சனி, 1 ஜனவரி, 2011

திருமலைராயன் பட்டிணம் பாலம் சேதம்-நாகை-காரைக்கால் தொடர்பு துண்டிப்பு

நாகப்பட்டினம்-சென்னை முக்கிய சாலையில் உள்ள,1890 இல் கட்டப்பட்ட T.R.பட்டிணம் பாலம் நேற்று  (31.12.2010) இரவு உடைந்தது. இதனால் நாகை-காரைக்கால் தொடர்பு துண்டிப்பு.

சுனாமியின் பொழுது உடைந்த காரைக்கால் அரசலாறு பாலத்தை 6 ஆண்டுகளாக சவ்வு போல இழுத்து சென்ற மாதம் தான் நடுவண் உள் துறை மந்திரி திறந்து வைத்தார். அதற்கு முன்பே அதன் அருகில் இன்னொரு பாலம் கட்டி இருந்தார்கள்.இது இரண்டாவது பாலம் ஆகும்.இதை கட்டிய இந்த வெண்ணைகள், முன்கூட்டியே சேதாரம் அடைந்த T.R.பட்டிணம் பாலத்திற்கு தொலை நோக்கு பார்வையில் மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது உள்ள அரசாங்கம் பிரச்சனைகள் உண்டான பிறகு கூட கவனிப்பது இல்லை.

இந்த வழியில் Marg துறைமுகம், ONGC,CPCL இவைகளால் கனரக வாகன போக்குவரத்து அதிகம் ஆகிவிட்டது.இது போதாது என்று விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க மண் ஏற்றி செல்லும் சரக்குந்துகள் வேறு..பழைய பாலமாயிற்றே என்ற பொது நல அக்கறை இல்லாத PRN,திருமுருகன்,மூகாம்பிகை (காரைக்கால்-மன்னார்குடி) போன்ற பேருந்துகள் குறைந்த பட்சம் 45-60 கி.மீ. வேகத்தில் தான் பாலத்தை கடப்பார்கள். நேற்று காலையிலேயே பாலத்தின் மத்தியில்  பெரிய குழி உருவாகி இருந்தது. அப்பொழுதே கவனித்து இருந்திருந்தால் சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இதனால் இரு & நான்கு சக்கர வாகனங்கள் படுதார் கொல்லை,பனங்காட்டூர் வழியாக காரைக்காலுக்கு 15 கி.மீ.சுற்றி செல்லும் அவலம்.நாகூர் வெட்டாறு பாலம் 2001 இல் உடைந்தது.பிறகு காரைக்கால் பாலம் 2004 இல் உடைந்தது. இப்பொழுது T.R.பட்டிணம் திருமலையன் ஆற்று பாலம். எப்பொழுது தான் இந்த அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட கற்றுக்கொள்வார்களோ?

1 கருத்துகள்: