சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?
மறைமலை அடிகளார் தோன்றிய திருநாகை மண்ணில் தமிழுக்கென்று சங்கங்கள் இருந்தாலும் தொடர்ந்து தமிழை காக்கவும், இனத்திற்கு அரணாக நிற்கும் இயக்கங்கள் ஏதும் செயல்பாட்டில் இல்லை என்கிற நிலையில் அதற்கான முக்கியத்துவம் நிலவும் இந்த காலகட்டத்தில்
"மறைமலை தமிழ் மன்றம் "
உதயமாகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சிக்காக மலேசிய மண்ணில் தமிழ் நெறிக் கழகத்தை தோற்றுவித்து தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டும் தமிழின் வேர்ச்சொல்லை தேடி அகரமுதலித் திட்டத்தை உருவாக்கியும் வரும் ஐயா முனைவர் இரா.திருமாவளவன் அவர்களை முதல் முதாலாக தொடர்பு கொண்டு தங்கள் உரை நிகழ்த்த முடியுமா என்று எங்கள் ஆவலை தெரிவித்த போது மலர்ச்சியுடன் இசைவு தந்தார். மறைமலை அடிகளாருக்கு முதன்முதலில் மலேசிய மண்ணில் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்து வெகு சிறப்பாக கொண்டாடிய ஐயா அவர்கள் சொற்பொழிவு ஆற்றுவது மிகப் பொருத்தமாக அமைகிறது.
மரபுக் கவிதைகள் இயற்றிய, ஓய்வு பெற்ற பிறகும் தமிழை மூச்சாக சுவாசித்து வாழும் புலவர் சொக்கப்பன் ஐயாவை சொற்பொழிவிற்காக அணுகிய போது அவரின் உடல்நிலைக் காரணமாக இயலாத போது தலைமையாவது ஏற்கவேண்டும் என்கிற வேண்டுகோளை ஏற்று தலைமை உரை ஆற்றுகிறார்கள். பேச்சும் செயலும் ஒன்று என்பதற்கு அறிவழகன், கபிலன், நற்சோனை என்ற அவரின் வாரிசுகளின் பெயர்கள் சாட்சி.
பணிமனை சென்றால் தான் வேலை, அதை விட்டு நீங்கினால் அதை மறந்து விடும் கால கட்டத்தில் தமிழை தன் வாழ்வியல் நெறியாகக் கொண்டு பிறருக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து தன்முனைப்புடன் துடிப்புடன் பாரதிதாசன் கற்பனை செய்த குடும்ப விளக்கின் அழகின் சிரிப்பு முனைவர் ந.புனித லெட்சுமி அவர்கள் இசைவு தந்து இந்த இணையவழி கருத்தரங்கிற்கு தூணாகவும் அமையும் அவர்களை வாழ்த்துகிறோம்
தமிழுக்கான இலக்கண இலக்கிய வகுப்புகள் நடத்தி, ஊர் அடங்கினாலும் செயல் முடங்காது என தொடர்ந்து இணைய வழியாகவும் 146கக்கும் மேற்பட்ட கருத்தரங்கள் நடத்தி களத்திலும் செயல்பட்டு வரும் புலவர் எண்கண் மணி ஐயா அவர்கள் மிகுந்த ஊக்கம் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பங்கேற்று உங்கள் பேராதரவினை தந்து தமிழின்பம் பருகி பூட்டிய இரும்புக் கூட்டினை திறந்து சிறுத்தையாக வெளிவருவோம். நன்றி
மறைமலை தமிழ் மன்றம்
திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் &
புதியதோர் உலகு செய்வோம்
இணைந்து நடத்தும் 🤝🏻
🌷"சித்திரச் சோலையில் சிந்திய வியர்வை முத்து” - பாவேந்தர் 💐
இணையவழி புரட்சித் திருவிழா 🔥
நாள்: தி.ஆ ௨௦௫௨,
மேழம் ௧௯ 🍁
0️⃣2️⃣➖0️⃣5️⃣➖2️⃣0️⃣2️⃣1️⃣
🔆ஞாயிற்றுக்கிழமை 🦜
தமிழ்நாட்டு நேரம் - மாலை
🕠 5.30 -7.00
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:🎶 செல்வி. குழலி காரைக்கால்
வரவேற்புரை: தமிழ்மது, த.தே.பே🌟
தலைமை :
புலவர் மு. சொக்கப்பன் அவர்கள் 🌳
தலைமை ஆசிரியர் (ஓய்வு), திருப்பராயத்துறை தபோவனப் பள்ளி 🌴
🎤சிறப்புச் சொற்பொழிவு
🔹பாவேந்தர் காட்டிய தமிழியக்க வழியில் தலைமுறை கட்டமைப்பு🔹
நற்றமிழ் முனைவர், செந்தமிழ்ச் செல்வர்
முனைவர். இரா. திருமாவளவன் அவர்கள்
தலைவர்,
தமிழ் நெறிக் கழகம், வேர்ச்சொல் அறிஞர், அகரமுதலித் திட்டம்- மலேசியா
🎼தமிழிசை :
செல்வன் பிரசாத் –செவிலியர் பட்ட மாணவர்
🎤 சிறப்புச் சொற்பொழிவு
“பாவேந்தன் பார்வையில்👁️ பெண்கள்🤷🏻♀️ ”
திருவாட்டி முனைவர்
ந புனித லெட்சுமி, அவர்கள்
உதவிப் பேராசிரியர்🌸,
தமிழ்த் துறை
அ.து.ம மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம் 🌿
🌈தேனிசை இளைப்பாறல்🎶
சிற்றுரை: “கல் பிளந்த கவி வேந்தன்”
செல்வி மதன்மித்ரா
முதுகலை மாணவி,
அ.து.ம மகளிர் கல்லூரி
🙏🏻நன்றியுரை:
நல்லாசிரியர்
புலவர் எண்கண் சா. மணி அவர்கள்
🥀பொதுச் செயலாளர், திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம்
கூகுள் மீட் :
-தமிழ்மது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக