திங்கள், 25 மார்ச், 2013

தறு"தல","தலைவா"க்கள்

அரசியல்வாதிகளுக்கு நிகராக கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் கலை வணிகர்களான திரைத்துறையினர். எங்கோ தில்லியில் வணிக ஊடகங்கள் ஆதரவில் எவனோ  நடத்தும் போராட்டத்திற்கு இங்கிருந்து விமானம் ஏறிச் சென்று போய் ஆதரவு தருவார்கள்..அப்படியாவது அகில இந்தியாவிற்கும் தன் போலி முகம் அறிமுகம் ஆகும் என்கிற நம்பிக்கையில். 

ஆனால் போகிற வழியில்...இங்கு..எவர்களின் அன்றாடச் செலவை அபகரித்து கழிவறை வரை குளிரூட்டப்பட்ட கனவு இல்லத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்களோ அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு நின்று ஆதரவு தெரிவிக்க கூடத் தயங்குவார்கள். காரணம் ஸ்டாலின் வீட்டிற்கு புலனாய்வுத் துறையை அனுப்பியது போல இவர்கள் வீட்டிற்கு வருமானவரித் துறையை அனுப்பிவிடுவார்களோ என்கிற அச்சமோ?

நாங்கள் கலை வணிகர்கள். எங்கள் நோக்கம் கலையை விற்பது,,,காசு பார்ப்பது...என்று கூறி  நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். அப்படி என்றால் திரையில் வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்வதுதானே. எதற்கு பணம் கொடுத்து ரசிகர் மன்றங்களை நீங்களே நிறுவி அதற்கு ஒரு மேலாளர் போட்டு கொள்ளை அடிக்கிறீர்கள்? சரக்கு நன்றாக இருந்தால் வியாபாரம் தானாக நடக்கும் தானே?

உங்களின் விஸ்வரூபமோ,காவலனோ திரை இடுவதில் பிரச்சனையை ஏற்பட்டால் உங்களுக்கு தமிழன் உணர்வு பீறிட்டு எழும். மற்ற நேரங்களில் நாங்கள் வணிகர்கள்..அது அரசியல் என நீங்களாகவே ஒதுக்கி வைத்து விடுவீர்கள். நல்ல நரித் தந்திரம் டா. "ழ" கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத நீங்கள் தமிழ்..தமிழன் எனக்கூறி நடிக்கும்போதே அரசியல் செய்ய பழகிக் கொண்ட நீங்கள் அரசியல் மேடையில் நடித்து அப்பாவி மக்களின் வாக்குகளையும் அபகரித்து கேப்டன் ஆகிவிடுகிறீர்கள்.

திரைத் துறையில் உள்ள அனைவரையும் நாம் இங்கு குறை கூறவில்லை. அண்ணன் சீமான் போன்றவர்களை பிரசவித்த  கலை உலகில் மு.களஞ்சியம், அமீர், தாமரை, கௌதமன், சத்யராசு, பாலு மகேந்திரா,மணிவண்ணன்,புகழேந்தி தங்கராஜ்  போன்ற தீவிர இன உணர்வாளர்களும்  நிறைந்து உள்ளனர்.



தோழர்களே...நமது போராடத்தை நாமே முன்னெடுப்போம். நாம் இன்றி இவர்களால் அணு அளவும் அசைய முடியாது என்கிற நிர்பந்தம் ஏற்படும்போது நமது பின்னால் இவர்கள் அணி வகுப்பார்கள்.


களம் புகுவோம்; நிலம் மீட்போம்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக