Tuesday, January 17, 2017

நான் தமிழன் #wewantjallikattu

நான் இந்தியன் தமிழன்

1.வந்தின இங்க எங்களோட அமர்ந்து போராடு. இங்க வந்து பேட்டி கொடுத்துட்டு புகைப்படம் எடுத்துக்கிட்டு போக இங்க வராதே....நீ எவ்வளவு பெரிய டேஸ் ஆ இருந்தாலும்

2.ஜல்லிகட்டை நேரலையில் பார்க்காமல் போக மாட்டோம்

3.நீ அவசரம் சட்டம் கொண்டு வா..இல்ல..எவன் காலிலோ விழு..நாங்க வாடிவாசலில் மாட்டை பார்க்கணும். சபாஷ் தோழா..தெளிவான புரிதல்களோடு எங்கள் காளைகள்...

ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்த்து ஒரு வழக்கு போட்டால் அந்தப்பட வெளியீட்டிற்குள் அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பை வழங்கும் ஒரு நீதிமன்றம் மக்கள் சம்பந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சினை என்றால் காலம் தாழ்த்துவது ஏன்?
இது போன்ற புகைப்படங்களை, கருப்புக் கொடியை உங்கள் கட்செவி மற்றும் முகநூல் முகப்புப் படமாக அமைத்து ஏகாதிபத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்போம்...உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு நாடு தன் மக்களின்  கலாச்சார உரிமைகளை பறித்து, மொழியை அழித்து சொந்த நாட்டில் அகதியாக்கி உள்ளது என்பதை உலகிற்கு பறைசாற்றுவோம்


புரட்சி வெல்லட்டும்!!!

#wedojallikattu
#alanganallur
#TamilsBoycottGovtOfIndiaSaturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு- பீட்டாவின் குற்றச்சாட்டுக்கு என் பதிலடி


பீட்டா:


காளையை வாலை பிடித்து முறுக்குகிறார்கள்...மிளகாய் பொடியை தூவுகிறார்கள்..சாராயம் ஊட்டுகிறார்கள்


தமிழன்:மிளகாய் பொடி தூவினதுக்கு ஆதாரம் இருக்கா? சாராயம் ஊத்திக் கொடுத்த மாட்டுக்கு கோமியம் சோதனை எங்கே?

தண்ணீர் வண்டி, மண் சரக்குந்து மோதி மணிக்கு ஒரு விபத்து நடக்கிறது. அதற்காக அந்த வாகனங்களையே தடை செய்கிறாயா? ஓட்டினவனை உள்ளே வைப்பாய்..சட்டைபைக்கு வரவேண்டியது வந்தால் வெளியே விட்டுவிடுவாய்.  அது போல அப்படி நடந்து கொண்டவனை எதிர் காலங்களில் காளை அடக்க அனுமதிக்காதே. அது தானே உங்கள் சட்டப்படி சரி 
விஷால்ரெட்டி: மாடு மிரண்டு ஓடுகிறது. அதை பிடிப்பது வீரமா? சிங்கத்திடம் வீரத்தை காட்டு 

தமிழன்: குளத்தில் இருக்கும் மீனை ஒரு குண்டு சட்டிக்குள்ள அலங்காரத்திற்கு வைத்து கொடுமை செய்கிறீர்களே..அது தாண்டா தவறு.
காட்டில் சுதந்திரமாக திரியும் பறவைகளை இறக்கையை வெட்டி கூண்டுக்குள் வைத்து கொடுமை செய்கிறீர்களே..அது தாண்டா பாவம்...மாட்டை ஓட்டி விடுவதும் துள்ளி விளையாட விடுவதும் குற்றம் இல்லைடா என் வென்று...

சிங்கம் தனித்து வாழும் காட்டு விலங்கு. மனிதனை அண்டிப்பிழைக்கும் விலங்கு ஆடு, மாடு, கோழி. அந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள். வெளிநாட்டில் ஓரினச் சேர்க்கை கூட தவறு இல்லை. அதை நீ செய்வாயா? இல்லை உன் தங்கைக்கு ஒரு பெண்ணை மணமுடித்து தருவாயா...அது தான் சமீபத்திய கலாசாரம் என்று..?


புலியை முறத்தால் விரட்டியவள் தான் என் மூதாட்டி. சிங்கத்தை அடக்குவது பெரிய காரியம் இல்லை. காட்டில் வாழும் யானையை கேரளா, கர்நாடகாவில் அதிகமாக காலில் சங்கிலியால் கட்டி வைத்து கொடுமை செய்கிறார்களே..அதை தடுத்து நிறுத்துடா..நீ உண்மையில் விலங்குகள் மீது அக்கறை உள்ளவன் நீ என்றால்...

ஏறு தழுவும்போது மாடு முட்டி இறந்தவர்களை கேள்விபட்டு இருப்பாய்..ஆனால்..வதைபட்டு மாடு இறந்தது என்பதை கேள்வியாவது பட்டிருக்கியா?

உலக திரைக்காவியங்களைப் பார்..எவ்வளவு உன்னதமான படைப்புகளை தருகிறார்கள் என்று..
-இவன் மணம் முடிக்க மூன்று பெண்களை காதல் செய்து அதில் எவள் சிறப்பு..எதில், சிறப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பானாம்...இப்படி பெண்களை இழிவு செய்யும் கேவலமான கதைகளில் நடித்துவிட்டு..உலக வரலாற்றை எடுத்துக்காட்டுகிறான் புறம்போக்கு...

எதையாச்சும் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டு..நான் அப்படி பேசவே இல்லை என்று பின்வாங்குவது...நீதி மன்றத்தில் காலில் விழுந்து கதறுவது..தறுதலை..நடிப்பை உங்க அப்பத்தா ஊரில் மட்டும் காட்டு...இனிய தமிழ்ப் புத்தாண்டு & தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!


Sunday, January 1, 2017

இந்தியாவின் வறுமையை மோடி ஒழித்தது எப்படி?

நிருபர்: என்னது..மோடி இந்தியாவை வறுமை இல்லைத நாடா மாற்றி விட்டாரா?எப்படி.?

பக்தாள்: நாங்க தான் ஒரு நாளைக்கு  ரூ.35க்கு  மேல சம்பாதிச்சா பணக்காரங்கனு அறிவித்துவிட்டோமே