"கார்ப்பரேசன் வங்கி ஊழியர் சங்க" முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், "கார்ப்பரேசன் வங்கி ஊழியர் பிரதிநிதி இயக்குனர் (Workmen direction in Coporation Bank)ஆக இருந்தவருமான, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொருளாளரும் ஆன தோழர் ரகுராமன் அவர்களின் உரை கேட்கக் கூடிய நல்வாய்ப்பு எனக்கு கிட்டியது.
மூலதனத்தில் வலுவாக இருந்த அமெரிக்க வங்கிகள் எல்லாம் சீட்டுக் கட்டு போல ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்த போதும் இந்திய வங்கிகள் நிலைத்து இருப்பதற்கு காரணம் வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர் போராட்டங்களும், முந்தைய, இன்றைய நடுவண் அரசின் தனியார்மயம் ஆக்கும் முயற்சிகளை வங்கி ஊழியர் சங்கங்கள் எப்படி எல்லாம் தடுத்து நிறுத்தி இந்திய வங்கிகளின் தனித் தன்மையை கட்டி காக்கிறது என்பதையும் மிகத் தெள்ளத் தெளிவாக பேசினார்.
வங்கி ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழந்தும் போராடுவது மக்களுக்காக இந்த வங்கிகள் இருக்கவேண்டும் என்றும்,எதற்காக இவைகள் தேசியமயம் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து சிறிதும் விலகக் கூடாது என்றும் தான். தங்கள் ஊதியத்திற்காக போராடுகிறார்கள் என்றால் இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வேலை நிறுத்தம் செய்வார்கள்.
வங்கி ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழந்தும் போராடுவது மக்களுக்காக இந்த வங்கிகள் இருக்கவேண்டும் என்றும்,எதற்காக இவைகள் தேசியமயம் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து சிறிதும் விலகக் கூடாது என்றும் தான். தங்கள் ஊதியத்திற்காக போராடுகிறார்கள் என்றால் இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வேலை நிறுத்தம் செய்வார்கள்.
மக்களுக்கு விரோதமாகவும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் நடுவண் அரசுகளை கண்டித்தும்;பொதுத் துறை ஆக்கப்பட்டதன் நோக்கத்தில் இருந்து வங்கிகள் சற்றும் விலகாமல் பார்த்துக் கொள்ளவும்;மக்கள் பணத்தை கடனாக பெற்று சொத்துக்கள் சேர்த்து அதனை திருப்பி செலுத்த மறுக்கும் பெரும் கடனாளிகள் பெயர் பட்டியல் வெளியிட சொல்லியும்;அத்தகைய கடனை வசூலிக்க கடுமையான சட்டம் தேவை, வசதி இருந்தும் கடனை திருப்பி செலுத்தாது இருப்போரை குற்றப் பிரிவு நடைமுறை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் போராடுகின்றன வங்கி ஊழியர் சங்கங்கள் என்பதை விளக்கினர் அந்த கூட்டத்தில் பேசிய தோழர் அனந்தநாராயணன்,தோழர் இராமதாசு,தோழர் குமரேசன் & தோழர் சிறீதரன் ஆகியோர்.
தோழர் ரகுராமன் உரையின் பிற்பாதி பதிவு மட்டும் பதிவேற்றம் செய்துள்ளேன்.
மக்களுடன் இணைந்த மக்கள் நலனுக்கான தொடர் போராட்டங்கள் வெல்லட்டும்!!!
(com Raghuraman bank strike government privatising public sector banks)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக