உங்கள் எல்லோருக்கும் கடந்த ஜனவரி 28 அன்று பீகாரே நிலைகுலைந்து போகும் அளவிற்கு போராட்டடம் நடந்தது நினைவில் இருக்கலாம்; அதில் பல தொடர்வண்டிகள் எரிக்கப்பட்டன; வண்டிகள் மறிக்கப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரசு, ராச்ற்றிய ஜனதா தள, பொதுவுடைமை கட்சி ஆதரவோடு நடைபெற்றது. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா? தொடர்வண்டி துறை வேலைவாய்ப்பில் கூடுதலாக இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வு அறிமுகம் செய்தது வேலை வாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக கருதி போராட்டத்தில் குதித்தார்கள். அந்த மாநிலமே ஸ்தம்பித்தது.
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்கு படித்த மாணவர்களுக்கு இந்த சர்வாதிகார ஆரியத்துவ ஒன்றிய அரசு அவர்கள் படித்த பாடத்திட்டத்தில் இல்லாததை நீட் என்கிற நுழைவுத் தேர்வு வைத்து தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைப்பார்கள். தங்களுக்கு மருத்துவர் ஆகக் கூடிய தகுதிகள் இருந்தும் முறைகேடான வகையில் தங்கள் கனவை நனவாகாமல் தடுக்கும் சூழ்ச்சிச்சியை தாங்கிக் கொள்ளாமல், எங்கள் தமிழர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வார்களே அன்றி, ஒரு போதும் நீட் மசோதாவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராகவோ, அதை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவோ, துணை போகும் கங்காணி அரசுக்கு எதிராகவோ எங்கள் மிதவாத தமிழர்கள் போராடவே மாட்டார்கள்.
இதை நீங்கள் ஏமாளித் தமிழர்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக