மக்களே...தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொருவரும் இதை அச்சிட்டு உங்கள் வீட்டு வாசலில் ஒட்டி வையுங்கள்..காத்து கருப்பு அண்டாது உங்களை!!! |
உள்ளாட்சி தேர்தல் வருகிறது. மக்களே நமக்கு இன்னுமொரு அரிய வாய்ப்பு மக்கள் விரோத காங்கிரசை அடியோடு துடைத்து எரிய....
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 அமெரிக்க டாலர் இருந்த போது ரூ.5 ஏற்றி அம்பானிகளை குளிரவைத்து நமக்கு அடியில் நெருப்பு வைத்தார்கள். இப்பொழுது அதே கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 அமெரிக்க் டாலராக குறைந்துள்ளது.இப்போது விலையை குறைப்பதற்கு பதிலாக ரூ.3 ஏற்றி அம்பானி,ஷெல் இவர்களுக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்க வழி அமைத்துக் கொடுத்து அதில் கமிஷன் அடித்துள்ளார்கள். எண்ணெய் குழுமங்கள் அனைத்தும் லாபக் கணக்கை காட்டி வருகின்றன.ஆனால் ஏகாதிபத்திய இந்தியாவின் நிதி அமைச்சரும், ஒன்றுக்கும் வக்கற்ற பிரதமரும் நட்டத்தில் ஓடுகிறது என்று பழைய கீறல் விழுந்த பாட்டையே பாடி நம்மை ஏமாளி ஆக்குகின்றனர்.
பெட்ரோல் என்ன விலை விற்றாலும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்கள் மக்களவையில் இருந்து தங்கள் வீட்டு கழிவறைக்கு செல்ல கூட ஹெலிகப்ட்டர் உள்ளது.அதுவும் அரசாங்க செலவில். இவர்கள் பதவி இழந்தால் கூட கொள்ளை அடித்த காசு உள்ளது ஏழு தலைமுறைக்கு. நாம் அப்படியா?உழைத்து வியர்வை சிந்திய நமக்கு தானே விலை உயர்வின் வழி புரியும்?!
13மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 9.6 என்று உயர்ந்துள்ள நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல இந்த பெட்ரோல் விலை உயர்வு. பணவீக்க உயர்வை காரணம் காட்டி ரிசேர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வீட்டுக் கடன்,வாகனக் கடன்,கல்விக் கடன் வாங்கி ஏற்கனவே மாதத் தவணையை சரிவர கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு இடி.
இது போதாது என்று சமையல் எரிவாயு வருடத்திற்கு 4 மட்டும் தான் தருவார்களாம் இப்பொழுது உள்ள விலையில். அதற்கு மேல் வாங்குபவர்களுக்கு வணிக ரீதியில் விற்கப்படும் விலை..அதாவது உருளை ஒன்று ரூ.800/- க்கு மேல். இவர்களை இன்னும் ஆள வைத்தால் நம்மை நடுத் தெருவிற்கு கொண்டுவந்து விடுவர்.
ஒரு நாளைக்கு ரூ.26 க்கு மேல் சம்பாதிப்பவர்கள் பணக்காரர்களாம்.. இந்தியாவில்..அதற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாம்
ஆளும் காங்கிரசின் வறுமைக் கோட்டுக்கான இந்த வரைமுறை எதற்கு என்று தெரியுமா? இதற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் நுகர்பொருள் விநியோகம், மானிய விலையில் (இப்போது உள்ளது தான் மானிய விலையாம்...) சமையல் எரிவாயு உருளை இதெல்லாம்..இவர்கள் சொல்கின்ற ஏழைகள் யார்? 26 ருபாய் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்த பணக்கார பிச்சைக்கார நாட்டில்? 26க்கு கீழ் சம்பாதிப்பவர்களுக்கு நுகர்பொருள்வழங்கு அட்டையோ,வாக்காளர் அட்டையோ எதுவும் இல்லை...அவர்கள் இந்தியாவில் வாழும் இந்திய அகதிகள்..
சிந்தியுங்கள் மக்களே...இது நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. மறந்து விடாமல் நம் வயிற்றில் குத்தும் கையை முறிப்போம்; ஈழ மக்களின் முதுகில் குத்திய கையை வெட்டுவோம்.
(say no to congress. உள்ளாட்சி தேர்தல். காங்கிரசை ஒழிப்போம்.petrol price hike.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக