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலை தான். அதை பார்த்து அவர் வடித்த கண்ணீரில் கோபாலபுரத்தில் ஆழிப்பேரலை புகுந்ததோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு உவர்நீர் சூழ்ந்தது. ஐயகோ என நடுநிசியில் அலறியதை கேட்டு சென்னை மக்கள் தூக்கம் கலைந்து துக்கத்தில் ஆழ்ந்தனர்.

என்ன செய்வதென்று அறியாத தலைவர் எடுத்தார் எழுதுகோல். இந்தியாவில் பிரதம மந்திரி யார் என சோனியாவிடம் கேட்டு உடனே கடிதம் எழுதத் தொடங்கினார். "இலங்கையில் தமிழர்கள் போரில் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக அறிய நேர்ந்தேன். இதனை உடனே ராஜபக்சேவிற்கு கடிதம் எழுதி தடுத்து நிறுத்த வழி உள்ளதா என ஆலோசித்து தங்களால் இயன்றதை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்வதாகவும் தவறினால் தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவும் தயங்கமாட்டேன் என்பதை தங்களது மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் " கடிதம் எழுதினார். இந்த கடிதம் 2014ற்குள் தில்லியை போய்ச் சேரும் என நம்பப்படுகிறது. - இவ்வாறு திராவிடக் கட்சியின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் குஷ்பு நிருபர்களிடம் தெரிவித்தார்.

வெள்ளி, 15 மார்ச், 2013

புரட்சிகர மாணவர்களுடன் பேசி உங்கள் ஆதரவை தாருங்கள்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?



புரட்சி மாணவப் படைகளுக்கு நமது ஆதரவை தெரிவிப்போம்; ஊக்கப்படுத்துவோம்!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்காமல்,தொடர் பட்டினிப் போராட்டம் செய்து போராடுங்கள். போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும்; இன உணர்வு கொண்டவர்களை இனவெறியனுக்கு நரபலி கொடுப்பதையும் தடுக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டிய தருணம் இது. அவர்களை அச்சுறுத்த திராவிட நரிகள் ஊளை இடலாம்; காவலர்களை ஏவி சோர்வடைய வைக்கலாம்; கல்லூரி நிர்வாகங்கள் மூலம் மிரட்டல் விடலாம். அவர்களுக்கு ஒரு இன்னல என்றால் நாம் இருக்கிறோம் என்கிற ஆன்ம பலத்தை கொடுப்போம். தொல்லை தர நினைக்கும் துரோகிகளை விரட்டி அடிப்போம்.



தோழர்களே...மாணவர்களுக்கு பக்கபலமாக நாம் இருக்க வேண்டிய தருணம். அழைத்துப் பேசி உற்சாகப்படுத்துவோம்...

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் : நித்தியானந்தம் 9600651091

மதுரை மன்னர் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர்: வெங்கடேசு, 9095667745 

அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தொடர்புக்கு: ராபர்ட் 8883170213

தூத்துக்குடி காமராசுக் கல்லூரி தொடர்புக்கு: 9677886465.

கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
மாணவர்களை வாழ்த்த
ஆதி .ராமசாமி – 9629544289
வீரமணி 9500271504
நந்தகுமார் 9965772229
இளையராஜா 9994276759
புண்ணியமூர்த்தி 9790473650
கிருட்டிணகுமார் 9677990943
வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் .
அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள்


(தகவல் தந்த முகநூல் தோழர்கள் கம்பன் தமிழ் ,ராஜ்குமார் பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகள்)

திங்கள், 11 மார்ச், 2013

இலயோலா மாணவர் போராட்டத்தை நசுக்க சதி செய்த கும்பலை முறியடித்த மாணவர் படை!-த.தே.பொ.கட்சியின் பார்வையில்

இலயலோ கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த நெருப்பை மூன்று நாள்களுக்குள் அடக்க நினைத்த சர்வாதிகாரிகளை,தமிழின விரோதிகளை தோலுரித்துக் காட்டுகிறார் தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சியில் இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் க.அருணபாரதி. 

ஐ.நா. மனித உரிமை அவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை  ஏற்றுக் கொள்ள மறுத்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற உண்மையை ஐ.நா. ஏற்க வேண்டுமென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர். 

உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
1. திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
2. ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
3. அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
4. பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
5. பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
6. மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
7. சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
8. லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு

அய்க்கப் அரங்கில் தொடர்ந்து போராட்டத்தை நடத்த இலயோலா நிர்வாகத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தமிழுணர்வாளர் திருச்சி திரு. சவுந்தர்ராசன் அவர்களுக்கு உரிமையான செங்கொடி அரங்கிற்கு உண்ணாப் போராட்டம் மாற்றப்பட்டது. மாணவர்களும், இளைஞர்களும் அங்குக் குவியத் தொடங்கினர். தமிழீழக் கோரிக்கையில் உறுதியாகப் பாடுபடும் பல்வேறு அரசியல் இயக்கத்தினரும், அதன் தலைவர்களும் அங்கு மாணவர்களை வந்து நேரில் வாழ்த்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில், போராட்டத்தின் 3ஆம் நாளான 10.03.2013 அன்று காலை முதல் அங்கு, இலயோலா கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்புடைய ‘புதிய பேராளர்கள்’ மாணவர்களை வழி நடத்துகிறோம் என்ற பெயரில் சில அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.  

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த உண்ணாப் போராட்டத்திற்கு, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துக் கொண்டுள்ள டெசோ இயக்கத்தினர் திடீரென வந்து சேந்தனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் தன்னோடு,  தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரை, தனது தொண்டர்கள் சூழ அழைத்து வந்தார்.

‘நல்லிணக்கம்’ – ‘மனித உரிமை மீறல்’ என சிங்களனைத் தடவிக் கொடுக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை என மாணவர்கள் பட்டினிப் போர் நடத்திக் கொண்டிருக்கும் திடலுக்குள், உப்புசப்பில்லாத அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் டெசோ கூட்டத்தினர் நுழைந்தது, அங்கிருந்த மாணவர்களுக்கும்ம், தமிழ் உணர்வாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இவர்களது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர் தமிழுணர்வாளர்கள். எனினும், டெசோ குழுவினர்  போராட்ட பந்தலுக்குள், மாணவர்களை வழிநடத்திய ‘புதிய பேராளர்கள்’ அனுமதிக்கப்பட்டனர். 

அங்கே உரையாற்றிய திரு. தொல்.திருமாவளவன் மாணவர் போராட்டம் வெல்லாது என்றும் இந்திய அரசிடம் தான் நமது கோரிக்கைகளை நாம் வைக்க வேண்டும் என்றும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். நடைமுறைக்கு வரமுடியாத கோரிக்கைகள் இவை என்று சாடினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழுணர்வாளர்களை மாணவர்களை வழிநடத்தியவர்கள் கண்டித்தனர். 

அதன் பின்னர், மதியம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள், மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அப்போது அங்கு உரையாற்றிய த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், அமெரிக்கத் தீர்மானத்தின் கேடுகளை விளக்கியும், இந்திய அரசு சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உறுதிமிக்க ஆதரவை வழங்கி வருவதையும், வெறும் சிங்கள ஆட்சி மாற்றத்திற்கான செயல்திட்டத்தையே அமெரிக்க – இந்திய சதிகார கும்பல் முன்னெடுக்கக்கூடும் என்பதையும் தனது பேச்சில் வலியுறுத்தியதானது மாணவர்களை ஈர்த்தது. 

இந்திய அரசுக்கு எதிரான ஒவ்வொரு வார்த்தைக்கும் மாணவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். இதுதான் மாணவர்களின் உண்மையான மனநிலையாக உள்ளது. 

தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பேசிய பிறகு, தமிழீழ ஆதரவு இயக்கத் தலைவர்கள் இங்கு பேசக் கூடாது என அங்கிருந்த சிலர் ஒலிவாங்கியைப் பிடிங்கினர். மாணவர்கள் தான் பேச வேண்டுமென அதற்கு அவர்கள் விளக்கமும் கூறிக் கொண்டனர். கூட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணியை இலயோலா கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி மேடையை விட்டு விரட்டினார். இலயோலா கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாப் போராட்டத்தை தொடர இடம் கூட தராத அக்கல்லூரி நிர்வாகம், சிலரை வைத்து அப்போராட்டத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவைத்துத் கொணர முயன்றது அப்போது தெரியவந்தது. 

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இப்போராட்டத்தை மாற்றும் முயற்சியில் திரு. திருமாவளவன் அவர்களுடன் வந்தவர்கள், ஒரு சில மாணவர்களுடன் இணைந்து ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு போராட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். 

2009இல் தமிழீழ இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சித் தலைவராக இருந்தவர் திரு. கே.வீ.தங்கபாலு. இன்றைக்கும் என்றைக்கும் தமிழீழத்தை ஆதரிக்காத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வேண்டி பட்டினிப்போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு எந்த துணிவில் வந்து சேர்ந்தார்? டெசோ குழுவினர் கொடுத்த துணிவா அது?

தங்கபாலு வருகின்ற செய்தியறிந்து, மாணவர்களும், தமிழ் உணர்வாளர்களும் வாயிலில் சென்று கடுமையாக முழக்கமிட்டனர். வாயில் வரை வந்த தங்கபாலு, கடும் எதிர்ப்பு இருப்பதைக் கண்டும் நான் உள்ளே நுழைவேன் எனச் சொன்னார். உள்ளே போராட்டத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள், “இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக வந்தால் அதிகாரிகளுடன் வந்து பேசுங்கள். அதைவிட்டுவிட்டு காங்கிரசுத் தலைவர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம்” என அறிவித்தனர். அதன்பின், ‘தங்கபாலுவே வெளியேறு’ என்று தோழர்கள் எழுப்பிய முழக்கம் கண்டு, அச்சத்துடன் பின்வாங்கினார் தங்கபாலு. 

அதன் பின்னர், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், ஈழச்சிக்கலில் துரோகம் புரிந்து அம்பலப்பட்டவருமான பாதிரியார் ஜெகத் கஸ்பர் அங்கு உரையாற்ற வந்தார். அவருக்குப் பின் பேசிய ஒரு மாணவர், ‘ஜெகத் கஸ்பர் ஒரு மாபெரும் துரோகி அவருக்கு எப்படி இங்கு பேச அனுமதி கிடைத்தது?’ என கேள்வி எழுப்பியுடன் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழ் உணர்வாளர்களின் ஞாயமான குரல்களுக்கு எதிராக மாணவர்களைத் திருப்புகின்ற கேவலமான சதியில் சிலர் ஈடுபட்டனர். தழல் ஈகி முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைத்த சதிச்செயல் தான், இங்கு நினைவுக்கு வந்தது. தமிழ் உணர்வாளர்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகவே மாற்றும் சதிச் செயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலரும், ஜெகத் கஸ்பருடன் உடன்வந்த சிலரும் மேற்கொண்டனர். 

வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, மே பதினேழு இயக்கத் தோழர் உமர், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தோழர் ராஜா ஸ்டாலின், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் இது குறித்து தனியே விவாதித்தனர். மாணவர்களுக்கு சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாட்டை பேசி சரிசெய்வதென முடிவெடுத்தனர். 

அன்றிரவு ஒரு பக்கம், மாணவர்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை எப்படி நகர்த்துவதென விவாதித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம், மாணவர்களுடன் தமிழ் உணர்வாளர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் தான், காவல்துறையினர் நள்ளிரவு 1.45 மணிக்கு, மூடியிருந்த போராட்டத்த திடலின் இரும்புக் கதவுகளை பலவந்தமாகத் தட்டினர். 

கதவை உடைத்துக் கொண்ட முன்னேறிய காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், சிகப்பு நிறச் சீரூடையிலிருந்த தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத்தின் சட்டைகளைப் பிடித்து தள்ளி, தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார். திபுதிபுவென உள்ளே நுழைந்த காவலர்கள் அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கத் தொடங்கினர். அதைக் கண்டு ஆவேசமாக முழக்கமிட்டு நின்ற தமிழ் உணர்வாளர்களை தள்ளிவிட்டு முன்னேறிய காவல்துறையினர், அங்கு உண்ணாப் போராட்டத்தில் இருந்த 8 மாணவர்களையும், மாணவர்களின் மனிதச் சங்கிலித் தடுப்புகளையும் மீறி தடியடி நடத்தி பலவந்தமாக இழுத்துச் சென்றனர். 

தி.மு.க.வின் டெசோ குழுவினருக்கும், அதற்கு எதிராக இருப்பதாக சொல்லும் அ.தி.மு.க. அரசிற்கும் நோக்கம் ஒன்றுதான் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. மாணவர்கள் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்பது தான் அந்த நோக்கம்!

நள்ளிரவுக் கைதுகளுக்கும், காவல்துறை அடக்குமுறைகளுக்கும் பெயர் பெற்ற ஆரியப் பார்ப்பன பாசிஸ்டான செயலலிதா, மீண்டுமொருமுறை தனது வெறித் தனத்தைக் காட்டினார். மாணவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி, தம் தரத்தை வெளிக்காட்டினர் காவல்துறையினர். 

உண்ணாப் போராட்டத்திலிருந்த 8 மாணவர்களும், இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் தமது உண்ணாப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர் மாணவர்கள். 

வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி, திரைஇயக்குநர்கள் மு.களஞ்சியம், கவுதமன், இராம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட திரளான உணர்வாளர்கள் கைது செய்யபட்டு, அரும்பாக்கத்திலுள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைக்கப்பட்டனர். 

போராட்டம் நடத்தப்பட்ட திடலை பூட்டியிருந்த காவல்துறையினர், காலை விடுதலை செய்யப்பட்டத் தோழர்களில் சிலர் தமது உடைமைகள் உள்ளிருப்பதாகக் கூறியும் கூட அதைத் திறக்காமல் அடாவடித்தனம் புரிந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. 

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகக் காவல்துறையினரின் அரக்கத்தனத்தைக் கண்டிக்கத் துப்பில்லாத ஊடகங்கள், மாணவர் போராட்டத்தை திசை திருப்பும் வேலையை மட்டும் மேற்கொண்டு வருகின்றன. நடுநிலை என மார்தட்டும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, தமிழினத் துரோகி தங்கபாலுவை மாணவர்கள் எழுச்சியுடன் விரட்டியக் காட்சியைக் காட்டவில்லை. மாறாக, டெசோ கும்பல் வந்து போனதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சன் தொலைக்காட்சியோ, மாணவர் போராட்டத்தை டெசொவுக்கு ஆதரவான போராட்டமாக சித்தரிக்க கடும்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

ஆனால், இவற்றையும் மீறி இலயோலா கல்லூரி மாணவர்களின் போர்க்குணமிக்க அறப்போராட்டமும், அதை தடுக்க முனைந்த காவல்துறையினரின் அடாவடித்தன நடவடிக்கையும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை தோற்றுவித்துள்ளது. போராட்டம் சென்னையிலிருந்து தமிழகம் முழுமைக்கும் பரவியுள்ளது. 

சென்னை இலயோலா கல்லூரி மட்டுமின்றி, அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், மாநிலக் கல்லூரி கே.ஆர்.எம்.எம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலும், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி, அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சாவூர் அரசுக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், திருச்சி தூய வளனார் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அரசு கல்லூரி மதுரை சட்டக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, காரைக்குடி ஆனந்தா கல்லூரி, பூம்புகார் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி என தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழுணர்வாளர்கள் எதிர்பார்த்த்தை போலவே, இலயோலா கல்லூரி நிர்வாகத்தின் அந்த ‘புதிய பேராளர்கள்’, இலயோலா கல்லூரியின் 8 மாணவர்களுடைய உண்ணாப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அந்த 8 மாணவர்களின் போராட்டம் இன்றைக்கு 8 கோடி தமிழ் மக்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது. 

இலயோலா கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து, திருச்சி தூய வளவனார் கல்லூரி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

இந்த மாணவர் சக்தியால் தான் தமிழ் இனத்தின் உரிமைகளை மீட்க முடியும்! அதை தடுக்க முனையும் துரோகியர் கூட்டத்தையும் வீழ்த்த முடியும்! இது மாணவர் போராட்டமல்ல, தமிழ் இனத்தின் போராட்டம்! அதற்கு துணை நிற்க வேண்டியதே தமிழ்த் தேசியர்களின் கடமை!

================================
தோழர் க.அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
================================