சனி, 25 டிசம்பர், 2010

அலை பேசியில் தமிழ் எழுத்துருக்களை படிக்க...

தமிழ் இணைய  தளங்களை உங்கள் அலை பேசியில் வாசிக்க முடியவில்லையா?
தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டமாக தெரிகின்றதா?
How to enbale Tamil Fonts in Mobile? How to read Tamil Websites in Cellphone?

உங்களது அலைபேசி  NOKIA,SAMSUNG,SONY ERICSSON,HTC,MOTOROLA அல்லது KARBONN,G FIVE,LAVA என எதுவாகவும் இருக்கலாம்..அதன் இயக்கு தளம் (OPERATING SYSTEM), Android, Symbion O S,Windows Mobile,Linux என எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது :-

  1.  உங்கள் அலைபேசியில்  Opera Mini ஐ நிறுவவும் (உங்கள் அலைபேசியில் m.opera.com OR www.opera.com/mobile/) சென்று உங்களுக்கு தேவையான ஒபேராவை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பின்பு தள முகவரியில் (Address bar) about:config என தட்டச்சு செய்யவும் 
  3. கீழே வாருங்கள். Use bitmap fonts for complex scripts என்று இருக்கும். அதை Yes என்று மாற்றவும். அதை Save செய்யவும்
உலாவியை  மறுதுவக்கம் (Restart) செய்யவும். இப்பொழுது தமிழ் தளங்களை நம் செம்மொழியிலேயே வாசிக்கலாம்.தமிழ் தளம் மட்டும் அல்லாது மற்ற  அனைத்து மொழி தளங்களும் அதன் அதன் எழுத்துருவிலேயே இருக்கும்.
________________________________________________________________________

mozilla Firefoxஉம் அலைபேசிக்கான உலாவியை வெளியிட்டுள்ளது. இது Maemo & Android மென்பொருளை பயன்படுத்தும் Nokia N900,HTC,Motorola &Samsungகிற்கு ஏற்ற உலாவியாகும். 
how to read tamil websites in cellphone/mobile easiest way to enable tamil fonts in mobile

1 கருத்துகள்:

  1. நன்றி மது அனைத்துமே நன்றாக உள்ளது.சில பதிவிறக்கமும் செய்துகொண்டேன் நன்றி...ராசு

    பதிலளிநீக்கு