செவ்வாய், 16 நவம்பர், 2010

NEFT & RTGS- என்ன வேறுபாடு?



NEFT & RTGS CHARGES

NEFT (in Rs.)


RTGS (in Rs.)

UPTO 1 LAKH
6
1LAKH TO LESS THAN 2LAKH
NOT PERMITTED
ABOVE 1LAKH TO 2 LAKH
17
2 LAKH TO 5 LAKH
28
ABOVE 2 LAKH  
28
ABOVE 5 LAKH
55

NEFT என்றால் National Electronic Fund Transfer அப்புறம்..
RTGS என்றால் Real Time...அய்யய்யே..இஸ்கூல் பசங்க மாதிரி இதெல்லாம் எதுக்கு?விஷயத்துக்கு வாப்பான்னு சொல்றது காதுல விழுகுது...

இப்ப உங்க கணக்கு இந்தியன் வங்கியில இருக்கு.என் கணக்கு கரூர் வைஷ்யா வங்கியில இருக்கு. நீங்க எனக்கு பணம் அனுப்பனும்னு விருப்ப படுறீங்க (ஒரு பேச்சுக்குதான்) இங்க தாங்க NEFT & RTGS பயன்படுது.


இப்ப நீங்க ரூ.2 லட்சம் இல்ல அதுக்கும் குறைவா அனுப்பனும்னு விருப்ப படுறீங்க (அய்யே..அல்பம்). இப்ப நீங்க NEFT ல அனுப்பியாகனும். இதுக்கு கட்டணம் ரூ1 லட்சம் வரைக்கும் வெறும் ரூ.6 தான்.1-2 லட்சம்கு ரூ.17.

நீங்க அனுப்புற பணம் எனக்கு அன்னைக்கே வந்தால் ஆச்சர்யம். பெரும்பாலும் அடுத்த நாள் தான் என் கணக்குக்கு வரும். இதுக்கு உங்களுக்கு என்னோட
1.வங்கி கணக்கு எண்
2. கணக்கு வகை(அதாவது சேமிப்பு கணக்கா,நடப்பு கணக்கா,கடன் கணக்கா என்பது உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்)
3.IFSCODE [ஒவ்வொரு வங்கி கிளைக்கும் ஒரு CODE நம்ம ரிசேர்வ் வங்கி குடுத்து இருக்காங்க. இப்ப KVB வங்கிக்கு KVBL என ஆரம்பிக்கும்.இது மொத்தம் 11 எழுத்துரு கொண்டு இருக்கும்)


இந்த மூன்றும் முக்கியமா தெரிஞ்சு இருக்கணும். இப்ப நீங்க அனுப்புன பணம் என் கணக்குல எப்ப வரவு வச்சாங்கன்னு உங்க அலைபேசி அல்லது மின்னஞ்சலுக்கு செய்தி வந்துடும்.


அதே நீங்க ரூ.2 லட்சத்துக்கு மேல எனக்கு குடுக்கணும்னு ஆசை படுறீங்க(அய்யா..தர்ம பிரபு.. ) இப்ப RTGS ல அனுப்பனும்.இது அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள்ள என் கணக்குக்கு வந்துடும்.

(கட்டணம் Rs. 2-5 laksh- Rs.28
ரூ.5 லட்சத்துக்கு மேல ரூ.55.)


(குறிப்பு - இது எல்லாம் உங்களுக்கும் எனக்கும் கணக்கு இந்தியாகுள்ள இருந்தால் தான் இந்த பண பரிவர்த்தனம் எல்லாம்..நீங்க குடுக்குற பணத்தை வச்சு நான் நாளைக்கே வெளிநாடு போயிட்டேன்னு வச்சுக்குங்க. அப்பொழுது இந்த NEFT,RTGS இதெல்லாம் உதவாது. கவலை படாதீங்க.. அதுக்கு SWIFT இருக்கு. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்ப RTGS ல பணம் அனுப்புங்க..)

வரட்டா ..

(NEFT AND RTGS CHARGES CHART-APPLICABLE TO ALL BANKS IN INDIA)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக