சனி, 23 ஏப்ரல், 2022

இளையராஜா | தமிழினத்தின் உணர்வு | யாராலும் அழிக்க இயலாத அடையாளம்




#இளையராஜா என்னும் மாபெரும் தலைமை. தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம். இந்த உலக அரங்கில் தமிழினத்திற்கு என்ற வரலாற்றில் அவருக்கான பக்கங்கள் மானுடத்தின் கலை நுணுக்கங்கள்.

இந்த நாட்டின் பல தேசிய இனங்களின் தாய்மொழிக்கு பதிலாக ஒற்றை மொழியை கொண்டுவர அரசியல் சாசனம் எழுதிய #அம்பேத்கரும், அதே நிலைப்பாட்டில் மொழிகளை அழித்து இந்திய திணிக்கும் மோடிக்கும் என்ன பெரிய வேறுபாடு?

இதுதான் தருணம் என்று ஆரிய, தெலுங்கு,கன்னட இனவெறியர்கள் நம் தமிழினத்தில் கலந்து காழ்ப்புணர்ச்சியை காட்டிக்கொண்டு தங்களை #திராவிடர்களாக, தமிழின விரோதிகளாக வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பிரித்து நம் கண்ணை நம் கையாலேயே குத்த நடக்கும் ஆரிய சூழ்ச்சியை முறியடித்து தமிழினப் பெருமைகளோடு கை கோர்ப்போம்

 

#தமிழ்மது

24/04/2022

மேற்கண்ட பதிவை இளையராஜா குழுவில் பதிந்திருந்தேன். 
https://www.facebook.com/groups/meastroilayaraja/posts/10161966132167516/?comment_id=10161967620157516&notif_id=1650745127769019&notif_t=group_comment&ref=notif

இசைஞானிக்கு சமூக்கக்டமை என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லுங்கள் என்று ஒருவர் கருத்து போட்டிருந்தார்.

ஏது..காட்டை காக்கும் தமிழின பூர்வ குடிகள் குறவர் இனத்தவருக்கும், மகாராட்டிரத்தில் இருந்து குருவி சுட வந்தவர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அவர்களை அழைத்தும், அவர்கள் இல்லத்திற்கு சென்றும் சமூக நீதி நாடகம், மாணவர்களை அழைத்து மெகா சீரியல் செய்வது தான் சமூக கடமையா. இல்லை,, நாட்டை கூறு போட்டு கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டு வார்கோலை பிடித்து தூய்மை செய்வதாக நாடகம் ஆடுகிறார்களே. அதுவா?

சமூகக் கடமை என்றால் என்ன என்று வாக்குக்கு காசு வாங்கி தங்கள் உரிமைகளை விற்கும், வாங்கும் இவர்களுக்கு தான் தமிழ்த் தேசியர்கள் நாங்கள் பாடம் நடத்த வேண்டும். 

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று திராவிட போர்வையில்  தெலுங்கர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது (காரணம் 1920 தொடங்கி இன்று வரை வேற்று இனத்தாரை ஆள வைத்து அழுது கொண்டு இருக்கும் தமிழினம் https://en.wikipedia.org/wiki/List_of_chief_ministers_of_Tamil_Nadu ) தமிழர்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கான எல்லா கதவுகளும் அடைபட்டு கிடந்த போது தன் திறமையால் மேலே வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் வந்த பிறகு தான் பல திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நம்பிக்கையுடன் வெற்றிபெறுவோம் என்று கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடிலிருந்து எல்லாம் சென்னைக்கு  லாரி ஏறி (திருட்டு ரயில் அல்ல) வந்தார்கள். 

தான் உச்சத்தை தொட்ட போதும் தெலுங்கு மலையாள மக்களை அரவணைத்து தான் சென்றார் இசைஞானி. திறமை கொண்டவர்களை ஜென்சி, ஸ்வர்ணலதா, மனோ என்று மற்ற இன மக்களுக்கு வாழ்வளித்தார். அது தான் தமிழர் தன்மை. அதே நேரத்தில் பல தமிழ் இனத்தவர்களை அவர் கரையேற்றவும் செய்தார். சமூகப் பொறுப்பு என்பது தம்பட்டம் அடித்துக் கொண்டு செய்வது அல்ல. உள்ளே இருந்து சத்தம் இல்லாமல் புரட்சி செய்தவர். அதை அவரால் முன்னுக்கு வந்த கலைஞர்கள் நன்கு அறிவார்கள். 


தான் தமிழருக்கு பிறந்தோமா திராவிடனுக்கு பிறந்தோமா என்றே தெரியாத திரிபு தலைவரை மேடையில் வைத்து சாதியை வைத்து பெரியாரின் பேரன்  திட்டுகிறான் என்றால் இதில் வெளிப்படுவது சாதி திமிர் மட்டும் அல்ல..இனவெறியும் 

தங்கள் இன ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டார் என்கிற ஐம்பது ஆண்டு காலமாக உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நரிகள் உறங்கிக் கிடக்கின்றன தமிழினப் போர்வையில் என்பதை இந்த தருணம் நன்றாக உணர்த்துகிறது

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

பட்டினி

உணவகங்கள் 
நிறைந்த நெடுஞ்சாலையில் 
பட்டினியில் இறந்தது 
நாய் 

வியாழன், 3 பிப்ரவரி, 2022

நீட் மசோதா நிராகரித்த ஆளுநர்- தமிழன் ஏமாளியா? மிதவாதியா? #GetOutRavi

 

உங்கள் எல்லோருக்கும் கடந்த ஜனவரி 28 அன்று பீகாரே நிலைகுலைந்து போகும் அளவிற்கு போராட்டடம் நடந்தது நினைவில் இருக்கலாம்; அதில் பல தொடர்வண்டிகள் எரிக்கப்பட்டன; வண்டிகள் மறிக்கப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரசு, ராச்ற்றிய ஜனதா தள, பொதுவுடைமை கட்சி ஆதரவோடு நடைபெற்றது. எதற்காக இந்த போராட்டம் தெரியுமா? தொடர்வண்டி துறை வேலைவாய்ப்பில் கூடுதலாக இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வு அறிமுகம் செய்தது வேலை வாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக கருதி போராட்டத்தில் குதித்தார்கள். அந்த மாநிலமே ஸ்தம்பித்தது. 

 





தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்கு படித்த மாணவர்களுக்கு இந்த சர்வாதிகார ஆரியத்துவ  ஒன்றிய அரசு அவர்கள் படித்த பாடத்திட்டத்தில் இல்லாததை நீட் என்கிற நுழைவுத் தேர்வு வைத்து தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைப்பார்கள். தங்களுக்கு மருத்துவர் ஆகக் கூடிய தகுதிகள் இருந்தும் முறைகேடான வகையில் தங்கள் கனவை நனவாகாமல் தடுக்கும் சூழ்ச்சிச்சியை தாங்கிக் கொள்ளாமல், எங்கள் தமிழர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வார்களே அன்றி, ஒரு போதும் நீட் மசோதாவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராகவோ, அதை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவோ, துணை போகும் கங்காணி அரசுக்கு எதிராகவோ எங்கள் மிதவாத தமிழர்கள் போராடவே மாட்டார்கள். 

இதை நீங்கள் ஏமாளித் தமிழர்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். 

புதன், 26 ஜனவரி, 2022

அலையின் தயக்கம்


 கதிரவன் எழுதிய

காதல் கடிதம்

தூது வந்த அலை

திரும்பிச் சென்றது

அவள் காலில்

ஹைகீல்ஸ்

சனி, 1 ஜனவரி, 2022

புலம்பெயர்வு

 




புலம்பெரும் 

மேகங்களின் 

கண்ணீர் ...

அது 

மழையோ ?!