ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தனித்துவிடப்பட்ட தமிழ்த் தேசியப்போராளியின் இளம்பிறைக்கு கை கொடுப்போம்



தமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி. கோவேந்தன் என்கிற கோபிநாத் அவர்கள் உடல் நலம் இன்றி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (25.08.2021) பிற்பகல் காலமான பெரும் துயரச் செய்தி பேர் இடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த தோழர் கோவேந்தன் காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும்.

முதுகலைப்  பட்டம் பெற்ற கோவேந்தன் கணிப்பொறி செயல்பாடுகளிலும் போராட்ட ஒருங்கிணைப்புகளிலும் சிறந்து விளங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார். தோழருடைய இழப்பு சொல்லொணாத் துன்பம் தருகிறது.

தோழர் கோவேந்தன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் ஒன்றாவது வார்டு சிவ சண்முகம் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நாளை (26.08.2021) வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்குப் புறப்படும் என்பதைத் துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்த்தேசிய உணர்வு நிரம்பிய தோழர் கோவேந்தன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பெற்றோருக்கும் அன்பு உடன் பிறப்புகளுக்கும் ஆருயிர் துணைவியார் செந்தாமரை அவர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்




தமிழ்த்தேசியப் போராளி"
தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வேண்டுகோள்!
=================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி. கோவேந்தன் அவர்கள் தமது இளம் அகவையில் (34 அகவை) நோயினால் துன்புற்று பல மாதங்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி கடந்த 25.08 2021 அன்று காலமானார் என்ற துயரச் செய்தியைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமிழ்த்தேசியத்திற்கு முழுநேரமாகச் செயல்பட்ட தோழர் கோவேந்தனின் இளம் மனைவி செந்தாமரையையும் ஒரே அன்பு மகள் ( 8 அகவை ) இளம்பிறையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இளம்பிறை 19 அகவை அடைந்தபிறகு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவர் பெயரில் வங்கியில் வைப்பு நிதிக் கணக்கு தொடங்க வேண்டும். செந்தாமரைக்கு ஒரு தொகை கையில் கொடுக்க வேண்டும். இளம்பிறைக்கு ஆதார் அட்டை இப்போது இல்லை. வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் அட்டை கட்டாயம் என்கிறார்கள். எனவே இளம்பிறைக்குக் கணக்குத் தொடங்க சிறிது காலம் தள்ளிப் போகும்.

எனவே இப்போது என் பெயரில் தஞ்சை கனரா வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் நன்கொடைத் தொகையைப் போடச் சொல்லலாம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமையில் முடிவு செய்தோம். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிதியளித்து - அத்திட்டத்தை நிறைவு செய்யவேண்டும்.

இளம்பிறை எதிர்காலத்திற்கும் - செந்தாமரைக்கும் பயன்படும் வகையில் நன்கொடை அளிக்கப் பலரும் முன்வந்து பேசிக் கொண்டுள்ளார்கள்.

அன்புகூர்ந்து தோழர் வி. கோவிந்தன் குடும்பக் காப்பு நிதியைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்நன்கொடைத் தொகையை 15.10.2021 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
பெ. மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வங்கிக் கணக்கு விவரம்
பெ. மணியரசன் (MANIARASAN – P )
கனரா வங்கி (CANARA  BANK )
தஞ்சாவூர் தெற்கு வீதி ( Thanjavur South Main Street)
சேமிப்புக் கணக்கு எண் ( SB A/C NO ) : 63402200006500
கிளைக் குறியீடு எண் ( IFSC CODE ) : CNRB0001221

தொடர்புக்கு : 
தோழர் அ. ஆனந்தன் 
+91 94439 18095

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================




வியாழன், 16 செப்டம்பர், 2021

"மனசாட்சியே இல்லாமல் இருக்காங்களே"- அங்கலாய்த்துக் கொண்ட மருத்துவர்

கட்டி ஒன்று. ஸ்கேன் எடுக்க சென்றேன்.

சற்று நேரம் கழித்து

பணிப்பெண்  : சார்..நீங்க உள்ள போகலாம் 

(மருத்துவர் காதில் அலைபேசியில் பேசியபடியே.. இருந்தார் .)

உதவியாளர்: ஐயா நீங்க படுத்துகோங்க

மருத்துவர் அலைபேசியில்: ,,,"போங்கண்ணே...எனக்கு மனசே கஷ்டமா இருக்கு" 

மருத்துவர்: ஐயா..உங்க உடைய கொஞ்சம் தளர்த்திகோங்க

(கட்டி மீது ஜெல் தடவிய படியே சம்பாசனை நடக்குது)

"வயலை பார்த்துக்கிறதையே விட்டுடலாம்னு தோணுது.

இப்படி எல்லாமா மனுசங்க இருப்பாங்க ...அதுக்குன்னு மனசாட்சியே இல்லாமல்.  வந்து ஒரு வேல கூட பாக்கலேண்ணே. 700 ரூவா கேக்குறான்

இப்ப நினைச்சாலும் BP ஏறுது. 

ஏதோ உங்ககிட்ட சொல்லலாமேன்னு கூப்டேன்.

சுப்பிரமணி காலைல இருந்து சாயங்காலம் 7 வரை வேலை செஞ்சான். அவன் 700 ரூவா கேட்டான். அது பரவா இல்ல. இவன் 4 மணிக்கு வந்து 7 மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சுளையா 700ரூவா கேக்குறான்"/

(என்னடா இது. ஜெல் தடவி இவ்ளோ நேரம் ஆச்சே. இன்னும் ஸ்கேன் எடுக்கலையே. ஒரு வேலை ஊறபோட்டு எடுப்பாங்களோ- மனதில் நினைத்துக் கொண்டேன் )

மருத்துவர் அலைபேசியில் தொடர்ந்து- "சரிண்ணே ,,நாளைக்கு நான் வர மாட்டேன். நீங்களே பேசி செட்டில் பண்ணி அனுப்புங்க. நான் போன் வைக்கிறேன்" 

மருத்துவர்: ம், முடிஞ்சது. ரிப்போர்ட் இருந்து வாங்கிட்டு போய்டுங்க 

வெளியில் வந்தேன். 

பணிப்பெண் : "பணமா குடுங்க. கார்ட் கிடையாது"

நான்: எவ்ளோ

பணிப்பெண் : ரூ 700

நாலு மணி நேரம் வேலை செய்தவனுக்கு 700 ருபாய் கேட்டவனுக்கே  மனசாட்சி இல்லைனா.. அப்போ இது என்னவா இருக்கும் ? ஆனா இவங்க பரவா இல்லை. திருச்சி அப்பல்லோ காரன் இதே ஸ்கேன்கு 7,000 ரூபா கேட்டானே. 

இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று அழுத அந்த மருத்துவரின் கணவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன் ஊனமுற்ற என் நண்பனுக்கு ஊனம் தான் என சான்றிதழ் அளிக்க அப்பவே ரூ.100 வாங்கியவர்.

பணத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்த பிறகு தான் தோன்றியது..நாள் முழுக்க இரவு வரை வேலை செய்கிற இந்த பொண்ணுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க மனசாட்சி உள்ள அந்த மருத்துவர் அம்மா  ?


-தமிழ்மது 

வியாழன், 9 செப்டம்பர், 2021

ஒரிசா பாலு ஐயா மீண்டு எழ தோள் கொடுப்போம்

 


உலகத் தமிழர்களுக்கும் பெருமை தேடித்தந்த நமது பேராசான், அன்பு தந்தை ஒரிசா பாலு ஐயா, இப்போது நாக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலு ஐயாவின் மருத்துவ செலவிற்காக எனது நம்பிக்கை மீகுந்த நண்பர்கள் ஐயாவின் அனுமதியோடு நிதி திரட்டி வருகிறார்கள். அந்த KETTO இணைப்பின் மூலம் உங்களால் இயன்ற நிதி உதவியை செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். இதில் எந்த நாடு என்று கேட்கப்படும் இடத்தில் மட்டும் இந்தியா என்று குறிப்பிடவும். மற்ற நாடின் பெயர்களை இந்த செயலி ஏற்காது. அதே இணைப்பின் கீழ் ஐயாவின் மருத்துவ ஆவணங்களும் சான்றுக்காக பதிவேற்றப்பட்டுள்ளது. 


KETTO  டாட் ORG சென்று ORISSA BALU என்று தேடினால் இணைப்பு வரும்


அல்லது


S.Balasubramani 

ICICI Bank Porur sakthi Nagar branch account number 006101501313

 IFSC code ICIC0000275


என்ற ஐயா வின்  SB account number பணம் அனுப்புங்க நித்தியானந்தபாரதி


இயன்றவரை பகிரவும் 🙏


ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுப் பணிகள்:


1. ஆய்வு களத்தில் முன்களப்பணியாளர்; தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த ஆய்வுப் பணியாளர்; பன்முக பல்துறை பல்திறன் ஆய்வு நோக்கில் உலகை வலம் வருபவர் கற்றலும் கற்ப்பித்தலுமாக. 


2. 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து கடலக ஆய்வுகள், இயற்கை சார்ந்த உயிரின வளர்ச்சி, வாழ்வியல் தொடர்பான ஆய்வுகள், தொல்கடற்பயணங்கள், கப்பல் கட்டுமானம், பருவகாற்று, கடல் நீரோட்டம், பறவைகளின் இனப்பெருக்கக்கால இடப்பெயர்வு, நீர் மேலாண்மை மரபுசேர் வேளாண்மை அறிவியல் தொல்தமிழர் வரலாறு ஆய்வுகள்


3. உலகளாவிய தமிழியல், மொழிப்பரவல், மரபு, நாட்டார் வழக்கியல், ஒருங்கிணைந்த உலகத்தமிழியல், பெருங்கடல்களில் மூழ்கி உள்ள தீவு கடற்கரை நிலங்களை கடல் சார் கப்பல் கலை வரலாறு, தொல்லுயுர் எச்சங்கள், அது தொடர்பான மானுடவியல், நிலவியல், புவியியல் என்று பல் துறைகளில் ஆய்வுப் பணிகள்


4. உலகில் தமிழர்களின் பரவல் பற்றிய வரைபடம் உருவாக்கும் ஆய்வுப் பணிகள் 


5. தமிழர்களின் தொல்லியல் வரைபடம் உருவாக்கும் ஆய்வுப் பணிகள்


6. குமரிக்கண்ட ஆய்வுகள் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளைக்கு உதவும் பணிகள்; அதன் அமர்வுகளில் அமிகஸ் கீயூரி ஆக செயல் பட்டு வருபவர் 


7. ஒரிசா கலிங்கத் தமிழ் தொடர்புகள் மற்றும் தமிழகத்தில் தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர் தொடர்பான தமிழியல் ஆய்வுப் பணிகள்


8. புவிச் சுழற்சியின் மிக மையமான பகுதியில் கடல் சூழ்ந்தத் தீவுகளில் வாழ்ந்தத் தமிழர்களின் திரை மீளர் திறம், அத்திறத்திற்கு அடிப்படையாய் அமைந்த அவர்களின் முன்னோரின் தொல் மெய்யியலை நோக்கிய தேடல், மீட்டுருவாக்கம் என அறிவியல் விதிகளின் அடிப்படையிலும் மற்றும் தொல்காப்பிய இலக்கண உத்திகள் போன்ற பன்னோக்கு ஆய்வியல் நெறிகளின் வழியே ஆய்வுப் பணிகள்


9. தமிழர் தம் தொல்திறனான கடல்சார் ஆய்வுகள் இவரின் சிறப்பு. கடல் சார் இயற்கை வளங்கள், கடல்உயிரினங்களின் வாழ்வியல், கடல்நீரோட்டங்கள் தொல்லியல் கடற்பயண வழிகள் கப்பற்கலை தொழிற்நுட்பம் போன்ற நுண்ணியல் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் ஆய்வுப் பணிகள்


10. தமிழர்களின் கடல் கடந்து உலகம் பரந்த வணிகத்தொழில் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி தமிழர் பெருமையை நிலை நாட்டும் ஆய்வுப் பணிகள்


11. குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு இன்று மீன்கள் இனபெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் தொல்மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் விரிவடைந்தது பற்றிய ஆய்வுப் பணிகள்


12. ஆமைகள் வலசை பாதையை பயன்படுத்திய தொல் பழங்கற்கால மக்களை ஆய்வு செய்துவருபவர். உலகில் ஆமைகளின் தங்கள் இனப்பெருக்கத்திற்காக உலகில் தேர்ந்தெடுத்துச்செல்லும் இடங்களில் கடலோடியத்தமிழர்கள் அங்குத் தங்கி தமிழ் மொழி மற்றும் பண்பாடுத்தடங்களுடன் இன்றும் இருப்பதை மெய்ப்பிக்க முயன்று வருகிறார். இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகள் தொடர்பான இனப்பெருக்க மையங்கள் பிற் காலத்தில் துறை முகமாய் வளர்ந்தது , ஆமைகள் நம் கடற்கரைகளைத் தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள் , நம்முடைய கடலோடிகளால் பயன்படுத்தப்பட்ட உலகம் முழுவதும் வலம் வந்த ஆமைகளின் கடல்நீரோட்டப் பயணப்பாதை தொடர்ப்பான இனப்பெருக்க இடங்கள் 46000 க்கும் மேற்பட்டவை உலகின் பல நாடுகளில் தமிழ் பெயராலேயே விளங்குவதை பன்முக ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் ஆய்வுப் பணிகள்


13. பன்முக நோக்கில் இயற்பியல், அறிவியல் நோக்கிலான ஆய்வுகள் பல மேற்கொண்டு அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் கடலியல் வரலாற்றியல்சார் அடிப்படை உண்மைகள் நம் இந்தியாவின் தொல்வரலாற்றுச் சிறப்புக் கூறுகளை உலகிற்கு எடுத்துரைக்கும் ஆய்வுப் பணிகள்


14. புவியின் சுழற்சி, தீபகற்ப பகுதிகளில் தொல்தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் இயற்கை ஆற்றலின் பயன்பாட்டை உணர்ந்திருந்தனர். விலங்குகளின் கூர்உணர்வுப் பட்டறிவினை கண்டுணர்ந்ததன் மூலமாக இயற்கையின் வெப்பம் வெளி, பருவ மழை , பருவக்காற்றின் தடம் இயற்கைப்பேரிடர் சார்ந்த உலகியலின் இயங்கியலை கண்டறிந்து தம்மைக்காத்துக்கொண்டதோடு, இயற்கையின் ஆற்றல் அதனோடு விலங்கினம் பறவைகளின் ஒத்திசைவுக்கேற்ப தம் நல்வாழ்வியலுக்கான ஏதுக்கள், சுற்றுப்புறச்சூழல் நீர்மேலாண்மை பயிர்வளர்ப்பு கட்டிடவியல் போன்ற நல்வாழ்வியல் பண்பாடு தேர்ந்தும் தொழிற்கருவிகள் படைத்தும் வளமிகு வாழ்வை அமைத்துக்கொண்டனர். பின்கடற்பயணம் மூலமாக உலக நாடுகளில் பரந்து ஆளுமைத்திறத்துடன் சிறந்து, பிறருக்கும் பண்பாட்டை நற்றிறங்களை அறிமுக படுத்தியவர்கள் என்னும் வரலாற்று உண்மை, இயற்பியல் ஆய்வுப் பணிகள்; ஆய்வுத் தேடலில் தொடர்வதோடு இவ்வுண்மைகளை உலக ஆய்வாளர்களிடம் வலியுறுத்தும் ஆய்வுப் பணிகள்


15. பல உலக தொல்லியல் களங்களில் பார்வையிட்டு பல அறிஞர்களின் பரிந்துரையில் ஒருங்கிணைந்த தொல்லியலுக்கான மேம்பாட்டை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முயன்று வருபவர்.


16. தமிழர்களின் மரபு சார் மருத்துவம் பண்டைய அறிவியல் மற்றும் மருந்தியல் அறிவை மீட்டுருவாக்கம் செய்வதோடு மூலிகை விதைப் பண்ணைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். 


17. நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, மரபு சார் அறிவியல், மருந்தியல், உழவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியல் ஆய்வுகள் செய்வதோடு இளையோரையும் ஆர்வம் கொள்ளத் தூண்டுபவர். 


18. தமிழர்களின் புவி சார் அறிவு, கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலை காக்க வேண்டும் எனும் உறுதியுடன் தமிழகம் முழுவதும் இக்கருத்துகளை விளக்கக் காணொளி காட்சிகள் நடத் தி வருபவர். 


19. வரலாறு, சங்கத் தமிழ் இலக்கியம் என்பன வருங்கால இளைய சமூகத்தினருக்கு தம் மரபின் அறிவினை எடுத்துக்கூறும் வழிகாட்டிகளாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வலியுறுத்தி வருபவர்.


20. இன்று காணும் பல இயற்கை சிக்கல்களை இயற்கைசார் வள மேலாண்மை ஆய்வுகளின் மூலம் நல்ல தீர்வுகளை அளித்து வருபவர். 


21. தம் ஆய்வுக் கருத்துகளை விளக்கவும், ஆய்வு களப்பணிகளின் நீட்சியாய் பல்வேறு உலக நாடுகளுக்கு அயர்வின்றி பயணித்து பல்துறைசார் ஆய்வுத் தலைப்புகளில் (1700 க்கும் மேற்பட்ட) சொற்பொழிவுகளை ஆற்றி வருபவர். 


22. இந்தியத் தமிழர்களையும் உலகத் தமிழர்களையும் உலகத்தமிழர்கள் அமைப்புகள், கலாச்சாரம், பண்பாடு, வணிகம் மூலமாக ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்.


23. பொதுமக்களிடையே குருதிக்கொடை, தற்காப்பு உணர்வினை வளர்க்கும் நோக்கில் இவ்வழக்கைக் கைக்கொள்ளத்தூண்டியும் வருபவர்.


24. ஒரிசா புபனேஸ்வர் உட்கல் பண்பாட்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை கி.பி 2000 ஒருங்கிணைப்பு தொடர்பால் இன்று வரை உலக நாடுகளில் துவக்கப்படும் தமிழ் இருக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்.


25. முகநூல் மற்றும் இணையம் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வருகிறார். பல துறை மாணவர்களின் கடல் சார் ஆய்வுகளுக்கு துணை புரிந்து வருகிறார். 


26. வறுமையால் முன்னேற இயலா திறன்மிகு இளையோருக்கு கல்வி, விளையாட்டு மற்றும் ஆய்வியல் துறை சார்ந்தோருக்கும் பொருளுதவி, தகுந்த ஆலோசனை, ஆய்வியல்நெறி எனத் தளராது தொடர்ந்து சமுதாயநலப்பணிகளில் செயல்பட்டு வருபவர். 


27. கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய் மரத்தில் , மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர், கடல் வள மேலாண்மையின் மூலம் உலக நடப்புகளை மீனவர்கள் பயன்கொண்டும் பயிற்சி பெற்றும் அல்லல் நீங்கி வாழ உதவி வருபவர். 


28. உலக மக்களை ஒருங்கிணைக்க தென்புலத்தார், திரைமீளர், மற்றும் உலக தமிழ் பெண்களின் கூட்டமைப்புக்காக ஐயை என்ற உலகத்தமிழ் மகளிர் அமைப்பையும் நடத்தி வருகிறார் . உலக நாடுகளில் வாழும் இளந்தமிழர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் இளந்தமிழர் அமைப்பின் மூலம். 


29. பெண்பாற்புலவர்களின் ஆளுமைத்திறன் உலகநாடுகளில் தமிழர் மக்களின் நலம் சார் பணிகளுக்கான பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர். 


30. கவின் கலைகளில் பற்று கொண்டு ஓவியம், கவிதைப்போட்டிகள் மரபுவிளையாட்டு, தற்காப்புக்கலை கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகளின் மூலம் ஊக்குவிக்குபவர் . 


31. தன் பெயரோடு தன் ரத்த வகையை 16 ஆண்டுகளாக இணைத்து எழுதுபவர்


32. புவனேஸ்வர் தமிழ் சங்கத்தின் தொடக்க உறுப்பினராக சேர்ந்து இருந்து 2002-2003 ஆண்டில் செயலர் ஆக பணியாற்றித் ஒருங்கிணைத்தவர்