"நான்" ஆட்சிக்கு வந்து ௧௧(11) கோடி வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மன்மோகன் ஆட்சியில் ஏழைகள் வங்கிக்கு வரமுடிந்ததா?" என பெருமை பேசுகிறார் மோடி.
உண்மை என்னவென்றால் 11 கோடி கணக்கு என்பது முழுக்க முழுக்க பொய். என்ன செய்வீர்களோ எது செய்வீர்களோ,ஜனவரி 26 க்குள் அனைவருக்கும் PMJDY வங்கி கணக்கு ஆரம்பித்து விட்டோம் என்று எனக்கு கணக்கு காட்டவேண்டும் என்று கட்டளை வங்கியாளர்கள் மீது. அதனால் ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய புள்ளிவிவரங்களை அள்ளித் தெளித்த அலங்கோலம் தான் இந்த 11 கோடி எண்ணிக்கை. இந்த 11 கோடியில் ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளவர்கள் 75 விழுக்காடு இருக்கும் கண்டிப்பாக.
பிரதம மந்திரி வங்கி கணக்கு என்று குறிப்பாக எந்த கணக்கும் பொதுவாக இல்லை வங்கிகளில். அதன் சிறப்பு அம்சங்கள் ஊடகங்களில் விளம்பரமாக வந்ததே தவிர வங்கிகளுக்கு தீர்மானமான வரையரை ஏதும் இல்லை. தினம் ஒரு சுற்றறிக்கை. நேற்று வந்ததை திருத்தம் செய்து மறுநாள் ஒரு சுற்றறிக்கை. முழுக்க முழுக்க குழப்பம்.
பிரதம மந்திரி வங்கிக் கணக்கின் குளறுபடி:
NO FRILL ACCOUNTS என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் 2004 இல் தொடங்கப்பட்டு பெரும்பாலான கிராம மக்களுக்கு குறைந்த பட்ச இருப்பு கிடையாது என்கிற அடிப்படையில்வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விட்டது. அதில் இது போன்ற குழப்பங்கள் ஏதும் இல்லை.
உண்மைகள் இப்படி இருக்கும்போது நான் தான் செய்தேன்; என்னால் தான் முடிந்தது என்று அகம்பாவம் பிடித்து ஆணவம் தலைக்கேற அறைகூவல் விடுவது தனது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை மோடி உணரவேண்டும். மக்களுக்கு உண்மையில் பயன் தரக்கூடிய திட்டங்களை எந்த குழப்பமும் இல்லாமல் நடைமுறைபடுத்த வேண்டும். விளம்பரம் தேடிக்கொள்ள ஆரம்பிக்கும் திட்டங்கள் மக்கள் பணத்தை விரயமாக்குமே தவிர எந்த பலனும் யாருக்கும் தராது-ஆட்சியாளர்கள் உங்களை தவிர. இந்த பிரதம மந்திரி வங்கிக் கணக்கிற்கு எத்தனை கோடி விளம்பரங்கள்;செலவீனகங்கள்? அதனால் அடைந்த லாபம் என்ன? விளக்கமுடியுமா?

- வங்கிகளுக்கு என்று சர்வீஸ் ஏரியா உள்ளது. அதில் உள்ளவர்கள் மட்டும் தான் அந்தந்த வங்கியில் கணக்கு தொடங்கலாமா இல்லை யார் வேண்டும் என்றாலும் எந்த வங்கியில் வேண்டும் என்றாலும் தொடங்கலாமா? இரண்டாவது சரி என்றால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
- கணக்கு தொடங்க பணம் தேவை இல்லை. சரி... ருப்பியா அட்டை தருகிறீர்கள். அதற்கு ஆண்டு சந்தா உண்டா இல்லையா?
- ஆதார் அட்டை இல்லாத கை எழுத்து போடாதவர்களுக்கும் ATM அட்டை உண்டு என்றீர்கள். அவர்கள் எப்படி பணம் எடுப்பார்கள்? அவர்கள் கை விரல் ரேகையை யார் பதிவு செய்து இருக்கிறார்கள்?
- கணக்கு தொடங்கினால் காப்பீடு இலவசம் என்று பத்திரிகையில் அறிக்கை கொடுத்துவிட்டு, அது விபத்து காப்பீடு; அந்த காப்பீடும் ATM அட்டையை 45நாள்களுக்கு ஒருமுறை இயக்குபர்களுக்கு தான் அது பொருந்தும் என்று உள்குத்து ஏன்?
- இந்த காப்பீடு கணக்கு தொடங்கிய உடனே நடைமுறைக்கு வருகிறதா?எந்த காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?
- இறுதியாக இந்த கணக்கை தொடங்கி அவர்களுக்கு என்ன லாபம்?
NO FRILL ACCOUNTS என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் 2004 இல் தொடங்கப்பட்டு பெரும்பாலான கிராம மக்களுக்கு குறைந்த பட்ச இருப்பு கிடையாது என்கிற அடிப்படையில்வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு விட்டது. அதில் இது போன்ற குழப்பங்கள் ஏதும் இல்லை.
உண்மைகள் இப்படி இருக்கும்போது நான் தான் செய்தேன்; என்னால் தான் முடிந்தது என்று அகம்பாவம் பிடித்து ஆணவம் தலைக்கேற அறைகூவல் விடுவது தனது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை மோடி உணரவேண்டும். மக்களுக்கு உண்மையில் பயன் தரக்கூடிய திட்டங்களை எந்த குழப்பமும் இல்லாமல் நடைமுறைபடுத்த வேண்டும். விளம்பரம் தேடிக்கொள்ள ஆரம்பிக்கும் திட்டங்கள் மக்கள் பணத்தை விரயமாக்குமே தவிர எந்த பலனும் யாருக்கும் தராது-ஆட்சியாளர்கள் உங்களை தவிர. இந்த பிரதம மந்திரி வங்கிக் கணக்கிற்கு எத்தனை கோடி விளம்பரங்கள்;செலவீனகங்கள்? அதனால் அடைந்த லாபம் என்ன? விளக்கமுடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக