மக்கள் விரோத காங்கிரசின் வேரறுப்போம் - 2011 தேர்தல் களத்தில்....
பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.54 விலை ஏற்றம். காரணம் கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டதாம். கடந்த மாதம் 14 ஆம் தேதி தான் ரூ.3 விலை ஏற்றினார்கள். அந்த விலை ஏற்றத்தை ஜீரணிப்பதற்குள் அடுத்து ஒரு 4% விலை அதிகரிப்பு.
கச்சா எண்ணெய் ஏறியதோ 10.44% தான். ஆனால் பெட்ரோல் விலை மட்டும் 18.04% ஏற்றம். முன்பெல்லாம் 50 பைசா ஏற்றுவது என்றால் பயந்து பயந்து ஏற்றுவார்கள். ஆனால் இப்பொழுது ரூ.3,5 என சற்றும் இரக்கமே இல்லாமல் விலை ஏற்றி ஏழைகளை சுரண்டி அம்பானிகளுக்கு சொத்து சேர்க்கிறார்கள். காரணம், அப்பொழுது பொதுவுடைமை தோழர்கள் கரம் ஓங்கி இருந்தது.இப்பொழுது,முதலாளித்துவம் அரியணையில் உள்ளது,மக்களை சுரண்டுபவன் சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறான்.
கச்சா எண்ணெய் விலை 10.44% உயர்ந்ததற்கு கவலை படுகிறார்களே...இங்கு வெங்காயம்,தக்காளி என அனைத்தும் 200%,300% உயர்ந்து எட்டாக்கனி ஆகி உள்ளதே. இதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள்? அதை பற்றி இவர்களுக்கு எனன அக்கறை? மக்கள் எக்கேடு கேட்டால் எனன? இவர்களை யார் கேட்க முடியும் என்ற இறுமாப்பு.
உணவு பொருள் பணவீக்கம் 16.91%மொத்த விலை பணவீக்கம் 8.4%. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல பெட்ரோல் விலை உயர்வு.இவர்கள் பொருளாதார கொள்கையை என்னவென்று பாராட்டுவது?பெட்ரோல் விலை 4.4% உயர்வு. ஆனால் பொருட்கள் விலை 40 முதல் 50% ஏற்றுவார்கள். கை கட்டி வேடிக்கை பார்க்கும் கையாலாகாத காங்கிரசு அரசும், அண்டிப் பிழைக்கும் தோழமைக் கட்சிகளும். பதுக்கல்காரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கோடி கோடியாய் லாபம் சம்பாதித்து கொடுக்கும் முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய ஏன் இவர்களுக்கு இன்னும் தயக்கம்? காரணம்-இவர்களும் அதில் ஒரு அங்கம். வாக்கு போட்ட மக்களுக்காக அதை தடை செய்வதா? எந்த காலத்தில் இருகின்றீர்கள் இன்னமும்..மக்களாம்..மக்கள் நலனாம்..!!!
சென்ற மாதம் வரை தி.மு.க.வை மட்டுமே குதறி எடுத்த அ.தி.மு.க.,காங்கிரசுடன் கூட்டணி என்பது இயலாத ஒன்று என்று ஆனதும்,இப்பொழுது காங்கிரசையும் வறுத்து எடுக்கிறது. இவர்களுக்கு மக்கள் நலன் எல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை...கட்ட கடைசி பட்சம்.
பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2.54 விலை ஏற்றம். காரணம் கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டதாம். கடந்த மாதம் 14 ஆம் தேதி தான் ரூ.3 விலை ஏற்றினார்கள். அந்த விலை ஏற்றத்தை ஜீரணிப்பதற்குள் அடுத்து ஒரு 4% விலை அதிகரிப்பு.
Nov-2010 | Jan-2011 | |
83 | ||
Petrol (in Rs) | 52.91 | 62.46 |
யாரவது ஒரு திருடனை தேர்ந்தெடுத்து தான் ஆக வேண்டும்..ஏனென்றால் இது மக்களாட்சி..நமது தலைஎழுத்து..
தோழர்களே..இவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்பிக்க வேண்டிய தருணம் இது..நம் வீடு தேடி வரப்போகும் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை புறமுதுகிட்டு புலியை கண்ட சொறிநாய்கள் போல ஓட வைக்க வேண்டிய தருணம். மறந்தும் இவர்களுக்கு வாக்கு அளித்து விடாதீர்கள்..பீகாரிகளுக்கு தமிழர்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய களம் இது..
சற்றும் மனசாட்சி இல்லாமல் கோடி கோடியாய் கொள்ளை அடித்ததோடு அல்லாது, வாக்கு பிச்சை இட்ட நம்மையே, நமது வயிற்றில் அடித்து பிச்சைகாரர்களாக்கும் இவர்கள் தலைவிதியை நாம் நிர்ணயிப்போம் என சூளுரைப்போம் இந்த புத்தாண்டில்....
இது வரை அடித்தும்,பொருள்களை நாசம் செய்தும் வந்த சிங்கள நாய்கள்,அப்பாவி பாண்டியனின் உயிர் குடிக்கும் அளவிற்கு துணிந்து விட்டார்கள். ஜூலை 2010 இல் வெள்ளப்பள்ளம் செல்வராஜை கொன்றார்கள். இதற்கு தமிழகத்தின் எதிர்ப்பு சட்டசபையில் நிவாரண அறிவிப்பு.(யாருக்கு வேண்டும் இந்த பிச்சை காசு? இழந்த உயிரை இவர்களால் மீட்டு தர முடியுமா? இன்னும் இழக்க போகும் உயிரை இவர்களால் காப்பாற்ற தான் இயலுமா? 2008 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி உயிர் பலி வாங்கிய அரக்கனுக்கு இந்தியா அரசின் எதிர்ப்பு- "NOTHING"-வெளியுறவு அமைச்சர் ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை..செய்தி தொடர்பாளர் எவரோ ஒருவர்,மிகவும் பவ்வியமாக,இலங்கை அரசுக்கு பயந்து தனது கவலையை மட்டும் தெரிவித்து உள்ளார்.
இவர்களுக்கு நாம் கற்பிக்க போகும் பாடம்,வரலாற்றின் பொன்னேடுகளில் பொரிக்கவேண்டிய பாடமாக அமைய வேண்டும்.
- காங்கிரசும்,அதன் கூட்டணியும் போட்டி இட்ட அனைத்து இடத்திலும் தனது வைப்பு தொகையை இழக்க வேண்டும்;
- குட்ட குட்ட குனிபவன் தமிழன் என்ற இழிச்சொல் நீங்க வேண்டும்;
- பொதுவுடைமை கரங்கள் ஓங்க வேண்டும்;
- தமிழனை சீண்டினால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை என்றென்றும் உணரும் வகையில் இருக்க வேண்டும்!!!
நம்மால் முடியும்.நம்மிடம் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்கு,இலவசம் என்ற பெயரில்,திருப்பதி உண்டியலில் காணிக்கை இடுவது போல நமக்கே தருவார்கள். ஏமாந்தவன்,நினைவு திறன் அற்றவன் என்ற அவச் சொல் நீங்க ஓங்கி குத்துவோம்-மக்கள் விரோதிகள் மண்ணை கவ்வும் வகையில் - !!!!
மேலும் படிக்க:
- இன வெறியை தூண்டி விட்டு பெண்டு பிள்ளைகளை இரக்கமற்று பதுங்குகுழிகளில் சமாதியாக்கியவர்களுக்கு துணை நின்ற,வெள்ளை கொடி ஏந்திசரணடைய வந்த வீரர்களை கைகளை பின்னால் கட்டி தங்கள் பேடைத் தனத்தைகாட்டிய இன அழிப்பு செய்த மஹிந்தாவிற்கு துணை நின்ற சோனியா, SM கிருஷ்ணா, சிதம்பரம், EVKS இளங்கோவன் என மாபாவிகள் சார்ந்த,
- 3000 பேர்களை கொன்று,இதுவரை 25000 பேர்களுக்கு மேலாக உயிரிள்ளககாரணமான போபால் விஷ வாயு கசிவிற்கு காரணமான வில்லியம்அண்டேர்சனை பத்திரமாக தப்புவிக்க உதவிய,
- கார்கில் போரில் உயிரிழந்த குடும்பங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வீடுகளில் கூட ஊழல் செய்த களவாணி காங்கிரசு அரசை,
- ரூ.1760000000000 உலக மகா ஊழல் செய்தவனை தலித் என்ற போர்வையை மூடி திசை திருப்ப முயன்ற நயவஞ்சகர்களை,
- கட்டும் போதே பல உயிர்களை பலி வாங்கிய, காமன்வெல்த் விளையாட்டில் ரூ.4000 கோடி ஊழல் செய்த இந்த காங்கிரசு அரசாங்கத்தை,
- நன்றாக லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார்மயம் ஆக்கும் முதலாளித்துவ காங்கிரசை,
- சீட்டு கட்டுகள் போல வரிசையாக திவால் ஆகும் அமெரிக்க வங்கிகளின் நிலைமையை கண்ணெதிரே கண்டும் காணாதது போல,இந்திய வங்கிகளையும் தனியார்மயம் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கும் முட்டாள் இயக்கம் காங்கிரசை
மேலும் படிக்க:
- காமன்வெல்த் பற்றி தினமணி தலையங்கம்: தேசத் துரோகிகள்
- மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கைக்கு ராமேஸ்வரம் வழியாகமின்சாரம் - CPI-கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வு-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – சீமான் கண்டனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக