வியாழன், 27 ஜனவரி, 2011

சீமானுக்கு கவியரசி தாமரையின் ஆதங்க மடல்-தமிழனுக்காக போராடுபவன் திராவிடக் கட்சிகளுக்கு கால்பந்து ஆகலாமா?

கடந்த ஆண்டு இன அழிப்பு போரின்போது பொதுவுடைமைக் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்காக வீதிக்கு வந்து குரல் கொடுத்தனர். தமிழர்களுக்கு ஒரு புதிய விடிவு பிறக்கும் என்று நினைத்தோம்.தேசிய கட்சியானதால் அவர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை. முரசு கொட்டி விஸ்வரூபம் எடுத்தார் 'விருத்தகிரி' விஜயகாந்த். ஆகா..தமிழனை காக்க தலைவன் வந்துவிட்டான் என்று கொடி பிடித்தேன். இலங்கை தமிழர்களுக்காக நீர்த்து போன பேரணியை தவிர வேறு ஒன்றும் புதிதாக செய்யாமல் குடும்ப அரசியலில் மூழ்கி, கையா,இலையா என கணக்கு போட ஆரம்பித்து விட்டார். சரி..திருமாவளவன் எதையாவது சாதிப்பார் என்று இருந்தோம்..இன அழிப்புக்கு வித்திட்ட காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுகவை ஆதரித்து நம் நம்பிக்கையில் மண் அள்ளி போட்டார்; போர் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது,திருச்சி மாநாட்டில் சூனியக்காரி சோனியாவுடன் பகிர்ந்து கொண்ட மேடையில் அடக்கி வாசித்து கூட்டணி தர்மத்தை நிலை நாட்டினார். பின்பு பாட்டாளி மக்கள் கட்சி,புதிய தமிழகம் என அனைத்திடமும் வரிசையாக ஏமாந்து நின்றபொழுது விடிவெள்ளியாய் முளைத்தது 'நாம் தமிழர்' எழுச்சி உணர்வு. ஆனால் அதிமுகவிற்கு ஆதரவு என்ற போது நீர்த்து போய்விடுமோ இந்த உணர்வு என மனம் சஞ்சலப் படும்பொழுது,நமது மன உணர்வுகளுக்கு சகோதரி 'கவிதாயினி' தாமரை சொல் வடிவம் தந்தது போல் இருந்தது அவர் அண்ணனுக்கு எழுதிய இந்த மடல்..இது வரை ஸ்வரங்களுக்கு வரி வடிவம் தந்த கவியரசி இப்பொழுது நாம் தமிழர் மனங்களுக்கு சொல் வடிவம் தந்துள்ளார் என்றே தோன்றுகிறது..











30 சனவரி 2011 அன்று நாகப்பட்டினத்தில்  நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தேன். அண்ணன் சீமான் உரையை கேட்ட பிறகு எனக்கு இருந்த அச்ச உணர்வு முழுவதும் நீங்கி விட்டது.அதனால் இந்த இடுகையை நீக்கி விட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக