ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தனித்துவிடப்பட்ட தமிழ்த் தேசியப்போராளியின் இளம்பிறைக்கு கை கொடுப்போம்



தமிழ்த்தேசியப் போராளி தோழர் கோவேந்தனுக்கு வீரவணக்கம்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ், அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி. கோவேந்தன் என்கிற கோபிநாத் அவர்கள் உடல் நலம் இன்றி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (25.08.2021) பிற்பகல் காலமான பெரும் துயரச் செய்தி பேர் இடியாய் விழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த தோழர் கோவேந்தன் காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும்.

முதுகலைப்  பட்டம் பெற்ற கோவேந்தன் கணிப்பொறி செயல்பாடுகளிலும் போராட்ட ஒருங்கிணைப்புகளிலும் சிறந்து விளங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார். தோழருடைய இழப்பு சொல்லொணாத் துன்பம் தருகிறது.

தோழர் கோவேந்தன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம் ஒன்றாவது வார்டு சிவ சண்முகம் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து நாளை (26.08.2021) வியாழக்கிழமை பகல் 12.00 மணிக்குப் புறப்படும் என்பதைத் துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்த்தேசிய உணர்வு நிரம்பிய தோழர் கோவேந்தன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய பெற்றோருக்கும் அன்பு உடன் பிறப்புகளுக்கும் ஆருயிர் துணைவியார் செந்தாமரை அவர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்




தமிழ்த்தேசியப் போராளி"
தோழர் கோவேந்தன் குடும்ப நிதி வேண்டுகோள்!
=================================

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அலுவலகப் பொறுப்பாளருமான தோழர் வி. கோவேந்தன் அவர்கள் தமது இளம் அகவையில் (34 அகவை) நோயினால் துன்புற்று பல மாதங்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி கடந்த 25.08 2021 அன்று காலமானார் என்ற துயரச் செய்தியைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமிழ்த்தேசியத்திற்கு முழுநேரமாகச் செயல்பட்ட தோழர் கோவேந்தனின் இளம் மனைவி செந்தாமரையையும் ஒரே அன்பு மகள் ( 8 அகவை ) இளம்பிறையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இளம்பிறை 19 அகவை அடைந்தபிறகு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவர் பெயரில் வங்கியில் வைப்பு நிதிக் கணக்கு தொடங்க வேண்டும். செந்தாமரைக்கு ஒரு தொகை கையில் கொடுக்க வேண்டும். இளம்பிறைக்கு ஆதார் அட்டை இப்போது இல்லை. வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் அட்டை கட்டாயம் என்கிறார்கள். எனவே இளம்பிறைக்குக் கணக்குத் தொடங்க சிறிது காலம் தள்ளிப் போகும்.

எனவே இப்போது என் பெயரில் தஞ்சை கனரா வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் நன்கொடைத் தொகையைப் போடச் சொல்லலாம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமையில் முடிவு செய்தோம். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிதியளித்து - அத்திட்டத்தை நிறைவு செய்யவேண்டும்.

இளம்பிறை எதிர்காலத்திற்கும் - செந்தாமரைக்கும் பயன்படும் வகையில் நன்கொடை அளிக்கப் பலரும் முன்வந்து பேசிக் கொண்டுள்ளார்கள்.

அன்புகூர்ந்து தோழர் வி. கோவிந்தன் குடும்பக் காப்பு நிதியைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்நன்கொடைத் தொகையை 15.10.2021 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
பெ. மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வங்கிக் கணக்கு விவரம்
பெ. மணியரசன் (MANIARASAN – P )
கனரா வங்கி (CANARA  BANK )
தஞ்சாவூர் தெற்கு வீதி ( Thanjavur South Main Street)
சேமிப்புக் கணக்கு எண் ( SB A/C NO ) : 63402200006500
கிளைக் குறியீடு எண் ( IFSC CODE ) : CNRB0001221

தொடர்புக்கு : 
தோழர் அ. ஆனந்தன் 
+91 94439 18095

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக