காலி இலக்கிய விழா | |||||
இலங்கையின் காலி நகரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு புத்தக பிரியர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். ஆனால், அந்த விழாவை புறக்கணிப்பதாக அங்கு வந்திருந்த தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்க்கணிப்பதாக அறிவித்துள்ளார். பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான ரிப்போர்ட்டர் சான் பிரண்டையர்ஸ் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையின் செய்தியாளர்கள் அமைப்பு ஒன்று ஆகியன வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தாமுன் ஹல்கட் கவனத்தில் எடுத்திருக்கிறார். இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து சில பிரபல எழுத்தாளர்களும் இந்த அழைப்பை விடுத்திருந்தனர். விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள். இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர். இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார். வேறு இரண்டு முக்கிய எழுத்தாளர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஆனால், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள் South African novelist and playwright Damon Galgut,winner of the Commonwealth Writers' Prize in 2003, on Thursday withdrew from a literary festival at Galle in Sri Lanka to support a boycott call from two rights groups Paris-based Reporters Without Borders (RSF) and Journalists for Democracy in Sri Lanka last week which requested foreign writers to boycott the Galle Festival, which opened on Wednesday. They accuse Sri Lanka's government of stifling freedom of speech and the right to dissent. எங்கோ உள்ள தாமுன் ஹல்கட்டுக்கு இருக்கின்ற மனித நேய உணர்வு, பணத்திற்கும் பிரபல்யத்திற்கும் அலையும் இந்திய பிரஜையான தீபிகா ஷெட்டி போன்றவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது.. |
வெள்ளி, 28 ஜனவரி, 2011
இலங்கை இலக்கிய விழா-புறக்கணித்தார் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட்
லேபிள்கள்:
தமிழர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக