இந்தியன் ஆயில் கார்பரேசன்
2010 அரையாண்டு லாபம் ரூ.5293 கோடி. (கடந்த வருட அரையாண்டு ரூ.166 கோடி இழப்பு)
CONTRIBUTION TO EXCHEQUER
IOC makes enormous contribution to the Exchequer in the form of duties and taxes. During the year, Rs.57,680 crore was paid to the Exchequer as against Rs.57,529 crore in the previous year. Out of this, Rs.26,541 crore was made to the Central Exchequer and Rs.31,139 crore to the States Exchequer.
(Rs. in Crore) | ||
2009-10 | 2008-09 | |
Turnover (inclusive of Excise duty) | 2,59,360 | 2,71,412 |
Profit Before Tax | 15,049 | 3,649 |
Profit for the Group (after tax) | 10,713 | 2,599 |
State-owned oil producer ONGC on Friday reported a 71% jump in net profit for the last quarter of 2009-10 that ended in March 31, 2010, to Rs 3,776 crore, mainly on account of higher crude oil price.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
2010 அரையாண்டு லாபம் ரூ.2380 கோடி. (கடந்த வருடம் ரூ.39 கோடி)
கச்சா எண்ணெய் விலை (per barrel) | (per litre) | ||
ஜூலை 2008 | இன்று (Dec-2010) | ஜூலை 2008 | இன்று (Dec-2010) |
$147 | $ 82 | ரூ.55 | ரூ.59.92 |
உலக நாடுகளில் பெட்ரோல் விலை:(in Rs.)
மலேசியா 20.99
CRUDE OIL PRICE 5YEAR CHART |
பாகிஸ்தான் 31.43
கனடா 39.03
ஜனநாயக இந்தியாவில் ரூ.60/-
கச்சா எண்ணெய் விலை இறக்கம்..எண்ணெய் விற்பனை குழுமங்கள் லாபம் பன்மடங்கு உயர்வு... அவர்கள் தொழிலார்கள் மாத ஊதியம் 50000 முதல் பல லட்சங்களில்... அன்றாட பொருள்கள்,காய்கறி விலை விண்ணை முட்டும் அளவு...பணவீக்கம் உயர்வு..
இப்படி அனைத்தும் பாதகமாக இருக்க இப்பொழுது இந்த விலை உயர்வுக்கு அவசியம் எனன? மக்களின் கவனத்தை பல்லாயிரம் கோடி ஊழலில் இருந்து திசை திருப்பவா?
சர்வாதிகார தோரணையுடன் திடீர் என்று 6% உயர்வு.2010 இல் மட்டும் மொத்தமாக ரூ.12/-விலை ஏற்றி உள்ளார்கள். இதை தட்டி கேட்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் மட்டுமே வீதியில் இறங்கி போராட்டம் செய்கிறார்கள்.நாம் தமிழர் இயக்கம் குரல் கொடுக்கின்றது. முன்பெல்லாம் மூன்று ருபாய் ஏற்றுவார்கள்..மக்களின் எதிர்ப்புக்கு குரல் கொடுப்பது போல் ஐம்பது பைசா குறைப்பார்கள். ஆனால் இப்பொழுது அது போன்று பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.இது எனன மக்களாட்சியா? மக்களை சுரண்டும் ஆட்சியா?
OIL MARKETING COMPANIES-IOC,BPCL,HPCL என அனைத்தும் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளது கடந்த அரையாண்டில். ஆனால் எண்ணெய் குழுமங்கள் இன்னும் நட்டத்தில் இயங்குகின்றன என்று முரளி தியோரா மட்டும் அதே பழைய பல்லவியை திரும்ப திரும்ப பாடுகிறார். அப்படி என்றால் இந்த குழுமங்களின் தணிக்கை செய்யப்பட்ட இருப்பு நிலை குறிப்பு(BALANCE SHEET) பொய்யா? இல்லை,இவர் "சத்யம்" ராமலிங்கம் ராஜுவின் தணிக்கை அதிகாரிகளை வைத்து தணிக்கை செய்து அறிக்கை விடுகிறாரா?
கச்சா எண்ணெய் விலை $147 இருந்த போது இங்கு பெட்ரோல் விலை ரூ.55. இப்பொழுது $88 க்கு குறைந்த பொழுதும் இவர்கள் பெட்ரோல் விலைகளை குறைக்காமல் ரூ.60 க்கு ஏற்றி உள்ளார்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருள்கள் எல்லாம் ஆகாயத்தில் பறந்து கொண்டு உள்ளது. அத்தியாவசிய பொருள்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை (COMMODITY DERIVATIVE) தடை செய்யுங்கள் என்று பொதுவுடமை கட்சிகள் வலியுறுத்துகின்ற போதும் இவர்கள் சிலரின் கொள்ளை லாபத்துக்காக அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்து தங்கள் புதிய பொருளாதார (மக்கள் விரோத,முதலாளித்துவ) கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கிறார்கள்."சிறப்பு பொருளாதார மண்டலம்" (SEZ) அமைக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதார விளை நிலங்களை அபகரித்து அந்நிய நிறுவனக்களுக்கு தாரை வார்கிறார்கள். இங்கு அமையும் குழுமங்களுக்கு 10 வருடங்களுக்கு வரிச் சலுகை வேறு. என்ன நடக்கிறது இந்தியாவில்? என்று எங்கள் துயர் தீரும்? இவர்கள் தான் இப்படி என்று மாற்று கட்சிக்கு வாக்கு அளித்தால் அவர்கள்,அவர்கள் பாணியில் கொள்ளை அடிப்பதும், தங்களுக்கு தெரிந்த ஒரே மொழி இந்தியை, அவர்களுக்கு ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது என்பதற்காக மற்றவர்களின் மீது திணிப்பதும் அதற்கு கோடி கோடியாக செலவழிப்பதும் என்று ஆட்சி செய்கிறார்கள்...
மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தால் அது அடிமை படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் தொல்லை..மக்களுக்கும் நல்லது இல்லை. என்று புரிந்து கொள்வார்கள் நம்மை ஆள்பவர்கள்?
எரிமலை
(PETROL PRICE HIKE IN 2010 Rs.11.86-Seeman)(PETROL PRICE INCREASED 2010-A REVIEW)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக