வியாழன், 30 மார்ச், 2017

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எனும் பேச்சுக்கே இடம் இல்லை-மக்கள் உறுதி


நாகை நகர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து #ஹைட்ரோகார்பன் க்கு எதிரான எந்த போராட்டமும் நடைபெறாமல் முறியடிக்கும் வகையில் செயல்படும் காவல் துறையின் கட்டுபாட்டை மீறி, நாகை மாவட்ட இளைய தலைமுறைகள் குழு இன்று கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பங்குடி மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது. ஊர் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்; 

காவிரி உரிமையை பறிக்கும் நடுவண் அரசையும்,அதை தட்டிக் கேட்காத மாநில அரசின் மெத்தனப் போக்கும், நம் வாழ்வாதாரத்தை காக்கவும்,அடுத்த தலைமுறைகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் போராட்டம் ஒன்றே தீர்வு என்பதை விளக்கும் வகையிலும் நமது கலந்துரையாடல் அமைந்தது. 

இந்த திட்டத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம்?



(கீழ்வேளூர் அருகில் கடம்பங்குடியில் உள்ள ONGC-யின் TVR-18 Point உபயோகத்தில் உள்ளது. ஒரு செயல்பாட்டில் உள்ள நிலமுனையில்  எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கதவுகள் பூட்டப்படாமல் கேட்பாரின்றி கிடக்கிறது. அதை யார் வேண்டுமானாலும் இயக்கவோ தவறாக உபயோக்கிவோ முடியும் வகையில் உள்ளது. இதையே சரியாக பாதுகாப்பான முறையில் செயல்படுத்த முடியாத நிறுவனங்கள் வரவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது. 

அந்த ஊர்மக்கள் எப்படி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ஒரு சாட்சி...ஓர் ஏக்கர் நிலம் இரண்டு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.2500 க்கு குத்தகை எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை மட்டும் அல்ல..அது வேறு எந்த முகமூடி போட்டு வந்தாலும் வேரடி மண்ணோடு தகர்ப்போம் என்ற உறுதிமொழியோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது 

 #SaveMotherCauvery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக