சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமலர் நாளிதழ் எரிப்பு |
மூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். "தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம். தமிழினத் துரோகியே வெளியேறு" என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி:சவுக்கு.நெட்
நன்றி:சவுக்கு.நெட்
தமிழின விரோதி தினமலரின் இந்த செயலை கண்டித்து மானமுள்ள தமிழர்கள் கண்டன மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மாதிரி மின்னஞ்சல்:
பெறுதல்: coordinator@dinamalar.in,webmaster@dinamalar.in,dmrpondy@dinamalar.in,dmrcbe@dinamalar.in,dmrcbe@dinamalar.in,dmrmdu@dinamalar.in
பொருள் :தியாகச் சுடர் செங்கொடி பற்றி அவதூறாக எழுதியதற்கு மன்னிப்பு கேள்
பொருளடக்கம்:மூவர் உயிர்காக்க தன்னுயிர் நீத்த தியாகச் சுடர்,சகோதரி செங்கொடியை பற்றி அவதூறாக எழுதியதை உலகத் தமிழர் இணையக் குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
அவதூறாக எழுதியதற்கு உடனடியாக மன்னிப்பு கேள்; இல்லை என்றால் உங்கள் பத்திரிக்கையை புறக்கணிக்க வேண்டி மாபெரும் இணையப் போராட்டம் நடத்துவோம்...
இப்படிக்கு தமிழர்களே இதுதான் தினமலர் அலுவலகத்தின் எண்கள். .நம் தோழி செங்கொடி யை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதி இருக்கிறான். .இதற்கு மேலும் பொறுமை கூடாது. .உங்களால் முடிந்ததை செய்யுங்கள். .
9944309600
9894009200
9894009400
044 2841 3553
044 2855 5783
காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள்: நஞ்சைக் கக்கும் தினமலர் !
05 Sep 2011

காங்கிரசும் கருணாநிதியும் போடும் பிச்சைகாசுக்காக தமிழனையும் விற்று ஈழத் தமிழர் போராட்டங்களையும் விற்கும் இதுபோன்ற ஊடகங்களை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் புறக்கணிக்கவேண்டும். ஒருவர் உண்மையாகவே கெட்டவராக இருந்தால் கூட அவர் இறந்தபின்னர் அவரது சாவுவீட்டிற்குச் செல்வோர் அவர் செய்த நல்ல காரியங்களைப் பற்றியே பேசுவார்கள். இது தமிழர்களின் பாரம்பரியம் அல்லது நாகரீகப் பழக்கம் என்று கூடச் சொல்லலாம். இந்த நாகரீகம் கூடத் தெரியாமல் வெறும் பணத்துக்காகவும் அரசியலுக்காவும் பெண்களை விலைபேசி விற்கும் கேவலமான எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு ஊடகமாக இருக்கிறது இந்தத் தினமலர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று எழுதி மொத்தப் பெண் இனத்தையே இவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இதனை அதிர்வு இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதுமட்டுமல்லாது தேசிய தலைவரை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்த ஐயா நெடுமாறன் அவர்களையும் இலங்கைத் தமிழர்களுக்காக போடாச் சட்டத்தில் பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்து வரும் அண்ணன் வைகோ அவர்களையும் தினமலர் இழிவாக எழுதியுள்ளது. அண்ணன் சீமான், வைகோ மற்றும் ஐயா நெடுமாறன் ஆகியோர் இலங்கைப் பிரச்சனையை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தினமலர் எழுதியுள்ளது. இத் துணிச்சலை யார் கொடுத்தது ?
ராஜீவைக் கொலைசெய்த மூவரையும் குற்றவாளிகாகப் பார்க்கவேண்டுமாம். இந்த மூவரும் தமிழர்கள் என்றால் ராஜீவ் கொலைசெய்யப்படும்போது எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று கேள்வி எழுப்புகிறது தினமலர். ஐயா தினமலர் ஆசிரியரே குற்றஞ்சாட்டப்பட்டவர் கொலையாளி என்றாகிவிடுமா ? இலங்கையில் 40,000 த்தும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனரே அதற்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தே அப்போது எங்கே போனது உங்கள் ஞாயம் ? கேட்ப்பவன் கேனையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்பார்களாம். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்படாத மற்றும் பற்றரி வாங்கிக்கொடுத்தார் என்று சந்தேகத்திலேயே பொலிசார் இவர்களைக் கைதுசெய்து கோட்டில் நிறுத்தியது என்பதனை தினமலர் இன்னும் அறியவில்லைப் போலும்.
இலங்கைக்கு அமைதிகாக்கும் படையை அனுப்பிவைத்து அங்கே ஈழப் பெண்களை குர்க்கா படையினர் கதறக் கதறக் கற்பழித்தவேளை எங்கே இருந்தது இந்தத் தினமலர் ? இல்லை இவர்கள் அதற்கு மமாவேலை பார்த்துக்கொடுத்தார்களா ? ஜூலியன் வாலா படுகொலையை நேரில் பார்த்த பகத்சிங் பல ஆண்டுகள் களித்தும் பிரித்தானியா சென்று அக் கொலைக்கு காரணமான அதிகாரிகயை எவ்வாறு சுட்டுக்கொண்றான் என்பது நாம் அறிந்தே. அது தேசப் பற்று என்கிறார்கள். அப்படி என்றால் இதற்கு என்ன பொருள் என்று தெரியுமா ? ஆனால் இங்கே இக் கொலையைச் செய்யாதவர்கள் மரணத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது மனுதர்மம். இதனை ஏற்க்க மறுப்பவர்கள் மானிடர்கள் அல்ல பேய்கள் அதுவும் பிணம் தின்னும் பேய்களாகவே இருக்கமுடியும் !
நன்றி:

தினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு – பெ.மணியரசன் கண்டன அறிக்கை!
Published By பெரியார்தளம் On Tuesday, September 6th 2011. Under தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஆரியர்களின் தமிழ் இனப்பகை நடவடிக்கைகளை நாம் மாற்றிட முயன்றாலும், மறந்திட முயன்றாலும் ஆரியர்கள் தங்களை தமிழர்களோடு இணக்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்பதற்குத் தினமலர் ஏடு தக்க எடுத்துக்காட்டு.
ஆரிய ஊதுகுழல் ஏடான தினமலர் 5.9.2011 அன்று ‘’ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள துணுக்குத் தோரணங்கள் மேலே கூறிய நமது கருத்துக்கு சான்றாகும்.

சங்கர மடத்தலைவர் ஜெயேந்திர சரஸ்வதியின் காம விளையாட்டுக்கள் பல்வேறு ஏடுகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் அடுக்கடுக்காக வந்து நாறிய போது அதுகுறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை தினமலர். ஜெயேந்திரர் துறவுக்கு செய்த துரோகத்தை கண்டு கொள்ளவில்லை. இப்போது இளம்பிஞ்சு ஒன்று இனஉணர்வு மேலீட்டால் ஏதாவது செய்து மூவர் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று கொந்தளித்த மனதோடு தீக் குளித்ததை கொச்சைப்படுத்துகிறது அவ்வேடு. தமிழ் இனத்துக்கெதிரான அவர்களின் குரூரமும் வன்மமும் எவ்வளவு கொடுமை நிறைந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.
அப்ஸல் குருவிற்கும், அஜ்மல் கசாப்பிற்கும், தருமபுரி பேருந்தை எரித்து மூன்று மாணவிகளைக் கொன்றவர்களுக்கும் சாவுத் தண்டனையை நீக்கக் கோருவார்களா தமிழின உணர்வாளர்கள் என்று அவ்வேடு கேட்கிறது. அவர்களுக்கும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்பதே நமது குழப்பமற்ற நிலைபாடாகும். அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை போதும். சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள ஜெயேந்திர சரஸ்வதிக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை வழங்கினால் அதையும் நாம் எதிர்ப்போம்.
இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இராசபட் சேவுக்கும் பன்னாட்டு நீதிமன்றம் வாழ்நாள் தண்டனை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். நமது மனிதநேயத்தில் எந்தப் பாகுபாடும் கிடையாது. வர்ணத்திற்கு ஒரு நீதியும், ஜாதிக்கு ஒரு தர்மமும் கடைபிடிக்கும் தினமலரின் வர்ணாசிர்ம தர்மம் தமிழர் நீதியில் கிடையாது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே தமிழினத்தின் அறம். “பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்செ பகைவனுக்கருள்வாய்” ’’பகை நடுவினில் அன்புறுவான நம் பரமன் வாழ்கிறான்” என்றார் பாரதியார் பார்ப்பன வகுப்பில் பிறந்தார் என்பதற்காக மட்டுமே பாரதியை தூக்கிப் பிடிக்கும் தினமலர் அவரது மனித நேயக் கருத்தை ஏற்க மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது தமிழ்நெறி அன்று.
ராசீவ் காந்தி கொலை வழக்கை புலனாய்வு செய்து குற்ற அறிக்கையை தாக்கல் செய்த தலைமை அதிகாரியான கார்த்திகேயன், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை போதும் என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அவர் தமிழினத்தில் பிறந்தவர் என்பதால் தினமலரின் ஆரியப் பார்வையில் அவரும் தமிழின வெறியராகத் தோன்றலாம்.
இராசீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி கே.டி. தாமஸ் பணி ஓய்வு பெற்றுள்ளார். அவர் 5.9.2011 அன்று தி ஏசியன் ஏஜ் என்ற ஆங்கில ஏட்டில், ”மரண தண்டனை என்பது அரசு நடத்தும் காட்டுமிராண்டித் தனமான கொலை தவிர வேறன்று.’’ என்ற தலைப்பில் சாவுத் தண்டனைக்கு எதிரான கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் ”இராசீவ் கொலை வழக்கை விசாரித்து நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கிய மூன்று நீதிபதிகளின் அமருவுக்கு நான் தலைமையேற்கவேண்டிய கெடுவாய்ப்பு இருந்தது’’ என்று மிகவும் வருந்திக் கூறியுள்ளார். மேலும் அவ்வழக்கில் தண்டனை பெற்ற மூவருக்கும் மற்றும் அப்சல் குரு உள்ளிட்டோருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சாவு தண்டனையை நீக்க வேண்டும் என்ற கருத்து, இந்திய உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதிகள் வி.ஆர் கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகி யோருக்கு உண்டு. அவர்கள் தங்கள் தீர்ப்புரைகளிலும், கருத்தரங்க உரைகளிலும் அக்கருத்தை வலுவாக வைத்துள்ளனர்.
உலகில் 139 நாடுகளில் சட்ட புத்தகத்திலிருந்து சாவுத் தண்டனையை நீக்கிவிட்டனர். அமெரிக்க நாட்டில் 15 மாநிலங்கள் சாவுத் தண்டனையை நீக்கிவிட்டன. சாவு தண்டனை நீக்கப்பட்ட 15 மாநிலங்களிலும் கூடுதலாகக் கொலைக் குற்றங்கள் நடக்கவில்லை என்றும், சாவுத் தண்டனை நீக்கப்படாத ஏனைய 35 மாநிலங்களில் கொலைக் குற்றம் குறைந்து விடவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொலைக் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கூடாது என்பதன்று நம் வாதம். 14 ஆண்டுகள் சிறையில் இருக்கதக்க வகையில் வாழ்நாள் தண்டனை வழங்கினால் போதும் என்பதே நம் வாதம்.
தமிழினத்திற்கெதிராக அவதூறுகளை அள்ளி வீசுவது தினமலரின் நிரந்தர ’’தர்மமாகும்.’’ அது தனது ஆசையை செய்தியாக வெளியிட்டு அவ்வப்போது மூக்குடைபட்டு வருகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆக்கிரமிப்புபோர் நடத்திய காலத்தில், பதவிச் சண்டையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரால் கொல்லப்பட்டார் என்றும், அவரின் உடலுக்கு மக்கள் இறுதி மரியாதை செய்து வருகிறார்கள் என்றும் தினமலர் பொய் செய்தி வெளியிட்டதை உலகம் அறியும்.
இப்போது தேர்தல் அரசியலுக்கு வெளியே தமிழின உணர்வும், தமிழ்த் தேசிய அரசியலும் கிளர்ந்து எழுகிறது. தமிழ்நாட்டில் சமூக – அரசியல் சிக்கல்களின் தீர்வுக்குத் திசைகாட்டும் அளவில் இன உணர்ச்சி வளர்ந்துள்ளது. தமிழினக் காப்பிற்கென்று பல்வேறு அமைப்புகள் தோன்றி போராடுகின்றன. இந்த இன எழுச்சியைக் கண்டு கிலி பிடித்து கிடக்கிறது தினமலர் கூட்டம். அப்பாவித் தமிழர்களை திசை திருப்ப பாரதமாதா பஜனை பாடுகிறது. குற்றமற்றவர்களைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது. இராசீவ் காந்தி கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும் அவ்வழக்கிற்குத் தடா சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாவுத் தண்டனையை நீக்கிவிட்டால் கொலைகள் பெருகிவிடும் என்று சான்று எதுவும் தராமல் பூச்சாண்டிக் காட்டுகிறது தினமலர். கொள்கை அரிமாக்களின் உறுமலைக் கோட்டான்களின் கூச்சல் தடுத்துவிட முடியாது.
ஆரியர் – தமிழர் என்ற முரண்பாட்டை இப்போதும் இணக்கப்படுத்த முடியாமல் அதை மேலும் தீவரப்படுத்துவோர் தினமலர் போன்ற பார்ப்பனிய சக்திகள்தாம் என்பதை நடுநிலையாளர்கள் உணரவேண்டும். தினமலர் கும்பலுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை, 06.09.2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக