Sunday, September 25, 2011

ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு! நேரடி ஒளிபரப்பு


ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு! பதிவு, சங்கதி, தளங்களில் நேரடி ஒளிபரப்புஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து (25.09.2011) காலை 9 மணியளவில் தமிழினத் தற்காப்பு மாநாடு நடக்கிறது. ஓசூர் வசந்த் நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் மாநாட்டிற்கு தமிழகமெங்குமிருந்து இன உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடக்கிறது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத் திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, போர்ப்பறை என்ற தலைப்பில், பாவலர் மு.வ.பரணர் தலைமையில் நடக்கும் பாக்களம் நடக்கிறது. அதில், கவிஞர்கள் கவிபாஸ்கர் வர்ண சாதியிலிருந்து விடுதலை என்ற தலைப்பிலும், ப.செம்பரிதி இன விடுதலை குறித்தும், இரா.சு.நடவரசன் மொழி விடுதலை குறித்தும், இராசா இரகுநாதன் பெண் விடுதலை குறித்தும் கவிதைகள் படிக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம் என்ற தலைப்பில் தமிழக மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. மக்கள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் குடிமை உரிமைக் கழகத் தோழர் கண.குறிஞ்சி, இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழக ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அமரந்தா ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர். பிற்பகலில் காஞ்சி மக்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மதியம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம் நடக்கிறது. அதில், இலக்கியத்திற்காக தோழர் தி.க.சி., தமிழர் மெய்யியல் ஆய்வுக்காக முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியத்துறை சாதனைக்காக ஓவியர் மருது ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு செய்கிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தமிழர் தாயகத்தில் அயலார் ஆதிக்கம் என்ற தலைப்பில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், மக்கள் இயக்குநர் வெ.சேகர், முனைவர் த.செயராமன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பொறியாளர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை த.தே.பொ.க. முன்னணி தோழர்கள் அறிவிக்கின்றனர்.

மாநாட்டின் நிறைவுக் களத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். த.தே.பொ.க. ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் பி.சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை அறிக்கை:


"வரலாற்றில் முதன்முதலாகத் தமிழ்நாடு நேரடியாக வடஇந்திய ஆட்சித்தலைமையின் கீழ் வந்தது 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் ஆகும். வெள்ளைபிரித்தானிய ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, ஆரிய இந்தியஏகாதிபத்தியதின் அடிமை நுகத்தடியில் சிக்கியது தமிழ்நாடு. இந்த அடிமைநிலையே தமிழினத்தின் அடையாளத்தை மறைக்கிறது. தமிழகத்தில் நிலவும்பொருளியல் சுரண்டல், வர்ணசாதி ஆதிக்கம், சூழலியல் சீர்கேடு, சனநாயகமறுப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்தஅடிமை நிலையே ஆகும். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுதனக்கான இறையாண்மையுள்ள குடியரசை நிறுவிக் கொள்வதே தமிழ்த் தேசிய இனத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்"


கவிபாஸ்கர்-வர்ண-சாதியிலிருந்து விடுதலை கவிதை, காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறை முரசு, உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தனின் கவி முரசு, தோழர் கி.வெங்கட்ராமன் மற்றும் தோழர் பெ.மணியரசன் அவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பும் உரைகள்..இவற்றை கேட்க கீழே உள்ள காணொளிகளையை சுட்டுங்கள்...

Saturday, September 24, 2011

கவிதை:நவீன அடிமைகள்இயக்கத்தை முடக்கும்
குண்டுகள் இல்லை கால்களில்...
மாறாக
குரல்வளையை நெறிக்கும்
"டை" மட்டும்
அடையாளமாய் எங்கள் கழுத்தில்...

Friday, September 23, 2011

மக்கள் விரோத காங்கிரசு ஒழிப்பு இயக்கம்


மக்களே...தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் இதை அச்சிட்டு உங்கள் வீட்டு வாசலில் ஒட்டி வையுங்கள்..காத்து கருப்பு அண்டாது உங்களை!!!


உள்ளாட்சி தேர்தல் வருகிறது. மக்களே நமக்கு இன்னுமொரு அரிய வாய்ப்பு மக்கள் விரோத காங்கிரசை அடியோடு துடைத்து எரிய....

சென்ற முறை 63க்கு 5 கொடுத்து விட்டு வைத்தது தவறு என்று அவர்கள் திருச்சியில் தூக்கு தண்டனைக்கு ஆதரித்து உண்ணாவிரதம் இருந்து நமக்கு நினைவூட்டி உள்ளனர்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 அமெரிக்க டாலர் இருந்த போது ரூ.5 ஏற்றி அம்பானிகளை குளிரவைத்து நமக்கு அடியில் நெருப்பு வைத்தார்கள். இப்பொழுது அதே  கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 அமெரிக்க் டாலராக குறைந்துள்ளது.இப்போது விலையை குறைப்பதற்கு பதிலாக ரூ.3 ஏற்றி அம்பானி,ஷெல் இவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க வழி அமைத்துக் கொடுத்து அதில் கமிஷன் அடித்துள்ளார்கள். எண்ணெய் குழுமங்கள் அனைத்தும் லாபக் கணக்கை காட்டி வருகின்றன.ஆனால் ஏகாதிபத்திய இந்தியாவின் நிதி அமைச்சரும், ஒன்றுக்கும் வக்கற்ற பிரதமரும் நட்டத்தில் ஓடுகிறது என்று பழைய கீறல் விழுந்த பாட்டையே பாடி நம்மை ஏமாளி ஆக்குகின்றனர்.

பெட்ரோல் என்ன விலை விற்றாலும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்கள் மக்களவையில் இருந்து தங்கள் வீட்டு கழிவறைக்கு செல்ல கூட ஹெலிகப்ட்டர் உள்ளது.அதுவும் அரசாங்க செலவில். இவர்கள் பதவி இழந்தால் கூட கொள்ளை அடித்த காசு உள்ளது ஏழு தலைமுறைக்கு. நாம் அப்படியா?உழைத்து வியர்வை சிந்திய நமக்கு தானே விலை உயர்வின் வழி புரியும்?!

13மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 9.6 என்று உயர்ந்துள்ள நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இந்த பெட்ரோல் விலை உயர்வு. பணவீக்க உயர்வை காரணம் காட்டி ரிசேர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வீட்டுக் கடன்,வாகனக் கடன்,கல்விக் கடன் வாங்கி ஏற்கனவே மாதத் தவணையை சரிவர கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு இடி.

இது போதாது என்று சமையல் எரிவாயு வருடத்திற்கு 4 மட்டும் தான் தருவார்களாம் இப்பொழுது உள்ள விலையில். அதற்கு மேல் வாங்குபவர்களுக்கு வணிக ரீதியில் விற்கப்படும் விலை..அதாவது உருளை ஒன்று ரூ.800/- க்கு மேல். இவர்களை இன்னும் ஆள வைத்தால் நம்மை நடுத் தெருவிற்கு கொண்டுவந்து விடுவர்.
ஒரு நாளைக்கு ரூ.26 க்கு மேல் சம்பாதிப்பவர்கள் பணக்காரர்களாம்.. இந்தியாவில்..அதற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாம்

ஆளும் காங்கிரசின் வறுமைக் கோட்டுக்கான இந்த வரைமுறை எதற்கு என்று தெரியுமா? இதற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் நுகர்பொருள் விநியோகம், மானிய விலையில் (இப்போது உள்ளது தான் மானிய விலையாம்...) சமையல் எரிவாயு உருளை இதெல்லாம்..இவர்கள் சொல்கின்ற ஏழைகள் யார்? 26 ருபாய் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்த பணக்கார பிச்சைக்கார நாட்டில்? 26க்கு கீழ் சம்பாதிப்பவர்களுக்கு நுகர்பொருள்வழங்கு அட்டையோ,வாக்காளர் அட்டையோ எதுவும் இல்லை...அவர்கள் இந்தியாவில் வாழும் இந்திய அகதிகள்..


சிந்தியுங்கள் மக்களே...இது நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. மறந்து விடாமல் நம் வயிற்றில் குத்தும் கையை முறிப்போம்; ஈழ மக்களின் முதுகில் குத்திய கையை வெட்டுவோம்.

(say no to congress. உள்ளாட்சி தேர்தல். காங்கிரசை ஒழிப்போம்.petrol price hike.)

Monday, September 19, 2011

பொதுவுடைமை நூல்கள்கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
(கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம் 

மார்க்ஸியச் சிந்தனை மையம்Marx/Engels Image map

Marx

               Biographies of Marx                

Engels

Archive of Downloadable files of Marx and Engels


eBook Collection
in PRC Format

How to Use
See Wikipedia on eBooks
If you don't have a Kindle
Download Free MobiPocket Reader for PRC files
Karl Marx

eBook Collection
in pdf, epub, mobi and odt Formats

Includes 3 volumes of “The History of the Russian Revolution”
and “Revolution Betrayed”

Marx/Engels Biography
and Archives of Family Members


Karl Marx:

Karl Marx
    from M.I.A. Glossary
Biographical overview (until 1869)
    by F. Engels (1869)
Karl Marx
    by F. Engels (1877)
The Death of Karl Marx
    by F. Engels, various articles (1883)
Marx and the Neue Rheinische Zeitung (1848-49)
    by F. Engels (1884)
Biography of Marx
    by F. Engels (1892)
On the love between Jenny and Karl Marx
    by Eleanor Marx (his daughter; 1897-98)
Karl Marx
    by Eleanor Marx (his daughter; June 1883)
Karl Marx: Brief Biographical Sketch with Exposition of Marxism 
    by V.I. Lenin (1914)
Karl Marx: His Life and Works
    by Otto Rühle (1928)
Karl Marx: His Life and Work
    Progress Publishers
Karl Marx. A Life (excerpt)
    by Francis Wheen (2002)
Marx’s “Confession”, 1865

See also the Letters of Jenny Marx

Recollections of Marx’s Literary Interests:

Biographical Notes on Marx’s Literary Interests
    by Eleanor Marx-Aveling
Small Traits of Marx’s Great Character
    by Franzisca Kugelmann
From Reminiscences of the First International
    by Anselmo Lorenzo 

Frederick Engels:

Biographical Article
    by Marx (1880)
Biographical Article
    by V. I. Lenin (1895)
Engels’ “Confession”, 1868

Encyclopedia Article
    Handwörterbuch der Staatswissenschaften (1892)
Encyclopedia Article
    Brockhaus' Konversations-Lexikon (1893)

Recollections of Engels’s Literary Interests:

My Acquaintance with Engels
    by N S Rusanov
from Reminiscences
    by Fanni Kravchinskaya 

Collections:

Various media Interviews on both Engels and Marx
    (1871 - 1893)
Karl Marx and Friedrich Engels: An Intro
    A book by David Riazanov (1927)
Recollections on Marx and Engels
    by Mikhail Bakunin (1871)