மென்மையாகத் தானே
இருக்கிறேன்
எனை ஏன்
தவிர்க்கிறாய் என்றது
முள்ளில் ரோஜா
பிரிவைச்சொல்லி கோபமூட்டிய கதிரவன்
நெருப்பை கக்கும் வானமகள்
எள்ளி நகையாடுவான் நிலவவன்
கைகொட்டி சிரிக்கும் விண்மீன் தாரகைகள்
நித்தம் நடக்கும் மேல்வீட்டு நாடகம்
தலையிட நேரமில்லை
அவசரகதியில் அடுக்கக மாந்தர்கள்
தலைவனை நினைத்து
விடிய.. விடிய...
தலையணையோடு
உரையாடினேன்..
ஒட்டுக்கேட்ட போர்வைக்குள்
ஒளிந்து கொண்டது நாணம்...
கோணல் மாணலாய்..
உதிர்ந்த மல்லிகைக்கும்
தொற்றியது
பசலை!