புலியை கூண்டுக்குள் அடைத்து
புறமுதுகு காட்டும் உன் வீரத்திற்கு பெயர்
ராஜதந்திரமா?
நாட்டில் நரிகளின் ராஜாங்கமோ?
யாருக்கு ஏவல் செய்ய,
யாரை குளிரூட்ட
தணலை தீ மூட்டுகிறாய்?
மீனவனை கொன்று
மூவர்ணக் கொடியால் கோவணம் கட்டி
அனுப்புகிறான்..அது குற்றமல்ல..
சிங்கள மாணவனை கொல்வேன் என்று சொன்னது
கொலைக்குற்றமா
உனது வாக்கு புத்தகத்தில்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக