அது ஒரு வசந்த காலம்
கரையும் காகங்களுடன் வாயாடிக் கொண்டு...
மறைந்திருந்து குரல் கொடுக்கும்
குயிலுடன் கண்ணாமூச்சி ஆடி....
சிட்டுக்குருவியின் நெல்மணியாய்...
மண்ணை முத்தமிட பனித்துளிக்கு
விடுதலை அளித்து..
தனிமையின் ரசிகனாய் உலாவி..
ஓடித் திரிந்த என்னை...
கரம் பிடித்து தத்தி தத்தி தவழ வைத்து
என் அலைபேசியின் ஒலியாய்
மடி கணினியின் திரையாய்
இறையின் கருவாய்..
என மாயையை உருவாக்கி....
அவள் பிரிந்து செல்லும் வரை...
அது ஒரு வசந்த காலம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக