சனி, 26 நவம்பர், 2011

"பாலை" சொல்லும் நீதி-"பாலை"-திரை விமர்சனம்

தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல;
கற்கவேண்டிய பாடம்!!!



செம்மை வெளியீட்டின் முதல் வெளியீடு செம்மையாக உள்ளது,பாராட்டுக்கள் இளம் இயக்குனர் தோழர் ம.செந்தமிலனுக்கு (த.தே.பொ.கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் புதல்வன் இவர்)

"இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்" உள்ள கதை எனக் கூறப்பட்டாலும்,படத்தை பார்க்கும் போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் முல்லைத்தீவில் நடந்த கதை போலவே உள்ளது. ஒரே வித்தியாசம்,உண்மைக் கதையில்,ஈழத்தில் வந்தேறிகளிடம் நாம் பின்னடைவு பெற்றோம்.

ஒரு போரில் வெல்ல வீரம் மட்டும் போதாது; சூதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் இயக்குனர். அது தெரியாத வேள்ளேந்தியாய் இருந்தததால் தான் நாம் முள்ளி வாய்க்காளில் பராரியாய் நிற்கின்றோம் இன்னும்.

தூங்கும் முயல் தன் காலடி ஓசை கேட்டு தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்ல அடியெடுத்து வைக்கும் தமிழினம் எதிரி இடத்தில் வல்லினமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் படம்.

காஞ்சிவரத்தில் நடித்த ஷம்மு இதில் கதாநாயகி. ஆனால் கதையின் நாயகன் படத்தின் களம். தத்ரூபமான கள கலை அமைப்பு,ஒளிப்பதிவு நம்மை பழங்காலத்திற்கே இட்டுச் செல்வது உண்மை. 
பாடல்கள் மூன்றும் அருமை. 

பின்னணி இசையும்,படத்தொகுப்பும் சொதப்பல். பின்னணி இசை குறைபாட்டால், உணர்வுகளை கலைஞர்களின் முகம்,வசனங்களை கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது. படத்தொகுப்பு பலகீனத்தால் என்ன நடக்கிறது என்பதை சில இடங்களில் சிரமப் பட்டு புரிந்து கொள்ள நேரிடுகிறது. யார் ஆயல்குடி,யார் முல்லைக்குடி என்பதை பகுத்து அறிய சில இடங்களில்,சண்டைக் காட்சிகளில் முடியாமல் போய்விடுகிறது.

"இங்கு போர் சிங்கத்துக்கும்  புலிக்கும் .சிங்கம் வந்தேறி கூட்டம்.கூட்டமாக தாக்கும்,பசி பொறுக்காது.புலிகள் பதுங்கி தாக்கும்; தனித்து தாக்கும்,பசி பொறுக்கும்" "...தலைவர் எங்கே எங்கேன்னு என்னை தேடாதே,எதிரி எங்கேனு அவனை தேடு.இதெல்லாம் செஞ்சா நீ புலி"என்கிற வசனங்கள் நம்ம மெய் சிலிர்க்க வைக்கிறது.
..

"போர் எதற்கு?
எதிரியை தாக்க..
இல்லை..வீழ்த்த! -நல்ல நறுக்குத் தெறித்த வசனங்கள்.

இந்திய இறையாண்மையும்,சிங்கள இனவெறியும் நம் இனத்தை அளிக்க உறுதி பூண்டுள்ள இந்த நேரத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது.

"பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’”- இயக்குனர் செம்மல் பாலு மகேந்திரா

இது போன்ற படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.அப்போது தான் தமிழ் கலாச்சாரமும்,நம் இனமும் மொழியும் பாதுக்காக்கப்படும்.இது போன்ற படைப்புகள் நமது நாகரீகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செ(சொ)ல்லும் முயற்சிகள்!!!





(paalai film review,trailer,songs paalai songs,palai songs பாலை பாடல் பாலை பாடல்கள் விமர்சனம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக