செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

கவிதை: பசுமை அழி சாலை



சோலைகளை அழித்து பசுமை வழிச் சாலைகள் முன்பெல்லாம் ஊர்களை இணைக்கும் சாலைகள் இன்று கூறு போட்டது ஊரை வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமாய் உயிரை துறந்து சாலையை கடக்க பயந்து உறவுகள் தொலைந்தன சுங்கச் சாவடியில் உரசிக் கொள்ளும் வேளையில் உதட்டோர புன்னகையில் உணர்வுகள் பரிமாற்றம் ஆங்கே அரசாங்க பேருந்து தனியாருக்கு கப்பம் கட்டியது விடுதலை இந்தியா மழைக்கு ஒதுங்க ஓட்டமெடுத்து மரங்களை தேடினேன் அதன் சமாதியில் தான் நிற்பதை மறந்து பிணவாடை நாசியை நெருடியது கார் ஏற்றி கொன்றவனை முறையிட மனுநீதி சோழனை தேடியது அம்மா நாய் ஊளை இட்டு இவனா அவனா என ஓடும் வண்டிகளை துரத்தியது அப்பா நாய் அப்பனாய் எட்டு வழிச் சாலையில் அரை மணி நேரம் மீதம் மார்தட்டிக் கொண்டேன் நானும் ரீல்சில் மாயம் ஆயூளில் பாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக