வியாழன், 28 பிப்ரவரி, 2013

நாகப்பட்டிணம் தேவி திரை அரங்கும்- பகல் கொள்ளையும்

சில்லரையிலேயே குறியாக இருக்கும் திரை உலகில் தமிழினத்திற்காக குரல் கொடுக்கின்ற தமிழராச்சே,அவர் இயக்கம் படத்தை திருட்டுத் தனமாக பார்க்கக் கூடாது,திரையில் பார்ப்பது தான் அவருக்கு வெகுமானம் என அமீரின் ஆதிபகவன் பார்க்கலாம் என நாகப்பட்டிணத்தில் உள்ள தேவி திரை அரங்கு சென்றேன்.

குளிரூட்டப்பட்ட அரங்கு என போட்டு குளிரூட்டியும் போட மாட்டார்கள்;அங்கொன்றும் இங்கொன்றுமாக மின் விசிறி மட்டும் சில நேரம் ஓடும்;இருக்கைகுள் மூட்டை பூச்சி கடிக்கும்.பஞ்சு குதறப்பட்டு இருக்கை பல்லை காமிக்கும்;ஒலி அமைப்பு சுத்தமாக சரி இருக்காது. வீட்டிற்கு  வந்து யுட்டூயுபில் வந்து பார்த்தால் தான்,ஓ இது தான் வசனமா என விளங்கும்.  அப்படி ஒரு அரங்கு.  

ரூ.30க்கு சீட்டு அச்சடித்து ரூ.100 என்றார். வார இறுதி என்றால் கூட பரவாயில்லை. வார நாளில் இப்படி ஒரு கொள்ளையா என சரி போகலாம் என நினைத்தேன். வாகன பாதுகாப்பு (PARKING) எனக் கூறி ஒரு சீட்டை நீட்டி ரூ.10 அபகரிக்கமுயன்றார்.(அதில் ரூ.3 என அச்சிடப் பட்டு இருந்தது) 

நாகப்பட்டிணம் போன்ற மூன்றாந்தர ஊரிலேயே இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே,சென்னை,திருச்சி,கோவையில் இவர்கள் கோவணத்தை கூட உருவி விட்டு தான் உள்ளேயே அனுமதிப்பார்கள் போல. 

ஒரு படம் எடுத்து வெளியிட எவ்வளவு கடினம்,எவ்வளவு உழைப்பு தேவை என்பதை நாங்கள் உணராமல் இல்லை.திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்கும் திரையுலக கனவான்களே...முதலில் இது போன்ற கொள்ளையர்களை தடுத்து நிறுத்துங்கள். கூட்டம் தானாக திரை அரங்கு வரும். 

(NAGAPATTINAM,DEVI THEATRE The worst theatr in Nagapattinam is Devi theatre, Avoid Thevi theatre,AMEER ADHIBAGAVAN)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக