செவ்வாய், 25 மே, 2021

அவசர கதி

பிரிவைச்சொல்லி கோபமூட்டிய கதிரவன்

நெருப்பை கக்கும் வானமகள்

எள்ளி நகையாடுவான் நிலவவன்

கைகொட்டி சிரிக்கும் விண்மீன் தாரகைகள்

நித்தம் நடக்கும் மேல்வீட்டு நாடகம்

தலையிட நேரமில்லை

அவசரகதியில் அடுக்கக மாந்தர்கள் 

வெள்ளி, 21 மே, 2021

பற்றியது பசலை

தலைவனை நினைத்து

விடிய.. விடிய... 

தலையணையோடு 

உரையாடினேன்.. 

ஒட்டுக்கேட்ட போர்வைக்குள்

ஒளிந்து கொண்டது நாணம்...

கோணல் மாணலாய்..

உதிர்ந்த மல்லிகைக்கும்

தொற்றியது  

பசலை!

உன்னோடு பேச

 எழுத்துக்கள் 
எல்லாம் நீயானாய்
இருந்தும் 
வார்த்தை இன்றி தவிக்கின்றேன் 

தமிழன் ஏன் முன்னேறவில்லை? - மு.வ

 மு வரதராசனார் தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு மடல் 

அன்புள்ள எழில்

உன் மடல் கண்டு மகிழ்ந்தேன். கருத்து வேறுபாடுகள் கிடக்கட்டும். நான் எழுதியவற்றில் சிலவற்றை உடன்பட்டிருக்கிறாயே, அதுவும் பெரிது அல்ல. சிலவற்றைப்பற்றி உன் சிந்தனை கிளரப்பெற்றதே, அதுவே யான் விரும்புவது.

தமிழரைப் பற்றி நான் வேண்டுமென்றே குறை சொல்லவில்லை என்பது உனக்குத் தெரியும். தமிழரிடம் எத்தனையோ குணங்கள் உள்ளன. அவற்றை எழுதுவதற்கு இதுவா இடம்? நானும் நீயும் ஒருவர்க்கு ஒருவராகத் தமிழரைப் புகழ்ந்துகொண்டிருப்பது அழகா? தமிழரைப் பற்றிப் பிறர் புகழ வேண்டும். அதைக் கேட்டு மகிழ வேண்டும் என்பதுதான் என் ஆசை.

தமிழர் முன்னேறவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்கிறாய். ஆனால் தமிழர் தாழ்வான நிலையில் உள்ளனர் என்றால் மறுக்கிறாய். இதுதான் வேடிக்கையாக உள்ளது. தாழ்வான நிலை என்றதும், தமிழரிடம் குறை கண்டதாக நீ உணர்கிறாய் அல்லவா? குறை காண்கின்றேன் என்பது உண்மைதான். தயங்காமல் சொல்கிறேன்.

தமிழர் மற்றவர்களால் தாழ்த்தப்பட்டார்கள் என்று நீ கருதுகிறாய். அவ்வாறு பிறர்மேல் பழி போட்டு ஒதுங்குவது மிக எளியது. எனக்கு அவ்வாறு செய்ய மனம் இல்லை. அதனால் பயனும் இல்லை. நம்மிடம் குறை உண்டா இல்லையா என்று ஆராய்ந்தால், நாம் உயர்வதற்கு வழி பிறக்கும்; குறைகளைத் திருத்திக்கொள்வோம், முன்னேறுவோம்.

இப்படிச் சொன்னால் தவறா? எண்ணிப்பார். பிறர் ஏமாற்றினார்கள் என்பதைவிட, பிறர் ஏமாற்றுவதற்கு இடம் கொடுத்தோம், ஏமாந்தோம் என்று சொன்னால் என்ன? பிறர் அடக்கினார்கள் என்பதைவிட, பிறர் அடக்குவதற்கு இடம் கொடுத்தோம் அடங்கினோம் என்று சொன்னால் என்ன? பிறர் தாழ்த்தினார்கள் என்பதைவிட, பிறர் தாழ்த்துவதற்கு இடம் கொடுத்தோம் தாழ்ந்தோம் என்று சொன்னால் என்ன? நன்றாக எண்ணினால், முதலில் சொல்வதைவிட இரண்டாவதாகச் சொல்வதே பெரிய உண்மை என்று தோன்றுகிறது. ஆகவே குறைகளை உணர்வோம்.

குறை சொல்லட்டுமா? திருவள்ளுவர் 'பணிவுடையன் இன்சொல னாதல்' என்ற குறளில் கூறிய இரண்டு அரிய பண்புகளும் ஒவ்வொருவர்க்கும் வேண்டும். சமுதாயமாய்க் கூடி வாழ விரும்புகின்றவர்களுக்கு இவை இரண்டும் கட்ட்டாயம் வேண்டும். எந்தெந்தக் கூட்டம் முன்னேறுகிறதோ அவர்களிடையே ஆராய்ந்து பார். பணிவும் இன்சொல்லும் காணப்படும் குடும்பங்களை ஆராய்ந்து பார். பணிவும் இன்சொல்லும் உடைய குடும்பங்கள் எப்படியாவது முன்னேறுகின்றன. இவை இல்லாத குடும்பங்கள் ஒரு தலைமுறையில் மேல்படி ஏறினாலும் அடுத்த தலைமுறையில் தொப்பென்று விழுகின்றன. தமிழர் பெரும்பாலோர்க்கு இந்த இரண்டு பண்புகளும் இல்லை. ஆட்களைக் குறித்துக் கணக்கிட்டுப் பார். நான் சொல்வது உண்மை எனத் தெரியும்.

ஏன் பணிவுடைமை இல்லை என்றால், "யான் வீரத் தமிழன், மானம் நிறைந்தவன், மானம் கெட்டு உயிர் வாழாதவன், பிறர்க்குப் பணியாதவன்" என்று சிலர் பெருமை பேசிக்கொள்கிறார்கள். தம்குற்றத்தையே குணம் என்று பாராட்டிக்கொண்டு பூரிக்கின்றார்கள். இருளே ஒளி என்று பெயர் பெறுகின்றது!

ஏன் இன்சொல் இல்லை என்றால், "தமிழன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன், உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும் இல்லாதவன், பிறர்க்கு அஞ்சாமல் தன் வெறுப்பைச் சுடச்சுடச் சொல்லும் ஆண்மை உடையவன்" என்று சிலர் பெருமிதம் அடைகிறார்கள். இவர்கள் தன்மையும் அதுதான். திருவள்ளுவர் தலைவலிக்குத் தந்த மருந்தை வயிற்றுவலிக்கு உண்பவர்கள் இவர்கள்.

தமிழரில் உண்மையான மானம் உடையவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மிகச் சிலரே. பெரும்பாலோர் எப்படிப்பட்ட மானத்தைப் போற்றுகிறார்கள், தெரியுமா? தன் மனைவி கற்போடு வாழுமாறு அவளை அடக்கியாள்வதில் வீரமும் மானமும்; ஆனால் தான் கற்போடு வாழுமாறு தன்னைத் தான் காத்துக்கொள்வதில் அவை இல்லை; மனைவி கற்புத் தவறியதாக ஐயுற்றால் அவளை அடிப்பதில் வீரம், கொல்வதில் மானம்; தன்னைவிட வலிமை குறைந்தவரைப் பழிப்பதிலும் பகைப்பதிலும் வீரமும் மானமும்; ஆனால் தம்மவரைப் பழித்துப் பிறர்க்குக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் அவை இல்லை. இவை போன்ற நிலைமை களைப் பெரும்பாலோரிடம் காணலாம்.

தமிழர் மானம் மிகுந்த இனத்தார். மானமே உயிரினும் சிறந்ததெனக் கொண்ட தனிக்கூட்டம் என்று வெளி நாட்டாரிடம் சொன்னால் அவர்கள் வியப்புறுவார்கள்; எள்ளி நகைப்பார்கள். தமிழர் என்றால் கூலிகள், கூலிகள் என்றால் தமிழர்; இதுதானே வெளிநாடுகள் கண்ட காட்சி?

தமிழர் மானம் மிக்கவர் என்று சொன்னால் கன்னட நாட்டார் என்ன கூறுவார்கள்? "பெங்களூரில் எந்த வகையான கூலி வேலையும் செய்து அரை நிர்வாணமாய்த் தெருக்களில் திரியும் அந்தக் கூட்டமா?" என்பார்கள். பம்பாயில் வாழ்வோர் என்ன கூறுவார்கள்? "சாய்க்கடைக் குப்பங்களில் பொத்தல்குடிசைகளில் வாழ்கின்ற அந்தக் கூலிமக்களா? இரவும் பகலும் மூலை முடுக்கெல்லாம் ஓயாமல் பிச்சை கேட்டுத் தொல்லைப்படுத்தும் அந்தக் கூட்டமா? அவர்களா மானத்தில் உயர்ந்தவர்கள்?" என்பார்கள். நினைக்க நெஞ்சம் குமுறுகின்றது. தமிழர் என்றால் பிச்சைக்காரர், பிச்சைக்காரர் என்றால் தமிழர் என்னும் அளவிற்கு அங்கெல்லாம் மானம் இழந்து வாழ்கின்றனர் நம்மவர். நம் மானம் எங்கே? சொந்த நாட்டில் பிறர் வந்து செல்வராய்ச் செழிக்க, பிறர்நாட்டில் நாம் கூலிகளாய்ப் பிச்சைக்காரர்களாய்த் திரிவதா? இதுவா மானம்? சிலர் மேல்பதவிகளில் செல்வாக்காக இருக்கலாம். அதனால் இந்தப் பெரிய மாசு நீங்கிவிடாது. மானம் இருந்தால் ஆங்கிலேயரைப் போல், ஜப்பானியரைப் போல், குஜராத்தியரைப்போல், மற்றவர்களைப் போல் வெளிநாடுகளில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். ஆங்கிலேயரில் எத்தனைப் பேர் இங்கே *ரிக்ஷா இழுக்கின்றார்கள்? ஜப்பானியரில் எத்தனைப் பேர் இங்கே விறகு வெட்டுகிறார்கள்? குஜராத்தியர் வங்காளிகள் முதலியவர்களில் எத்தனைப்பேர் இங்கே பிச்சை எடுக்கின்றார்கள்? தமிழர் எந்த நாட்டிலும் எதையும் செய்கிறார்களே! யார் மானத்தில் சிறந்தவர்கள்?

பிறர் தமிழ்நாட்டுக்கு வருதல் சோற்றுக்கு அல்ல, சுகவாழ்வுக்கு; வேலை செய்து வயிறு வளர்ப்பதற்கு அல்ல, வேண்டுமளவு செல்வம் சேர்ப்பதற்கு. ஆயின், தமிழர் பிற நாட்டுக்குச் செல்கின்றார்கள்; சோறும் வேலையும் தேடிச் செல்கின்றார்கள்; அவற்றையும் பெரும்பாலோர் மானத்தோடு பெற்று வாழ முடியவில்லை. பெங்களூரிலும் பம் பாயிலும் இருந்தபோதெல்லாம் நான் இந்த எண்ணத்தால் ஏங்கித் தலைகுனிந்து வருந்திய நாட்கள் பல. நீயும் அங்கெல்லாம் சென்று பார். "பிச்சை எடுப்பதற்கும் சாய்க் கடைக்குப் பக்கத்தே படுத்து உறங்குவதற்குமாக இந்தத் தமிழர்கூட்டம் தாய்நாட்டை விட்டு இவ்வளவு தொலைவு வரவேண்டுமா? இதைவிட அந்தத் திக்கற்ற தமிழகத்திலேயே இவர்கள் செத்து மடிந்திருக்கலாமே" என்று அப்போது நீயும் என்னைப் போல் எண்ணுவாய். எல்லாம் வயிற்றெரிச்சல்!

மானம் கெட்டு வாழும் இவர்கள் எல்லோரும் தமிழர் தானே? இல்லை என்று கூற முடியுமா? இவர்கள் வேறு, நாம் வேறு என்று பிரித்துத் தப்பித்துக்கொள்வது அறமா? இவர்கள் முட்டாள்கள், மூடர்கள் என்று ஒதுக்கிவிடல் தகுமா? ஜப்பானியரோ ஆங்கிலேயரோ அவ்வாறு தம்மவரை ஒதுக்குவார்களா? இவர்களும் தமிழர், நம்மவர் என்று எண்ணுவதே கடமை. ஏன்? திருவள்ளுவரும் இளங்கோவும் பேசிய தமிழைத்தான் இவர்களும் பேசுகின்றார்கள்! ஆகையால் இந்தக் குறையில் நமக்கும் பங்கு உண்டு.

தமிழ்நாட்டில் காவல் புரியும் தொழிலுக்குக் கூர்க்கரையே பலரும் வைத்திருக்கிறார்கள். பம்பாயில் வாழும் செல்வத் தமிழரும் தங்கள் வீடுகளுக்குக் காவல் புரிய அவர்களையே வைத்துச் சம்பளம் தருகின்றார்கள். தமிழர்கள் பலர் தொழில் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும்போது இப்படி ஏன் பிற நாட்டாரை இங்கு வேலைக்கு வைத்துச் சம்பளம் தரவேண்டும் எனப் பலநாள் நான் எண்ணியது உண்டு. இவ்வளவு பொறுமையாக, இவ்வளவு பணிவோடு தமிழர்கள் இந்த வேலையைச் செய்ய வருவதில்லை என்பதே பிறகு நான் அறிந்த உண்மை. நண்பர் ஒருவர் தம் அனுபவத்தை ஒருநாள் கூறினார். அவர் புதிதாகக் கட்டிடங்கள் எழுந்த ஒருபகுதியில் குடியேறினாராம். அங்கே இரண்டு கூர்க்கர்கள் இரவில் முன்னேரத்தில் தெருவைச் சுற்றிவந்தார்களாம். ஏன் இப்படி ஒருநாளைப் போல் வேலை கெட்டுச் சுற்றுகின்றார்களோ, தெரியவில்லை என்று அவர் முதலில் எண்ணினாராம். ஒரு மாதம் இப்படித் தவறாமல் ஒழுங்காகச் சுற்றிக்கொண்டிருந்த பிறகு அடுத்த மாதம் முதல்தேதிக்குப்பின் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டினார்களாம். அதில் அந்தத் தெருவினர் சிலர் கையெழுத்துப் போட்டு மாதத்திற்கு இவ்வளவு என்று குறித்துப் பணம் கொடுத்திருந்ததைக் கண்டாராம். சிறிது நேரம் தயங்கி எண்ணுவதற்குள் அவர்கள் தாங்கள் மேற்கொண்ட கடமையை விளக்கினார்களாம். கடைசியில் நண்பர் பேசாமல் கையெழுத்து இட்டுப் பணம் கொடுத்து அனுப்பினாராம்.

இவ்வாறு அவர்கள் பணிவுடன் நடந்துகொண்டது அந்த இனத்திற்குப் பெருமை தேடிக் கொடுக்கின்றதே தவிர, இழிவைத் தேடித்தரவில்லை. நம்மவர்கள் இதுபோல் நடந்து வயிறு வளர்க்கவில்லையே, பிச்சை எடுக்கின்றார்களே என்று நினைக்கும்போது, நம்மவர்களின் மானம் அற்ற நிலையைக் குறித்து வருந்தாமலிருக்க முடியவில்லை. பிச்சை எடுக்கவேண்டாம் என்று அடியோடு கடியவில்லை. திக்கற்ற பொருளாதார நிலையில், உயிர்விடுதல், பிச்சை எடுத்தல் இந்த இரண்டிற்குத்தானே உரிமை உள்ளது? ஆனால் தங்களைத் திக்கற்றுத் தவிக்கச் செய்யும் தமிழ்நாட்டில் பிச்சை எடுத்தால் அவ்வளவு கவலை இல்லை. பிறநாட்டில் சென்று பிறரிடத்தில் பிச்சைக்காரத் தமிழர் என்ற பட்டம் பெறவேண்டுமா?

பணிவும் இன்சொல்லும் ஒற்றுமையும் அறியாத கூட்டம் படும் பாடு இது! அதனால்தான் சென்ற வெளிநாடுகளிலும் ஆயிரம் பிணக்குகள், பூசல்கள், கட்சிகள்! பணிவும் இன்சொல்லும் திருவள்ளுவர் சொன்ன அணிகள். இவை பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் இல்லை. தெருக்களில் இல்லை. கழகங்களில் இல்லை. கட்சிகளில் இல்லை! அதனால் சென்ற இடங்களிலும் சேர்ந்து வாழ முடியவில்லை. வாழ்வுக்கு இடையூறான போலிமானம் இருந்தால் என்ன, போனால் என்ன?

ஆங்கிலேயர், ஜப்பானியர், குஜராத்தியர் முதலானோர் பணிவாக ஒழுகுகின்றனர்; இன்சொல் பேசுகின்றனர்; ஒற்றுமையாக வாழ்கின்றனர்; வாழ்வில் உயர்கின்றனர்; மானம் உள்ள இனம் என உலகில் மதிப்புப் பெறுகின்றனர். பணிவால் இன்சொல்லால் ஒற்றுமை, ஒற்றுமையால் இவ்வளவு பயன் பெற்று வாழ்கின்றார்கள் அவர்கள்.

ஏழைகள்மேல் மட்டும் குறை சொல்லி நிற்கவில்லை. செல்வமும் செல்வாக்கும் பெற்று உயர்நிலையில் வாழும் தமிழரிடத்திலும் குறை உள்ளது. அவர்கள் இந்த ஏழை மக்களை நம்மவர் என்று எண்ணாமல் புறக்கணிக்கிறார்கள்; தன்னலத்தோடு அவரவர் வாழ்க்கையை மட்டும் வளம்படுத்திக் கொள்கிறார்கள். தன்னலம் தமிழர்க்கு மிகுதி என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். அதற்கு அவர்களின் வாழ்வே சான்று.

தமிழர் தன்னலம் மிக்கவர் என்று நான் முன்பு குறித்திருந்ததை மறுத்து எழுதியிருந்தாய். தமிழினத்தில் வள்ளல் பலர் வாழ்ந்தனர் என்று எழுதியிருந்தாய். பொதுப்பணிக்குச் செல்வத்தை வாரி வழங்குவோர் இன்னும் பலர் இருப்பதை எழுதியிருந்தாய். இல்லை என நான் மறுக்க வில்லை. ஆனால் ஒன்று கூறுகின்றேன். பழங்காலத்து வள்ளல்களைப் பற்றிச் சிறு குறையும் கூறமாட்டேன்; கூறமுடியாது. அவர்கள் மறுமை நோக்காமல் பிறர் வறுமையே நோக்கி வழங்கிய பெருமக்கள். அத்தகைய உயர்ந்த நோக்கம் உடையவர்கள் இன்று எத்தனைப் பேர்? ஒருவர் இருவர் மூவர் எனக் குறிப்பிடலாம்; அவ்வளவே. பெரும்பாலோர் பொது நலம் கொண்டு தருமம் செய்வதாகக் கூறமுடியாது.

நரகம் புகாமல் தப்பலாம், மறுமை நன்மையாக வாய்க்கும். பணத்தைப் புண்ணியமாக மாற்றி அழியாச் சொத்தாகச் சேர்த்துவைக்கலாம் என்று இவ்வாறு அறவிலை வாணிகம் செய்கின்றவர்களே பலர். பொருளைப் பிறர்க்குச் செலவு செய்யும்போதும் தன்னலம் கொண்டு செய்வதே பலரிடம் காணப்படுகின்றது. ஆகையால் இப்போது ஒத்துக்கொள்வாய் என நம்புகின்றேன்.

பொதுநலம் கொண்டு அறம் செய்வோராக இருந்தால், தமிழ்ச்செல்வர்கள் வெளிநாடுகளில் செல்வம் சேர்த்தபோது, அங்கெல்லாம் மருத்துவ நிலையங்கள் பல கட்டியிருக்கக்கூடாதா? கல்வி நிலையங்கள் பல அமைத்திருக்கக் கூடாதா? அநாதை விடுதிகள் பல ஏற்படுத்தியிருக்கக் கூடாதா? பொது நலம் இருந்திருந்தால், மக்கள்மேல் அன்பு இருந்திருந்தால், அவ்வாறெல்லாம் அறம் புரிந்திருப்பார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் மக்கள்மேல் அன்புகொண்டு சென்ற இடங்களில் எல்லாம் இவ்வாறு பொதுநலம் கருதித் தொண்டு செய்யவில்லையா? அவர்கள் கட்டியவை எத்தனை மருத்துவ நிலையங்கள், எத்தனைப் பள்ளிக்கூடங்கள்!

தமிழரிடையே பல நல்ல பண்புகளும் உண்டு என்பதை மீண்டும் நினைவூட்டிச் செல்கின்றேன். முன்னோர்கள் நெடுங்காலமாக அற நெறியில் வாழ்த்து அளித்த பண்பாடே அதற்குக் காரணம். அதனால்தான் இன்னும் அழியாமல் வாழ்கின்றோம். ஆனால் இந்த நிலை போதுமா?

உன் அன்புள்ள,

வளவன்.

ஆதாரம்:அன்புள்ள எழில்

மூலம்: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0334.html

சனி, 1 மே, 2021

சமதர்மம் போற்றிய பாட்டாளிப் பங்காளன் பாவேந்தர் விழா

சிற்றூரும்வரப்பெடுத்த வயலும்ஆறு
தேக்கியநல் வாய்க்காலும்வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

மறைமலை அடிகளார் தோன்றிய திருநாகை  மண்ணில் தமிழுக்கென்று சங்கங்கள் இருந்தாலும் தொடர்ந்து தமிழை காக்கவும், இனத்திற்கு அரணாக நிற்கும் இயக்கங்கள் ஏதும் செயல்பாட்டில் இல்லை என்கிற நிலையில் அதற்கான முக்கியத்துவம் நிலவும் இந்த காலகட்டத்தில்
 
"மறைமலை தமிழ் மன்றம் "

உதயமாகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சிக்காக  மலேசிய மண்ணில் தமிழ் நெறிக் கழகத்தை தோற்றுவித்து தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும்  தொடர்ந்து செயல்பட்டும் தமிழின் வேர்ச்சொல்லை தேடி அகரமுதலித் திட்டத்தை உருவாக்கியும் வரும் ஐயா முனைவர் இரா.திருமாவளவன் அவர்களை முதல் முதாலாக தொடர்பு கொண்டு தங்கள் உரை நிகழ்த்த முடியுமா என்று எங்கள் ஆவலை தெரிவித்த போது மலர்ச்சியுடன் இசைவு தந்தார். மறைமலை அடிகளாருக்கு முதன்முதலில் மலேசிய மண்ணில் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்து வெகு சிறப்பாக கொண்டாடிய ஐயா அவர்கள் சொற்பொழிவு ஆற்றுவது மிகப் பொருத்தமாக அமைகிறது.

மரபுக் கவிதைகள் இயற்றிய, ஓய்வு பெற்ற பிறகும் தமிழை மூச்சாக சுவாசித்து வாழும் புலவர் சொக்கப்பன் ஐயாவை சொற்பொழிவிற்காக அணுகிய போது அவரின் உடல்நிலைக் காரணமாக இயலாத போது தலைமையாவது ஏற்கவேண்டும் என்கிற வேண்டுகோளை ஏற்று தலைமை உரை ஆற்றுகிறார்கள். பேச்சும் செயலும் ஒன்று என்பதற்கு அறிவழகன், கபிலன், நற்சோனை என்ற அவரின் வாரிசுகளின் பெயர்கள் சாட்சி.

பணிமனை சென்றால் தான் வேலை, அதை விட்டு நீங்கினால் அதை மறந்து விடும் கால கட்டத்தில் தமிழை தன் வாழ்வியல் நெறியாகக் கொண்டு பிறருக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து தன்முனைப்புடன் துடிப்புடன் பாரதிதாசன் கற்பனை செய்த குடும்ப விளக்கின் அழகின் சிரிப்பு முனைவர் ந.புனித லெட்சுமி அவர்கள் இசைவு தந்து இந்த இணையவழி கருத்தரங்கிற்கு தூணாகவும் அமையும் அவர்களை வாழ்த்துகிறோம் 

தமிழுக்கான இலக்கண இலக்கிய வகுப்புகள் நடத்தி, ஊர் அடங்கினாலும் செயல் முடங்காது என தொடர்ந்து இணைய வழியாகவும் 146கக்கும் மேற்பட்ட கருத்தரங்கள் நடத்தி களத்திலும் செயல்பட்டு வரும் புலவர் எண்கண் மணி ஐயா அவர்கள் மிகுந்த ஊக்கம் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் பங்கேற்று உங்கள் பேராதரவினை தந்து தமிழின்பம் பருகி பூட்டிய இரும்புக் கூட்டினை திறந்து சிறுத்தையாக வெளிவருவோம். நன்றி 

மறைமலை தமிழ் மன்றம் 
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் &
புதியதோர் உலகு செய்வோம்

இணைந்து நடத்தும் 🤝🏻

🌷"சித்திரச் சோலையில் சிந்திய வியர்வை முத்து” - பாவேந்தர் 💐

இணையவழி புரட்சித் திருவிழா 🔥

நாள்: தி.ஆ ௨௦௫௨, 
மேழம் ௧௯ 🍁
0️⃣2️⃣➖0️⃣5️⃣➖2️⃣0️⃣2️⃣1️⃣
🔆ஞாயிற்றுக்கிழமை 🦜
தமிழ்நாட்டு நேரம் - மாலை
🕠 5.30 -7.00 

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:🎶 செல்வி. குழலி  காரைக்கால்  

வரவேற்புரை: தமிழ்மது, த.தே.பே🌟

தலைமை : 
புலவர் மு. சொக்கப்பன் அவர்கள் 🌳
தலைமை ஆசிரியர் (ஓய்வு),  திருப்பராயத்துறை தபோவனப் பள்ளி 🌴

🎤சிறப்புச் சொற்பொழிவு  
🔹பாவேந்தர் காட்டிய தமிழியக்க வழியில் தலைமுறை கட்டமைப்பு🔹 
நற்றமிழ் முனைவர், செந்தமிழ்ச் செல்வர்
முனைவர். இரா. திருமாவளவன்  அவர்கள் 
தலைவர், 
தமிழ் நெறிக் கழகம், வேர்ச்சொல் அறிஞர், அகரமுதலித் திட்டம்- மலேசியா     

🎼தமிழிசை : 
செல்வன் பிரசாத் –செவிலியர் பட்ட மாணவர் 

🎤 சிறப்புச் சொற்பொழிவு    
“பாவேந்தன் பார்வையில்👁️ பெண்கள்🤷🏻‍♀️ ”
திருவாட்டி முனைவர்
 ந புனித லெட்சுமி, அவர்கள் 
உதவிப் பேராசிரியர்🌸,
 தமிழ்த் துறை 
அ.து.ம மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம் 🌿

🌈தேனிசை இளைப்பாறல்🎶

சிற்றுரை: “கல் பிளந்த கவி வேந்தன்” 
செல்வி மதன்மித்ரா
 முதுகலை மாணவி, 
அ.து.ம மகளிர் கல்லூரி 

🙏🏻நன்றியுரை: 
நல்லாசிரியர் 
புலவர் எண்கண் சா. மணி  அவர்கள் 
 🥀பொதுச் செயலாளர், திருவாரூர் இலக்கிய  வளர்ச்சிக் கழகம் 

கூகுள் மீட் :

-தமிழ்மது