திங்கள், 29 ஏப்ரல், 2013

தமிழிசை சௌந்திரராஜன்-நீ ஒரு தமிழச்சியா?

"தமிழர் நலனில் அக்கறை கொள்ளும் கட்சியாக பாஜக விளங்குகிறது -தமிழிசை சௌந்திரராஜன்"

  • இந்தி மொழி வெறி கொண்டு மாநில மொழிகளை அழிக்கும் வேலையை முழுமூச்சாகக் கொண்டுத் திரியும் உனது காவிக் கட்சி 
  • ராஜபக்ஷவுடன் சுஷ்மா ஸ்வராஜை அனுப்பி வைத்துக் கூடிக் குலாவி மத்தியப் பிரதேசத்திற்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்ற உனது கட்சி 
  • கபிணி,ஹேமாவதியில் முழுக் கொள்ளளவு இருந்தும் தமிழகத்திற்கு சம்பா சாகுபடியை காப்பாற்ற தண்ணீர் கேட்டு போராடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என உச்ச நீதி மன்ற அறிவுரையை குப்பையில் போட்ட அராஜக கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு
உனக்கு தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சியா? தேசியச் செயலர் பதவியை உனக்கு பிச்சை போட்டார்கள் என்பதற்காக ஆடுடா ராமா ஆடு என அவர்கள் ஆட்டுவிப்பதற்கு தகுந்தாற்போல் நீ வேண்டுமானால் ஆடு..ஏன் என்றால் அது இனக் குருதியை வெளியேற்றி தேசிய சனநாயகம் என்கிற சாக்கடையை உடலில் ஏற்றிக் கொண்ட குலத்தில் பிறந்த காரணத்தால் அதை நாங்கள் கருத்தில் கொள்ளாமல் விடுகிறோம். ஆனால் அதற்காக எம் இன மக்களை நீ முட்டாளாக்கும் இது போன்ற பொய் பித்தலாட்ட அறிக்கைகளை வெளியிட்டு உனது தரத்தை நீயே தாழ்த்திக் கொள்ளாதே!!!

உண்மையிலேயே உனது கட்சி தமிழர் மீது அக்கறை கொண்ட கட்சி என்றால் இதோ மேட்டூர் அணையின் நீர்மட்டம் 24 அடிக்கு குறைந்து விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய 2.5+2.5 டி.எம்.சி நீரை திறந்து விட சொல்...முழுதாக ஐந்து டி.எம்.சி கூட வேண்டாம்..அதில் பாதியை பெற்றுத் தா...பார்க்கலாம்...உனக்கு பதிலாக நாங்கள் குட்டிக்கரணம் அடிக்கிறோம்...


Dr.Thamilisai soundhirarajan National secretary BJP 

ஞாயிறு, 31 மார்ச், 2013

ஈனப்பிறவி இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதிலடி கொடுப்போம்


தனது குடும்பத்தை வாழ்விக்க,இத்தாலிய வெறிநாயின் காலை நக்கி பிழைக்கும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தந்தி தொ.கா எடுத்த பேட்டியில் எம் தலைவனை சிறுவர்களை போரில் ஈடுபடுத்தினார் எனக் கூறினான்.

"எந்த தாய் தன் மகனை போருக்கு போய் வா"என அனுப்புவாள் எனக் கேட்டான். ஒரு தமிழனை பெற்ற அன்னை அனுப்புவாளடா. உன்னை மாதிரி தறுதலையை பெற்ற அன்னை தான் நக்கி பிழைத்த குடும்பத்தை கரையேற்று என அனுப்புவாள்

600மீனவர்கள் கொல்லபட்டார்களே,என்ன பதில் எனக்கேட்டால்..இறந்தவர்கள் இறந்தவர்களே..அதை பற்றி பேசி என்ன ஆகப் போகிறது?அது தான் நட்ட ஈடு கொடுத்திருப்பார்களே என நக்கலாக சிரிக்கிறான்.

இதே பதில் ராஜீவ் கொலைக்கும் பொருந்துமா எனக் கேட்டால் அவரும் இவர்களும் ஒன்றா என்கிறான். தன்னை வருத்தி உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் மீனவரை விட,ஊரை கொள்ளை அடித்து உலையில் போடும் நீங்கள் எந்த விதத்தில் பெரியவர்கள்?

(e.v.k.s.elangovan)

புதன், 27 மார்ச், 2013

மாணவர்களை தாக்கிய காங்கிரசு போக்கிலிகளை கைது செய்!!!

ஒரு மாத  காலமாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் மீது வன்முறையை திணித்துள்ளது களவாணி காங்கிரசு. உருட்டுக்கட்டைகளும் செங்கல்லையும் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இனத்தை அழிக்கும் கோடரிக் காம்பு ஞானதேசிகன் தலைமையிலான காங்கிரசு போக்கிலிகள்.  

ஒரு "கட்டிங்" வாங்கிக் கொடுத்தால் கூட்டிகொடுக்க கூட தயங்காத இந்த ஊழல் பேர்வழிகள் இத்தனை காலம் தம் இனமக்கள் கொன்றொழிக்கப்பட்டதை கண்டு ஆற்றாது வீறுகொண்டு சீரும்  அரிமாக்கள் மீது,இனம் காக்க எழுந்த புலிக்குட்டிகள் மீது வன்முறையை திணிக்க பார்க்கிறார்கள்.

தஞ்சைக்கு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள் என காணொளியை வைத்து தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை உடனே கைது செய்த சீர்மிகு தமிழக காவல் துறை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு காங்கிரசு கைக்கூலிகளை கூட ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

மாணவர்களை தாக்கிய பொறுக்கிகளை 24மணி நேரத்திற்குள் கைது செய்து  , பொய்யாக புனையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களான வெங்கடேஷ் மற்றும் சதாசிவம் இருவரையும் உடனே விடுதலை செய்யாவிட்டால் காங்கிரசுக் கட்சி அலுவலகம் ஒன்று கூட தமிழகத்தில் இருக்காது என்ற மாணவர்களின் சீற்றம் கை மீறிச் செல்லும். அதற்கு பக்க தூணாக தோழர்கள் அனைவரும் திரள்வோம் என எச்சரிக்கை விடுப்போம்.



காங்கிரசு கைக்கூலிகளை கைது செய்யக் கூறி த.தே.பொ.கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விடுத்த அறிக்கை:



===================================================
திருச்சியில் மாணவரைத் தாக்கியக் காங்கிரசாரைக் கைது செய்க!
===================================================
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
===================================================

திருச்சியில் காங்கிரசுத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களுக்கு ஈழப்பிரச்சினை தொடர்பாகக் கருப்புக் கொடி காட்டச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களைக் காங்கிரசார் கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். முகமது ஜிப்ரி, கஜேந்திரபாபு, சத்தியகுமார் ஆகிய மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முகமது ஜிப்ரிக்குக் கால் எலும்பு முறிந்துள்ளது.

காங்கிரசுக்காரர்கள் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்திய எல்.கே.எஸ்.மகாலில் ஏற்கெனவே தயாராக உருட்டுக் கட்டைகள் வைத்திருந்திருக்கிறார்கள்.

அடிபட்டுக் காயமடைந்த வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள் உள்ளிட்டு ஆறு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் வர முடியாத பிரிவுகளைச் சேர்த்துள்ளார்கள். ஆனால், தொட்டியம் தொகுதியின் முன்னாள் காங்கிரசு சட்டப் பேரவை உறுப்பினர் இராசசேகரன் தம்பி இராமகிருஷ்ணன் தலைமையில் திரட்டப்பட்டு, தாக்குதலில் உருட்டுக்கட்டைகளுடன் ஈடுபட்ட குண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

அக்குண்டர்கள் மாணவர்களை அடித்தது மட்டுமில்லாமல் பேருந்துகளை உருட்டுக்கட்டையால் அடிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. அவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம் போனார்கள். மதுரையில் காங்கிரசுக்காரர்கள் ஊர்வலம் போன மாணவர்களைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் பற்றி எரிந்தது. அதே போன்று ஒரு நிகழ்வைக் காங்கிரசார் திருச்சியில் தொடங்கியுள்ளார்கள்.

மாணவர்களிடமிருந்த கருப்புக் கொடியைப் பிடுங்கி வைத்திருந்த ஒரு காங்கிரஸ் இளைஞரை மாணவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு கடுமையாகத் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டார்கள். இப்பொழுது அந்நபரை மாணவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்லி காங்கிரசார் வழக்குச் சோடித்துள்ளார்கள். இதற்குத் திருச்சிக் காவல்துறையினர் பலியானது ஏன்?

மேலும் வெங்கடேஷ், சதாசிவம் என்ற இரு மாணவர்களைக் காவல்துறையினர் எங்கே வைத்துள்ளார்கள் என்று கேட்கச் சென்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் இன உணர்வாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அறவழியில் 15 நாட்களுக்கு மேல் நடந்து வந்த மாணவர் போராட்டத்தில் வன்முறையை ஏவியுள்ளது காங்கிரசுக் கட்சி.

தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய ஆணையிடுமாறும் வன்முறையில் இறங்கி மாணவர்களைத் தாக்கிய காங்கிரசார் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள் : 27.03.2013

திங்கள், 25 மார்ச், 2013

தறு"தல","தலைவா"க்கள்

அரசியல்வாதிகளுக்கு நிகராக கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் கலை வணிகர்களான திரைத்துறையினர். எங்கோ தில்லியில் வணிக ஊடகங்கள் ஆதரவில் எவனோ  நடத்தும் போராட்டத்திற்கு இங்கிருந்து விமானம் ஏறிச் சென்று போய் ஆதரவு தருவார்கள்..அப்படியாவது அகில இந்தியாவிற்கும் தன் போலி முகம் அறிமுகம் ஆகும் என்கிற நம்பிக்கையில். 

ஆனால் போகிற வழியில்...இங்கு..எவர்களின் அன்றாடச் செலவை அபகரித்து கழிவறை வரை குளிரூட்டப்பட்ட கனவு இல்லத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்களோ அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு நின்று ஆதரவு தெரிவிக்க கூடத் தயங்குவார்கள். காரணம் ஸ்டாலின் வீட்டிற்கு புலனாய்வுத் துறையை அனுப்பியது போல இவர்கள் வீட்டிற்கு வருமானவரித் துறையை அனுப்பிவிடுவார்களோ என்கிற அச்சமோ?

நாங்கள் கலை வணிகர்கள். எங்கள் நோக்கம் கலையை விற்பது,,,காசு பார்ப்பது...என்று கூறி  நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். அப்படி என்றால் திரையில் வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்வதுதானே. எதற்கு பணம் கொடுத்து ரசிகர் மன்றங்களை நீங்களே நிறுவி அதற்கு ஒரு மேலாளர் போட்டு கொள்ளை அடிக்கிறீர்கள்? சரக்கு நன்றாக இருந்தால் வியாபாரம் தானாக நடக்கும் தானே?

உங்களின் விஸ்வரூபமோ,காவலனோ திரை இடுவதில் பிரச்சனையை ஏற்பட்டால் உங்களுக்கு தமிழன் உணர்வு பீறிட்டு எழும். மற்ற நேரங்களில் நாங்கள் வணிகர்கள்..அது அரசியல் என நீங்களாகவே ஒதுக்கி வைத்து விடுவீர்கள். நல்ல நரித் தந்திரம் டா. "ழ" கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத நீங்கள் தமிழ்..தமிழன் எனக்கூறி நடிக்கும்போதே அரசியல் செய்ய பழகிக் கொண்ட நீங்கள் அரசியல் மேடையில் நடித்து அப்பாவி மக்களின் வாக்குகளையும் அபகரித்து கேப்டன் ஆகிவிடுகிறீர்கள்.

திரைத் துறையில் உள்ள அனைவரையும் நாம் இங்கு குறை கூறவில்லை. அண்ணன் சீமான் போன்றவர்களை பிரசவித்த  கலை உலகில் மு.களஞ்சியம், அமீர், தாமரை, கௌதமன், சத்யராசு, பாலு மகேந்திரா,மணிவண்ணன்,புகழேந்தி தங்கராஜ்  போன்ற தீவிர இன உணர்வாளர்களும்  நிறைந்து உள்ளனர்.



தோழர்களே...நமது போராடத்தை நாமே முன்னெடுப்போம். நாம் இன்றி இவர்களால் அணு அளவும் அசைய முடியாது என்கிற நிர்பந்தம் ஏற்படும்போது நமது பின்னால் இவர்கள் அணி வகுப்பார்கள்.


களம் புகுவோம்; நிலம் மீட்போம்!!!


ஞாயிறு, 17 மார்ச், 2013

ஒரு கடிதம் எழுதினேன்-அம்னீசியா நோயாளி கருணாவின் கண்ணீர் கடிதம்

நான்காம் தலைமுறையில் நடமாட இயலாமல் இருக்கின்ற போதும் உயிர் துறக்கும் போதும் மக்களுக்காக அரியணையில் இருந்து சேவை செய்து கொண்டே இறக்கவேண்டும்;தான் மட்டும் அல்ல தனது எள்ளுப் பேரர்கள் வரை இதையே கடைபிடிக்க வேண்டும் என்று கடமை,கண்ணியம் தவறாத,தணியாத ஆர்வம் கொண்ட ஒரே தமிழீன தலைவர் நேற்று தான் அம்னீசியா வியாதியில் இருந்து விடுபட்டார். உடனே அவர் கண்ணில் பட்டது தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலை தான். அதை பார்த்து அவர் வடித்த கண்ணீரில் கோபாலபுரத்தில் ஆழிப்பேரலை புகுந்ததோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு உவர்நீர் சூழ்ந்தது. ஐயகோ என நடுநிசியில் அலறியதை கேட்டு சென்னை மக்கள் தூக்கம் கலைந்து துக்கத்தில் ஆழ்ந்தனர்.

என்ன செய்வதென்று அறியாத தலைவர் எடுத்தார் எழுதுகோல். இந்தியாவில் பிரதம மந்திரி யார் என சோனியாவிடம் கேட்டு உடனே கடிதம் எழுதத் தொடங்கினார். "இலங்கையில் தமிழர்கள் போரில் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக அறிய நேர்ந்தேன். இதனை உடனே ராஜபக்சேவிற்கு கடிதம் எழுதி தடுத்து நிறுத்த வழி உள்ளதா என ஆலோசித்து தங்களால் இயன்றதை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்வதாகவும் தவறினால் தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவும் தயங்கமாட்டேன் என்பதை தங்களது மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் " கடிதம் எழுதினார். இந்த கடிதம் 2014ற்குள் தில்லியை போய்ச் சேரும் என நம்பப்படுகிறது. - இவ்வாறு திராவிடக் கட்சியின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் குஷ்பு நிருபர்களிடம் தெரிவித்தார்.