ஜெயலலிதா தான் அதிமுக; அதிமுக தான் ஜெயா. தீர்ப்பு 4 ஆண்டுகளுக்கு மேல் என்பதால் 10 ஆண்டுகளுக்கு இனி அரியணை ஏற இயலாது அம்மையாரால். தீர்ப்பை எதிர்த்து மேல் முரியீடு செய்யலாம். ஆனால் தீர்ப்பின் விளைவை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை; நால்வர் விடுதலை; ஈழம் ஒன்றே தீர்வு என்று அதிரடியான தீர்மானங்களை சட்டமன்றத்தில் தானே கொண்டுவந்து தீர்மானத்தை எடுத்ததால் தமிழர் மனதில் ஒரு ஏற்பு உண்டானது என்னவோ உண்மை தான். ஆனால் அதில் ஒன்றும் நனவாகவில்லை என்பது கசப்பான உண்மை.
கடந்த மாதம் தன் தந்தைக்கு உடல் நலமில்லை என்பதற்காக பிணையில் விடுவிக்க நளினி முறையீடு செய்த போது உயிருக்கு அச்சுதல் என்று கூறி கடுமையாக எதிர்த்து தமிழக அரசு. தமிழக அரசு நினைத்து இருந்தால் 23 ஆண்டுகள் சிறையில் நான்கு சுவர்களை மட்டுமே பார்த்து காலம் தள்ளிய நளினி சிறிது நாட்களாவது விடுதலை காற்றை சுவாசித்து இருக்கமுடியும்.
இதை எல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் எழுந்துள்ள தமிழின எழுச்சி அலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும், தமிழீன கருணாநிதி மீது உள்ள எதிர்ப்பு அலையை பயன்படுத்திக் கொள்ளவும் போட்ட திட்டமோ என்ற நெருடல் உண்டாகிறது.
எது எப்படியோ..பெயரளவிற்காவது ஒரு தமிழன் ஆட்சி கட்டிலில் ஏற ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது.
இனி முதல்வர் கலந்து கொள்கிறார் என்று ஊருக்கு நடுவே கொட்டாய் போட்டு ஊரில் வசிப்பவர்களை ஓரிரவிற்கு சுடுகாட்டில் படுத்துக் கொள் என நிர்பந்திக்க மாட்டார்கள்.
இனி முதல்வர் கலந்து கொள்கிறார் என்று ஊருக்கு நடுவே கொட்டாய் போட்டு ஊரில் வசிப்பவர்களை ஓரிரவிற்கு சுடுகாட்டில் படுத்துக் கொள் என நிர்பந்திக்க மாட்டார்கள்.
1996இல் 53 கோடியில் திரட்டிய சொத்தின் இன்றைய மதிப்பு 1000கோடிக்கு மேலாம். 100 கோடி தண்டத் தொகை கட்டியது போக 900 கோடி லாபம் தானே.
இந்திய நாட்டின் நீதி என்னவென்றால் ஒருவர் எவ்வளவு வேண்டும் ஆனாலும் கொள்ளை அடிக்கலாம்; சொத்து சேர்க்கலாம்..கருணாநிதி போல. ஆனால் அவற்றை எல்லாம் தன் பெயரிலேயே இருக்கவேண்டும் என்று பேராசை கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என்பதே.

வாழ்க இந்திய சனநாயகம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக