1976-2025
இறைவா,,, உனக்கு இரக்கம் என்பதும் இல்லையா?மனசாட்சி என்பது மரத்து விட்டதா? ஊரை ஏய்த்து பிழைப்பவன், அவனுடைய வாரிசுகள், மலையை வெட்டுபவன், மக்களுக்கு சாராயத்தை ஊட்டி சந்ததியை வளர்ப்பவன், தாய் மொழியாம் தமிழுக்கு எதிராக இந்தியை திணிப்பவன், அன்னைத் தமிழில் அர்ச்சனை என்று சொல்லி கூடமுழுக்கில் முற்றிலும் தமிழை புறக்கணித்து வடமொழியை தினிப்பவன், அதை திணிப்பவர்களை ஆதரிப்பவன், கோடி கோடியாக கொள்ளையடிப்பவர்கள், அப்பாவி மக்களை சுரண்டி பிழைப்பவர்கள், மதத்தின் பெயரால் கலவரம் செய்பவர்கள், வளங்களை திருடுபவன், ஆற்று மணலை திருடுபவன், கல்வி கொள்ளை அடிப்பவன், சாதிய படுகொலை செய்பவர்கள், அதற்கு துணையாக நிற்பவர்கள், பக்கத்து மாநிலத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள், பக்கத்து மாநிலத்தின் வளங்களை சுரண்டுபவர்கள், அவர்களுடைய வாரிசுகள் என எல்லோரும் சுகமாக இருக்கின்ற பொழுது தொடர்ந்து தமிழுக்காக போராடுபவர்களையும். தமிழனாக தன்னை உணர்பவர்களை, இந்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற ஆசை கொண்டுள்ளவர்களையும் உன்னிடம் அழைத்துக் கொள்கின்றாயே. இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது இறைவன் இருக்கின்றானா என்கின்ற கோபம் வருகிறது
மனோஜ்.. உனது ஆன்மா சாந்தி அடையட்டும் இயக்குனர் இமயம் அதை தாங்குவதற்குரிய வலிமையை பெறட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக