ஞாயிறு, 17 மார்ச், 2013

ஒரு கடிதம் எழுதினேன்-அம்னீசியா நோயாளி கருணாவின் கண்ணீர் கடிதம்

நான்காம் தலைமுறையில் நடமாட இயலாமல் இருக்கின்ற போதும் உயிர் துறக்கும் போதும் மக்களுக்காக அரியணையில் இருந்து சேவை செய்து கொண்டே இறக்கவேண்டும்;தான் மட்டும் அல்ல தனது எள்ளுப் பேரர்கள் வரை இதையே கடைபிடிக்க வேண்டும் என்று கடமை,கண்ணியம் தவறாத,தணியாத ஆர்வம் கொண்ட ஒரே தமிழீன தலைவர் நேற்று தான் அம்னீசியா வியாதியில் இருந்து விடுபட்டார். உடனே அவர் கண்ணில் பட்டது தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலை தான். அதை பார்த்து அவர் வடித்த கண்ணீரில் கோபாலபுரத்தில் ஆழிப்பேரலை புகுந்ததோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு உவர்நீர் சூழ்ந்தது. ஐயகோ என நடுநிசியில் அலறியதை கேட்டு சென்னை மக்கள் தூக்கம் கலைந்து துக்கத்தில் ஆழ்ந்தனர்.

என்ன செய்வதென்று அறியாத தலைவர் எடுத்தார் எழுதுகோல். இந்தியாவில் பிரதம மந்திரி யார் என சோனியாவிடம் கேட்டு உடனே கடிதம் எழுதத் தொடங்கினார். "இலங்கையில் தமிழர்கள் போரில் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக அறிய நேர்ந்தேன். இதனை உடனே ராஜபக்சேவிற்கு கடிதம் எழுதி தடுத்து நிறுத்த வழி உள்ளதா என ஆலோசித்து தங்களால் இயன்றதை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்வதாகவும் தவறினால் தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவும் தயங்கமாட்டேன் என்பதை தங்களது மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் " கடிதம் எழுதினார். இந்த கடிதம் 2014ற்குள் தில்லியை போய்ச் சேரும் என நம்பப்படுகிறது. - இவ்வாறு திராவிடக் கட்சியின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் குஷ்பு நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக