வியாழன், 30 மார்ச், 2017

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எனும் பேச்சுக்கே இடம் இல்லை-மக்கள் உறுதி


நாகை நகர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து #ஹைட்ரோகார்பன் க்கு எதிரான எந்த போராட்டமும் நடைபெறாமல் முறியடிக்கும் வகையில் செயல்படும் காவல் துறையின் கட்டுபாட்டை மீறி, நாகை மாவட்ட இளைய தலைமுறைகள் குழு இன்று கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பங்குடி மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது. ஊர் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்; 

காவிரி உரிமையை பறிக்கும் நடுவண் அரசையும்,அதை தட்டிக் கேட்காத மாநில அரசின் மெத்தனப் போக்கும், நம் வாழ்வாதாரத்தை காக்கவும்,அடுத்த தலைமுறைகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் போராட்டம் ஒன்றே தீர்வு என்பதை விளக்கும் வகையிலும் நமது கலந்துரையாடல் அமைந்தது. 

இந்த திட்டத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம்?



(கீழ்வேளூர் அருகில் கடம்பங்குடியில் உள்ள ONGC-யின் TVR-18 Point உபயோகத்தில் உள்ளது. ஒரு செயல்பாட்டில் உள்ள நிலமுனையில்  எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கதவுகள் பூட்டப்படாமல் கேட்பாரின்றி கிடக்கிறது. அதை யார் வேண்டுமானாலும் இயக்கவோ தவறாக உபயோக்கிவோ முடியும் வகையில் உள்ளது. இதையே சரியாக பாதுகாப்பான முறையில் செயல்படுத்த முடியாத நிறுவனங்கள் வரவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது. 

அந்த ஊர்மக்கள் எப்படி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சாட்சி...ஓர் ஏக்கர் நிலம் இரண்டு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.2500 க்கு குத்தகை எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை மட்டும் அல்ல..அது வேறு எந்த முகமூடி போட்டு வந்தாலும் வேரடி மண்ணோடு தகர்ப்போம் என்ற உறுதிமொழியோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது 

 #SaveMotherCauvery

திங்கள், 20 மார்ச், 2017

வேண்டாம் காதல்...!!!

வாழ்க்கை நிம்மதியாக நதியின் ஓடம் போல போய்க்கொண்டு இருக்கும்.

திடீர் என்று நீர்வீழ்ச்சி போல..எங்கிருந்தோ வருவாள்..."உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பாள்".கண்டுகொள்ளாமல் இருப்போம். 

"நீ இல்லாமல் உலகமே இல்லை" என்பாள். கொஞ்சம் அசைந்து கொடுப்போம். 

"உன்னை என்னால் மறக்கவே முடியாது" என்பாள். நம்முடன் களித்த சிறு சிறு அனுபவங்களையும் ஆழமாக நினைவூட்டுவாள். நமது அடித்தளம் தகர்ந்து விடும். அவள் பேசுவது எல்லாம் உண்மையாகவே தோன்றும். 

நீங்க இப்படி தான் பேசுவீர்கள்.. நம்பி வந்தால் காதல் பட இறுதிக்காட்சி மாதிரி ங்ங்கே ங்ங்கே னு பைத்தியம் மாதிரி திரிய விட்டுவிடுவீர்கள் என்று சொல்வோம். அதற்கும் பதில் சொல்வாள்..."எல்லாப் பொண்ணுங்களையும் அப்படி நினைக்காதே" என்று.பிற்காலத்தில் அவளும் அந்த பட்டியலில் முதலிடத்தில் தான் இருப்பாள் என்பது நடக்கவே நடக்காது என நாம் நம்பும் வகையில்.

"..இல்லை..நம் காதல் நிறைவேற சாத்தியம் புலப்படவில்லை;பிரிந்து விடலாம்" என்போம்.."உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்கையில் கல்லும் கரைந்து போகும்.. நாம் எம்மாத்திரம்?

ஒரு அழகான முழு நிலவில்..அவளுக்கு பித்தம் தெளியும். நமக்கு சூனியம் பிடிக்கும். அவள் தெளிவு பெறுவாள்..நாம் கலங்கிய நிலையில். 

குழந்தை குட்டியோடு முக நூலிலும் கட்செவியிலும் அவள் உலா வரும்போது..உலகம் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் உன் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். 

காதல் செய்ய தைரியம் மட்டும் இருந்தால் போதும். ஆனால் அதில் வெற்றி பெற உன்னையும் அவளையும் சுற்றியுள்ளவர்களை சட்டை செய்யாத ஒரு தன்னலக்காரனாகவும்,எடுத்த முடிவில் முரட்டுப் பிடிவாதம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; அங்ஙனமே அவளும்.

இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் உனக்கு வராது என்றால், இந்த கசப்பான அனுபவங்கள் வேண்டாம் என்று நினைத்தால்..தயவு செய்து காதல் செய்யாதே...



ஞாயிறு, 19 மார்ச், 2017

இளையராஜா கேட்டதில் என்ன தவறு?



நான் கட்டி வைத்த மண்டபத்தில் வந்து கல்யாணம் செஞ்சிக்கிறான். வாடகை எங்கடானு கேட்டா..தாலி கட்டினது நான்; சாந்தி முகூர்த்தம் பண்ண போறது நான்...உனக்கு எதுக்கு வாடகைனு கேட்கிறான்.

தமிழன் #இளையராஜா வின் அறிவுசார் சொத்தை ஆட்டைய போட்டு கொளுத்து வளருது தெலுங்கு பாலு குடும்பம்.

தட்டி கேட்டா தப்பா?.


இசைஞானி தரப்பில் உள்ள நியாயம் :

  • காப்புரிமை சம்பந்தமாக 2014 ஆண்டு முதலாக முறையாக அறிவிப்பு செய்துள்ளார் 
  • எஸ்.பி.பாலசுப்ரமணியம் "பாலு 50" நிகழ்ச்சியை நடத்தி தான தருமம் செய்யவில்லை. அத்தனையும் பணம் கொள்ளையிடும் மேல் தட்டு மக்களுக்கான நிகழ்ச்சி. இலவச அனுமதி இல்லை. 
  • இளையராஜா பாடல்களை நம்பி பிழைப்பு நடத்தும் இசைக்குழுவை இதுவரை நெருக்கடி செய்தது இல்லை. ஆனால் அவரின் அறிவுசார் உடைமையை மூலதனமாக வைத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் போது?
  • என் பாடலை பாட நீ குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என்று ஒரு போதும் நிர்பந்திக்கவில்லை. நீ ஈட்டுவதில் உரிய பங்கை செலுத்து என்று தான் கூறப்படுகிறது.
  • இளையராஜா நண்பர் என்பதற்காக பாலு இலவசமாக எந்த பாடலையும் பாடிக் கொடுக்கவில்லை
  • காப்புரிமை மூலம் வசூலிக்கப்படும் பணம் அனைத்தையும் இளையராஜாவே எடுத்துக் கொள்ள போவதில்லை. முறையே தயாரிப்பாளர்கள்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள் என அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்
  • நம் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த பூவை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தாலோ, தோட்டத்து காய்கறியை ஏழை எளிவர்களுக்கு அளித்தாலோ நாம் உரிமை கோரப்போவது இல்லை. ஆனால்..அதை வைத்து நீ காசு பார்ப்பாய் என்றால்...?

    இது பாடகருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான காப்புரிமை பிரச்சனை. ஆனால் நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தலையை நீட்டுகிறார் என்றால்...என்ன காரணம்..பாலு..தெலுங்கன் என்பது ஒன்று மட்டும் தான்.
காப்புரிமை சட்டத்தில் தெளிவாக உள்ளது..இசை அமைப்பாளருக்கே பாடலின் மீது முழு உரிமை உள்ளது என்று. குழந்தையை பிரசவித்த தாய்க்கு தான் அது சொந்தம்..மாறாக மருத்துவமனைக்கு அல்ல. 

வெள்ளி, 17 மார்ச், 2017

ஐஸ்வர்யா தனுஷின் நாராச நடனம்




எழுதுங்கள் 
என் கல்லறையில்-அவள்
இரக்கம் இல்லாதவள் என்று !!!

இப்படிக்கு

பரதம்






படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் மேடையில் உள்ளனர் மற்றும் பலர் நடனமாடுகின்றனர்

போராட்டத்தில் வெற்றி என்றால் அது இது அல்லவா?!



16.03.2017 முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சித்தூரைச் சேர்ந்தவர் இறந்து விட்டார். இதனால் வருத்தமுற்ற அவரின் உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்களை தட்டிக் கேட்க, ஆத்திரமுற்ற பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதே நாம் முறையாக அனுமதி பெறாமல் போராடினால் நம்மை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி பெயர்த்து இருப்பார்கள். நடுக்குப்பம் மக்களாக இருந்திருந்தால் வீடு புகுந்து கொளுத்தி போராட்டத்தை முடித்து வைத்து இருப்பார்கள் நமது ஸ்காட்லாந்து காவல் துறை.

ஆனால் போராடியது உயிர் காக்கும் மருத்துவர்கள் அல்லவா? உடனே சுகாதாரத்துறை செயலர் வந்து பேச்சுவார்த்தை. அதற்கும் மருத்தவர்கள் செவி சாய்க்கவில்லை. 3 மணி நேர போராட்டம், இறந்து போன நோயாளியின் உறவினரை கைது செய்த பிறகு தான் முடிவிற்கு வந்தது. 

300 நாட்களுக்கு மேல் போராடி கூடங்குள மக்களால் முடியாததை, 30 நாட்களாக போராடியும் நெடுவாசல்,வடகாடு மக்களால் முடியாததை வெறும் மூன்றே மணி நேர போராட்டத்தில்  தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் மருத்துவர்கள். 

பணமும் அதிகாரமும் உள்ளவன் போராட்டம் செய்தால் தான் இந்தியாவில் நீதி கிடைக்கும். பஞ்சப்பறாரிகள் நாம் உண்ணா நோன்பு இருந்து செத்தால் கூட ஒரு நாய் திரும்பி பார்க்காது.

வாழ்க இந்திய வல்லரசு!!! ஓங்குக அதன் அறம்!!!