இப்ப தான் எங்க ஊரு திரை அரங்கத்திலே படம் பார்த்துவிட்டு வீட்டுகுள்ள நுழைகின்றேன்.. மு.மேத்தாவிடம் மயிலிறகு வாங்கி இளையராஜாவின் எண்ண ஓவியத்தை நம் உதடுகளில் யேசுதாஸ் தீட்டிய.."ஒன்னுக்கொன்னு தான் துணையிருக்கு உலகத்திலே.." பாடலை முனுமுனுத்துக்கொண்டே... அய்யா முத்துலிங்கம் கூட ஒரு பாடல் எழுதி இருக்காரு..
இதே படத்தை சன் குழுமமோ, க்லோவ்டு
நைன் ஓ வெளியிட்டு இருந்தார்கள் என்றால் நான் திருட்டு VCD ல தான் பார்த்து இருப்பேன்.ஆனால் இது அங்காடி தெரு "ஐங்கரன்' தயாரிப்பு. அதனால தான் அரங்கத்துக்கு போனேன் அரங்கத்தில என்னையும் சேர்த்து மொத்தம் 8 பேர்(பால்கனியில இன்னும் கொஞ்சம் பேரு இருந்துருப்பாங்கன்னு நினைக்கின்றேன்).
2 குழந்தைங்க தங்களோட தாயை தேடி போறாங்க. ஒரு குழந்தை தன் தாயை கண்டுபிச்சு கல்லால அடிக்க போகுது..இன்னொரு குழந்தை தன் தாய்க்கு முதல் முத்தம் குடுக்க போகுது.
திரைல மனிதர்கள் கூட்டம் கூட்டமா இல்லை...ஆனால் மனித உணர்வு படம் முழுவதும்... "போடா மென்டலு.." அப்டின்னு அந்த பொடியன் சொல்றப்ப அவனை அடிக்க முடியாம,உண்மைய சொல்ல முடியாம..அந்த பெரிய குழந்தை கதறி அழும்போது...நம் விழியோரத்தில் ஈரம்...
படத்துல பெரிய செலவு ஒன்றும் இல்லை,,இளையராஜாவை தவிர...
முன்னாடி தண்ணீர் குடுவையையும் பின்னால புத்தக மூட்டையையும் நெஞ்சுல தாயோட ஏக்கத்தை முகத்துல சுமந்துகிட்டு "அந்த மாமா காசை திருப்பிகுடுதுட்டாங்க", "அந்த தாத்தா வந்ததும் அம்மாவை பாக்க போலாமா மாமா" என ...அந்த சிறுவன் அஸ்வத்,அவனது குரல்...மனசுல நிக்குது...
நாமும் அவர்களோட பயணிக்கின்ற நினைவுகளோடு..'ஒன்னுக்கொன்னு தான் துணை இருக்குது உலகத்திலே...அன்பு ஒன்னு தான் அனாதையா''னு பாடிகிட்டே அவர்களை மாதிரி நானும் தியேட்டரை விட்டு அனாதையா வெளியே வந்தேன்...
FILM REVIEW - NANDALALA
நாமும் அவர்களோட பயணிக்கின்ற நினைவுகளோடு..'ஒன்னுக்கொன்னு தான் துணை இருக்குது உலகத்திலே...அன்பு ஒன்னு தான் அனாதையா''னு பாடிகிட்டே அவர்களை மாதிரி நானும் தியேட்டரை விட்டு அனாதையா வெளியே வந்தேன்...
FILM REVIEW - NANDALALA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக