ஞாயிறு, 7 நவம்பர், 2010

இப்படிக்கு...முள்ளிவாய்க்கால் தமிழச்சி




இப்படிக்கு...முள்ளிவாய்க்கால் தமிழச்சி

சோலையில் ஆடித் திரிய வேண்டிய
என் மூத்த மகள்..
மாஞ்சோலை பள்ளிச் சாலையில்
பதுங்கு குழியில் பாடமானாள்!!!
பசியால் அழுத என் பாலகனின்
அழுகுரல் நின்றது,
பாவிகளின் குண்டுச் சத்தத்தில்...
முல்லைக்கு தேர் கொடுத்த என் வம்சம்
இன்று முள்ளி வாய்க்காலில்...
நம்பி வந்தவனுக்கு அடைக்கலம்
கொடுத்தே பழகினோம்-பின்னாளில்
முதுகில் குத்தும் கருங்காலிகளை
அடியாளம் காணாது..
வாடிய பயிரை கண்டு வாடிய
என் அன்னை தமிழகம்..
இததாலிய தாய் கொடுத்த
நாற்காலிக்குள்  அடக்கம் ஆனது..
உயிர்களை கொல்ல அஞ்சி
வார்கோளை கைகளில் பிடித்துச் சென்ற
புத்த பிட்சுகளின் கால்கள் -இன்று எங்கள் மண்டை ஓடுகளைக் கொண்டு
கால்பந்து ஆடுகின்றன..
உரக்கச் சொல்...அற்பனே..உண்மையை..
மெய்யாய் நீ எங்கள் மாவீரர்களை
அழித்துவிட்டிருந்தால் எதற்கு
உன் நெஞ்சில் அச்சம் இன்னும்?

நாம் தமிழர் கட்சிக்கு நிதி உதவுங்கள்
ஈழ மக்களுக்கு உதவ நாம் ஒவ்வொருவரும் விழைகின்றோம்.ஆனால் எப்படி உதவுவது?வீட்டிற்குள் இருந்து கொண்டே உங்கள் கணினி மூலம் 'நாம் தமிழர் கட்சி'க்கு நன்கொடை அளிக்கலாமே. நம் உள்ளக் கிடக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள்.


DONATE GENEROUSLY THROUGH YOUR INTERNET ACCOUNT BY NEFT MODE

For further details plz click this link....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக