வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவ கல்லூரிக்காக தேவையா போராட்டம்?

"நாகை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி 12.12-2019 அன்று. போராட்டமாம்"

போராடி?
நம்ம வாழிடங்களை‌ விளைநிலத்தை தாரைவார்த்து, 
நம் வரிப்பணம் இந்திய அரசு கருவூலத்திற்கு சென்றுவிடுவதால். குடிகாரர்கள் தங்கள் குடும்பத்தை அழித்து தரும் பாவக்காசை வைத்து கட்டப்படும் கல்லூரியில் உன்பிள்ளையோ என்‌பிள்ளையோவா படிக்கப்போகுது? 
அதில் 99% - 
பணத்தை வாரி இறைத்து நீட்டுக்கு படித்த மேல்தட்டு மக்களும், தில்லு முல்லு செய்த தேர்வேறிய வடநாட்டானும் படிக்கப் போகிறார்கள். நம்ம பசங்க நீட் தேர்வு எழுதவே இங்கு இடம் இல்லையாம். ராஜஸ்தானுக்கும், கேரளாவுக்கும் தூக்கி அடிக்கிறானுங்க. இங்க எழுதுபவர்கள் தாலி சங்கிலி முதற்கொண்டு கழட்டி மன உளைச்சலில் உள்ளாக்கி தேர்வு கூடத்திற்கு அனுப்புகிறார்கள்
இந்த லட்சணத்தில கட்டட நிதி. அங்கு பணியாற்ற வரும் வந்தேறிகளுக்கு சம்பளம். என தேவையற்ற நிதிச்சுமை. அதை சமாளிக்க நம்ம வீட்டுக்குள்ளேயே டாஸ்மாக் திறப்பாங்க,
எச்சரிக்கை மக்கழே

செவ்வாய், 3 டிசம்பர், 2019

வெங்காயம்

நமக்கெதுக்குங்க
இந்த அரசியல்
என
ஒதுங்கி போனவர்களையும்
கிலோ 150க்கு வாங்க வைத்தது
வெங்காயம் 

வெள்ளி, 22 நவம்பர், 2019

அமீரக நாடுகளில் இருப்போருக்கான சிறந்த காணொளி அழைப்பு செயலி

அமீரக மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இனைய இணைப்பு மிக மோசமாக இருக்கும். அங்கு கட்செவி(வாட்சப்) காணொளி அழைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.  

துபாய் போன்ற நாடுகளில் வசிப்போருடன் பேசுவது என்பது மிகுந்த பொறுமை உடையவர்களை கூட எரிச்சல் உண்டாக்கும். அந்த அளவு வலிவற்ற இணையம் அங்கு. 

ஆனால்   "டுடாக்"(ToTok)  செயலி மூலம்  காணொளி அழைப்பை கூட தங்கு தடையின்றி செலவில்லாமல்; குறைந்த அலைக்கற்றை திறன் இருந்தால் கூட பேச முடிகிறது.


ToTok க்கான பட முடிவு
https://play.google.com/store/apps/details?id=ai.totok.chat

சனி, 16 நவம்பர், 2019

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு -கடைசி தேதி 25.11.2019

கிராம ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம்
ஊதியம் : 7வது ஊதிக் குழுவின் படி ரூ.15900-50400வரை
விண்ணப்பிக்க இறுதி நாள் :25.11.2019
இணைப்பு: https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/
(இது போல ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தோரும் அவரவர் மாவட்ட அதிகார பூர்வ இணையதளத்தில் -வேலைவாய்ப்பு (Recruitment) பகுதிக்கு சென்று விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்




சனி, 3 ஆகஸ்ட், 2019

கடவுச் சீட்டு எடுக்க வேண்டுமா? போலி இணையதளம் கூகிளில் உலவுகிறது.எச்சரிக்கை

PASSPORT APPLY என்று கூகிளில் தட்டியவுடன் முதலில் வருவது போலி இணையதளங்கள் தான்


While We search with  "passport apply", these following phishing sites come first.
1.https://passport.indieseva.com/
2. https://passportindia.org

I lost my money Rs.3990/- by believing it as if original sites.


இந்த போலி இணையதளம் என்று தெரிந்தவுடன் வெளியேறி விட்டேன். அதன் பிறகு சரியான இந்திய அரசின் இணையதளத்தில் நுழைந்து பதிவு செய்தேன். எனது நுழைவை சரிபார்க்க ஒரு மின்னஞ்சல் அனுப்பப் பட்டிருந்தது. அது ஸ்பேமில் இருந்திருக்கும் போல. நான் பிசிங் இணையதளத்தில் இருந்து வந்த  இணைப்பை தட்டினேன். அது #Razorpay மூலம் ரூ. 3990/- பறிகொடுத்துவிட்டேன். 

இந்திய அரசின் அதிகாரபூர்வ கடவுச் சீட்டு இணையதளம் https://portal2.passportindia.gov.in இதில் நுழைந்தவுடன் கீழ்க்கண்ட எச்சரிக்கையை கொடுக்கிறார்கள். ஏன் இவர்கள் இந்த போலி இணையதளங்களை தடை செய்யமுடியாதா? thepiratebay, tamilrasigan போன்ற இணையதளங்களை முடக்கிய இந்தியம் இது போன்ற மக்களை ஏமாற்றும் இணையதளங்களை ஏன் முடக்கவில்லை?

Passport Seva
Consular, Passport & Visa Division
Ministry of External Affairs, Government of India

 Alert on Fake Websites related to Passport Services
It has come to the notice of the Ministry that many fraudulent websites
and mobile applications are collecting data from applicants and also
levying additional hefty charges for filling up the online application
form and scheduling appointment for Passport and related services.
Some of these fake website are registered in the domain name
*.org, *.in, *.com such as
www.indiapassport.org, 
www.online-passportindia.com, 
www.passportindiaportal.in, 
www.passport-india.in, 
www.passport-seva.in, 
www.applypassport.org 
and many other similar looking websites.
It is therefore advised to all citizens applying for Indian Passport and
related services that they should NOT visit to the above mentioned
fraudulent websites or make payment related to passport services.
The official website of the Ministry of External Affairs,
Government of India, for applying Passport services is
www.passportindia.gov.in.
Alternatively, applicants may also use the official mobile App
mPassport Seva
which can be downloaded from Android and iOS application stores.

சங்கிலியை பறித்தால் "நீ ஏன் சங்கிலி போட்டுப்போனே?" என்று அறிவார்ந்த கேள்வி கேட்கும் காவல் துறைக்கோ இந்திய அரசிற்கோ இதில் எல்லாம் துளியும் அக்கறை இல்லை' நேரமும் இல்லை. அதனால் நான் கூகிள் தகவல் கொடுத்துள்ளேன். பார்ப்போம் அவர்கள் இந்த இணையதளங்களை  முடக்குகிறார்களா என்று?

ஞாயிறு, 19 மே, 2019

ஐயா கோ.நம்மாழ்வார் & ஐயா நெல்.செயராமன் நினைவேந்தல் விழா


இயற்கை விவசாயத்திற்காக, மக்களை ஐட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பேராபத்துகளில் இருந்து மீட்க தன் இன்னுயிரை ஈந்த போராளி ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கும் பண்டை நூல்களை ஊர் ஊராக சென்று திரட்டிய உ.வே.சா போல பாரம்பரிய நெல் வகைகளை காக்க மீட்டெடுக்க போராடிய, அதில் வெற்றியும் பெற்ற ஐயா நெல் செயராமன் அவர்களுக்கும் சமூக ஆர்வலர் திரு சோமு இளங்கோ அவர்களின் தலைமையில் அவரின் மற்றும் விவசாய பெருமக்களின் முன்னெடுப்போடும் நினைவேந்தல் விழா தலைஞாயிற்றில் 19.05.2019 சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் இருவரின் வரலாறும் அவர்கள் போராட்ட வாழ்க்கை பற்றியும் இனி விவசாயிகள் தேர்ந்தெடுத்து செல்லக்கூடிய வழிகள் பற்றியும், ஒற்றுமையுடன் போராட வேண்டிய அவசியம் பற்றியும், விளைவிக்க கூடிய விவசாயி ஏன் கடனாளி ஆகிறார் என்பது பற்றியும் கடலூர் முதல் இராமநாதபுரம் வரை அமைய இருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை நம் மண்ணில அனுமதிக்க கூடாது என்கிற வழிவகைகள் பற்றியும் பங்கு கொண்ட அனைவரும் பேசினார்.




இறுதியாக நம்மாழ்வார் பெயரில் விவசாய பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும், நெல் செயராமன் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் வேண்டும், அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் இம்மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விழா நிறைவுற்றது 
விதை நெல் கோட்டை


புதன், 1 மே, 2019

#TamilnaduJobsForTamils

மே 3 காலை 8 முதல் #TamilnaduJobsForTamils இது தான் உலகு பேசு பொருளாக இருக்கவேண்டும். மீண்டும் ஓர் இணையப்புரட்சி வழி தூங்கும் புலிகளை # கொண்டு தட்டி எழுப்புவோம்
தலைப்பைச் சேருங்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

G20 மாநாடு

நாள்தோறும்
உலகை அழித்தவர்கள்
அழிவை தடுக்க
நாளை கூடுகிறார்கள் 

முகநூலை தவிர்க்க சில வழிகள்

சமூக விழிப்புணர்வு, நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளல் போன்ற சில நேர்மறை பயன்பாடுகள் இருந்தாலும், சமூக வலைத்தளப் பயன்பாடு என்பது நமது நேரத்தை விழுங்கும் மிகப்பெரிய திமிங்கிலமாக உள்ளது.

நான் இனி முகநூலுக்கு வரமாட்டேன் என்று சொல்பவர்கள் அதை விட்டுச் சென்ற வரலாறு மிகக் குறைவு. இப்படி எதிர்மறை தீர்மானங்களை நம் மனதின் ஆணவம் ஒரு போதும் ஆதரித்து அடிபணியாது. இப்படி சொல்வதற்கு பதிலாக நான் தமிழர் வரலாற்றை தேடப் போகிறேன், தொல்காப்பியத்தின் ரகசியத்தை பருகப் போகிறேன், தமிழ் இலக்கியங்கள் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் படிக்கப் போகிறேன் என்று முயலுங்கள். தானாக மனம் அதில் ஈடுபடும். உங்களுக்கு அதன் பிறகு முகநூலுக்கு வரும் நேரம் மட்டுப்படும். நீங்கள் கற்கிற விசயத்தை தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கும் வாசிப்பின் மீதானா ஆர்வத்தை உண்டாக்கும் இப்படித் தான் நான் ஆரம்பித்தேன். 4ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நூலான இவன் ஒரு வரலாறு என்கிற தேசியத் தலைவர் பற்றிய கட்டுரைத் தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை மேலும் மேலும் கற்க தூண்டுகிறது. முகநூல், பகிரிக்க்கு செல்கிற நேரம் வேறு ஏதாச்சும் படிக்கலாமே என்று என் மனம் எனக்கு அறிவுரை சொல்கிறது.

நீங்களும் முயலுங்களேன்

திங்கள், 1 ஏப்ரல், 2019

வங்கிகள் மூடல் சர்வசாதரனமாகிவிட்டது

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் மட்டும் அல்ல. கேள்வி கேட்க ஆளில்லாத அரசியல் அமைப்பின் அராஜக நாள் ; உழைப்பாளிகளின் குரல்வளை நெறிக்கப்படும் நாள். 

இந்திய ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்ட இரெண்டே ஆண்டுகளில் அடுத்த  சர்வாதிகார கொலை. விஜயா வங்கி & தேனா வங்கி மூடல். ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதில் இருக்கும் வேலை வாய்ப்பை பறிக்கும் எதேச்சாதிகார அரசுகள்; பன்னாட்டு குழுமங்களின் கைத்தடிகளின் கொக்கரிப்பு. 

வங்கிகள் இணைப்பிறகு இவர்கள் சொல்லும் காரணம் பலம் பெருகும். பரவலாக இருக்கும் போதே ஓர் அடிமட்ட குடிமகனால் நெருங்க முடியவில்லை. இப்படி பலம் பெருகிய பிறகு எப்படி சாதாரண மக்களுக்கு இணைக்கப்பட்ட "பெரிய" வங்கி தன் சேவைக்கரத்தை நீட்டும்? சலுகை காட்டும்?

ஸ்டேட் வங்கி இணைப்பிற்கு பிறகு தான் குறைந்த பட்ச இருப்பு ரூ.3000/- ஆனது. தானியங்கு பணப்பட்டுவாடா வசதிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்; கட்டணங்கள். இவர்களின் வாதம் பொய்யாகிப் போனது கண்கூடு.

ஒரு சிறிய மளிகைக் கடையில் நீங்கள் சென்று 50கிராம் சோம்பு வாங்க முடியும். இதுவே பெரிய பலசரக்கு கடையில் நீங்கள் போய் கேட்டால் ' போ போ காலைல போனி பண்ற மூஞ்ச பாரு" -இந்த அவமானம் தான் கிடைக்கும், அதுவும் காசு கொடுத்து பொருள் வாங்கும் இடத்தில்.

இதே நிலை தான் ஏற்படும் கடன் வாங்கவோ, கணக்கு தொடங்கவோ இந்த
"பகாசுர" வங்கிகளை வாசல் படி மிதிக்கும் போது. நீங்கள் ஒரு பெட்டிகடை வைக்க ஒரு ரூ.25,000/- கடன் கேட்டு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மேலாளர் என்ன சொல்வார் தெரியுமா? "எனது ஒரு மாத ஊதியம் ஒன்றரை லட்சம். ஒரு மணி நேரத்திற்கு என் வருமானம் ஆயிரம். கோடிக்கணக்குல பார்த்துட்டு இருக்கோம்; இந்த பிச்சைக்காசு 25000/- கடனை எல்லாம் பரிசீலித்து எங்கள் நேரத்தை விரயம் செய்ய முடியாது. வேற தனியார் நிதி நிறுவனம் போ..போ " என யாசகம் கேட்க வந்தவனைப் போல விரட்டப்படுவீர்கள்.  

உங்களுக்காக வங்கி ஊழியர்கள் போராடும்போது அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள். உங்கள் நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்ள;  

வங்கி இணைப்பு என்ற பெயரில் வங்கிகள் மூடப்படுவதுடன் அதனால் வாடிக்கையார்களுக்கு பறிபோகும் சலுகைகள், உயரப்போகும் கட்டணங்கள் ஏராளம். 

இந்த அரச அராஜகங்களுக்கு முடிவு கட்டும் நாள் எந்நாளோ?!

வியாழன், 21 மார்ச், 2019

தேர்தல் 2019 இவர்களுக்கா உங்கள் வாக்கு

கந்து வட்டி கொடுமையால் குடும்பம் குடும்பமாக தற்கொலை. ஆட்சியரிடம் மனு கொடுத்தான் பயனில்லை. நெருக்கடி. தன்மானம் உள்ள தமிழன் என்ன செய்வான்..ஆட்சியர் அலுவலகம் முன்னே தீக்குளித்து தற்கொலை. இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுத்திருந்தால், மக்களுக்கான அரசு வங்கிகள் கடன் கொடுத்திருந்தால்...இந்த இளம் பிஞ்சுகளோடு தீக்குளிக்கின்ற அவலம் நடந்தேறி இருக்குமா?

இந்த கொடுமைகளை காக்கத் தவறிய திராவிட அரசுகளுக்கும், அவர்களின் ஆரிய எசமானர்களுக்குமா உங்கள் வாக்கு?

திராவிட தேர்தல் அணுகுமுறை ..அடச் சீ

இப்படியும் வாக்கு கேட்போம்..

தேர்தல் 2019- இவர்களுக்கா உங்கள் வாக்கு?