ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஏமாற்றிய சாம்சங் எம்.30 எஸ்


நான் முதலில் ஆசஸ் மேச்ப்ரோ M1 (Asus Zenfone Max Pro M1) வைத்திருந்தேன். சுயம்பி கேமரா தரம் குறைவாக உள்ளதே என்றும் ஆசஸ் மின்கலத்தை விட சக்திவாய்ந்த பேட்டரி உள்ளதே என்றும் பிராண்ட் மதிப்பிற்காகவும் சாம்சங் எம் 30எஸ் (samsung Galaxy M30s) இப்போது தான் ரூ. 15000க்கு வாங்கினேன்.

ஆனால் சாம்சங் இப்படி ஏமாற்றும் என்று நினைக்கவில்லை. 6000mAh மின்கலம் ஆசஸின் 5000mAh நிற்கும் காலம் வரைக் கூட இல்லை. 

ஆசஸ் இல் ஒரு விழுக்காடு மின் திறனில் 6 நிமிடங்கள் யூடுப் காணொளியை 3G தரவில் பார்க்கலாம். ஆனால் சாம்சங்கில் வெறும் நான்கு நிமிட காணொளி பார்க்கும்போது 1% பேட்டரி கரைகிறது

ஆசஸில் மின்கலம் ஒரு போதும் சூடேறியதில்லை. ஆனால் சம்சங்கில் கொதிக்கிறது

ஆசஸில் சுயமி காமிரா பிளாஷ் இருக்கிறது. சாம்சங்கில் அதுவும் இல்லை.

ஆசஸ் எடையை விட சாம்சங் 8கிராம் அதிகம்

ஆசஸ்  ச்னாப்ட்ராகன் ப்ராசெஸ்சர். சாம்சங்கோ கார்டெக்ஸ்

ஆசஸ் அலுமினிய பின்பக்கம். இதில் இத்துப்போன நெகிழிக் குப்பை மட்டுமன்று. அதைவிட இது மொத்தமாகவும் உள்ளது.

சாம்சங் டைப் சி துரித சார்ஜர் என்று போட்டுள்ளார்கள். அதிலும் ஏமாற்றமே.  மூன்று மணி நேரம் ஆகிறது முழுமையாக மின்னேற்றம் செய்ய.

எனவே பட்ஜெட் பிரிவில் தரமான திறன் பேசி என்று ஏமாந்து வாங்கிவிடாதீர்கள்.

ஏமாற்றம் ..பண விரயமே