பொழுதுபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழுதுபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 செப்டம்பர், 2021

"மனசாட்சியே இல்லாமல் இருக்காங்களே"- அங்கலாய்த்துக் கொண்ட மருத்துவர்

கட்டி ஒன்று. ஸ்கேன் எடுக்க சென்றேன்.

சற்று நேரம் கழித்து

பணிப்பெண்  : சார்..நீங்க உள்ள போகலாம் 

(மருத்துவர் காதில் அலைபேசியில் பேசியபடியே.. இருந்தார் .)

உதவியாளர்: ஐயா நீங்க படுத்துகோங்க

மருத்துவர் அலைபேசியில்: ,,,"போங்கண்ணே...எனக்கு மனசே கஷ்டமா இருக்கு" 

மருத்துவர்: ஐயா..உங்க உடைய கொஞ்சம் தளர்த்திகோங்க

(கட்டி மீது ஜெல் தடவிய படியே சம்பாசனை நடக்குது)

"வயலை பார்த்துக்கிறதையே விட்டுடலாம்னு தோணுது.

இப்படி எல்லாமா மனுசங்க இருப்பாங்க ...அதுக்குன்னு மனசாட்சியே இல்லாமல்.  வந்து ஒரு வேல கூட பாக்கலேண்ணே. 700 ரூவா கேக்குறான்

இப்ப நினைச்சாலும் BP ஏறுது. 

ஏதோ உங்ககிட்ட சொல்லலாமேன்னு கூப்டேன்.

சுப்பிரமணி காலைல இருந்து சாயங்காலம் 7 வரை வேலை செஞ்சான். அவன் 700 ரூவா கேட்டான். அது பரவா இல்ல. இவன் 4 மணிக்கு வந்து 7 மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சுளையா 700ரூவா கேக்குறான்"/

(என்னடா இது. ஜெல் தடவி இவ்ளோ நேரம் ஆச்சே. இன்னும் ஸ்கேன் எடுக்கலையே. ஒரு வேலை ஊறபோட்டு எடுப்பாங்களோ- மனதில் நினைத்துக் கொண்டேன் )

மருத்துவர் அலைபேசியில் தொடர்ந்து- "சரிண்ணே ,,நாளைக்கு நான் வர மாட்டேன். நீங்களே பேசி செட்டில் பண்ணி அனுப்புங்க. நான் போன் வைக்கிறேன்" 

மருத்துவர்: ம், முடிஞ்சது. ரிப்போர்ட் இருந்து வாங்கிட்டு போய்டுங்க 

வெளியில் வந்தேன். 

பணிப்பெண் : "பணமா குடுங்க. கார்ட் கிடையாது"

நான்: எவ்ளோ

பணிப்பெண் : ரூ 700

நாலு மணி நேரம் வேலை செய்தவனுக்கு 700 ருபாய் கேட்டவனுக்கே  மனசாட்சி இல்லைனா.. அப்போ இது என்னவா இருக்கும் ? ஆனா இவங்க பரவா இல்லை. திருச்சி அப்பல்லோ காரன் இதே ஸ்கேன்கு 7,000 ரூபா கேட்டானே. 

இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று அழுத அந்த மருத்துவரின் கணவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன் ஊனமுற்ற என் நண்பனுக்கு ஊனம் தான் என சான்றிதழ் அளிக்க அப்பவே ரூ.100 வாங்கியவர்.

பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்த பிறகு தான் தோன்றியது..நாள் முழுக்க இரவு வரை வேலை செய்கிற இந்த பொண்ணுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க மனசாட்சி உள்ள அந்த மருத்துவர் அம்மா  ?


-தமிழ்மது 

திங்கள், 20 மார்ச், 2017

வேண்டாம் காதல்...!!!

வாழ்க்கை நிம்மதியாக நதியின் ஓடம் போல போய்க்கொண்டு இருக்கும்.

திடீர் என்று நீர்வீழ்ச்சி போல..எங்கிருந்தோ வருவாள்..."உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பாள்".கண்டுகொள்ளாமல் இருப்போம். 

"நீ இல்லாமல் உலகமே இல்லை" என்பாள். கொஞ்சம் அசைந்து கொடுப்போம். 

"உன்னை என்னால் மறக்கவே முடியாது" என்பாள். நம்முடன் களித்த சிறு சிறு அனுபவங்களையும் ஆழமாக நினைவூட்டுவாள். நமது அடித்தளம் தகர்ந்து விடும். அவள் பேசுவது எல்லாம் உண்மையாகவே தோன்றும். 

நீங்க இப்படி தான் பேசுவீர்கள்.. நம்பி வந்தால் காதல் பட இறுதிக்காட்சி மாதிரி ங்ங்கே ங்ங்கே னு பைத்தியம் மாதிரி திரிய விட்டுவிடுவீர்கள் என்று சொல்வோம். அதற்கும் பதில் சொல்வாள்..."எல்லாப் பொண்ணுங்களையும் அப்படி நினைக்காதே" என்று.பிற்காலத்தில் அவளும் அந்த பட்டியலில் முதலிடத்தில் தான் இருப்பாள் என்பது நடக்கவே நடக்காது என நாம் நம்பும் வகையில்.

"..இல்லை..நம் காதல் நிறைவேற சாத்தியம் புலப்படவில்லை;பிரிந்து விடலாம்" என்போம்.."உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்கையில் கல்லும் கரைந்து போகும்.. நாம் எம்மாத்திரம்?

ஒரு அழகான முழு நிலவில்..அவளுக்கு பித்தம் தெளியும். நமக்கு சூனியம் பிடிக்கும். அவள் தெளிவு பெறுவாள்..நாம் கலங்கிய நிலையில். 

குழந்தை குட்டியோடு முக நூலிலும் கட்செவியிலும் அவள் உலா வரும்போது..உலகம் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் உன் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். 

காதல் செய்ய தைரியம் மட்டும் இருந்தால் போதும். ஆனால் அதில் வெற்றி பெற உன்னையும் அவளையும் சுற்றியுள்ளவர்களை சட்டை செய்யாத ஒரு தன்னலக்காரனாகவும்,எடுத்த முடிவில் முரட்டுப் பிடிவாதம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; அங்ஙனமே அவளும்.

இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் உனக்கு வராது என்றால், இந்த கசப்பான அனுபவங்கள் வேண்டாம் என்று நினைத்தால்..தயவு செய்து காதல் செய்யாதே...



வெள்ளி, 17 மார்ச், 2017

ஐஸ்வர்யா தனுஷின் நாராச நடனம்




எழுதுங்கள் 
என் கல்லறையில்-அவள்
இரக்கம் இல்லாதவள் என்று !!!

இப்படிக்கு

பரதம்






படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் மேடையில் உள்ளனர் மற்றும் பலர் நடனமாடுகின்றனர்

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

தீமை தீமையை வெல்லும்



திரைப்படம் வந்த போது மேடை நாடகம் அழிந்தது; அது அறிவியல் வளர்ச்சி என்றீர்கள். மிச்ச சொச்சம் இருந்த பாவைக் கூத்து, பொம்மலாட்டம், கிராமியக்கலைகளின் குரல்வளையை நெறித்தீர்கள் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி.

மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி..உங்களுக்கு வந்தால் இரத்தமா?
#serial killers

ஞாயிறு, 24 மே, 2015

புறம்போக்காய் போன பொதுவுடைமை

தோழர் பாலு மகேந்திரா, கௌதமன், புகழேந்தி தங்கராஜ், மணிவண்ணன்  என திரையுலகில் தமிழ் இன உரிமை பற்றி சிந்திக்கும் இயக்குனர்களில் தோழர் ஜனநாதனும் ஒருவர்.

இந்தியத்தை வருடிக் கொடுப்பது போல சில இடங்களில் சென்சாரை சாந்தப்படுத்தி, செங்கொடியையும் ஈகையை போற்றியும், பேரறிவாளனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் எதிர்த்தும், தமிழ் மொழி,வர்க்க விடுதலைப் பற்றியும் மிகத் தைரியமாக, தந்திரமாக காட்சிகள் அமைத்துள்ளார். 

விடுதலைப் புலிகள், நக்சலைட்களின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைத்து உள்ளார். பாராட்டுக்கள். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளி விடுதலைப் போராளி, தூக்கு போடும் தொழிலாளி, இந்தியத்திற்கு கங்காணி வேலை செய்யும் காவல் அதிகாரி, தற்கொலை குண்டுதாரியான குயிலி என ஒரு புது கதைக்களம்;கதையோடு ஒன்றிய காட்சி தள அமைப்புகள் ...இது உண்மையில் ஒரு வெற்றிப்படம்.

பேராண்மையில் கத்திரியால் காயப்பட்ட இயக்குனர் பின்வாங்காமல் திரும்பவும் கத்தியை தீட்டி உள்ளார் புத்தி சாதுரியத்தோடு. 

இன விடுதலையை ஆதரிக்காது வர்க்க விடுதலையை பெற முடியாது, உலகத் தொழிலார்கள் ஒன்று கூடுவதற்குப் பதில் உலக முதலாளிகள் ஒன்று கூடி உலகை ஒரு குப்பைத் தொட்டியாக ஆக்கி உள்ளனர் என்று பரவலாக தமிழ் தேசியம், இன விடுதலை,வர்க்க விடுதலை பற்றி பேசி உள்ளார்-அதே சமயம் பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல்.

இன உணர்வை பேச பல இயக்குனர்கள் போராடி இந்திய தரக் கட்டுப்பாட்டை மீறி திரைக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டுள்ள நிலையில் ஜனநாதனின் சாணக்கியத்தனம் பாராட்டுக்குரியது.

ஆரியா வேடத்தில் அஜீத் நடித்திருந்தால் இது மிகப்பெரிய ஒரு மக்கள் படமாக வசூலில் சாதனைப் படைத்திருக்கும்.

கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் திரை அரங்கு சென்று கண்டு ஜனநாதன் போன்ற இயக்குனர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இன உணர்வு;இன விடுதலை நோக்கி தமிழ் தேசியம் நகரட்டும்!!!!

வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாகப்பட்டிணம் தேவி திரை அரங்கும்- பகல் கொள்ளையும்

சில்லரையிலேயே குறியாக இருக்கும் திரை உலகில் தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தமிழராச்சே,அவர் இயக்கம் படத்தை திருட்டுத் தனமாக பார்க்கக் கூடாது,திரையில் பார்ப்பது தான் அவருக்கு வெகுமானம் என அமீரின் ஆதிபகவன் பார்க்கலாம் என நாகப்பட்டிணத்தில் உள்ள தேவி திரை அரங்கு சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அரங்கு என போட்டு குளிரூட்டியும் போட மாட்டார்கள்;அங்கொன்றும் இங்கொன்றுமாக மின் விசிறி மட்டும் சில நேரம் ஓடும்;இருக்கைகுள் மூட்டை பூச்சி கடிக்கும்.பஞ்சு குதறப்பட்டு இருக்கை பல்லை காமிக்கும்;ஒலி அமைப்பு சுத்தமாக சரி இருக்காது. வீட்டிற்கு  வந்து யுட்டூயுபில் வந்து பார்த்தால் தான்,ஓ இது தான் வசனமா என விளங்கும்.  அப்படி ஒரு அரங்கு.  

ரூ.30க்கு சீட்டு அச்சடித்து ரூ.100 என்றார். வார இறுதி என்றால் கூட பரவாயில்லை. வார நாளில் இப்படி ஒரு கொள்ளையா என சரி போகலாம் என நினைத்தேன். வாகன பாதுகாப்பு (PARKING) எனக் கூறி ஒரு சீட்டை நீட்டி ரூ.10 அபகரிக்கமுயன்றார்.(அதில் ரூ.3 என அச்சிடப் பட்டு இருந்தது) 

நாகப்பட்டிணம் போன்ற மூன்றாந்தர ஊரிலேயே இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே,சென்னை,திருச்சி,கோவையில் இவர்கள் கோவணத்தை கூட உருவி விட்டு தான் உள்ளேயே அனுமதிப்பார்கள் போல. 

ஒரு படம் எடுத்து வெளியிட எவ்வளவு கடினம்,எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நாங்கள் உணராமல் இல்லை.திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்கும் திரையுலக கனவான்களே...முதலில் இது போன்ற கொள்ளையர்களை தடுத்து நிறுத்துங்கள். கூட்டம் தானாக திரை அரங்கு வரும். 

(NAGAPATTINAM,DEVI THEATRE The worst theatr in Nagapattinam is Devi theatre, Avoid Thevi theatre,AMEER ADHIBAGAVAN)

சனி, 26 நவம்பர், 2011

"பாலை" சொல்லும் நீதி-"பாலை"-திரை விமர்சனம்

தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல;
கற்கவேண்டிய பாடம்!!!



செம்மை வெளியீட்டின் முதல் வெளியீடு செம்மையாக உள்ளது,பாராட்டுக்கள் இளம் இயக்குனர் தோழர் ம.செந்தமிலனுக்கு (த.தே.பொ.கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் புதல்வன் இவர்)

"இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்" உள்ள கதை எனக் கூறப்பட்டாலும்,படத்தை பார்க்கும் போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் முல்லைத்தீவில் நடந்த கதை போலவே உள்ளது. ஒரே வித்தியாசம்,உண்மைக் கதையில்,ஈழத்தில் வந்தேறிகளிடம் நாம் பின்னடைவு பெற்றோம்.

ஒரு போரில் வெல்ல வீரம் மட்டும் போதாது; சூதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குனர். அது தெரியாத வேள்ளேந்தியாய் இருந்தததால் தான் நாம் முள்ளி வாய்க்காளில் பராரியாய் நிற்கின்றோம் இன்னும்.

தூங்கும் முயல் தன் காலடி ஓசை கேட்டு தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்ல அடியெடுத்து வைக்கும் தமிழினம் எதிரி இடத்தில் வல்லினமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் படம்.

காஞ்சிவரத்தில் நடித்த ஷம்மு இதில் கதாநாயகி. ஆனால் கதையின் நாயகன் படத்தின் களம். தத்ரூபமான கள கலை அமைப்பு,ஒளிப்பதிவு நம்மை பழங்காலத்திற்கே இட்டுச் செல்வது உண்மை. 
பாடல்கள் மூன்றும் அருமை. 

பின்னணி இசையும்,படத்தொகுப்பும் சொதப்பல். பின்னணி இசை குறைபாட்டால், உணர்வுகளை கலைஞர்களின் முகம்,வசனங்களை கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது. படத்தொகுப்பு பலகீனத்தால் என்ன நடக்கிறது என்பதை சில இடங்களில் சிரமப் பட்டு புரிந்து கொள்ள நேரிடுகிறது. யார் ஆயல்குடி,யார் முல்லைக்குடி என்பதை பகுத்து அறிய சில இடங்களில்,சண்டைக் காட்சிகளில் முடியாமல் போய்விடுகிறது.

"இங்கு போர் சிங்கத்துக்கும்  புலிக்கும் .சிங்கம் வந்தேறி கூட்டம்.கூட்டமாக தாக்கும்,பசி பொறுக்காது.புலிகள் பதுங்கி தாக்கும்; தனித்து தாக்கும்,பசி பொறுக்கும்" "...தலைவர் எங்கே எங்கேன்னு என்னை தேடாதே,எதிரி எங்கேனு அவனை தேடு.இதெல்லாம் செஞ்சா நீ புலி"என்கிற வசனங்கள் நம்ம மெய் சிலிர்க்க வைக்கிறது.
..

"போர் எதற்கு?
எதிரியை தாக்க..
இல்லை..வீழ்த்த! -நல்ல நறுக்குத் தெறித்த வசனங்கள்.

இந்திய இறையாண்மையும்,சிங்கள இனவெறியும் நம் இனத்தை அளிக்க உறுதி பூண்டுள்ள இந்த நேரத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது.

"பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’”- இயக்குனர் செம்மல் பாலு மகேந்திரா

இது போன்ற படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.அப்போது தான் தமிழ் கலாச்சாரமும்,நம் இனமும் மொழியும் பாதுக்காக்கப்படும்.இது போன்ற படைப்புகள் நமது நாகரீகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செ(சொ)ல்லும் முயற்சிகள்!!!





(paalai film review,trailer,songs paalai songs,palai songs பாலை பாடல் பாலை பாடல்கள் விமர்சனம்)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

நேரலை தொலைக்காட்சி


Sathiyam Television












Online TV







SUN NEWS
updated
SUN TV IST
SUN TV US
PUTHIYA THALAIMURAI
media Player
ISAI ARUVI
KTV
SIRIPPOLI
TAMIL ONE TV
VASANTH TV
KALAIGNAR TV
THENDRAL TV
STAR VIJAY 
POLIMER TV
DD PODHIGAI
RAJ TV
RAJ MUSIC
JAYA MAX
VASANTHAM TV
IMAYAM TV
TAMILLAN TV
CHANNEL UFX
kalaignar seithigal
mozilla firefox , google chromr browser
Raj digital Plus
ISAI ARUVI
MEGA TV
MEGA MUSIC
MEGA 24 MOVIES
Captain Tv
Raj Music
Dan Tamil Oli TV
SATHIYAM TV
TAMIL MOVIES
CHITIRAM TV
ANGEL TV
Jaya Max
ZEE TAMIL
WIN TV
SS MUSIC
MOON TV
KALAIGNAR SEITHIGAL
MINNAL TV CINEMA
MINNAL CLASSIC
MINNAL HITS HD
MINNAL TV KIDS
MINNAL TV MOVIES
MINNAL TV MUSIC
MINNAL VANNATHIRAI
MINNAL VELLITHIRAI
RAJ NEWS 24 7
Media Player
SANKARA TV
Jaya Plus 
Requires media player


(Watch live TV channels Watch wintv tamil live,watch Sathyiyam television சத்தியம் டிவி,சத்யம் டிவி வின் டிவி தமிழன் தொலைக்காட்சி,அனைத்து தொலைக்காட்சி அலைவரிசையும் ஆன்லைன் இல் பார்க்க Indian television channel watch online தொலைக்காட்சி ஆன்லைன் நேரலை)