ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

சாத்தூர் வெடி விபத்து

 

#சாத்தூர் 

சாத்தூர் வெடிவிபத்தில் 19பேர் பலி. இது இன்னுமொரு செய்தி ஊடகங்களுக்கு.

அரசு தன் செயல்பாட்டு குறைபாடுகளையும், பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையையும் மூடி மறைக்க மாநில அரசும் ஒன்றியமும் கருணைத்தொகை அறிவிக்கிறது, அதுவும் தேர்தல் காலம் என்பதால் இத்துணை பரிவு.

இவர்களுக்கு தேவை வெறும் இழப்பீடு தானா? இழப்பீடாக அறிவித்த ஒரு கோடி ரூபாயில் ஏறக்குறைய 100 பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் குறைந்தபட்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்காவது இது போன்ற விபத்தை தடுத்திருக்கலாமே.

200ரூபாய் தினக்கூலிக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து உழைத்திடும் மக்களை காக்க வேண்டிது யார் பொறுப்பு? சுற்றுச்சூழல் மாசுபடும் என அக்கறை செலுத்தும் மேல்தட்டு மக்களுக்கான நீதி பாசறைகள் உழைப்பாளர் நலனை உறுதி செய்ய எப்போது அரசாங்கத்திற்கு ஆணை இடும்? 

அதுவரை நாங்கள் சாகத்தான் பயணிக்க வேண்டுமா? உயிரைக் கொடுத்து தான் எங்கள் பணிக்கொடையை எம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டுமா?  இந்த விபத்துகள் என்ன புதிதா? எத்தனை தொழிற்சாலைகளை பாதுகாப்பு குறைபாட்டிற்காக அடையாளப்படுத்தி உள்ளீர்கள்?

சாகப்பிறந்தவர்களா நாங்கள்?

வீட்டில் பாதுகாப்பாய் இரு.இல்லை உழைத்து சாவு என்பது தான் அரசின் பதிலா?

வாழும்போது வராது ஈமச்சடங்கில் எங்கள் நெத்திக்காசுக்காகவா உங்கள் நிதி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக