ஞாயிறு, 21 மே, 2017

ரஜினி தமிழக அரசியலுக்கு வரக்கூடாது!!! ஏன்?

இவர் நடித்த கபாலி திரைப்படத்தின் ரூ.60க்கு விற்க வேண்டிய திரை அரங்கு கட்டணம் 600க்கு விற்க வைத்து உங்கள் மீது அபிமானம் வைத்த எங்க முட்டாள் இரசிகர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த நீ,,,கருப்பு பணத்தில் புரளுகிற நீ..ஆட்சிக்கு வந்தால் மட்டும் நல்லாட்சி தந்துவிடுவாயா? இது என்ன திரைப்படமா? முதல் பாதியில் வில்லனாக இருந்து இறுதிக் காட்சியில் கதாநாயகனாக மாற?

காவிரிப் பிரச்சணையில் நீ எங்களுக்கு சார்பா பேசவேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப 2000கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுங்கள் என்று ஒரே ஒரு அறிக்கை விடு. அந்த துணிவு உனக்கு இருக்கா?

உனது மனைவி நடத்து ஆசிரம பள்ளியில் எத்தனை ஏழை குழந்தைகள் கற்கிறார்கள்? எத்தனை பேருக்கு இலவச கல்வி தருகிறீர்கள்? நீங்களாக முன்வந்து தரவேண்டாம். அரசு கொள்கைக்கு ஏற்ப 15 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கி உள்ளீர்களா? அந்த பள்ளியில் தமிழ் மொழ பயிற்றுவிக்கப் படுகிறதா?

உன்மீது அபிமானம் உள்ளவர்கள் 3 விழுக்காடு இருப்பார்களா?வேண்டாம்..ஒரு 30 விழுக்காடு இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களிடம் உள்ள பணம் மற்றும் அதிகாரத்தை மோடி வழியில் முறையற்ற வகையில் பயன்படுத்தி விளிம்பு நிலையில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால்? முப்பது விழுக்காடு முட்டாள்களின் தவறான முடிவால் மீதம் உள்ள 70 விழுக்காடு மக்கள் தண்டைனையை அனுபவிக்க வேண்டுமா?

அதற்காகத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் எதிர்ப்பது உன் மீது உள்ள பயத்தினால் அல்ல...வந்தேறிகளின் எண்ணிக்கை மிகுந்து கலப்பின தாயகமாக தமிழ்நாடு மாறி வருகிற நிலையில் உன்னைப் போன்ற களவாணிகள் ஆட்சிக்கு வந்தால்...இன்னும் கொஞ்ச நஞ்சம் உள்ள அடிப்படை உரிமைகளை இழந்து மொழி உரிமையை இழந்து உங்களுக்கு பிடித்த சமஸ்கிருத மொழியை கற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்படுவோம்.

இந்த மக்களுக்கு நல்லது செய்யாமல் உங்களுக்கு தூக்கம் வராது..நிம்மதி இல்லை என்றால்..ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி நல்லது செய்து விட்டு போங்களேன்.எங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்டதில் ஒரு துளி செலவாகி நீங்கள் தூய்மை பெறுவதில் எங்களுக்கு எந்த ஆற்றாமையும் இல்லை. ஆனால் எங்களை ஆள எங்களிடம் தலைவர்கள் இருக்கிறார்கள். நீ வேண்டும் என்றால் நீ பிறந்த மண்ணில் சென்று அரசியல் கட்சி உருவாக்கி உனது மாநிலத்தை ஆண்டு கொள்.