Sunday, January 21, 2018

திமுக+பாஜக=ஆண்டாள்

அரியாசனம் துறந்த இராமனை வைத்து அறியாசனங்களுக்கிடையே பகை மூட்டி அரியணை ஏறிய பாஜக, தமிழர்களால் நோட்டோவால் அவமானப்படுத்தப்பட்டு  இனி தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது என்கிற சூழ்நிலையில் அதே சூத்திரத்தை பயன்படுத்தி தமிழர்களுக்குள்ளே பிளவு உண்டாக்கி உள்ளே நுழைய எத்தனிக்கும் முயற்சி தான் இந்த ஆண்டாள் பிரச்சனை.

இது ஏதோ திராவிட ஆரியப் போர் என நினைத்தால் நீயும் நானும் முட்டாள். இது இந்த இருவரின் கூட்டு சதி முயற்சியே. திருக்குறளை முன்னிறுத்தி இதே வைரமுத்துவை வைத்து தருண் விஜய் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் அவர்கள் திட்டம் சுக்குநூறாகிப் போனது தமிழர் பாதியில் விழித்துக் கொண்டதால்; மதச் சண்டைக்கும் இந்த தமிழர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே தான் இறுதி அஸ்திரத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் தமிழக அரசியல் பிதாமகர். கட்டுமரத்தை வைத்து கரையை உடைக்கும் முயற்சி. 

வைரமுத்துவிற்கு வக்காலத்து என்கிற மாய மானை வைத்து சீதை என்கிற தமிழ்நாட்டு சிம்மாசனத்தை அபகரிக்க அற்ப பதர்கள் நம் உணர்சிகளை வைத்து விளையாடும் ஆடு புலி ஆட்டம். இதில் நாம் தமிழர்கள் விழித்துக் கொண்டு ஒற்றுமை காத்திட வேண்டும். 

சகாராவில் கூட தாமரை மலரலாம்; ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டில் முடியாது.
Blogger Tricks

Saturday, January 20, 2018

உரை ஓவியம்: மீன் தொட்டி

ஒவ்வொரு இல்லத்திலும்
ஒரு
சிறிய சிறைக் கூடம்

Sunday, November 19, 2017

வணிகர் சங்கப் பேரவையின் கவனத்திற்கு...

உணவகங்களில் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டதா என்பதை நாளை முதல் பார"தீய" சனதாக் கட்சித் தொண்டர்கள் ஆய்வு செய்வார்கள்- தமிழிசை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? அவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? எரிவாயு உருளை மானியம் வரவில்லை என்பதற்காக நான் விநியோகம் செய்யும் கடைக்குள் சென்று ஆய்வு செய்யலாமா? நான் கொடுத்த மனு என்ன நிலையில் உள்ளது என்று மா.ஆ.தலைவர் அலுவலகத்திற்குள் சென்று சோதனை போடலாமா?

திருட்டு பட குறுந்தகடு உள்ளதா என்று விசால் ரெட்டி கோவை நகர கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்ததை கண்டிக்காது பாராது விட்டதன் தொடர்ச்சியே இந்த அத்துமீறல் அறிவிப்பு.

வணிகர் சங்க தலைவர்களே..உடனே முடிவெடுங்கள்.உங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யுங்கள்...

--இறுதியாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..பிரியாணி அண்டா பத்திரம்

Sunday, November 5, 2017

டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம்


டிஜிட்டல் இந்தியாவில் எல்லாவற்றையும் நீங்கள் இணையத்தில் பெறலாம் என்று சொல்கிறார்கள் அல்லவா? சரி என்று இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க https://tnedistrict.tn.gov.in/eda/services.xhtml இந்த இணையத்தை சுட்டினேன். எனக்கு கிடைத்த விடையை நீங்களே பாருங்கள்..இது தான் டிஜிட்டல் இந்தியாவின், அரசின் லட்சணம்.

சரி..அந்த இணைப்பு தான் வேலை செய்யவில்லை..வேறு ஏதும் இணையதளம் உள்ளதா என்று பார்த்தேன்...

கீழ்க்கண்ட இணையதளம் கிட்டியது

http://www.escholarship.tn.gov.in/இதைச் சுட்டினால் சேமிப்பகமே இல்லையாம்.
நல்லா இருக்குடா உங்க இந்தியா...